Sunday, August 3, 2008

என்ன விலை அழகே - 8

கோவிந்த்ங்கறது நீ தானடா ... மறுமுனையில் அதட்டல் குரல்

மிகுந்த யோசிப்புடம். ஆமா நீங்க யாரு என்றான்

நான் யாருன்றதெல்லாம் இருக்கட்டும். ஒரு பொண்ணோட ரொம்ப இன்டிமேட்டா சுத்திகிட்டு இருக்கியாமே, அவ என் சொந்தம், சொத்து.

அதுக்கென்ன இப்போ ?

அவள விட்டுரு. அவ என்னோட ஆளு.

முடிஞ்சா அவளப் பாத்து பேசு, வெளில கூட்டிட்டுப் போ. என்கிட்ட ஏன் கேக்கறே ?

நீ தான் ச‌ரியான‌ ஆளு. அவ‌ எங்க‌ இருக்கா, எப்ப‌டி கான்டாக்ட் ப‌ண்ற‌து இதெல்லாம் நீ தான் சொல்ல‌ணும். ஏன்னா நான் அந்தப் பொண்ண‌ பார்த்ததே இல்ல‌ !!!

எவனோ விளையாடறான் என்ற யோசிப்புக்கிடையில், இந்த‌க் குர‌ல‌ எங்கேயோ கேட்ட‌ மாதிரி இருக்கே ... டேய் ராம், நீ காஷ்மீர்ல தான இருக்க, லோக்கல் நம்பர் வருது ?

ஆமா, சென்னை வந்திருக்கேன் இப்ப. ஒரு ஷார்ட் அன்ட் ஸ்வீட் ட்ரிப் இது. ப‌ட் பொண்ணு கொடுக்கப் போறவன் தான் பாவ‌ம். நானோ மிலிட்டரில இருக்கேன். வேண்டாம் என்றாலும் விட‌ மாட்டேங்க‌றாங்க‌. வ‌ய‌சாயிட்டே போகுதுனு அம்மா பொல‌ம்பாத‌ நாள் கிடையாது. அதான் க‌ல்யாண‌த்துக்கு ச‌ரினு ச‌ம்ம‌திச்சிட்டேன். ச‌ரி உன் விச‌ய‌த்த‌ ஜொல்லுட‌ ஜொல்லு ம‌ன்னா.

உன் கிட்ட அதுக்குள்ள ரெண்டு லூசுங்களும் வத்தி வச்சிட்டானுங்களா. கருமமா குரல மாத்தி பேசி, ஒரு செக‌ண்ட் என்னை நிலைகுலைய‌ வ‌ச்சிட்டியேடா பாவி .... ச‌ரி, ச‌ரி, நான் ஒரு முக்கிய‌மான‌ காலுக்கு வெய்ட் ப‌ண்ணிட்டு இருக்கேன். அப்புற‌ம் உன் கிட்ட‌ பேச‌றேன்.

ராமின் ப‌திலுக்குக் காத்திராம‌ல் செல்லை மூடினான் கோவிந்த். அடுத்த‌ நொடியே இன்டியை அழைத்தான். கால் ப‌ண்றேனு சொன்னியே ?

ஐ வாஸ் சோ ட‌ய‌ர்ட் கோவிந்த். ஐ ஹேய்வ் டுக் எ கம்ப்ளீட் ரெஸ்ட் டுடே.

சரி, த‌ட்ஸ் குட். ரெடியாகறயா, ஐ வில் பிக் யூ அப் அன்ட் தென் அஷ்ட‌ல‌ஷ்மி கோவிலுக்குப் போலாம்.

அது எங்க‌ இருக்கு ?

உங்க‌ வீட்டுல‌ இருந்து கொஞ்ச‌ தூர‌ம் தான். பெஸன்ட் நகர் பீச்ல இருக்கு.

லவ்லி, இதும் மஹாபலிபுரம் மாதிரியா ?

ம். ஆமா. இல்ல.

வாட் ஆர் யு ட்ரையிங் டு சே ? ஆமாவா, இல்லையா ?

அதாவது மஹாபலிபுரம் மாதிரி பீச் இருக்கு, கோவிலும் இருக்கு.

பின்ன என்ன இல்லை ?

ப்ரைவசி இல்லை. கொஞ்சம் க்ரௌடட் வேற‌. அதான்.

அப்ப அங்க‌ வேணாம். வேற‌ எங்காவ‌து போக‌லாம்.

ச‌ரி, உன‌க்கு எந்த‌ மாதிரி இட‌ம் போக‌ப் பிடிக்கும் ?

கொஞ்ச‌ம் ஷாப்பிங் ப‌ண்ண‌லாமா ?

