Sunday, August 31, 2008

வானின் நிறம் நீலம் - 7


Photo: http://commons.wikimedia.org/

"என்னால தான் லேட்டுங்கறீங்க ! நான் என்ன‌ ப‌ண்ணினேன் அண்ணி ?"

"என்ன‌ ப‌ண்ணினியா ?!! எல்லாம் உங்க‌ அண்ண‌ன் வ‌ர‌ட்டும் பேசிக்க‌லாம்"

"பாவ‌ம் அவ‌ர‌ ஏன் இதில‌ இழுக்க‌றீங்க‌ !"

"அதானே ஒருத்த‌ர‌ ஒருத்த‌ர் விட்டுக் கொடுக்க‌வே மாட்டீங்க‌ளே ! ந‌ல்ல‌ அண்ண‌ன், ந‌ல்ல‌ த‌ங்க‌ச்சி, ஹிம்ம்ம்ம்"

'நிர்ம‌லா, உங்க அண்ணி என்ன பேசினாலும் கொஞ்ச‌ம் பொறுமையா போம்மா. இதெல்லாம் உட‌னே தீர்க்க‌ற‌ விச‌ய‌மில்லை, உன‌க்குப் புரியும்னு நினைக்க‌றேன்' ர‌குப‌தியில் குர‌ல், ஒலிநாடாவைத் த‌ட்டிவிட்ட‌து போல‌ ஓடிய‌து. த‌ன் அறைக்கு சென்று க‌த‌வை சாத்தி, சுவ‌ற்றில் தெரித்த‌ நீர், நேர் கோடாய் வ‌ழிவ‌து போல் ச‌ரிந்து த‌ரையில் அம‌ர்ந்தாள்.

ஹாலில், கால்க‌ளை நீட்டி, காஃபி டேபிளில் வைத்துக் கொண்டு, டி.வியை த‌ட்டி விட்டு, அதில் மூழ்கிப் போனாள் ஜானகி.

சிறிது நேரம் கழித்து, க‌த‌வைத் திற‌ந்து கொண்டு ர‌குபதி உள்ளே வ‌ந்தான்.

நுழைந்தும் நுழையாத‌துமான‌ அவ‌னிட‌ம், டி.வியை அனைத்து விட்டு ப‌ட‌ப‌ட‌வென‌ பொறிய‌ ஆர‌ம்பித்தாள் ஜான‌கி. "இருக்கறதோ ரெண்டே பாத்ரூம். அதிலும் ஒன்னு ரெனோவேஷன் வேலை நடந்துகிட்டு இருக்கு. இந்த வீட்ல இருக்க எல்லாருக்கும் இது தெரியும் தானே ! போக, தாம் பாட்டுக்கு, இருக்கற ஒரு பாத்ரூமுக்குள் காலையில் போய் அடைஞ்சிகிட்டா என்ன அர்த்தம். மத்தவங்க என்ன செய்வாங்கனு கொஞ்சம் யோசிக்கறதில்லை ! ஏன், எங்களுக்கெல்லாம் வெளி வேலை இருக்காதா ?"

"ஜானு, என்ன இது குழந்தை மாதிரி. வர வர எல்லாத்துக்கும் அடிச்சக்கறே நீ, பாவம் இப்ப தான் பழைய கஷ்டங்களில் இருந்து மீண்டு வர்றா நிர்மலா. கொஞ்ச நாள் அமைதியா இரேன் ! ஒரு ப்ரேக்குக்கு அப்புறம் இப்ப தானே வெளிய போறா ! அதுவும் நேர்முகம், இன்னிக்கு பார்த்து தான் நீயும் ப்யூட்டி பார்லருக்கும் போகணுமா ?!"

"உங்க‌ளுக்கு எப்ப‌வுமே அவ‌ ம‌ட்டும் தான் பாவம் ! நாங்க‌ எல்லாம் எங்க‌ உங்க‌ க‌ண்ணுல‌ ப‌ட‌றோம் ! அமைதியா இரு இருனு என்னை மட்டும் நல்லா அடக்கறீங்க. என்னிக்காவது அவள ஒரு வார்த்தை சொல்லியிருப்பீங்க ? இல்ல சொல்லியிருந்தா தான் இந்த நிலைக்கு அவ வந்திருப்பாளா ?!"

"இத‌ சொல்ற‌துக்கு தான் போன் போட்டு வ‌ர‌ச் சொன்னியா ?!, அலுவகத்தில் ஏக‌ப்ப‌ட்ட‌ வேலை இருக்கு, நீ என்ன‌டானா சின்னச் சின்ன‌ விச‌ய‌த்துக்கெல்லாம் .... கூல் டௌன் ஜானு"

"கூல் டௌன் மண்ணுனு சொல்லுங்க. ஜானுவாம் ஜானு ... இன்னிக்காவது ரெண்டுல‌ ஒண்ணு தெரிஞ்சாக‌ணும் ... இந்த‌ வீட்டில் ஒண்ணு அவ‌ இருக்க‌ணும், இல்ல நான் இருக்க‌ணும். நானும் பல தடவை சொல்லிட்டேன், நீங்க கேக்கற மாதிரியே தெரியல. யாரு இருக்க‌ணும்னு இப்ப‌வே நீங்க‌ முடிவு ப‌ண்ணி சொல்ல‌ணும்."

"உஷ்ஷ் ... ச‌த்த‌ம் போடாதே, நிர்ம‌லா காதில‌ விழுந்திட‌ப் போகுது !"

"இதோ ! பாருங்க, பாருங்க !!! என்னைத் தான் அட‌க்க‌றீங்க‌. காதில் விழ‌‌ட்டுமே என்ன‌ இப்ப‌ ?!"

என்னதான் வெளியில் இவர்கள் பேசினாலும், இவை எதுவும் உள்ளே நிர்ம‌லாவின் காதுக‌ளில் எட்ட‌வில்லை. கார‌ண‌ம் இன்ட‌ர்வியூக்காக நேற்று த‌ன்னை த‌யார் செய்து கொண்ட‌ க‌ளைப்பில் தூங்கிப் போயிருந்தாள். த‌லைமாட்டில் இருந்த செல்லில் வ‌ந்த‌ சிணுங்க‌ல், நிர்ம‌லாவைத் த‌ட்டி எழுப்பிய‌து.

நாள்காட்டி பிரிப்பது போல, செல்லைப் பிரித்து "யெஸ் க்ரிஸ்டினா ?!!!" என்றாள் கேள்விக்குறியோடே.

...

"ஓ.கே. இதோ, இப்ப‌வே கெள‌ம்ப‌றேன்"

...



தொடரும் .....

7 மறுமொழி(கள்):

Anonymoussaid...

கதை மிக மிக அழகா பயணிக்குது அண்ணே :)

\\நாள்காட்டி பிரிப்பது போல, செல்லைப் பிரித்து "யெஸ் க்ரிஸ்டினா ?!!!" என்றாள் கேள்விக்குறியோடே.
\\

உங்க கதைல இருக்கும் உவமைக்காகவே நான் தொடர்ந்து படிக்கறேன்.. + ராமலஷ்மி மேடம் அதை கண்டுபிடிச்சு, குறிப்பா சொல்ற விதமும்.. நீங்க கொடுக்கும் பதிலும் என்னோட ஆர்வத்தை தூண்டுது..ரீடர்ல உங்களுது லிஸ்ட் ஆச்சுன்னா கை தானாவே ஓபன் பண்ணிட்டுதுன்னா பாருங்க..

வல்லிசிம்ஹன்said...

நிர்மலா நல்ல படியா தேறி வரணும். எல்லா வீட்டிலியும் நடக்கிறதை அப்படியே எழுதறீங்க சதங்கா.
அண்ணியா இருக்க நல்ல பொறுமையும் அன்பும் வேணும்.அம்மாவுக்கு அடுத்த ஸ்தானம் இல்லையா.

ராமலக்ஷ்மிsaid...

"வானின் நிறம் நீலம்"

வாசித்தபடி கதைக்கு இறங்கும் முன் கண்ணைக் கட்டிப் போட்டது படம்.

'நிர்மல'மான நீல வானம்.

போன பதிவில் போட்டிருந்த படத்திலும் வானம் நீலம்தான். ஆனால் அதில் என்ன ஒரு மேக மூட்டம்... கவலை முட்டி நிற்கும் நிர்மலாவின் வாழ்வைப் போலவே. அவளது வாழ்வு எல்லா கவலைகளும் அகன்று இந்த நிர்மலமான வானம் போல தெளிந்த நீரோடையாக மாறட்டும் சதங்கா!

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

//கதை மிக மிக அழகா பயணிக்குது அண்ணே :)//

மிக்க நன்றிமா.

//உங்க கதைல இருக்கும் உவமைக்காகவே நான் தொடர்ந்து படிக்கறேன்.. + ராமலஷ்மி மேடம் அதை கண்டுபிடிச்சு, குறிப்பா சொல்ற விதமும்.. நீங்க கொடுக்கும் பதிலும் என்னோட ஆர்வத்தை தூண்டுது..ரீடர்ல உங்களுது லிஸ்ட் ஆச்சுன்னா கை தானாவே ஓபன் பண்ணிட்டுதுன்னா பாருங்க..//

என் பங்கு மிகச் சிறிது என்று சொல்லிக் கொள்கிறேன். எப்பவுமே ஒரு கதை ஆரம்பிக்கும்போது ஒரு மைன்ட் செட்ல தான் ஆரம்பமாகும். பின் நம்ம நண்பர்களின் பின்னூட்டக் கருத்துக்கள் கதைகளில் பிரதிபலிக்கும், இதை எனது கதைகளின் பெரும் பலமாக கருதுகிறேன். இப்ப கூட பாருங்க, பதிவின் படத்தையும், நிர்மலாவின் வாழ்வையும் ராமலஷ்மி மேடம் எப்படி கோர்த்து அழகாக சொல்லியிருக்கிறார்கள். அப்புறம் முக்கியமா, உங்களைப் போன்றவர்களின் ஆர்வமும், ஆவலும் அடிஷனல் பலமாகவும் கருதுகிறேன்.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//நிர்மலா நல்ல படியா தேறி வரணும். //

அடுத்த சில பகுதிகளில், கொஞ்சம் ஃப்ளாஷ்பேக். அப்புறம் ... அய்யோ வாயக் கிண்டாதீங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்

//எல்லா வீட்டிலியும் நடக்கிறதை அப்படியே எழுதறீங்க சதங்கா.//

கரெக்டா சொல்லிட்டீங்க. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு உங்க வார்த்தைகள் வாசிக்க :)

//அண்ணியா இருக்க நல்ல பொறுமையும் அன்பும் வேணும்.அம்மாவுக்கு அடுத்த ஸ்தானம் இல்லையா.//

ஆமா, எல்லாம் ஒரு விரக்தியின் வெளிப்பாடு தான். கதையில் கொண்டு வருகிறேன் ஏன் என. இதுவும் இயல்பான விஷயம் தான்.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//"வானின் நிறம் நீலம்"

வாசித்தபடி கதைக்கு இறங்கும் முன் கண்ணைக் கட்டிப் போட்டது படம்.

'நிர்மல'மான நீல வானம்.//

ஆஹா தொடரும் வார்த்தை விளையாட்டு உங்களிடமிருந்து மீண்டும். பொருத்தமான பெயர் தேடி, அதற்காக அடுத்த பதிவில் நாயகியின் பெயர் சொன்னதற்கு, இதோ உங்கள் பக்கமிருந்து அற்புதமான வரிகள், விளக்கம் போல.

//போன பதிவில் போட்டிருந்த படத்திலும் வானம் நீலம்தான். ஆனால் அதில் என்ன ஒரு மேக மூட்டம்... கவலை முட்டி நிற்கும் நிர்மலாவின் வாழ்வைப் போலவே. அவளது வாழ்வு எல்லா கவலைகளும் அகன்று இந்த நிர்மலமான வானம் போல தெளிந்த நீரோடையாக மாறட்டும் சதங்கா!//

கலக்கலான வரிகள் மீண்டும். படத்தை போடும் போது நான் கூட இவ்வளவு சிந்திக்கவில்லை. எல்லாத்துக்கும் ஒரு அற்புதமான விளக்கம் தருகிறீர்கள். 'ரம்யா'விற்கு சொன்னது போல, உங்களின் கருத்துக்கள் கதையின் பலம் :))

cheena (சீனா)said...

ம்ம்ம்ம் - சண்டை முற்றுகிறதா - இந்தப் பெண்கள் பண்ணும் குழப்பம் இருக்கிறதே - அப்பப்பா

நல்ல வேளை நிமலா தூன்கி விட்டாள் - கிரிஸ்டினா எழுப்ப - அடுத்து என்ன ? பொறுத்திருப்போம் வழக்கம் போல்

Post a Comment

Please share your thoughts, if you like this post !