Thursday, August 7, 2008

என்ன விலை அழகே - 12

என்ன‌ங்க‌ இப்ப‌டி சொல்றீங்க‌. பொத்தி பொத்தி வ‌ள‌ர்த்த ஒரே பொண்ணு. என்னதான் பால்ய சிநேகிதம்னாலும், எப்ப‌டிங்க‌ ச‌ட்டுனு கொடுத்திட முடியும். ஒரு எட‌த்துக்கு, ரெண்டு எடமா பார்த்தா, ஏதாவது ஒன்று ந‌ல்லா அமையும்னு தான். அவ மேல இருக்க கான்ஃபிடண்ட்ல என்னதான் சுதந்திரமா வளர்த்தாலும், எத்தனை நாள் தான் இப்படி இருக்கது. எப்ப அவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்றோமோ அப்ப தானே நமக்கு சுதந்திரம்.

நீ எது செய்தாலும் க‌ரெக்டா தான் இருக்கும், ஐ ஹேய்வ் ஃபுல் கான்ஃபிடன்ட் ஆன் யூ. சரி நான் கொஞ்சம் தோட்ட வேலை பார்க்கப் போறேன் என்று சொல்லி சென்று விட்டார் சுவாமிநாத‌ன்.

என்ன ட‌ல்லா இருக்கே ?! சாரி ஃபார் த‌ ஷார்ட் நோட்டீஸ்மா.

கொஞ்சம் முன்னால தான் வந்து சொல்ற. அதும் சேல வேற கட்டிவிட்டு, ஏதோ பொம்மை மாதிரி, இல்ல இல்ல, கொஞ்ச நேரத்தில ஒரு ஜோக்கர் மாதிரி ஆக்கிட்ட. எதுக்கு ஷார்ட் நோட்டீஸ்ல இப்படி பண்ற ? ஐம் நாட் எ கிட்.

முன்னாடியே சொல்லிருந்தா, நீ பாட்டுக்கு வெளில கெளம்பி போயிடறே. நேத்து பாரு மைத்திலி ரொம்ப கோபிச்சிக்கிட்டா. நாம வரமாட்டேன்கிறோம்னு.

என்னம்மி இப்படி எம்பாரஸ் பண்ண வச்சிட்டே. எனக்கு இதல்லாம் சுத்தமா பிடிக்கலை.

கோச்சுக்காதடா கண்ணு. இதெல்லாம் இங்க நடைமுறை.

இருக்கட்டும், பட் ஒய் ஃபார் மீ ?

அவங்க வந்ததே உன்னைப் பார்க்க தான்.

வாட் டூ யூ மீன் ?

...

இதெல்லாம் ஏன் முன்னாடியே சொல்லலை. அப்ப ஏதோ ஒரு ப்ளான்ல தான் இந்த முறை என்னை இங்க வரவழைத்திருக்கிறீர்கள். யு அன்ட் டாட் ஹெய்ட் சீட்டட் மீ. யூ லையர்ஸ். எல்லா செய்திகளையும், நான் மட்டும் தெளிந்த நீரோடையில் தெரியும் சிறு துகள்கள் மாதிரி எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்றேன். ஆனா, நீங்க அப்படி செய்ய மாட்டீங்க‌. ஐ ஹேய்ட் யூ, ஐ ஹேய்ட் யுஅர் ஹஸ்பண்ட், ஐ ஹேய்ட் எவ்ரிதிங் ....

என்ன தான் லண்டன், அமெரிக்கா என்று போனாலும் கல்யாணத்துக்கு இங்க தான வரணும். எங்க தலைமுறையிலும் தொடரும் இந்த பந்தத்தை, நாங்களும் தொடரணும் என்று பார்க்கிறோம். எங்க பிள்ளைகளும் அதையே செய்யணும் என எதிர் பார்க்கிறோம்.

கூல், கூல் டௌன் என்று கோவிந்தின் குரல் ஒலித்தது. ஹேன்டில் த சிச்சுவேசன் என மனம் சொன்னது. இந்த நேரத்தில் கோவிந்த் பற்றி சொல்லலாமா ? சொன்னா அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவா ?

இல்லம்மா, உனக்கும் வயசாயிட்டுதில்ல. இந்த வயதில் கல்யாணம் பண்ணிக்காம அப்புறம் எப்ப பண்ணிப்ப. தெரிஞ்ச இடத்தில மாப்பிள்ளை எடுக்கறது தான் எல்லாத்துக்கும் நல்லது. அதும் நல்ல நட்புள்ள இடங்களில் மாப்பிள்ளை கிடைக்கறதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்.