ஷாப்பிங்க் எல்லாம் இத‌ விட‌க் கூட்ட‌மா இருக்குமே.

என்ன‌து எங்க‌ போனாலும் கூட்ட‌மா இருக்கு, இருக்கும் என்றே சொல்ற‌. ச‌ரி இப்ப‌வே டைம் வேற ஆகிட்டிருக்கு, ப‌க்க‌த்தில‌ சொல்ற‌ கோவிலுக்கே போலாம். உள்ளங்கை உண்டிய‌லின் சில்ல‌ரைக‌ளாய் சிணுங்கினாள் இன்டி.

மேச‌யிலிருந்து கிள‌ம்ப‌ நினைத்த‌வ‌ன் மேசைத் தொலைபேசி அடிக்க‌ எடுத்தான். கோவிந்த், இன்னும் கிள‌ம்ப‌வில்லை அல்ல‌வா, ஒரு உத‌வி ப‌ண்ணேன். என் வ‌ண்டி ப்ர‌ச‌னை ப‌ண்ணுது. செக்யூரிட்டிகிட்ட‌ சொல்லிட்டேன். மெகானிக் வ‌ந்து ச‌ரி பார்த்துருவான். இன்னிக்கு வீட்டில‌ என்னை ட்ராப் ப‌ண்ணிடேன் என்றாள் வித்யா.

இல்ல வித்யா நான் அவசரமா கெளம்பறேன். வேற யாராவது கேட்டுப் பாரு.

என்னடா கோவிந்த் நாங்கள்லாம் கூப்பிட்டா வருவியா ? இதே மாலதி கூப்பிட்டா மட்டும் ஓடி வருவ. இல்ல யாராவது வெளிநாட்டில இருந்து வந்தா படத்துக்கு கூட்டிப் போவ. ஹிம்ம்ம்ம்ம்ம்

என்னது வண்டியில் ஆரம்பித்து, சம்பந்தமே இல்லாமல் எங்கே எங்கேயோ போறா, சரியான மல்டி மைண்டட். சரி சரி வா என்று அரை மனதாய் சம்மதித்தான்.

வழி நெடுக வித்யாவின் சொற்கள் முள்ளாய் தைத்தது. அவள் வீட்டை நெருங்கும்போது, ஏன்டா இப்படி ஆகிட்ட. லிமிட்டோட சும்மா ஜாலியா சுத்தினோமா, ஃப்ரெண்ட்ஷிப்பா இருந்தோமா, நேரம் வரும்போது கல்யாணமாகி செட்டிலானோமா என்று இருக்கறத விட்டுட்டு.

வண்டியை நிறுத்தி, வித்யா கீழ எறங்கு. சாரி அன்ட் தாங்க்ஸ் ஃபார் யுவர் ஃப்ரீ அட்வைஸ், என்று சொல்லி அடையாறு நோக்கிப் பறந்தான்.

தொடரும் .....

12 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

//வழி நெடுக வித்யாவின் சொற்கள் முள்ளாய் தைத்தது. அவள் வீட்டை நெருங்கும்போது, ஏன்டா இப்படி ஆகிட்ட. லிமிட்டோட சும்மா ஜாலியா சுத்தினோமா, ஃப்ரெண்ட்ஷிப்பா இருந்தோமா, நேரம் வரும்போது கல்யாணமாகி செட்டிலானோமா என்று இருக்கறத விட்டுட்டு.//

யோசிப்பானா கோவிந்த் எனப் பார்த்தால்...

//சாரி அன்ட் தாங்க்ஸ் ஃபார் யுவர் ஃப்ரீ அட்வைஸ், என்று சொல்லி அடையாறு நோக்கிப் பறந்தான்.//

ஹூம். தொட்டால்தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பென்று...பட்டால் "தானே" புரியப் போகிறது...
பாவம் இந்தக் கோவிந்து!

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//ஹூம். தொட்டால்தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பென்று...பட்டால் "தானே" புரியப் போகிறது...
பாவம் இந்தக் கோவிந்து!//

அதானே. என்ன தான் நடக்கப் போகிறது என பார்க்கலாம். நானும் ஆவலாய் இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன்said...

யாருக்குச் சுடணும். கோவிந்துக்கா.ஆமாம் ஒரு தடவை சுட்டால் குழந்தைகள் விளையாடாது நெருப்போடு..
அந்தப் பொண்ணு பொழச்சுப் போகட்டும்.

சதங்கா (Sathanga)said...

யாரும் யாரையும் சுடப் போறதில்லை வல்லிம்மா. டோட்டலா ஒரு அழகிய காதல் கதையாக மாற்றிவிட்டேன். நடுவில் சில ஏற்ற இறக்கங்கள். முடிவு சுபமே. இன்னொரு இரண்டொரு பதிவுகளில் கதை முடிவுறும்.

ராமலக்ஷ்மிsaid...

வல்லிசிம்ஹன்said...
//அந்தப் பொண்ணு பொழச்சுப் போகட்டும்.//

வல்லிம்மா, கோவிந்துதான் "ஞே"ன்னு கடசில முழிக்கப் போற மாதிரி ஒரு எதிர்பார்ப்பை சதங்காதான் ஏற்படுத்தினார் பின்னூட்ட "பில்டப்"புகளில். இப்போ நல்ல புள்ளையா //டோட்டலா ஒரு அழகிய காதல் கதையாக மாற்றிவிட்டேன்.// என அழகா பல்டி அடித்து விட்டார்:))!.(இல்லேன்னு இன்னொரு பல்டி அடிக்கப்படாது :( ஆமா சொல்லிட்டேன் சதங்கா!)

//முடிவு சுபமே.//ன்னும் சொல்லிட்டார் இப்போ!
நல்லதுதானே சுப முடிவுதான் மனதுக்கு இதம்.

வல்லிசிம்ஹன்said...

ஆமாம் ராமலக்ஷ்மி, சோகமே வேணாம்.
சதங்கா நல்ல பிள்ளை நல்ல கதையே கொடுப்பார்:)

வல்லிசிம்ஹன்said...

என் கமெண்ட் எங்கே???????????

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

ராமலஷ்மி மேடம் கமெண்ட் பப்ளிஷ் பண்ணிட்டு, உங்க யுன் ஃப்ரௌ - ரெண்டாம் பாகம் படிச்சிட்டு இருந்தேன். வந்து மெய்ல் செக் பண்ணினா, உங்க கமெண்ட்கள். எங்கேயும் போகல, இதோ மேலே போட்டாச்சு :))

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//வல்லிம்மா, கோவிந்துதான் "ஞே"ன்னு கடசில முழிக்கப் போற மாதிரி ஒரு எதிர்பார்ப்பை சதங்காதான் ஏற்படுத்தினார் பின்னூட்ட "பில்டப்"புகளில். இப்போ நல்ல புள்ளையா \\டோட்டலா ஒரு அழகிய காதல் கதையாக மாற்றிவிட்டேன.\\ என அழகா பல்டி அடித்து விட்டார்:))!.(இல்லேன்னு இன்னொரு பல்டி அடிக்கப்படாது :( ஆமா சொல்லிட்டேன் சதங்கா!)//

நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே, உண்மைக் கதையிலிருந்து வேறு பாதை எடுத்திட்டேன் என்று. அப்புறம் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்க் ஃபாக்டருக்காக அங்க அங்க சில ஞே, ரொமான்ஸ், கோபங்கள், ஜொல்லு, எதிர்பார்ப்பு..... எல்லாமே மைல்டா மைல்டா தான். அதுனால நோ பல்டி பிஸினஸ் :))))

சதங்கா (Sathanga)said...

//சதங்கா நல்ல பிள்ளை நல்ல கதையே கொடுப்பார்:)//

தங்கமணீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ..... வல்லிம்மா சர்டிஃபிகேட் படிச்சிப் பாரூஊஊஊஉ ....

தங்கமணி: ஏன் இந்தக் கத்துக் கத்தறீங்க. வல்லிம்மா போன் நம்பர் குடுங்க, உங்க வண்டவாளம் எல்லாம் அவங்களுக்கு நான் சொல்லாம வேற யாரு சொல்றது :))))))))

cheena (சீனா)said...

ஆகா - தங்க்ஸ் - என்னோட போன் நம்பர் வேணுமா - எங்க தங்க்ஸ் கிட்டே பேசுறீங்களா

கத நல்லாத்தான் போகுது - எனக்குப் பிடித்த சுபம் நல்ல படியா நடக்கணும் - கதையிலே கூட சோகம் பிடிக்கல

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//ஆகா - தங்க்ஸ் - என்னோட போன் நம்பர் வேணுமா - எங்க தங்க்ஸ் கிட்டே பேசுறீங்களா //

ஏ.இ.கொ.வெ. ????

//கத நல்லாத்தான் போகுது - எனக்குப் பிடித்த சுபம் நல்ல படியா நடக்கணும் - கதையிலே கூட சோகம் பிடிக்கல//

கண்டிப்பா நல்ல படியா சுபமா தான் இருக்கும். கவலையே வேண்டாம்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !