Tuesday, August 5, 2008

என்ன விலை அழகே - 10

ஏன் ஒரு மாதிரியா இருக்கே என்று மூச்சிறைக்க‌ வ‌ந்த‌ கோவிந்த் கேட்டான்.

ஒன்னும் இல்ல, உன்ன‌ பார்த்துட்டே வ‌ந்து ஒரு அம்மா மேல‌ தெரியாம‌ இடிச்சிட்டேன், ந‌ல்ல‌ வேளை ஒன்றும் ஆக‌லை. நீ எங்கே திடுதிப்புனு ஓடின‌ ?

சொல்றேன். சொல்றேன். மொத‌ல்ல வா சாமி கும்பிட்டு வ‌ர‌லாம்.

தங்க விக்ரகமாய் அஷ்டலஷ்மிகளும் ஜொலிக்க, அவர்களோடு நவலஷ்மியாய் இன்டி ஜொலித்தாள் கோவிந்துக்கு.

சிறிது கோவிலுள் சுற்றிவிட்டு, உக்காரு கொஞ்சம். அப்புறம் போகலாம் என்றான்.

ஒரு ஓரமே அமர்ந்தனர்.

கெளம்பறதுக்கு முன், நிமிர்ந்தமர்ந்து, ஒரு ரெண்டு செகண்ட் கண்மூடி தியானித்துவிட்டுப் போலாம் என்றான்.

ஏன் ? எதும் காரணம் இருக்கா அப்படி செய்றதுக்கு என்றாள் இன்டி.

இல்ல, கண்களைத் திறந்து லக்ஷ்மிகளைப் பார்த்தோம் இதுவரை. கண்மூடி அந்த பிம்பங்கள் காணுகையில் ஒரு பரவசம் வரும். யூ ஷுட் ஃபீல் இட் இன்டி.

ச‌ரியென க‌ண்மூடிய‌வ‌ளின் விரல் பிரித்து, முத்துப் போல் பெட்டியை உள் வைத்து, சிப்பி போல் மூடினான்.

ஒரு வித‌ ஆன‌ந்த‌ம், ஆச்ச‌ரிய‌ம், இனிமையான‌ ம‌கிழ்வு எல்லாம் க‌ல‌ந்து இன்டியினுள் தாண்ட‌வ‌ம் ஆடினாலும், ஐ டோன்ட் நோ ஹ‌வு டு ரியாக்ட் ஃபார் திஸ் கோவிந்த். எதுக்கு இவ்ளோ எக்ஸ்பென்சிவ் கிஃப்ட் ? நீ ரொம்ப‌ செல‌வு ப‌ண்றே என்றாள்.

என்ன‌ விலை அழ‌கே
உன்னை விலைக்கு வாங்க‌ வருவேன்
என்ன‌ விலை என்றாலும் த‌ருவேன்
உன் அழ‌கைக் க‌ண்டு விய‌ந்து போகிறேன் ...

என்ன‌மா க‌விஞ‌ன் அனுப‌வித்து எழுதியிருக்கிறான். என‌க்காவே எழுதியிருப்பானோ ? இவ‌ள் அழ‌கென்றாலும், அதைவிட ஒரு சக்தி அவளை நோக்கி இழுக்கிறதே ?!!!

ஹேய் கோவிந்த். வாட் ஹேப்ப‌ன்ட் ... கொய‌ட் ஆகிட்டே

கிஃப்ட் பிடிச்சிருக்கா இன்டி ?

பிடிச்சிருக்கு.

என்னை ?

ஐ ஹேய்வ் டோல்ட் யூ ஃப்யூ டைம்ஸ் ரைட். பிடிக்காமலா உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேன்.

நீ இத‌ போட்டுக்க‌ணும் என்கிற‌தில்லை. ப‌ட் திருப்பித் த‌ர‌ மாதிரி எண்ண‌ம் ம‌ட்டும் வைத்துக் கொள்ளாதே.

அம்மா கேட்டா ?

அதான் போட்டுக்க‌ வேணாம் என்றேனே. பின்ன‌ அவ‌ங்க‌ளுக்கு எப்ப‌டித் தெரியும் ?!

நம்ம என்ன குழந்தையா. சாரி கோவிந்த், ஐம் மோர் ட்ரான்ஸ்ப‌ர‌ன்ட் டு மை பேர‌ண்ட்ஸ் தென் யூ. இதுவ‌ரைக்கும் ஐ ஹேய் க‌ன்வெய்ட் எவ்ரிதிங் டூ தெம். நீயே சில‌ நேர‌ங்க‌ளில் நோட்டீஸ் ப‌ண்ணியிருப்ப‌ !!!

ச‌ரி, நான் கொடுத்தேன் என்று சொல்லு.

சொல்ல‌லாம். ஆனா அம்மா கொஞ்ச‌ம் அந்த‌க் கால‌த்து ஆளுங்க‌ மாதிரி. க‌ல்ச்ச‌ர், டிசிப்ளின் இதெல்லாம் ரொம்ப‌ முக்கிய‌ம். நகை எல்லாம் க‌ட்டிக்க‌ப் போற‌வ‌ன் தான் வாங்கித் த‌ர‌ணும்னு பிடிவாத‌ம் செய்வாங்க‌.

உங்க‌ அப்பா எப்ப‌டி ?

அப்பா ரொம்ப‌ ந‌ல்லவ‌ர். அம்மா சொல் த‌ட்ட‌ மாட்டார்.

ஏனோ தெரிய‌ல‌, இவ்ளோ ஓப‌னா இருக்க‌து, எதையுமே தீர்க்க‌மா பேச‌ற‌து, எப்பவுமே ஒரு ஷார்ப்ன‌ஸ் உன் க‌ண்க‌ளில். இதெல்லாம் தான் உன்னை ம‌ற்ற‌வ‌ர்களில் இருந்து வேறுப‌டுத்திக் காட்டுதோ. ம‌ன‌ம் கேள்விக‌ளில் ந‌னைந்து மித‌ந்த‌து.

