Friday, August 29, 2008

வானின் நிறம் நீலம் - 6


Photo: http://en.wikipedia.org/

பசங்க இருவரும், லேட்டாக வரும் செல்வாவைப் பார்த்து, "என்னடா எம்.ஆர்.டி. ஸ்டேஷன்ல ஒரே ஜொல்லுப் பெருக்காமே" என்று நக்கலடிக்க, அவர்களுடன் சீனச்சியரும் சேர்ந்து கொண்டனர். "அவ அழகா இல்லேன்ற, பின்னே ஏன் இவ்ள நேரம், இல்ல லாபி எங்கயாவது ரெண்டு ஸ்டேஷன் தள்ளி மாத்திட்டாங்களா என்ன ?" என இருவரும் கண்கள் சுறுக்கி, பொங்கும் சிரிப்பை அடக்கி, ஆளாளாக்கு மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.

இந்த சளசளப்பில், உள்ளறையிலிருந்து வந்த க்ரிஸ்டினா அனைவருடனும் சேர்ந்து கொண்டார். உன்னையும் நேர்முகம் காண அழைக்கலாம் என இருந்தேன். நல்ல வேளை என இப்ப உணருகிறேன். நீ பாட்டுக்கு ஆளப் பார்த்து செலக்ட் பண்ணிட்டேனா என்று அவர் பக்கம் இருந்து ஒரு நக்கல் கணை வீசினார்.

"ஜோக்ஸ் அபார்ட். வாட் டு யூ ஆல் திங்க் எபௌட் நிமலா" என்று அனைவரிடமும் கேட்டார். சீனப் பெண்கள் இருவரும் "இஃப் ஷி இஸ் டெக்னிக்கலி ஓ.கே, தென் இட்ஸ் அப் டூ யூ" என்றனர்.

ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி, கூட்டணிக் கட்சிகள் நடத்தும் திறமை போல, இந்த விசயத்தில் க்ரிஸ்டினா அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். என்ன தான் "ஸ்கில்டா" அல்லது "போல்டா" இருந்தாலும், குட்டி டிபார்மென்ட் என்பதால், அனைவருக்கும் பிடித்திருக்கிறதா என நோட்டம் பார்த்து தான் புதியவர்களை எடுப்பார். "டெக்னிக்கலி அன்ட் சோஷியலி ஷி இஸ் ஓ.கே. எதற்கும் ஒரு இரண்டு நாள் டைம் எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு யாருக்காவது ஏதாவது பிடிக்கலை என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்" என்று தன்னறைக்குச் சென்று விட்டார்.

மதிய உணவு இடைவேளையில் சீனர்கள் அனைவரும், ஸ்ஸு, பிஸ்ஸு என்று அவர்கள் மொழியில் அளவளாவி, ப்ரசாந்திடமும், செல்வாவிடமும் "நீங்க கடா புடானு உங்க மொழியில பேசிக்கங்க" என்று கண்சிமிட்டி சென்றனர்.

செல்வாவும், ப்ராஷாந்தும், இந்திய வழக்கப்படி சாப்பாடு டப்பாக்களைப் பிரித்து மேசையிலேயே வைத்து உண்ண ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் வரை கலகலவென்றிருந்த அந்த அலுவலக அறை, கடைசிக் கூட்டத்தை அள்ளிச் சென்ற ரயில் நிலையமென நிசப்தமாக இருந்தது. தாளித்த கடுகு, சீரகத்தின் வாசனை அறை முழுதும் பரவி உணவகத்தை நினைவூட்டியது.

"என்னடா நினைக்கறே அவளப் பத்தி", இது செல்வா.

"என்ன நினைக்கறேன்னா !? புரியல !"

"இல்ல, டெக்னிக்கலா எப்படினு ?"

"உனக்கேன்டா கவலை, அதெல்லாம் க்ரிஸ்டினா பார்த்துப்பா. உண்மைய சொல்லு, என்ன ஜொள்ளா ? இந்த கண்டவுடன் காதலை, கண்டம் விட்டு கண்டம் போனாலும் விடமாட்டீங்க !!!! ம்ம்ம்ம்"

"சே, சே அதெல்லாம் இல்லை, நீயே ஏத்தி விடுவ போலிருக்கே !!!"

"சரி சரி, ஒரு குட் நியூஸ். அவ என் ப்ராஜக்டல தான் ஒர்க் பண்ணப் போறா" என்றவன் செல்வாவையும் நோட்டம் விட்டான். லேசான முகச்சுளிவு இருக்கத் தான் செய்தது செல்வாவிடம். "என்ன பண்றது செல்வா, எல்லாம் நாம நினைக்கற மாதிரியே நடந்திருச்சுன்னா அப்புறம் சுவாரஸ்யம் ஏது !!! சரியா ? சரி, சீக்கிரம் சாப்பிடு, வாக் போய்ட்டு வரலாம், இதுங்க எல்லாம் வர்றதுக்குள்ள !" என்றான்.

செல்வாவும், ப்ரஷாந்த்தும் அலுவலகக் கட்டிடத்தை விட்டு வெளியில் வந்தனர். கூசும் கண்களை சிறிது சுருக்கி, கூட்டத்தினூடே பேசிக் கொண்டே நடந்தனர்.

வழக்கம் போல பல விதமான மக்கள். வெள்ளையர், கருப்பர், சீனர், இந்தியர், மலாயர், மற்றும் பல நாட்டவர் என பட்டியல், அங்கு பல புறமும் இருக்கும் திண்ணைகளின் நீளம் எனலாம். ரோமமில்லாதவர்களின் தலை பாளம் பாளமாக வெடிக்கும் அளவிற்கு, உச்சி வெய்யில் உள்ளந்தலையில் பட்டுத் தெரித்தது. சுற்றிலும் வான் உயர்ந்த கட்டிடங்கள். நடுவே பாதாள ரயில் நிலையம். ரயில் நிலையத்தின் மேலே வெட்ட வெளியில், வெய்யிலில் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போவதும் வருவதுமாக இருந்தனர். பலர் அந்த நீண்ட திண்ணைகளில் அமர்ந்து சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அனைவரையும் கடந்து சென்று கடல் பக்கம் ஓரமாக நடந்து, பாலத்தைக் கடந்து, கொஞ்ச நேரம் கடல் காற்று சுவாசித்து திரும்பி வருவது தினம் ஒரு பழக்கமாக இருந்தது இவ்விருவருக்கும். திரும்பி வந்து எஸ்கலேட்டரில் ஏறி அலுவலகம் செல்ல இருந்தவர்கள், கதவு மூடும் லிஃப்டினுள், கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் நிர்மலாவையும் காணத் தவறவில்லை !!

'இவ எதுக்கு இங்க வரணும் ? அதும் லஞ்ச் டயத்தில், இவர்கள் கதவை பூட்டி சென்று விடுவதும் அப்போது தான் உறைத்தது இருவருக்குமே. அனைவருமே ஒரு சாவி வைத்திருப்பார்கள். எதையேனும் விட்டுச் சென்று விட்டாளா ? திரும்ப எடுக்க வந்து யாரும் இல்லாமல், காத்திருந்து கிளம்பிவிட்டாளா ?' என யோசித்து,"ப்ரஷாந்த் நீ போயி கதவை திற, நான் கீழ போய் பார்த்திட்டு வருகிறேன்" என செல்வா எஸ்கலேட்டரில் கீழே தபதபத்து இறங்கினான் !!!!

தொடரும் .....

8 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

நன்றாக நடத்தி... அல்ல அல்ல "ஓட்டி"ச் செல்கிறீர்கள் கதையை. செல்வா தபதபத்து "ஓடி"யதிலேயே அவனது மனதின் பதபதப்பும் தெரியுதே!

ராமலக்ஷ்மிsaid...

//ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி, கூட்டணிக் கட்சிகள் நடத்தும் திறமை போல//

உவமை அருமை.

Ramya Ramanisaid...

அடடே அவங்க செலக்ட் ஆகிட்டாங்களா..சூப்பரு..இனி சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லை..

வல்லிசிம்ஹன்said...

என்னவா இருக்கும்!! கவலையா இருக்கே. ஒரு நாளுக்கு இரண்டு பதிவு போடுங்கள் சதங்கா.
அதான் லாங் வீக் எண்ட் வந்திடுச்சே.:)

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

// நன்றாக நடத்தி... அல்ல அல்ல "ஓட்டி"ச் செல்கிறீர்கள் கதையை. செல்வா தபதபத்து "ஓடி"யதிலேயே அவனது மனதின் பதபதப்பும் தெரியுதே!//

ஆஹா அழகாக எழுத்துக்களை மாற்றி போட்டு, வார்த்தைகளில் சாகசம் புரிகிறீர்கள், அருமை.

//ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி, கூட்டணிக் கட்சிகள் நடத்தும் திறமை போல//

உவமை அருமை.////

இது தான், சின்ன சின்ன விசயத்தைக் கூட கண்டு பாராட்டும் உங்கள் மனதிற்கு நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

//அடடே அவங்க செலக்ட் ஆகிட்டாங்களா..சூப்பரு..இனி சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லை..//

ஆமாங்க தங்கச்சி, கண்டிப்பா சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது. நேரம் தான் ஒத்துழைக்கணும் !!! நல்ல ஃபார்மட்ல கதை இருக்கிறது மனதில் இப்ப.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//என்னவா இருக்கும்!! கவலையா இருக்கே. //

உங்க ஆவல் ரொம்ப சந்தோஷம் அளிக்கறதும்மா.

//ஒரு நாளுக்கு இரண்டு பதிவு போடுங்கள் சதங்கா.
அதான் லாங் வீக் எண்ட் வந்திடுச்சே.:)//

எனக்கும் ஆசை தான், என்ன செய்யறது நேரம் தான் குறைவாக இருக்கிறது :))

cheena (சீனா)said...

ஆக்ஸ்டு 29 ன் பதிவிற்கு இப்பொழுது மறு மொழி

புதுவீடு புகுமனை விழாவில் மும்முரம் - இணையப்பக்கமே வரவில்லை . பிறகு சதங்கா தாயக விஜயம் - பதிவொன்றும் இருக்காதென ஏமாந்து விட்டேன்.

ம்ம்ம்ம்ம்ம்

வழக்கம் போல் உவமைகள் அருமை - தேர்வுக்கு முன் அனைவரின் எண்ணங்களையும் அறியும் பாங்கு - சரியெனப் பட்டாலும் இரு தினங்கள் தள்ளிப்போடும் மனம் - மேலாளரின் பாத்திரம் சொலிக்கிறது.

தாளித்த கடுகு சீரகத்தின் வாசனை - சாப்பாட்டு மேசையே மணக்கிறது

அவ என் பிராஜெக்ட்டுடா - நோட்டமிடும் நண்பன்

கடற்காற்று தினமும் - சாப்பாட்டிற்குப்பின் சிறிய நடைப்பயணத்தில் - நல்ல பழக்கங்கள்

திரும்வ வரும்பொழுது அவ்வளவு கூட்டத்திலும் இருவரின் கண்களிலும் தப்பாத நிமலா - இருவருக்கும் சாவி இல்லாததௌ உறைத்தது - நல்ல வேளை செல்வா மட்டுமே பதட்டத்தில் இறங்கி ஓடினான் - பொறுத்திருப்போம்

Post a Comment

Please share your thoughts, if you like this post !