Monday, August 4, 2008

என்ன‌ விலை அழ‌கே - 9

வித்யா வீட்டில் அவ‌ளை இற‌க்கி விட்டு ப‌ன‌க‌ல் பார்க் வ‌ழியே வ‌ந்த‌ கோவிந்த். ஒரு பூக்க‌டையில் நிறுத்தினான். சில‌ முழ‌ங்க‌ள் ம‌ல்லி வாங்கிக் கொண்டான்.

ப்ரின்ஸ் ஜ்வெல்லர்ஸ் சென்று, ஒரு அழ‌கிய‌ ஒற்றைக் க‌ல் வைர‌ மோதிர‌ம் வாங்கினான். மோதிரத்தை எடுத்து மெதுவே இருவிரல்களில் திரித்துப் பார்க்க, மஞ்சள் வானில் சிறு மின்னல் கீற்றுக்களாய் பளீரிட்டது.

யாருக்கும் கிஃப்டா சார். வீ கேன் டூ எ நைஸ் கிஃப்ட் ராப்பிங் ஃபார் ஃப்ரீ, சேல்ஸ்வும‌ன் சொல்லிக் கொண்டிருந்தார்.

இல்ல‌ நார்ம‌ல் பேக்கிங் போதும். அதான் அட‌க்கமா, ச‌ர்ப்ரைஸா கொடுக்க‌ ந‌ல்லா இருக்கும்.

கோவிந்த் அட்டை தேய்த்துக் கையெழுத்திட, மெல்லிய‌ சிரிப்புட‌ன் 'ஆல் தெ பெஸ்ட்' சொல்லிக் பேக்கிங்க்கை கொடுத்தாள்.

என்ன கோவிந்த், அரை மணியில வர்றேனு சொல்லிட்டு இவ்ளோ லேட்டு எனச் செல்லமாய்க் கோபித்தாள் இன்டி. அம்மா வேற‌ இன்னிக்கு அவ‌ங்க‌ ஃப்ரெண்டு ஒருத்த‌ர் வீட்டுக்குப் போலாம்னாங்க‌. நான் வ‌ர‌லைனு சொன்னதற்கு, என்ன‌வோ தெரிய‌ல‌ எப்ப‌வும் இல்லாம் இன்னிக்கு ஃபோர்ஸ் ப‌ண்ண‌ற‌ அள‌வுக்கு ஆகிட்டாங்க.

ஆர்வம் இல்லாமல் கேட்டுக் கொண்டு, ச‌ரி வா போலாம் என்றான் கோவிந்த்.

கோவிலை அடைந்த போது வானம் வெளுப்பாகவே இருந்தது. வ‌ண்டியை பார்க் செய்து, இன்னும் வெளிச்ச‌மா தான் இருக்கு, கொஞ்ச‌ நேர‌ம் பீச்சில‌ இருந்திட்டு அப்புற‌ம் கோவிலுக்குப் போலாம் என்றான்.

ஓ.எஸ். எனக்கும் தண்ணிரீல் நடக்க ஆசை என்றாள் சிறு குழந்தையாய்.

கணுக்கால் அலை தொட, கால்கள் அன்ன நடை போட, உள்ள‌மெங்கும் ஆனந்தம் ப‌ர‌வ‌ச‌த் தாண்ட‌வ‌ம் ஆட‌, இன்டி ஐம் கோயிங்க் டூ கிவ் யூ எ ச‌ர்ப்ரைஸ் கிஃப்ட். வேண்டாம் என்று சொல்லாம‌ல் வாங்கிக்க‌ணும் என்றான் கோவிந்த்.

எதுக்கு கோவிந்த் இதெல்லாம். ஏற்க‌ன‌வே எக்ஸ்பென்ஸிவான ஐஃபோன். அம்மா திட்ட‌ற‌ அள‌விற்கு அட்வைஸ் ஆர‌ம்பிச்சிட்டாங்க‌. ஊருக்குப் போகும் போது திருப்பிக் கொடுத்திட‌றேனு சொன்ன‌ப்புற‌ம் தான் விட்டாங்க.

என்னது திருப்பித் தருகிறாளா ? இன்று இவ‌ள் ம‌ன‌தை எப்ப‌டியாவ‌து அறிய‌ வேண்டும். ஏன் இவள் இந்த‌ அள‌விற்கு ஈர்க்கிறாள் என்னை. ந‌ண்ப‌ர்க‌ள் சொல்வ‌து போல் ப‌ழைய‌ மாதிரியே இருந்திருக்க‌ணுமோ ?

கூட்டம் குறைய ஆரம்பித்தது. இருட்ட ஆர‌ம்பித்து விட்ட‌து, வா கோவிலுக்குப் போலாம் என‌ ம‌ண‌ல் த‌ட்டி எழுந்தான்.

என‌க்கு ஸ்லோலி இந்த‌ க்ரௌடட் சென்னை பிடிக்க‌ ஆர‌ம்பிக்குது கோவிந்த்.

ல‌வ்லி, எத‌னால‌ இந்த‌ மாற்ற‌ம் ?

தெரிய‌ல‌. எத்தனை கூட்டத்திலயும் அத்தனை பாதுகாப்பாய் அர‌ணென‌த் தாங்குவ‌து போல‌ நீ இருப்ப‌தாய் ஒரு உள்ளுண‌ர்வு. கூப்பிடும் முன்னால வர, எங்க போகனும் என்றாலும் சரிங்கற. உன்னைப் போல் ஒருவன் க‌டைசி வ‌ரையில் என் வாழ்வில் வரணும். வ‌ருவாயா கோவிந்த் ?!

செவ்வித‌ழ் தேன் பொழிய‌, ரீங்க‌ரிக்கும் வ‌ண்டானான் கோவிந்த். கோவில் ப‌டி மிதிக்கும் வேளையில், ஜீன்ஸ் பாக்கெட்டில் கைவைத்த‌வ‌ன், சிறிது ப‌த‌ற்றத்துட‌ன், அனைத்து பாக்கெட்டுக‌ளையும் தேடி, செய‌லிழ‌ந்தான் சில‌ நொடிக‌ள்.

கோவிலுள் அதிகக் கூட்டமில்லை.

இன்டி, நீ உள்ள‌ போ. யாருகிட்ட‌யும் ரொம்ப‌ பேசாதே. இதோ வ‌ந்திட‌றேன் என்று சிட்டாய்ப் ப‌ற‌ந்தான்.

ஓ.கே. என‌ வில் போல் புருவ‌ங்கள் விரிய‌, ஆச்ச‌ரியமாய், ஓடும் கோவிந்தைப் பார்த்து உள் சென்ற இன்டி, எதேச்சையாக‌ ஒரு வ‌ய‌தான‌ அம்மாவை இடிக்க‌, இருவ‌ரும் ஒரு க‌ண‌ம் த‌ள்ளாடி, வ‌ய‌தான‌வ‌ர் கீழ‌ விழாத‌ குறை.

ஏம்மா பார்த்து வ‌ர்ற‌தில்லை என்றார் வ‌ய‌தான‌வ‌ர் எரிச்ச‌லுட‌ன்.

ஐம் சாரி. ஐ வாஸ் லுக்கிங்க் அட், அதாவ‌து வேணும் என்றே இல்ல‌, ம‌ன்னிச்சிடுங்க‌. உங்க‌ளுக்கு ஒன்னும் ஆக‌லையே.

ஒன்னும் இல்ல‌, இல்ல‌, கொஞ்ச‌ம் ப‌ட‌ப‌ட‌ப்பா இருக்கு அவ்வளவு தான், இப்ப‌டி உக்காரு சித்த.

ரொம்ப அழகா இருக்கியே, பசங்க இல்ல உன்னைப் பார்த்து செயலிழக்கணும், நீ யாரப் பார்த்துட்டு வந்து என் மேல மோதின‌, சென்னை தானா நீ.

...

எவ்வ‌ள‌வு நாட்க‌ள் இங்க‌

...

அப்பா என்ன‌ செய்ய‌றார்

...

அம்மா

....

ஏம்மா, ஒரு பொண்ண‌ விட‌ற‌தில்லையா. நான் தான் க‌ல்யாண‌த்துக்கு ச‌ரினுட்டேனே. ஏன் சித்த‌ம் க‌ல‌ங்கின‌ மாதிரி ஆயிட்டே. பாவ‌ம் அந்த‌ப் பொண்ணு, நீ கேக்க‌ கேக்க ப‌தில் வேற‌ சொல்லிகிட்டு இருக்கு, எந்திரிமா என்று தாங்க‌லாய் தூக்கினான், சற்று தூரத்தில் இருந்து வந்த‌ ராம் அம்மாவை. இன்டியிட‌ம், ஐம் சாரி, நீங்க‌ போங்க‌, அம்மா எப்ப‌வும் இப்ப‌டித் தான் என்று அனுப்பி வைத்தான்.

இன்டி ச‌ற்று ந‌க‌ர்ந்த‌வுட‌ன், ராம் காதில் 'டேய் இதான் பொண்ணு உன‌க்கு'. என் ஃப்ரெண்ட் சொன்னேனே, ராஜேஸ்வ‌ரி ல‌ண்ட‌ல‌ இருக்கானுட்டு. அவ‌ள் பிடிவாத‌மா இருக்கா, என்ன‌ தான் பொண்ண‌ ல‌ண்ட‌ல‌ வ‌ள‌ர்த்தாலும் நம்ம‌ நாட்டு க‌லாச்சார‌ப் ப‌டி தான் க‌ல்யாண‌மும் ப‌ண்ண‌னும்ட்டு. அதுமில்லாம‌ நாமெல்லாம் தூர‌த்து சொந்த‌ம் வேற‌. இன்னிக்கு ந‌ம்ம‌ வீட்டுக்குத் தான் வ‌ர‌தா சொன்னா. ஆனா இவ‌ வ‌ர‌மாட்டேன்னு சொல்லிட்டாளாம். கோவிலுக்கு போறதா ம‌க‌ள் சொன்ன‌தா சொன்னா. அதான் நான் வ‌ந்தேன். ந‌ம‌க்கும் வாக் போன‌ மாதிரி இருக்கும், பொண்ணையும் பார்த்த‌ மாதிரி இருக்கும், சாமியையும் கும்பிட்ட‌ மாதிரி இருக்கும்.

நடந்த இடமெல்லாம் ஓடித் தேடி, கடைசியில் சுவாமிக்கு வாங்கின மல்லிப்பூ ஞாபகம் வர, அதை வண்டியில் இருந்து எடுத்தான் கோவிந்த். அதன் கீழே அழகிய பழுப்பு மஞ்சள் அட்டைப் பெட்டி, என்னை எடுத்து அழகிடம் சேர் என்று கெஞ்சியது.

தொட‌ரும் .....

6 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

கலக்கப் போவது யார்? கலங்கப் போவது யார்?
அசத்தப் போவது யார்? அசரப் போவது யார்?

Anonymoussaid...

ஒன்னும் இல்ல‌, இல்ல‌, கொஞ்ச‌ம் ப‌ட‌ப‌ட‌ப்பா இருக்கு அவ்வளவு தான்,

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//கலக்கப் போவது யார்? கலங்கப் போவது யார்?
அசத்தப் போவது யார்? அசரப் போவது யார்?//

அனைத்து கேள்விகளுக்கும் விடை வரும் பதிவுகளில் காண்க :)))

நான்: "தலை திருப்பி, கேடயமாய் இரு கைகள் விரித்து : ஐயோ அடிக்க வராதீங்க ...." என்று அடுத்த பார்ட் எழுத ஓடுகிறேன் :))

சதங்கா (Sathanga)said...

தாங்ஸ் அனானி,

//ஒன்னும் இல்ல‌, இல்ல‌, கொஞ்ச‌ம் ப‌ட‌ப‌ட‌ப்பா இருக்கு அவ்வளவு தான்//

இத க்ரெடிட்டா எடுத்துக்கலாம்ல :))

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

கதை அருமையாகப் போய்க்கொண்டிருக்கிறது

வர்ணனைகள் பிரமாதம்

அழகிய வெள்ளை மல்லியுடன் அழகிய பழுப்பு மஞ்சள் பெட்டி - அழகிடம் சேரத் துடிக்கும் பெட்டி

மகனுக்குப் பெண் பார்க்க மகனுக்கே தெரியாமல் மகனையும் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வரும் தாயார்

படபடப்பா வருது - உக்காரு சித்தே - இயல்பான எளிமையான வரிகள்

செவ்விதழ் தேன் பொழிய ரீங்கரிக்கும் வண்டு - உள்ளே யாரிடமும் பேசாதே - சாக்கிரதை உணர்வு

காதல் அழகாக மெலிதாக வெளிப்படுகிறது

நார்மல் பேக்கிங் போதும் - கோவிந்தின் மனநிலை

ஆல் த பெஸ்ட் - விற்பனை செய்யும் பெண்ணின் நற்குணம்

அருமை அருமை - நல்வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

மனம் நிறைந்த பெரிய மறுமொழியை கூகிள் சாப்பிட்டாலும், அந்த நேரத்து மனநினையை மீண்டும் கொண்டு வந்து, கதையைப் பற்றி அத்தனை செய்திகளை சொல்லி வாழ்த்திவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

Post a Comment

Please share your thoughts, if you like this post !