Wednesday, August 6, 2008

என்ன விலை அழகே - 11

வா கமலா, பல வருடங்கள் முன்னாடி பார்த்தது, அப்படியே இருக்கியே. வாங்க, வாங்க !!! என்னங்ககககக, அவங்க வந்தாச்சு கீழ வர்றீங்களா ?

இதோ வந்திட்டேம்மா என்று மனைவியின் அன்பான அழைப்பிற்கு பதில் சொல்லி, வாங்க, வாங்க, எப்படி இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டே மாடிப் படிகளில் இறங்கி வந்தார் சுவாமிநாதன்.

ஞாபகம் இருக்கா, உங்க கிட்ட நிறைய சொல்லியிருக்கேன் இவங்கள பத்தி. இவ தான் கமலா. பள்ளி நாட்கள் முழுதும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்காத கூத்தில்லை. சரி சரி, அதெல்லாம் அப்புறம் பொறுமையா பேசலாம். இவர் இவளோட ஹஸ்பண்ட் நாகராஜன். ரெண்டு பேரும் கல்லூரிப் பேராசிரியர்கள். இவங்களுக்கு ரெண்டு பொண்ணு, ஒரு பையன். பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகி, பையன் மட்டும் வெய்டிங் ஃபார் த வெட்டிங். இப்ப அமெரிக்கால வாசம்.

தெரியும்மா, போன முறை வந்தப்ப கூட இவங்கள மீட் பண்ணிருக்கோமே. இவங்களப் பத்தி சமீப காலமா நீ பேசாத நாள் இல்லியே. சோஃபாவில் இருந்து சற்று குனிந்து, இது பத்தாவதோ, பதினொன்னாவதோ உங்களப் பத்தி சொல்றது என்றார். ஒரு மரியாதைக்காக எண்ணிக்கைய கொறச்சு சொல்றேன். அது போகும் நூறு இருநூறு முறை.

ஆமா, உம் பொண்ணு எங்க ராஜி என்றார் கமலா.

மேல இருக்கா. இரு வரச் சொல்றேன் என்று எழுந்து மேலே சென்றார் ராஜி.

கீழ இருந்தே அப்பாவை அழைத்த மாதிரி அழைக்காமல் ஏன் மேலே போறா, என கமலாவும், நாகராஜனும் ஆச்சரியமாய் ஒருவரை ஒருவர் பார்க்க, வந்து, பாருங்க உங்கள உக்கார்த்தி வச்சிட்டு ஒன்னுமே தரலை பாருங்க. எனி ஹாட் ஆர் கோல்ட் ட்ரிங்க்ஸ் ? என்றார் சுவாமிநாதன்.

சிறிது நேரம் கழித்து, இதோ ரெடியாயிட்டு இருக்கா என முந்தானை முழங்கை தாங்க கீழ இறங்கிய ராஜேஸ்வரி, பார்த்தியா நானும் மறந்துட்டேன் பாரு. என்ன சாப்பிடறீங்க ?

சாப்பிடறது இருக்கட்டும், மொதல்ல பொண்ணப் பார்த்துக்கறோம் என்றனர் இருவரும்.

லஷ்மி கடாட்சமா இருக்கா, என் கண்ணே பட்டுடும் என தலையில் விரல்கள் மடக்கி, சொடக்கொடித்தார் கமலா.

இத்தனைக்கும் இன்டியின் உடையலங்காரம் காஞ்சிப் பட்டோ, தக தகக்கும் தங்க நகையோ அல்ல. பச்சை பார்டரில் மாம்பழக் கலர் காட்டன் சேலையும், பார்டருக்கேற்ற கலரில் ஜாக்கெட்டும், நேர் வகிடெடுத்த நெற்றியில் ஆச்சரியக் குறிப்புள்ளி போல சிறு குங்குமப் பொட்டும், கழுத்தை விட்டு சற்று கீழிறங்கி, வெண் கடுகு போல் முத்து மாலையும், காதில் ஆடும் சிறு கம்மலும், அழகாய் பராமரிக்கப் பட்ட விரல் நகங்களும் ....

"தேவதை போலொரு பெண்ணிங்கு வந்ததை எண்ணி"

என்று எல்லோருக்கும் பாடத் தோன்றும் அளவிற்கு இருந்தாள் இன்டி.

சின்னப் புள்ளையில பார்த்தது, என்னமா வளர்ந்திருக்கு உம் பொண்ணு. வாம்மா, இப்படி உட்கார் என்றார் கமலா.

முதல் முறையாய் ஒரு அன் கம்ஃபர்டபில் நிலையை உணர்ந்தாள் இன்டி. என்னம்மா இதெல்லாம் என்பது போல் தாயைப் பார்த்தாள். கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ என்பது போல் முகத்தில் பதிலளித்தார்.

அப்புறம், என்ன ரெண்டு பேரும் பேசவே மாட்டேங்கறீங்க என்று நிசப்தத்தை உடைத்தார் சுவாமிநாதன்.

மிஸ்டர் சுவாமிநாதன், நீங்க டாக்டரா இருக்கீங்கன்றது தெரியும். உங்க பொண்ணு டாக்டருக்கு படிக்கறாங்கன்றதும் தெரியும். அவங்களுக்கு ஒரு டாக்டர் மாப்பிள்ளை பார்க்கலாமில்லையா. அவளுக்கும் கல்யாண வயசு மாதிரி தான் இருக்கு என்றார் நாகராஜன்.

என்ன ஒரே எம்பாரஸ்ஸிங்கா இருக்கு, வாட் திஸ் நான்சென்ஸ் இஸ் என்பது போல் முகம் மாறினாலும் வெளிக்காட்டாமல், எக்ஸ்க்யூஸ் மீ, நீங்க பேசிட்டு இருங்க, என்று சொல்லி மாடியேறி மறைந்தாள் இன்டி.

ஷி இஸ் நாட் ஃபீலிங் வெல். வாங்க நம்ம சாப்பிடலாம் என எழுந்தார் ராஜேஸ்வரி. எத்தனை நாட்கள் இங்க இருப்பீங்க, என்னவெல்லாம் பிடிக்கும், மகன், மகள், மறுமகள், பேரன், பேத்தி என பெரியவர்களுக்கே உரிய பேச்சுக்களுடன் லஞ்ச் முடிந்தது இன்டியின் வீட்டில் செவ்வாய் மதியம்.

சரி நாங்க கெளம்பறோம் ராஜி. சீனுவ அமெரிக்கால இருந்து வரச் சொல்லியிருக்கோம். வியாழன் நைட் அல்லது வெள்ளி காலை வந்திருவான். வந்தப்புறம் ஒரு நாள் திரும்ப மீட் பண்ணலாம்.

அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து ...

ஏம்மா, மைத்திலி மகன் ராமுக்கு வேற சொல்லிவிட்டிருக்கே. இப்ப கமலா மகன் சீனு ... வாட் இஸ் தேர் இன் யுஅர் மைன்ட் நௌ ? என்று ஆச்சரியத்தோடு கேட்டார் சுவாமிநாதன்.


தொடரும் .....

12 மறுமொழி(கள்):

Anonymoussaid...

சதங்கா கதை நல்லா ஜோரா போகுது :))

நானானிsaid...

கதை அழகாக வேகமெடுக்குது. ரெண்டாவது மூணாவது அப்புரம் டாப் கியரில் போகணும். வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன்said...

அதானே என்னதான் நினைப்பு இந்த அம்மாவுக்கு. கதை படிக்கிறவங்க காதலைப் புரிந்து கொள்ளவேண்டாமோ!!

சதங்கா (Sathanga)said...

//சதங்கா கதை நல்லா ஜோரா போகுது :))//

நன்றி ரம்யா.

சதங்கா (Sathanga)said...

நானானிம்மா,

//கதை அழகாக வேகமெடுக்குது. ரெண்டாவது மூணாவது அப்புரம் டாப் கியரில் போகணும். வாழ்த்துக்கள்!//

நன்றி. நன்றி. உங்க வலைச்சர வாரத்தை நினைவில வைத்துக் கொள்கிறேன் ஸ்பீடுக்கு. என்னமா ஒரு ஃப்ளோ, கலக்கிட்டீங்க.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//அதானே என்னதான் நினைப்பு இந்த அம்மாவுக்கு. கதை படிக்கிறவங்க காதலைப் புரிந்து கொள்ளவேண்டாமோ!!//

அதானே. எங்க புரியுது அவங்களுக்கு. அவங்க கேரக்டருக்கு ஒரு இம்பார்டன்ஸ் இல்லாம் போயிடுமாம். அடுத்த பகுதில என்ன சொல்றாங்கனு பார்ப்போம். :)))

ராமலக்ஷ்மிsaid...

//வாட் இஸ் தேர் இன் யுஅர் மைன்ட் நௌ ? என்று ஆச்சரியத்தோடு கேட்டார் சுவாமிநாதன்.//

சுவாமிநாதன் கேட்டாற் போல உங்களைக் கேட்கத் தோன்றுகிறது சதங்கா.."வாட் இஸ் தேர் இன் யுஅர் மைன்ட் நௌ?" ஆனா சொல்ல மாட்டீங்களே.. அடுத்த பதிவில் என ஜகா வாங்கிடுவீங்களே:))!

சுபமான முடிவுதான் என நீங்க சொன்னாலும் கூட எப்படி முடியும் என்கிற ஆவல் ஒவ்வொரு பதிவிலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஜீவிsaid...

சதங்கா,
நன்றாகச் செல்கிறது.. பெரும்பாலும் உரையாடல்களில் கதையை நகர்த்துவது நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

சதங்கா (Sathanga)said...

ஜீவி ஐயா,

//பெரும்பாலும் உரையாடல்களில் கதையை நகர்த்துவது நன்றாக இருக்கிறது.//

மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாசிங்க. இன்னும் இரண்டு அல்லது மூன்று பாகங்கள் தான் பாக்கி. அழகான முடிவு தான் சொல்லணும் என நம்ம நண்பர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அதனால அழகா, வித்தியாசமா எப்படி சொல்லலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

அடுத்து பாகம் 12 போட்டாச்சு. வந்து வாசித்து சொல்லுங்கள்.

சதங்கா (Sathanga)said...

ராம‌ல‌ஷ்மி மேட‌ம்,

//வாட் இஸ் தேர் இன் யுஅர் மைன்ட் நௌ?" ஆனா சொல்ல மாட்டீங்களே.. அடுத்த பதிவில் என ஜகா வாங்கிடுவீங்களே:))!//

ஆமா, அடுத்த பதிவு போட்டாச்சுல்ல, ஒரு சின்ன‌ ஆர்க்யூமென்ட், அம்மாவுக்கும் பொண்ணுக்கும்.

//சுபமான முடிவுதான் என நீங்க சொன்னாலும் கூட எப்படி முடியும் என்கிற ஆவல் ஒவ்வொரு பதிவிலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.//

நல்லா பண்ணனும் என்று மேலும் மெனக்கெட வைக்கும் வரிகள்.

cheena (சீனா)said...

ஆகா ஆகா - நோ ஒன் நோஸ் வாட்ஸ் இன் ஹர் மைண்ட் - பெண்களே இப்படித்தான் - அதிலும் இண்டிக்கே தெரியாமல் ஒரு சூழ்நிலையை உருவாக்குதல்

இண்டியின் தேவதைக் கோலம் எனக்குப் பிடித்திருக்கிறது.

//இத்தனைக்கும் இன்டியின் உடையலங்காரம் காஞ்சிப் பட்டோ, தக தகக்கும் தங்க நகையோ அல்ல. பச்சை பார்டரில் மாம்பழக் கலர் காட்டன் சேலையும், பார்டருக்கேற்ற கலரில் ஜாக்கெட்டும், நேர் வகிடெடுத்த நெற்றியில் ஆச்சரியக் குறிப்புள்ளி போல சிறு குங்குமப் பொட்டும், கழுத்தை விட்டு சற்று கீழிறங்கி, வெண் கடுகு போல் முத்து மாலையும், காதில் ஆடும் சிறு கம்மலும், அழகாய் பராமரிக்கப் பட்ட விரல் நகங்களும் .... //

அருமை அருமை - இண்டியின் விருப்பம் நிறைவேற பிரார்த்தனைகள்

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//இண்டியின் தேவதைக் கோலம் எனக்குப் பிடித்திருக்கிறது.//

நம் ரசனையின் வெளிப்பாடு தானே இது. எனக்கும் தான்.

//இண்டியின் விருப்பம் நிறைவேற பிரார்த்தனைகள்//

இரண்டொரு பாகங்களில், நிச்சயம் நிறைவேறும்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !