Friday, August 22, 2008

வானின் நிறம் நீலம் - 3

'அப்பாடா ! இன்று செல்ல‌த்தின் பிடியில் இருந்து த‌ப்பிச்சாச்சு' என்று பையை மேசையில் ஓர‌த்தில் வைத்து, த‌ன‌து க்யூபிகலில் ச‌ரிந்த‌ம‌ர்ந்த செல்வா, திரும்பி ப்ர‌ஷாந்தையும், க்ளிஃப‌ர்டையும் பார்த்தான்.

இருவ‌ர் க‌ண்க‌ளும் குறுகுறுவென‌ குறுஞ்செய்திப் ப‌றிமாற்றம் செய்து கொண்டிருந்த‌ன‌. 'அட‌ப் பாவிங்க‌ளா, நம‌க்கு வில்ல‌ன்கள் ஆகிவிடுவான்க‌ள் போலிருக்கே !' என்று எண்ணி ச‌ற்று திரும்பி பாலினையும், ரெபேக்காவையும் பார்த்தான். த‌லை க‌விழ்ந்து க‌ணினி திரை பார்த்தாலும், அவ‌ர்க‌ள‌து பாடி லேங்குவேஜும், அவர்களிடம் ஒரு மாற்ற‌த்தை காட்டிய‌து.

இவர்கள் அனைவ‌ருக்கும் பின்னால் செல்லம் 'க்ரிஸ்டினா'வின் அறை. மங்கிய க‌ண்ணாடி வழி உருவங்கள் அருவங்களாக. அறிமுக‌க் கேள்வி ப‌தில்கள் மெலிதாய் வெளி அறையிலும் விழுந்து கொண்டிருந்த‌து. அவள் வந்த சாயல் நேர்முகத்திற்கு தான் என எளிதாய் அனைவருக்கும் உணர்ந்தினாலும், அனைவ‌ருக்குமே ஒரு ஆர்வ‌ம், என்ன‌தான் உள்ளே பேசுகிறார்கள் என‌ !!!

"இந்தியாவில் எந்த‌ப் ப‌குதி ?"

"சௌத். சென்னை தெரியுமா உங்க‌ளுக்கு ?"

"ஓ, க‌மான் ! இரு முறை சென்றிருக்கிறேன். ந‌ம்ம‌ வ‌ங்கி, த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌த்திற்கென‌ த‌னியே ஒரு அலுவ‌ல‌க‌ம் அங்கு திற‌க்க‌ப் போகிறார்கள் என்றொரு செய்தியும் சமீப காலமா பேசப்படுகிறது."

ப‌ள்ளி, க‌ல்லூரி, உட‌ன்பிற‌ப்புக்க‌ள், அப்பா, அம்மா என‌ ஒரு மினி ஜென‌ர‌ல் உரையாடலுக்குப் பின், "டூ யூ ஹேவ் எனி கொஸ்டின்ஸ் ?" என்றார் க்ரிஸ்டினா.

சற்றும் தயங்காமல், "இஃப் ஐம் செல‌க்ட‌ட், என்னோட‌ முக்கிய‌ ப‌ணி என்ன‌வா இருக்கும் ? " சேல‌ஞ்சிங்கா எதா இருந்தாலும் எடுத்து செய்ய‌த் த‌யார் என்றும் சொல்ல‌ப் போன‌வ‌ள், வாழ்வில் ஒரு முறை செய்த‌ த‌வ‌றை மீண்டும் செய்ய‌க் கூடாது என்று நினைத்து, முத‌ல் கேள்வியோடே நிறுத்திக் கொண்டாள்.

"ஐ லைக் யுஅர் ப்ரோ‍ஆக்டிவ்னெஸ், இருந்தாலும் டெக்னிக்க‌ல் இன்ட‌ர்வியூ முடிச்சிட்டு சொல்றேன்" என்ற‌வ‌ர், க‌தவைத் திற‌ந்து வெளியில் வந்தார்.

"கேல்ஸ் அன்ட் கைஸ்," கண்கள் சுருக்கி ஒரு கேள்விக்குறியோடே, அவளைப் பார்த்து "ஷி இஸ் நிமலா ?!" என்றார்.

"நிர்ம‌லா" என்று 'ர்'க்கு ஒரு அழுத்த‌ம் கொடுத்தாள் நிர்ம‌லா.

திரும்ப‌வும் முய‌ற்சித்த‌ க்ரிஸ்டினா, 'நிமலா' என்றே மீண்டும் சொன்னார். அவருக்கு 'ர்' ஒரு பெரிய‌ ச‌வாலாக‌வே இருந்த‌து. நீந்துகையில், கை நீட்டி நீரை வ‌ழிப்ப‌து போல‌ செய்து, "சாரி ஃபார் த‌ட், வென் டேய்ஸ் கோஸ் ஆன், ஐ வில் க‌ரெக்ட் இட்" என்று சொல்லி அவளைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்து வைத்தார் எல்லோருக்கும்.

இந்த‌ ஒரு வாக்கியம், நிர்ம‌லாவுக்கு, அங்கு வேலை உறுதி என‌க் காட்டிய‌து. அம்மையாருக்கு ந‌ம்மைப் பிடித்து விட்ட‌து என்று ம‌கிழ்ச்சி கொண்டாள். இங்க‌ உட்கார்ந்திருப்ப‌வ‌ர்களில் யாரோ ஒருவர் அல்லது இருவர் தான் டெக்னிக்க‌ல் கேள்வி கேட்க‌ப் போகிற‌வ‌ர்க‌ள் என்று சுற்றிலும் அனைவ‌ரையும் ஒரு முறை பார்த்தாள்.

அது ஒரு பன்னாட்டு நிறுவன வங்கி. ஆயிரமாயிரம் பேர் உலகெங்கிலும் வேலை பார்க்க, இந்த அளவிற்கு ஒரு குட்டி டிப்பார்ட்மென்ட் இன்று தான் பார்க்கிறாள் நிர்மலா. 'ரிஸ்க் மேனேஜ்மென்ட்'ன் மென்பொருள் தயாரிப்பு, மற்றும் ஆணி பிடுங்குதல் ப்ராதன வேலை.

ஒரு மினி ஃப்ரிட்ஜ், அத‌ன் மேல் த‌ண்ணீர் சுட‌ வைக்க‌ கெட்டில், அத‌ன‌ருகே காபி த‌யாரிக்க‌, அத்த‌னை இன்ஸ்ட‌ன்ட் பொடிக‌ள், தேயிலை பொட்ட‌ல‌ங்க‌ள், ச‌ர்க்க‌ரை. அறையின் நீளவாகில் இருபுற‌மும் அல‌ங்கார‌ ட்ராய‌ர்க‌ள். அத‌ன் மேல் புத்த‌ர் சிலைக‌ள். வ‌ரிசையாய் கோப்புக்க‌ள். ந‌டுவே மீன் முள் போல க்யூபிக‌ல்க‌ள். ஒரு க்யூபிகலில் உட்கார்ந்து சுற்றினால் அனைவ‌ரையும் பார்த்து பேசும் வ‌ண்ண‌ம் ஒரு அமைப்பு. அனைத்து மேசைகளிலும் க‌ணினி பார்க்க‌ அலுவ‌ல‌க‌ம் போன்று தோன்றினாலும், மொத்த‌த்தில் ஒரு ஹோட்ட‌ல் சுயீட் போல‌வே காட்சி த‌ந்தது அந்த‌ இர‌ட்டை அறை.

ஒவ்வொருவ‌ரிட‌மும் கை குலுக்கி அறிமுக‌ம் செய்து கொண்டு, அவர்களைப் பற்றியும் அறிந்து கொண்டாள். எல்லோரிட‌மும் போல‌வே செல்வாவிட‌மும் கை குலுக்கிப் பேசினாள். 'என்ன‌து !! வெளியில் க‌ண்டுக்காத‌வ‌ள், உள்ளே வெகு இய‌ல்பாய் பேசுகிறாளே !!!' என்று நினைத்திருந்தான்.

"ப்ர‌ஷாந்த், க்ளிஃப‌ர்ட், க‌மான் இன். யூ டூ நிம‌லா" என்று சொல்லி அடுத்த‌ க‌ட்ட‌ டெக்னிக்க‌ல் இன்ட‌ர்வியூவிற்கு, இவர்களைத் தன் அறைக்கு அழைத்து சென்றார் க்ரிஸ்டினா.