சரி, எல்லாத்துக்கும் ஃபுல் ஃப்ரீடம் கொடுத்த நீங்க, ஏன் இந்த விஷயத்தில் என் போக்குக்கு விடல ?! அதுமில்லாம எனக்குப் பிடிக்குமா என்றெல்லாம் கேக்காம ?!!!

ஒன்னும் அவசரமில்லை. இப்போதைக்கு ஒரு சின்ன என்கேஜ்மென்ட் வச்சிப்போம். அப்புறம் நீ எப்ப சொல்றியோ அப்ப கல்யாணத்த வச்சிக்கலாம். தென் இஃப் யு வான்ட், யு கேன் ஸ்டே ஹியர், இல்லேன்னா மாப்பிள்ளைய கூட்டிட்டு லண்டன் வந்திரு.

நான் கேட்டதுக்கு பதில் சொல்லலை நீ இன்னும். எனக்கு இது சுத்தமா பிடிக்கலை. என் இஷ்டத்திற்கு இதிலும் விட்டுடுங்க. டோன்ட் இன்டர்ஃபியர்.

ஐம் சாரி இஃப் ஐ ஹர்ட் யுஅர் ஃபீலிங்க்ஸ் இன்டி. யு ஷுட் அன்டர்ஸ்டான்ட். இது சும்மா சுத்தினோமா, ஷாப்பிங் பண்ணினோமான்ற அளவுக்கு ஈஸி கிடையாதும்மா. அதனால‌ ஃபார் மெனி ரீசன்ஸ் நாங்க எடுக்கற முடிவு தான் உனக்கு பெட்டரா இருக்கும். சில‌ வார‌ங்க‌ள் இங்க‌ தான் இருக்க‌ப் போறோம். டேக் யுஅர் ஓன் டைம். எப்ப‌ க‌ம்ஃப‌ர்ட‌பிலா ஃபீல் ப‌ண்றியோ, அப்ப‌ இது ப‌த்தி கன்டினியூ பண்ணலாம்.

மிகுந்த யோசனைகளுடன் தன் ரூமிற்கு சென்ற இன்டி, கோவிந்தை செல்லில் அழைத்தாள்.


தொடரும் .....

6 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

அழைத்து...என்னதான் சொன்னாள்...?

விறுவிறுப்பான பாகம் பனிரெண்டு. இரண்டு தலைமுறைகளுக்கும் இடையேயான கருத்து மோதல் எல்லா இடங்களிலும் பார்ப்பது கேள்விப் படுவது. அதை அப்படியே சூடு குறையாமல் பரிமாறியிருக்கிறீர்கள்.

cheena (சீனா)said...

இண்டி எல்லாவற்றையும் கோவிந்து உட்பட தாயிடம் சொல்லும் பழக்கமுடையவள் என் நினைத்தேன். இப்பொழுது தான் கோவ்ந்தைப் பற்றிச் சொல்ல முனைகிறாளா ? எங்கேயோ இடிக்கிறதே ? ம்ம் - பார்க்கலாம்

செந்தழல் ரவிsaid...

:))

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//அழைத்து...என்னதான் சொன்னாள்...?//

அடுத்த பாகம் இன்னும் சில மணிகளில் ரெடியாயிடும். (பார்த்தீங்களா, நாளைக்கென்றெல்லாம் சொல்லவில்லை :)))

//அதை அப்படியே சூடு குறையாமல் பரிமாறியிருக்கிறீர்கள்.//

மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//இப்பொழுது தான் கோவ்ந்தைப் பற்றிச் சொல்ல முனைகிறாளா ? //

தங்கள் சந்தேகம் ஞாயமானதே. கோவிந்த் பற்றி சொல்லி தானே அவனுடன் சுற்றுகிறாள். பட் காதலை நேற்று இரவு கோவிந்திடம் தெரிவித்து, அம்மாவிடம் தெரிவிக்க சந்தர்ப்பம் பார்ப்பதற்குள், நாகராஜன், கமலா விசிட். அடுத்த பாகத்தில இன்னும் விரிவா இருக்கு இதுக்கு விடை.

சதங்கா (Sathanga)said...

செந்தழலார், ஸ்மைலிக்கு நன்றி :))

Post a Comment

Please share your thoughts, if you like this post !