ச‌ரி, அம்மா கிட்ட‌ பேசிப் பாரு ...

எத‌ப் ப‌த்தி ?

என்னைப் ப‌ற்றி ...

உன்னைப் ப‌ற்றி அவ‌ங்க‌ளுக்கு என்ன‌ தெரிய‌ணும் ?

ம‌ண‌ல்ல‌ உக்கார்ந்திருக்கும் போது கூட‌ சொன்னியே அதைப் ப‌ற்றி ...

என்ன‌ சொன்னேன் ?! அந்த‌ அம்மாவ‌ இடித்த‌தில் இருந்து, கொஞ்ச‌ம் முன் ந‌ட‌ந்த‌தெல்லாம் ம‌ற‌ந்து போச்சே என்றாள் த‌லை திருப்பாமல், விழி திருப்பி, ஓர‌க் க‌ண்ணில் பார்த்துக் கொண்டே.

அடிக் க‌ள்ளி, என்ன‌தான் ல‌ண்ட‌ன்னாலும், பொண்ணுங்க‌ பொண்ணுங்க‌ தான். ஹிம்ம்ம்ம்.

ஹேய் டோன் பீ கொய‌ட் அகெய்ன். வந்து ஃபார் ச‌ம் ரீச‌ன்ஸ், ஐ ல‌வ் யூ கோவிந்த்.

த‌ட‌ த‌ட‌வென‌ பால‌த்தின் மேலோடும் ர‌யில்வ‌ண்டியாய் ஆன‌து கோவிந்தின் ம‌ன‌து.


தொடரும் .....

10 மறுமொழி(கள்):

Kavinayasaid...

ம்... அப்புறம்?

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//ம்... அப்புறம்?//

உங்கள் மறுமொழி ரெண்டே வார்த்தைகள் என்றாலும், ஒரு சக்தியைக் கொடுக்கிறது. அடுத்த பாகம் தட்டச்சிட்டே இருக்கேன், அலுவல் வேற அதிக நேரம் எடுக்கிறது. விரைவில் பதிகிறேன்.

(நல்லா கத விடறியேனு நான் ஒரு அர்த்தத்தில சொன்னா, பெரிய்ய்ய்ய எழுத்தாளர் மாதிரியில்ல பதில் போடறானு நீங்க திட்டறது கேக்குது :-))))

வல்லிசிம்ஹன்said...

ஃபார் சம் ரீசன்ஸ்// மட்டுந்தானா.

என்ன சதங்கா இந்தப் பொண்ணு , இப்படி சத்தாய்க்கிறது!!
மோதிரம் எடுத்தமா, போட்டம்மா.ஐ லவ் யூன்னு உருகினோமா...
சரி !! வெயிட்டீஸ்:)

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//என்ன சதங்கா இந்தப் பொண்ணு , இப்படி சத்தாய்க்கிறது!!//

அம்மா கிட்ட பர்மிஷன் வாங்கணுமே. இந்த விஷயத்தில அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். அதான் ...

//சரி !! வெயிட்டீஸ்:)//

அடுத்து பாகம் போட்டாச்சு, வந்து வாசிச்சு சொல்லுங்க :))

ராமலக்ஷ்மிsaid...

பரபரவென நகருது கதை. அடுத்த பாகமும் வந்தாச்சு போலிருக்கே. இதோ வரேன்.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

// பரபரவென நகருது கதை. அடுத்த பாகமும் வந்தாச்சு போலிருக்கே. இதோ வரேன்.//

ஆமா. வாங்க வாங்க. நிதானமா படிச்சிட்டு சொல்லுங்க.

ராமலக்ஷ்மிsaid...

//நிதானமா படிச்சிட்டு சொல்லுங்க.//
அவசரமா அங்க போனேனா...இத சொல்ல விட்டுப் போச்சு..:)!
//தங்க விக்ரகமாய் அஷ்டலஷ்மிகளும் ஜொலிக்க, அவர்களோடு நவலஷ்மியாய் இன்டி ஜொலித்தாள்//
நல்லாருக்கு. இனி நிதானமாவே சொல்றேன்:)!

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி மேடம்,

//இத சொல்ல விட்டுப் போச்சு..:)!
//தங்க விக்ரகமாய் அஷ்டலஷ்மிகளும் ஜொலிக்க, அவர்களோடு நவலஷ்மியாய் இன்டி ஜொலித்தாள்//
நல்லாருக்கு. இனி நிதானமாவே சொல்றேன்:)!//

மறக்காம திரும்ப வந்து சொன்னது மகிழ்ச்சியா இருக்கு.

cheena (சீனா)said...

நவலட்சுமியாய் இண்டி ஜொலித்தாள்

கோவிலில் கண் மூடித் தியானிப்பது ஒரு பரவசம்

விரல் பிரித்து முத்தினைச் சிப்பியினுள் வைத்தல்

கவிஞனின் அனுபவத்தை தன் அனுபவமாக உணர்தல்

என்னைப் பிடிச்சிருக்கா ? நம்பிக்கைஇன்மை - பிடிக்காமலேயா சுத்திச் சுத்தி வாரேன் - அடடா அடடா - காதலர்கள் பழகும் முறை

பல வித வழக்கமான பேச்சுகளோடி - கடைசியில் புகைவண்டியின் வேகத்தில் மனதி ஓடவிட்டாள் இண்டி

நல்வாழ்த்துகள் சதங்கா

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

வழக்கம் போல மறுமொழிகளில் வாழ்த்தி அசத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !