Friday, August 8, 2008

என்ன விலை அழகே - 13

ஐ வான்டட் டு மீட் யூ கோவிந்த். சம்ஹௌ ஐ ஃபீல் லைக், ஐம் லூசிங் மை கன்ட்ரோல்.

லவ்லி, மீ டூ இன்டி. இன்னிக்கு சாயந்திரம் மீட் பண்ணலாம். எனக்குப் புரியுது, உன்னால என்ன பார்க்காம இருக்க முடியல இல்ல. உடனே கெளம்பி வரட்டா ?

அவன் சொல்லும் லவ்லியை மனம் ரசித்தாலும், அரை மனதாய் புன்முறுவ‌ல் பூத்தாள்.

டைரக்டா அம்மா கிட்ட பேசிட்டா என்ன என நினைத்து, முடியாது என ஒரு வேளை அம்மா பிடிவாதம் பிடித்தால் என்றும் யோசித்தாள்.

இன்னிக்கு டின்னர் மௌன்ட் ரோட், அன்னலக்ஷ்மி போலாம்.

...

ஹேய் என்ன ஒரே டல்லடிக்கரே. ஐ தாட் யூ ஆர் ஆல்வேஸ் கூல்

நத்திங் கோவிந், சரி அது பத்தி சாயந்திரம் பேசலாம். நீ எப்போ யு.எஸ். கெளம்பறே ?

நாளைக்கு நைட். நீயும் வரயா ?

நோ ஜோக்ஸ் ப்ளீஸ்.

இந்த ப்ளீஸ் இன்னும் நீ விடலை இல்ல.

ஓ மை காட், லிஸ‌ன், நீ ஊருக்கு போறதுக்கு முன், வீ நீட் டு டேக் அன் இம்பார்டண்ட் டெஸிசன்.

அதான் நேத்தே அஷ்டலஷ்மி கோவில்ல எடுத்திட்டோமே. மனசு மாறிடுச்சா ?

ஹஹஹஹஹ என நரசிம்மமாகி, வில் டாக் டு யூ இன் டீடெய்ல்ஸ் திஸ் ஈவ்னிங் என்று போனை வைத்தாள்.

என்ன ஆச்சு இவளுக்கு என்று நினைத்து, பின் வேலையில் மூழ்கிப் போனான் கோவிந்த்.

மாலை மணி ஏழு. பரபரப்பான அண்ணா சாலை.

சாலை விட்டு சற்று உள் தள்ளி, சுற்றிலும் இடம் விட்டு அழகிய கட்டிடம். உள்ளே நுழைந்தால் அழகிய வழுவழுப்பான ஹால். காலணி கழட்டி தரையில் கால் வைத்தால், தலை உச்சி சிலிர்க்கும் குளிர். ஹாலில் நடுவே அழகிய அலங்காரங்களுடன லஷ்மி சிலை. மெல்லிய வெய்யில் கதிராய், கசியும் மஞ்சள் விளக்கொளி. எங்காவது ஒரு மரத்துண்டு ஒரு மூலையில் கிடந்தால் கூட, அதுவும் ஒரு கலைப் பொருளோ என எண்ண வைக்கும் அளவிற்கு, திரும்பிய இடமெல்லாம் அழகிய கலை வேலைப்பாடுகள்.

இங்க கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ் ஃபுட் தான். ஆனா இந்த ஹோட்டல் பற்றி நிறைய சிறப்புக்கள் சொல்லுவாங்க இன்டி. இங்க வேலை செய்றவங்க எல்லாம் வாலன்டியர்ஸ், பல பெரிய இடங்களில் வேலை பார்ப்பவர்கள். சமையல் கூட வீட்டு சமையல் போலத் தான். சமையலுக்கு என்று வேலையாள் எல்லாம் கிடையாது. நம்ம அம்மாக்கள், பாட்டிமாக்கள் மாதிரி நிறைய பேர் கை வண்ணம்.

முன்னெல்லாம் இது போல் செய்திகள் சொல்லும் போது ஆர்வமாய் கேட்ட இன்டி, ஏனோ இன்று தாமரை இலை நீராய் ஒட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். சுற்றிலும் கலை வேலைப் பாடுகள் பார்த்து, இந்நேரம் அத்தனை லவ்லி சொல்லியிருப்பவளின் அமைதி, என்னமோ நடக்கிறது, நடந்திருக்கிறது என கோவிந்துக்கு உணர்த்தியது.

இஸ் எனிதிங் ராங்க அட் யுஅர் என்ட் ?

ஆமா கோவிந்த், என்ன பண்ணலாம்னு ஒரே யோசனையா இருக்கு.

சம்திங் ரிலேட்டட் டு போத் ஆஃப் அஸ் ?

ஆமா.

டிட் யூ டோல்ட் யுஅர் மாம் ?

இல்ல.

தென் ?

வந்து, இன்னிக்கு லிட்டரலா என்னைப் பொண்ணு பார்க்காத குறை. அம்மாவோட ஃப்ரெண்ட் ஒருத்தங்க வீட்டுக்கே வந்திட்டாங்க. முன்னாலேயே இத பத்தி எதும் சொல்லலை அவங்க. அதனால அம்மா கூட ஒரு மினி ஆர்க்யூமென்ட்.

நம்ம காதலை சொல்லிட்டியா அம்மா கிட்ட ?

இல்ல ...

அதான் இவ்ள ஃப்ரீயா இருக்காங்களே. பின் ஏன் தயக்கம்.

வந்து ஃபார் சம் ரீசன்ஸ், அவங்க வேண்டாம் என்று சொல்லிட்டாங்கனா அவ்ளோ தான். இட் டேக் ஏஜஸ் டூ கன்வின்ஸ் ஹெர். ஐ கேன் சே இட்ஸ் இம்பாசிபில். சம் ஹௌ ஐம் லவ்விங் யூ டீப்லி டீப்லி கோவிந்த் சில நாள் தான் உன்ன மீட் பண்ணினதுனாலும் ஏதோ ஒரு யுகம் நாம சுத்திட்டு இருக்க மாதிரி ஒரு ஃபீலிங்க். அது கடைசி வரைக்குமா இருக்கணும். ஐ ஷுட் நாட் லூஸ் யூ கோவிந்த்.

எனக்கு ஏத்த ஒருவன் கிடைக்கணும் என நான் இதுவரைக்கும் நினைக்கல. சும்மா கூலா, ஜாலியா ஃப்ரெண்ட்ஷிப் அவ்ளோ தான். பட் உன்னப் பார்த்து பழகினதுல இருந்து ஒரு கணம் கூட உன்ன விட்டுப் பிரியாமல் இருக்கணும் என்று மனசு கிடந்து துடிக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு செயலும் அட்ராக்ட்க்டிங் மீ மோர் அன்ட் மோர். கூட்டமும், குப்பையுமா இருக்கற சென்னைய கூட அழகான கோணத்தில காட்டியிருக்க.

நான் சொல்ல நினைத்ததெல்லாம் நீ சொல்லுகிறாய். எனக்கும் முன்னெல்லாம் என்னது காதல், கத்தரிக்காய் என ஒதுங்கிருவேன். பட், உன்னப் பார்த்ததுக்கப்புறம் எவ்ரிதிங்க் ஹேட் சேஞ்ட்.

தப்பு பண்ணிட்டேன். முன்னமே உன்னை என் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கணும்.

ஓரமே இருந்த, இன்டி கோவிந்தின் மேசையில், பாதி காலியான கண்ணாடி டம்ளர்களில், கீற்று சிரிப்போடு, நீர் நிறப்பினார் பழுத்த மாது ஒருவர். வீட்டில ஏதும் ப்ரச்சனையாம்மா. இந்தக் காலத்து புள்ளைகளுக்கு சொல்லியா கொடுக்கணும். எல்லாம் நல்ல படியா நடக்கும் என்று ஆசி கூறுவது போல் சொல்லி நகர்ந்தார். அரையிருட்டில் அவ‌ர் முக‌ம் ச‌ரிவ‌ர‌த் தெரிய‌வில்லை.

இஸ் ஷி லிசனிங் டூ அஸ். என்னதிது அடுத்தவங்க ப்ரைவசில இன்டர்ஃபியர் பண்றது, என்று மனம் நினைத்தாலும், செவ்விதழ் சிரித்தாள் இன்டி.

நான் வேணா பேசட்டுமா உங்க அம்மா, அப்பா கிட்ட ? இல்ல எங்க அப்பா, அம்மா யாரையாவது பேசச் சொல்லட்டுமா ?

ஆமா, நீ ஊருக்குப் கெளம்பறதுக்குள்ள ஏதாவது செய் !

உருவமிலா ஒரு உருண்டை கோவிந்துக்குள் உருளத் தொடங்கியது. கூட்டம் வருவதும், போவதுமாக உணவகம் பிஸியாகவே இருந்தது, இவ்விருவரின் எண்ணங்களைப் போலவே.

சரி, நான் நாளைக்கு உங்க வீட்ல பேசறேன் என்று சொல்லி படியிறங்குகையில், இடப்புறம் தோள் தட்டியவனைப் பார்த்து, ஹே ராம் என்று ஆச்சரியித்தான் கோவிந்த்.


தொடரும் .....

8 மறுமொழி(கள்):

Ramya Ramanisaid...

கூல் காதல் மலர்ந்து இப்போ பெரியவர்களிடமும் வெளிப்படுத்த போகிறார்க்ளா?? ஹிம்ம் இப்போ எப்படி கொண்டுபோவீங்கன்னு ஆவலோடு எதிர்பார்க்கிறேன் :)

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

வாங்க, வாங்க.

//ஹிம்ம் இப்போ எப்படி கொண்டுபோவீங்கன்னு ஆவலோடு எதிர்பார்க்கிறேன் :)//

ஆச்சரியப்படுத்தற அளவிற்கு இல்லேன்னாலும், தெரிஞ்ச விசயம் தான் என்றாலும், 'அட' அப்படிங்கற மாதிரி ஒரு ஃபார்ம்ல முடிவு வந்து கிட்டே இருக்கு. இந்த அளவிற்கு கதையை நகர்த்துவதற்கு உங்களைப் போன்றவர்களின் ஆவல் தான் உந்துதல்.

ராமலக்ஷ்மிsaid...

அந்த மாது ராமின் அம்மாவா? வாலண்டியர்கள் நடத்தும் அன்னலட்சுமின்னு வேற சொல்றீங்க!
ம்ம். தோளைத் தட்டிய ராம்...என்ன சொன்னார்? சீனா சார் சொன்ன மாதிரி எங்கு தொடரும் போட வேண்டுமென நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

cheena (சீனா)said...

ஹல்லோ - ராம் தோளைத் தட்டினால் தொடரும் போட வேண்டுமா ? இங்கே தூக்கமே வராது - இதுலே ஓரு அம்மா வேற நினைத்ததே ந்டாக்கும் என்கிறார். ஒருவர் அது ராமின் அம்மாவா எனக் கேட்கிறார் ? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//அந்த மாது ராமின் அம்மாவா? //

அப்படித் தான் நினைக்கிறேன் :))

//. தோளைத் தட்டிய ராம்...என்ன சொன்னார்? //

ஆல் த பெஸ்ட் மாதிரி ... அடுத்த பாகம் போட்டாச்சு, நிறைவுப் பகுதி. படிச்சிட்டு சொல்லுங்க.

//சீனா சார் சொன்ன மாதிரி எங்கு தொடரும் போட வேண்டுமென நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.//

அப்படியா ?!!! ஒரு எதிர்பார்ப்பு கொடுத்த மாதிரி இருந்தா, அதில் உங்கள் பங்கும் மிக அதிகம்.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//ஹல்லோ - ராம் தோளைத் தட்டினால் தொடரும் போட வேண்டுமா ? இங்கே தூக்கமே வராது//

ஒரு க்ளு வைத்த மாதிரி இருக்கட்டுனுட்டு தான். அதான் கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்களே.

நிறைவுப் பகுதி போட்டாச்சு. அதில இதுவரை வாசித்த உங்களின் பொதுவான கருத்து(ம்) அறிய ஆவலாய் இருக்கிறேன்.

வல்லிசிம்ஹன்said...

சதங்கா அன்னலட்சுமியை அப்படியே கண்ணு முன்னால நிறுத்திட்டீங்க. அங்க இருக்கும் அன்னலட்சுமியின் சிலை (விக்கிரகம்)முகம் அப்படியே அருளோடு பொங்கி வழியும்.

என்னது இது ராமும் கோவிந்தும் நண்பர்களா!!!
நல்லபடியா முடிச்சுடுங்க:)

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

பிராயணம் முடிஞ்சு வந்து மறக்காம வாசித்ததற்கு நன்றி.

//சதங்கா அன்னலட்சுமியை அப்படியே கண்ணு முன்னால நிறுத்திட்டீங்க. அங்க இருக்கும் அன்னலட்சுமியின் சிலை (விக்கிரகம்)முகம் அப்படியே அருளோடு பொங்கி வழியும்.//

ஆமா. சில வருடங்கள் முன்னர் பார்த்தது, அப்படியே மனதில் இருந்து எழுத வைக்கிறதென்றே அந்த சக்தி !!!

//என்னது இது ராமும் கோவிந்தும் நண்பர்களா!!!
நல்லபடியா முடிச்சுடுங்க:)//

உங்கள் வேண்டுகோளை ஏற்று நல்ல படியா முடிச்சாச்சு, அடுத்த பாகத்தில.

Post a Comment

Please share your thoughts, if you like this post !