என்ன விலை அழகே - 7
அரசனுடன் வாதிட்டு, ஆழ்கடலில் விழுந்து, பாருங்க. நீங்க பிழச்சிட்டீங்க. நல்லா கண்ணத் தொறந்து பாருங்க என்று அந்த டாக்டர் சொல்லும் போது சட்டென கண் விழித்துப் பார்த்தான் கோவிந்த்.
கிருபாவும், கார்த்தியும் இழுத்துப் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தனர். ஒன்னரை நாட்கள் முழுக்க வெளியில் சுற்றியதில் அலுப்பு. நெட்டி, முறித்து எழுந்து சென்று சிறிது நீர் குடித்தான்.
படத்துடன் ஒன்றியிருந்தாள் இன்டி. என்னோட கலெக்ஷண்ல இருக்கு இந்தப் பாட்டு என்று அசினோடு சேர்ந்து மெலிதாய் 'முகுந்தா முகுந்தா' பாடினாள். ஐ லைக் இட், வாட் எபௌட் யூ கோவிந்த் ?
ம்.ம்.மீ டூ
படம் முடிந்து செல்கையில், எங்காவது சாப்பிட்டு பிறகு உன்னை வீட்டில ட்ராப் பண்ணுகிறேன் என்றான்.
ஐ டோன்ட் ஃபீல் ஹங்ரி கோவிந்த். அம்மா குக் பண்றேன்னு வேற சொன்னாங்க. பிறகு பார்த்துக்கலாம். வீட்டில ட்ராப் பண்ணிடு என்னை.
அடையாறில் உங்க சொந்த வீடா ?
ஆமா. அம்மாவோட அப்பா வீடு. என்னை மாதிரியே அம்மாவும் ஒரே பொண்ணு. அடிக்கடி அப்பா இந்தியா வந்து போவார். அதுவும் இல்லாம, க்ராண்ட் பேரண்ட்ஸ் அசெட். எதுக்கு வித்துகிட்டுனு அம்மா சொல்லிட்டாங்க.
எவ்வளவு நாளா லண்டன்ல இருக்கீங்க ?
ஃப்ரம் வென் ஐ வாஸ் பார்ன். ஒரு நியர்லி ட்வெண்டி, ட்வெண்டிஃபை இயர்ஸ் இருக்கும்.
அனுமானித்த படியே அதே வயதிற்குள் தான் இன்டி இருந்தாள்.
இவ்வளவு நாள் வராம, இப்ப மட்டும் நீ எப்படி இந்தியா வர சம்மதிச்சே ?
எவ்ரிடைம் மை மாம் யூஸ் டு பெக் மீ. முடியாது என்று சொல்லிடுவேன். பட் இந்த முறை தெய் ஃபோர்ஸ்ட் மீ டு கம். அப்பாவுக்கு மதுரை பக்கத்தில வில்லேஜ்ல பெரிய நிலம் இருக்கு. அன்ட் தட் இஸ் ஆன் மை நேம். அதுல ஏதோ டாகுமெண்ட் வெரிஃபிகேஷன், பெர்ஸனலா வரணும் என்கிறார்கள் என்றார் அப்பா. அப்புறம் அம்மாவும், அவங்க ஃப்ரெண்ட்ஸ் மூலமா எனக்கு ஃப்ரெண்ட்ஸ் அறிமுகப் படுத்தறதாவும் ப்ராமிஸ் பண்ணவே, வந்துட்டேன்.
சோ, நான் இல்லாமல், இனோருவன் என்றால் கூட சுற்றியிருப்பாய். மனதுள் பேசிக் கொண்டான் கோவிந்த்.
கோவைச் செவ்வாயில் மெல்லிய சிரிப்புடன், பட் யூ நோ கோவிந்த். ஐ ஷுட் பீ க்ரேட்ஃபுல், தட் நான் உன்னை மீட் பண்ணியது. மற்ற ஃப்ரெண்ட்ஸ் கிடைத்திருந்தாலும், அவங்க எப்படிப் பட்டவங்க என்று இப்ப எனக்கு ஒரு கவலையும் இல்லை. ஐல் கால் யூ டுமாரோ ஈவ்னிங். ஓ.கே. சீ யா.
இவ்ளோ பேசறா, வீட்டுக்குள்ள வாடானு சொல்லாம விட்டாளே !
நாம தான் அவளை நெருக்கமா வச்சு நினைச்சுப் பார்க்கிறோமா ? அவளுக்கு அந்த எண்ணம் இருக்கா ? இல்ல சும்மா டேடிங் அவ்ள தானா ?
இதுவரை நான் இப்படி இல்லையே. வாட் இஸ் அட்ராக்டிங் மீ டூ கெட் க்ளோஸ் டு ஹெர். என்னது ஆங்கிலம் நிறைய வருது !!!
சாப்பிட்டது, சூப் கொட்டியது, ஐஃபோன் தருகையில் அவளது கண்களில் ஒரு மின்னல் மின்னியது, தியேட்டரில் விரல்கள் பற்றியது ....
இப்படியே யோசித்து, கைத்தலம் பற்ற கணாக் கண்டு மீண்டும் உறங்கிப் போனான் கோவிந்த்.
திங்கள் காலை, நுங்கம்பாக்கம்.
அமெரிக்காவில் ஹௌஸிங் இன்டஸ்ட்ரி டல்லா இருக்கு, இது உனக்கு தெரியும். நம்ம கம்பெனி எடுத்திருக்கற ப்ராஜக்ட்ல, அடுத்த ஃபேஸுக்கு ஃபண்ட் அதளபாதாளத்திற்கு கொறச்சிட்டாங்க. இது நம்ம கம்பெனி ரெவின்யூவ ரொம்ப ரொம்ப பாதிக்கும். ஜீரோ டெப்ட் ஃபார் த லாஸ்ட் தெர்ட்டி க்வாட்டர்ஸ், இதும் உனக்குத் தெரியும்.
இந்த ப்ராஜக்ட் விட்டு அவ்ளோ சீக்கிரம் நம்மால வெளில வரவும் முடியாது. ஏன்னா நம்ம கம்பெனியும் இதில கொஞ்சம் இன்வெஸ்ட்மென்ட் பண்ணிருக்கு. கான்ட்ராக்ட் சைன் பண்ணுங்கனு அமெரிக்காகாரன் அவசரப்படுத்தறான். இங்க நமக்கு மேல இருக்க தலைங்க நம்மள படுத்தறாங்க.
புதன் நைட் பண்ணிரண்டு மணிக்கு ஃப்ளைட். கெளம்பறே, பட்ஜட்ல கோட் பண்ணத எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி, பேசி முடிக்கற. தனது அறையில் கோவிந்திடம் சொல்லிமுடித்தார் ஹரி.
சீனிவாசன் அனுப்பியிருந்த பவர் பாயிண்ட்டில், சார்ட் எல்லாம் சில மாற்றம் செய்து, அழுத்தமாக சில சிலைட்ஸ் க்ரியேட் பண்ணி, ஹரிக்கு அனுப்பும் போது மணி நாலு. ஹரியும், பெரும் தலைகள் சிலரும் சரிபார்த்து ப்ரசென்டேஸன் அப்ரூவ் பண்ண மாலை ஐந்தரை ஆகியிருந்தது.
முகுந்தா முகுந்தா, கிருஷ்ணா, முகுந்தா முகுந்தா என்று கோவிந்தின் செல் சிணுங்கியது.
தொடரும் .....
7 மறுமொழி(கள்):
கதை சொல்றீங்கன்னு தெரியாம மறுபடியும் வந்துவிட்டேன்:)
ராஜ நடராஜன்,
//கதை சொல்றீங்கன்னு தெரியாம மறுபடியும் வந்துவிட்டேன்:)//
அச்சச்சோ !!! உண்மைக் கதை உண்மையிலேயே ட்ராஜிக். அது வேணாம் என்று வேறு பாதையில் பயணிக்கிறேன். பிடிக்கலேனா சொல்லுங்க !
//உண்மைக் கதை உண்மையிலேயே ட்ராஜிக். அது வேணாம் என்று வேறு பாதையில் பயணிக்கிறேன்.//
நல்லது சதங்கா, அது வேணாம்தான். "டீல் மா கண்ணு" கதையில் கூட நிஜத்தில் நடந்த பெரிய டிராஜடிய மட்டும் மாற்றி மற்றபடி அப்படியே கொடுத்து அருமையான எச்சரிக்கை + விழிப்புணர்வுக் கதையாக முடித்திருந்தீர்கள். அதையே இதிலும் எதிர் பார்க்கிறோம். கோவிந்துக்கு ஏற்படப் போகும் கசப்பான அனுபவம்(அப்படித்தானே?) பலருக்கும் எச்சரிக்கையாய் அமையக் கூடும்.
சதங்கா , வெயிட்டிங். சீக்கிரமே அடுத்த பதிவு.:)
சதங்கா!!!
வெயிட்டிங். அடுத்த பதிவெங்கே எங்கே.
ராமலஷ்மி மேடம்,
//கோவிந்துக்கு ஏற்படப் போகும் கசப்பான அனுபவம்(அப்படித்தானே?) //
இதையும் கொஞ்சம் மாத்திடலாம். எல்லா பக்கமும் சுபமாக முடிக்க முயற்சிக்கிறேன்.
வல்லிம்மா,
//சதங்கா!!!
வெயிட்டிங். அடுத்த பதிவெங்கே எங்கே.//
வருது வருது. வந்து கிட்டே இருக்கு. அருள்க பொறுத்தருள்க. இன்று அல்லது நாளை கண்டிப்பா பதிகிறேன்.
Post a Comment
Please share your thoughts, if you like this post !