தொடரும் .....

8 மறுமொழி(கள்):

Ramya Ramanisaid...

வாவ் அருமை..அட இவங்க ஆபீஸுக்கே வந்தாச்சா..இப்போ இவரே அவங்களுக்கு வேலை சொல்லிக்கொடுப்பாரோ.. ரொம்ப யோசிக்கவெக்கறீங்க..சுப்பரு..

\\"சௌத். சென்னை தெரியுமா உங்க‌ளுக்கு ?"\\

அட எங்க ஊரு ஊரு...சென்னை தெரியாத மக்களும் உண்டோ s/w வந்த அப்புறம் மக்களுக்கு பெங்களூருக்கு அப்புறம் தெரிஞ்ச ஊரு இது தான்!தோசையும் இட்லியும் கூட இப்படித்தான் மக்களுக்கு பழக்கமாகிருக்கு :)

ராமலக்ஷ்மிsaid...

ரம்யா சொன்னது போல அலுவலகத்துக்குள்ளேயே வந்தாயிற்று. இனி என்ன? "நிர்மலா" நல்ல பெயர்.

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

//இவரே அவங்களுக்கு வேலை சொல்லிக்கொடுப்பாரோ.. ரொம்ப யோசிக்கவெக்கறீங்க..சுப்பரு..//

வச்சிட்டாப் போச்சு. செல்வாக்கு ரொம்ப ஆசை. க்ரிஸ்டினா என்ன பண்றாருனு பார்ப்போம்.

//அட எங்க ஊரு ஊரு...சென்னை தெரியாத மக்களும் உண்டோ s/w வந்த அப்புறம் மக்களுக்கு பெங்களூருக்கு அப்புறம் தெரிஞ்ச ஊரு இது தான்!தோசையும் இட்லியும் கூட இப்படித்தான் மக்களுக்கு பழக்கமாகிருக்கு :)//

அதானே. ஒரு காலத்தில ! தான் பெங்களூரூ. இப்பல்லாம் சாஃப்ட்வேர் என்றாலே சென்னைனு தானே ஆகிடுச்சு.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//ரம்யா சொன்னது போல அலுவலகத்துக்குள்ளேயே வந்தாயிற்று. இனி என்ன? "நிர்மலா" நல்ல பெயர்.//

ரம்யாவிற்கு சொன்ன பதில் தான். சின்ன டிபார்ட்மென்ட் தானே ! அதனால் சேர்ந்து வேலை பார்க்க நிறைய சந்தர்ப்பம் வாய்க்குமே. என்ன தான் நடக்குதுனு பார்ப்போம். ஓ.கே.வா ?

cheena (சீனா)said...

செல்வா - மூன்றெழுத்து
நிமலா - மூன்றெழுத்து

அடுத்த மூன்றெழுத்து இயல்பாக வரவேண்டுமே !

நல்வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்said...

செல்வா - மூன்றெழுத்து
நிமலா - மூன்றெழுத்து

அடுத்த மூன்றெழுத்து இயல்பாக வரவேண்டுமே !//


இது நல்லா இருக்கே சீனா சார்.
ஒரு ர் விட்டுப்போச்சே. இருந்தாலும் அடுத்த மூன்றெழுத்து வந்த மாதிரித் தான் தெரியுது:0)

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//செல்வா - மூன்றெழுத்து
நிமலா - மூன்றெழுத்து

அடுத்த மூன்றெழுத்து இயல்பாக வரவேண்டுமே !செல்வா - மூன்றெழுத்து
நிமலா - மூன்றெழுத்து

அடுத்த மூன்றெழுத்து இயல்பாக வரவேண்டுமே !//

வாவ், அருமை. அருமை ! ரசித்தேன். இனிமை !!! அது தானே கதையில் முக்கியமே. வந்திடும் இன்னும் சில பாகங்களில்.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//ஒரு ர் விட்டுப்போச்சே. இருந்தாலும் அடுத்த மூன்றெழுத்து வந்த மாதிரித் தான் தெரியுது:0)//

ஆமா, இல்லை தான் இதற்கும் பதில் :))) கொஞ்சம் பொறுமைஸ் ப்ளீஸ்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !