Wednesday, August 27, 2008

மனைவிக்குத் தாலி. கணவனுக்கு ?! அடையாளம் தேவையா ???!!!

சமீபத்தில் குமுதம் 'பெண்' வீடியோ பார்க்கும் போது, நடிகை ரஞ்சிதாவிடம் கேட்கப் பட்ட கேள்விக்கும், அதற்கும் சில வாரங்கள் முன்னர் நடிகை ஊர்வசியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும் அவர்களின் பதில் "கண்டிப்பா கல்யாணம் ஆன ஆண்களுக்கும் அடையாளம் தேவை". ம‌ற்ற‌ 'பெண்'க‌ளும் இதையே தான் சொல்லியிருக்க‌ணும்.

"முன்னர் மெட்டி போட்டிருந்தாங்க, அதை அப்படியே நைசா நம்ம கிட்ட தந்திட்டாங்க, இவங்களுக்குத் தனி ஒரு அடையாளம் தரணும். அதுபோக, இப்படி தாடி வைத்திருக்கணும், அல்லது இது போல மீசை இருக்கணும், இதை அரசாங்கம் எடுத்து நடத்தணும்" என்று அடுக்கிக் கொண்டே போனார் ஊர்வசி. நிற்க ...

அப்படியே அரசாங்கம் நடத்துதுனு வச்சிக்குவோம். என்ன அடையாளம் தரலாம் என அவங்க மக்களிடம் யோசனை கேக்கறாங்க. அதற்கு, உங்க 'அடையாள யோசனை' என்னவா இருக்கும். யாரும் சீரியஸா பதில் தரவேண்டாம் :) கொஞ்சம் க்ரியேட்டிவா, எல்லாருக்கும் பிடிக்கும்படி நகைச்சுவையா பின்னூட்டினீங்க என்றால் இனிமையா இருக்கும்.

உதாரணத்திற்கு: இடது காதில் சிகப்பு கலர் கடுக்கண் - டேஞ்சர் கிட்டே போகாதே. (அந்தக் காலத்தில தான் பெண் குனிந்து வரும்போது மெட்டி பார்த்து அறிவாள், இப்ப அப்படி இரும்மா என்றால் அரிவாளத் தூக்கிற‌மாட்டாங்க !! அதான் காதில அடையாளம் :))

31 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

அட, அடையாள யோசனை சொல்லிட்டாலும்தான்...ஏத்துக்கப் போறீங்களா என்ன:))? அக்காலத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி வந்தவை தாலி மெட்டி. இப்போதும் அவை பண்பாட்டின் சின்னமா தொடருது. போட்டால்தான் பண்பாடு என்பதில்லை என நினைக்கும் பெண்களையும் யாரும் தப்பா நினைக்கறதில்ல. இப்ப போய் புதுசா..:))? உங்களுக்கு நீங்களேதான் பாதுகாப்பு. ஃப்ரீயா இருங்கப்பா:)!

கோவி.கண்ணன்said...

தாலி பெண்ணுக்கு கட்டுவது ஆண்களுக்கு கட்டுப்பட்டவள் என்று காட்டுவதற்கு அல்ல, 'இவ கல்யாணம் ஆனவ...வெறிக்கப் பார்காதிங்கடான்னு' ஆண்களுக்குக் காட்டுவதற்குத்தான்.

:)

மங்களூர் சிவாsaid...

:))

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//அக்காலத்தில் பெண்களின் பாதுகாப்பு கருதி வந்தவை தாலி மெட்டி.//

ஆமால்ல. இது புரியாம பாவம் ஊர்வசி ரொம்ப பேசிட்டாங்க :)))

//உங்களுக்கு நீங்களேதான் பாதுகாப்பு. ஃப்ரீயா இருங்கப்பா:)!//

ஆஹா இது நல்லா இருக்கே !!!

சதங்கா (Sathanga)said...

கோவி.கண்ணன்

// தாலி பெண்ணுக்கு கட்டுவது ஆண்களுக்கு கட்டுப்பட்டவள் என்று காட்டுவதற்கு அல்ல//

சரியாகச் சொன்னீர்கள். ஆனால், எங்களுக்கு மட்டும் எதுக்கு லைசென்ஸ் மாதிரி என்று தற்காலப் பெண்கள் கேக்கறாங்களே.

சதங்கா (Sathanga)said...

ம.சிவா,

வருகைக்கும், ஸ்மைலிக்கும் நன்றி.

ஒரு யோசனை ஒன்னை அப்படியே சொல்லி இருக்கலாமே :)))

துளசி கோபால்said...

மொட்டை அடிச்சுக்கச் சொல்லலாம்.

அந்தப் பளபளப்பைப் பார்த்தேக் கண் கூசிப்போகணும்:-)

இவன்said...

ஏன் ஏன் இந்த கொலைவெறி நாங்க நிம்மதியா கல்யாணம் ஆனா பிறகும் சைட் அடிக்கலாம் என்னா விடமாட்டீங்க போல...

நான் ஒரு யோசனை சொல்லவா?? கல்யாணமான ஆம்பிளைங்க தலைய tint பண்ணிக்கிட்டா சரிதானே

Ramya Ramanisaid...

ஹா ஹா ஹா முதல்ல உங்க வீட்ல கேட்டீங்களா சதங்கா அண்ணே?? ;)

இதெல்லாம் தேவையே இல்லைங்கிறது நான் பெர்சனலா பீல் பண்றேன்..பெண்களும் இப்போ வெளிப்படையா அப்படி காட்டுவது குறைந்து வேறு இருக்கு.

அவங்க அவங்க தான் அவங்களுக்கு வேலி :)

விளையாட்டா சொல்லனும்னா, அவங்க எல்லாம் கண்டிப்பா மனைவியின் படம் பதித்த மோதிரம் போடனும்னு சொல்லலாம் :)

கோவி.கண்ணன்said...

மிக மிகத் தேவை என்று நினைத்தால், பெண்கள் அவர்களது கணவருக்கு மோதிர விரலின் மேல் பக்கம் தெரியும் படி பச்சை குத்திவிடலாம் !

:)

N Anandsaid...

"எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்று நெற்றியில் எழுதி கொள்ளலாம்.

சதங்கா (Sathanga)said...

துளசி டீச்சர்,

//மொட்டை அடிச்சுக்கச் சொல்லலாம்.

அந்தப் பளபளப்பைப் பார்த்தேக் கண் கூசிப்போகணும்:-)//

அடிக்காமலேயே பாதி பேருக்கு க்ரவுண்டு விழுகுதே :)) இருந்தாலும் யோசனை அருமை. புது மாப்பிள்ளைகள் கவனிக்க !!!!

சதங்கா (Sathanga)said...

இவன்,

//ஏன் ஏன் இந்த கொலைவெறி நாங்க நிம்மதியா கல்யாணம் ஆனா பிறகும் சைட் அடிக்கலாம் என்னா விடமாட்டீங்க போல...//

இப்படி சொல்லிட்டு,

//நான் ஒரு யோசனை சொல்லவா?? கல்யாணமான ஆம்பிளைங்க தலைய tint பண்ணிக்கிட்டா சரிதானே//

இது போல யோசனை சொன்னா, அப்பட்டமா தெரியுமே, பரவாயில்லையா ?

Sridhar Vsaid...

கல்யாணமான ஆண்களுக்கு 'தனி' அடையாளம் வேற வேணுமா அம்மினி? அதான் முழிக்கிற முழியப் பாத்தாலே தெரியாது? :-))

தாலிக்கு இன்னொரு காரணமும் இருக்குங்கோ.

அந்தக் காலத்தில போரில் வெற்றி பெற்றும் வரும் அரசனுக்கு வாகை மாலை சூடி வரவேற்பு கொடுப்பாங்க. அதாவது வெற்றி மாலை. அந்தப் பழக்கம்தான் அப்படியே பெண்கள்கிட்ட தொத்திகிச்சு. ஒரு அப்பாவி ஆணை வெற்றி கொண்டதை ஊருக்கே தெரிவிக்கிற மாதிரி தங்கத்துல வெற்றி மாலை வாங்கி கழுத்துலப் போட்டுகிட்டு அதையே ஒரு விழாவா கல்யாணம்னு சொல்லிக்கிறாங்க. இது புரியாம ஊர்வசி அம்மணி ஏதோ உணர்ச்சி வசப்பட்டுட்டாங்க. ப்ரீயா விடுங்க. ப்ரியா விடுங்க.

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

//ஹா ஹா ஹா முதல்ல உங்க வீட்ல கேட்டீங்களா சதங்கா அண்ணே?? ;)//

வீட்டில கேட்காமலா. இதோ அவர்கள் பதில், நெற்றியில் 'SOLD' என்று கல்யாணமான ஆண்கள் எழுதிக் கொள்ள வேண்டுமாம் :)))

//இதெல்லாம் தேவையே இல்லைங்கிறது நான் பெர்சனலா பீல் பண்றேன்..பெண்களும் இப்போ வெளிப்படையா அப்படி காட்டுவது குறைந்து வேறு இருக்கு.//

அடிக்கடி நம்ம ஊரில் உதாரணம் காட்டப்படும் மேற்கத்திய நாடுகளில், இடது கை மோதிர விரலில் மோதிரம் அணிவதை இன்று வரை செய்கின்றனரே !!! ஒரே வித்தியாசம், இருவருமே அணிகின்றனர் என்பது தான் பியூட்டி :))

//அவங்க அவங்க தான் அவங்களுக்கு வேலி :)

விளையாட்டா சொல்லனும்னா, அவங்க எல்லாம் கண்டிப்பா மனைவியின் படம் பதித்த மோதிரம் போடனும்னு சொல்லலாம் :)//

விளையாட்டாத்தான் இருக்கும் உங்களுக்கு :))

சதங்கா (Sathanga)said...

கோவி.கண்ணன்,

//மிக மிகத் தேவை என்று நினைத்தால், பெண்கள் அவர்களது கணவருக்கு மோதிர விரலின் மேல் பக்கம் தெரியும் படி பச்சை குத்திவிடலாம் !

:)//

இது சூப்பரு. இதுவும் புது மாப்பிள்ளைகள் கவனத்திற்கு :))

சதங்கா (Sathanga)said...

ஆனந்த்,

//"எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்று நெற்றியில் எழுதி கொள்ளலாம்.//

கையக் குடுங்க. என்ன ஒரு தத்துவார்த்தமான யோசனை. அருமை. கலக்கிட்டீங்க.

ராமலக்ஷ்மிsaid...

துளசி கோபால்said...
//மொட்டை அடிச்சுக்கச் சொல்லலாம்.//

:))))!
ஐடியா கொடுப்பதில் துளசி மேடத்தை 'அடிச்சுக்க' ஆளே கிடையாது இல்லையா சதங்கா:))?

சதங்கா (Sathanga)said...

ஸ்ரீதர் நாராயணன்,

//கல்யாணமான ஆண்களுக்கு 'தனி' அடையாளம் வேற வேணுமா அம்மினி? அதான் முழிக்கிற முழியப் பாத்தாலே தெரியாது? :-))//

வாவ். பலே பலே.

//தாலிக்கு இன்னொரு காரணமும் இருக்குங்கோ.

ஒரு அப்பாவி ஆணை வெற்றி கொண்டதை ஊருக்கே தெரிவிக்கிற மாதிரி தங்கத்துல வெற்றி மாலை வாங்கி கழுத்துலப் போட்டுகிட்டு அதையே ஒரு விழாவா கல்யாணம்னு சொல்லிக்கிறாங்க. இது புரியாம ஊர்வசி அம்மணி ஏதோ உணர்ச்சி வசப்பட்டுட்டாங்க. ப்ரீயா விடுங்க. ப்ரியா விடுங்க.//

அடடா ! என்ன ஒரு வரலாற்று சிறப்பு மிக்க செய்தியை சொல்லியிருக்கிறீர்கள். பெண்கள் பக்கம் இருந்து இதுக்கு என்ன எதிர்ப்பு அல்லது ஆதரவு வருது என்று பார்ப்போம் :))

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//ஐடியா கொடுப்பதில் துளசி மேடத்தை 'அடிச்சுக்க' ஆளே கிடையாது இல்லையா சதங்கா:))?//

ஆஹா, டீச்சரின் யோசனை 'மொட்டை'யிலிருந்து, 'அடிச்சிக்க' ஆளே இல்லைனு அழகா சொல்லிட்டீங்களே !!! சூப்பர் சிந்தனை.

Mathuvathanan Mounasamy / cowboymathusaid...

முதல்ல பெண்கள் ஆண்களின் எந்தப்பகுதியை முதலில் பார்க்கிறார்கள் என சர்வே ஒன்று நடத்தி முடிவுகண்டால் அந்த இடத்தில ஏதாவது செய்ய யோசிக்கலாம்...

வல்லிசிம்ஹன்said...

இப்படிச் செய்யலாமே.
''டபிள் எம்'' நெத்தில பச்சை குத்திக்கலாம். ரொம்பப் பேரைப் பார்த்தா இந்த ஊரில் மேல்(male)தானானு யோசிக்க வேண்டி யிருக்கு. அதனால் 'மேரீட் மேல் '' அப்படின்னு பச்ச குத்திக்கலாம்.:0 இது என் பெண் சொல்கிற யோச்சனை:0
நான் ஒண்ணும் சொல்லறத்துக்கு இல்லப்பா.

Anonymoussaid...

தலைமுடி உள்ளவர்கள் குடுமி வைத்துக் கொள்ளலாம். தலைமுடி உதிர்ந்தவர்கள் தாடி வைக்கவேண்டும். மற்ற காம்பினேஷன் (தலைமுடி+தாடி, வழுக்கை-தாடி)மணமாகாதவரென்று அறியலாம்.

Anonymoussaid...

காதில் பூ வைத்துக் கொள்ளலாம் (ப்லாஸ்டிக் பூ தயாரிக்கும் தொழில் உருவாக வாய்ப்பு)

சின்னப்பொண்ணுsaid...

//தாலி பெண்ணுக்கு கட்டுவது ஆண்களுக்கு கட்டுப்பட்டவள் என்று காட்டுவதற்கு அல்ல, 'இவ கல்யாணம் ஆனவ...வெறிக்கப் பார்காதிங்கடான்னு' ஆண்களுக்குக் காட்டுவதற்குத்தான்.//

உண்மை.

பெண்கள் சுதந்திரம் கோரி அவர்களுக்கென தனி நாடுகள் அமைத்துவிட்டால், அவர்கள் நாடுகள் மீது ஆண்கள் படையெடுப்பர். நாடு பிடிப்பதற்கல்ல . . .???????

சதங்கா (Sathanga)said...

மதுவதனன் மௌ.

// முதல்ல பெண்கள் ஆண்களின் எந்தப்பகுதியை முதலில் பார்க்கிறார்கள் என சர்வே ஒன்று நடத்தி முடிவுகண்டால் அந்த இடத்தில ஏதாவது செய்ய யோசிக்கலாம்...//

ரெண்டு கட்ட வாக்களிப்பு மாதிரினு சொல்லுங்க :)) நாங்க கண்களைத் தான் பார்க்கிறோம்னு ஒரு குரூப்பா கெளம்பி வந்து, எங்க பேர அங்க பச்ச குத்திக்கங்க என்றால் என்ன செய்யிறது ... யோசிச்சீங்களா பாஸ் :))

சதங்கா (Sathanga)said...

அனானி,

//தலைமுடி உள்ளவர்கள் குடுமி வைத்துக் கொள்ளலாம். தலைமுடி உதிர்ந்தவர்கள் தாடி வைக்கவேண்டும். மற்ற காம்பினேஷன் (தலைமுடி+தாடி, வழுக்கை-தாடி)மணமாகாதவரென்று அறியலாம்.//

ஏ.இ.கொ.வெ ??? தலையையும் முடியையும் விடமாட்டேங்கறீங்க :)))

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//இப்படிச் செய்யலாமே.
''டபிள் எம்'' நெத்தில பச்சை குத்திக்கலாம். ரொம்பப் பேரைப் பார்த்தா இந்த ஊரில் மேல்(male)தானானு யோசிக்க வேண்டி யிருக்கு. அதனால் 'மேரீட் மேல் '' அப்படின்னு பச்ச குத்திக்கலாம்.:0 இது என் பெண் சொல்கிற யோச்சனை:0
நான் ஒண்ணும் சொல்லறத்துக்கு இல்லப்பா.//

எல்லாரும் பச்சை குத்தறதிலேயே குறியா இருக்கீங்களே :(( பாவம் ஆண் சமுதாயம் !!!

சிங்கத்தின் மேல் அவ்ள பாசம் தான் உங்களுக்கு ஒத்துக்கறேன். அதான் நீங்க யோசனை தராமல் உங்க பொண்ணு தந்திருக்காங்களே :))

சதங்கா (Sathanga)said...

அனானி,

//காதில் பூ வைத்துக் கொள்ளலாம் (ப்லாஸ்டிக் பூ தயாரிக்கும் தொழில் உருவாக வாய்ப்பு)//

அருமையான பிசினஸ் ஐடியா. ஆனால் யாரு காதில் ?? :))

சதங்கா (Sathanga)said...

காசிபாரதி,

//பெண்கள் சுதந்திரம் கோரி அவர்களுக்கென தனி நாடுகள் அமைத்துவிட்டால், அவர்கள் நாடுகள் மீது ஆண்கள் படையெடுப்பர். நாடு பிடிப்பதற்கல்ல . . .???????//

பின் ??

ஆமா, அவங்களுக்கு எதுக்கு சுதந்திரம் ?! நமக்குத் தானே வேண்டும் சுதந்திரம் :))))

இவன்said...

//இது போல யோசனை சொன்னா, அப்பட்டமா தெரியுமே, பரவாயில்லையா ?//

என் கல்யாணத்துக்கே நான் மொட்டை அடிச்சிட்டுத்தான் போவேன்

Post a Comment

Please share your thoughts, if you like this post !