என்ன விலை அழகே - 14 - The End
அழைப்பு மணி கேட்டு அழகே வந்து கதவைத் திறந்தது !
ஹேய் இன்டி ! என கோவிந்த் அதிசயிக்க, விரல் பற்றி வீட்டினுள் இழுத்து சென்று ஷோஃபாவில் அமர்த்தினாள். இதோ வந்திடறேன் என புள்ளி மானாய் துள்ளி, மாடி ஓடினாள்.
நிசப்தமான சில நொடிகள். சுவர்கடிகாரத்தின் டிக், டிக் துல்லியமாக, கோவிந்தின் இருதயத் துடிப்போடு போட்டி போட்டது. வீட்டில் யாரும் இல்லையா, இவ்வளவு அமைதியா இருக்கே என சுற்றிலும் நோட்டம் விட்டான்.
வாங்க மிஸ்டர் கோவிந்த். இன்டி சொல்லிட்டிருந்தா நீங்க வருவீங்கனு என்று ஒரு கரம் நீட்டி, கை குலுக்கி வரவேற்றார் சுவாமிநாதன்.
கோவிந்த் எழுந்து, என்னது வரவேற்பெல்லாம் பலமா இருக்கு. சொல்லிட்டாளா வீட்டில ? என்று யோசிக்க, கமான் பீ சீட்டட் என்றார் சுவாமிநாதன்.
இருங்க கோவிந்த், ராஜி இப்ப வந்திருவா.
வாங்க தம்பி, உங்களுக்கு இன்டிய எத்தனை நாளா தெரியும். என்று கேள்வியோடே, தன் கணவரின் அருகில் வந்தமர்ந்தார் ராஜி.
ரெண்டு நாள்.... இல்ல இல்ல மூனு நாள்.
ஓஹோ !!! மூனு நாளில் அவளப் பத்தி என்ன தெரிஞ்சுகிட்டீங்க. அவ சின்ன பொண்ணு, அதுமில்லாம இங்க வளர்ந்தவ கிடையாது. அவளுக்கு எதும் தெரியாது, ஷி இஸ் எ கிட்.
என்னது இவங்க பாட்டுக்கு கேள்விக்கணைகள் தொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க ? அவ எங்க போய்ட்டா, இங்க இருக்காம. என்ன பண்ணுகிறீர்கள், எந்த ஊரு, அப்பா அம்மா யாரு இதெல்லாம் கேட்பாரு என நினைத்தால், ஹூம் ஒரு வார்த்தை அது பற்றி பேசவில்லை இருவரும்.
இன்டி தன்னைப் பற்றி பேசினதைக் காட்டிலும் உங்களைப் பற்றி தான் நிறைய பேசியிருக்கா. அதனால அவளை விட உங்களைத் தான் நிறைய அறிந்து வைத்திருக்கிறேன். அவளுக்கு ஒன்னும் தெரியாதுங்கறீங்க, என்னிக்காவது, எந்த விதத்திலாவது தவறுதலாக அவளை ஃபோர்ஸ் பண்ணியிருக்கேனா என்று கேட்டுப் பாருங்கள். கல்யாணம் பேசறாங்க என்றவுடன் நேரே உங்க முன்னாடி வந்து நிக்கறேன்.
மாம், டாட் இனஃப் டீஸிங்க் கோவிந்த்.
கோவிந்த் அது வந்து ... நான் சொல்றேம்மா நான் சொல்றேன் என்று சிறு குழந்தைபோல் தன் குழந்தையிடம் போட்டி போட்டார் சுவாமிநாதன். இப்பாவாவது பேச விடுங்க என்னை என்பது போல் இருந்தது.
அதாவது மிஸ்டர் கோவிந்த், நேத்து நீங்க சாப்பிடப் போனிங்க இல்லியா அன்னலஷ்மிக்கு ...
-----
ஓரமே இருந்த, இன்டி கோவிந்தின் மேசையில், பாதி காலியான கண்ணாடி டம்ளர்களில், கீற்று சிரிப்போடு, நீர் நிறப்பினார் பழுத்த மாது ஒருவர். வீட்டில ஏதும் ப்ரச்சனையாம்மா. இந்தக் காலத்து புள்ளைகளுக்கு சொல்லியா கொடுக்கணும். எல்லாம் நல்ல படியா நடக்கும் என்று ஆசி கூறுவது போல் சொல்லி நகர்ந்தார். அரையிருட்டில் அவர் முகம் சரிவரத் தெரியவில்லை.
சென்ற சிறிது நேரத்தில், சமையல் கட்டில் இருந்து, ராஜேஸ்வரியை தொலைபேசியில் அழைத்தார்.
ராஜி, உன் பொண்ணுக்கு ஏத்த மாப்பிள்ளை நான் பார்த்துட்டேன்.
மைத்திலி அவசரப்படாதே, என் பொண்ணு கொஞ்சம் முரண்டு பண்றா. அவள கொஞ்சம் யோசிக்க சொல்லியிருக்கேன். கொஞ்ச நாள் கழித்து இது பத்தி பேசலாம்.
நான் எங்கே அவசரப் படறேன். நான் சொல்றத கவணமா கேளு. இப்பல்லாம் இந்த உணவகத்துக்கு சேவை செய்ய அடிக்கடி வந்துருவேன். இன்னிக்கு உன் பொண்ணை ஒரு பையனோட பார்த்தேன் இங்க.
கோவிந்த்ங்கற பையனோட ஃப்ரெண்ட்ஷிப்பா இருக்கா. இங்க போரடிக்குது அந்தப் பையன் தான் எல்லா இடத்துக்கும் இவள கூட்டிட்டுப் போறான், வர்றான். நல்ல பையனாத் தான் இருப்பான் போல.
நேத்து கூட கோவில்ல உன் பொண்ணப் பார்த்தேன். ஒரு டௌட்டாவே இருந்துச்சு அவ தானன்னுட்டு. அவ கூடப் பேசி உறுதி படுத்திக்கிட்டேன். அப்பவே நெனச்சேன் உன் பொண்ணு தான் ராமுக்கு என்று. ஆனா இன்னிக்கு இவங்க பேசினது கேட்டு, கோவிந்த் தான் சரியான மாப்பிள்ளைனு தோணுது. நான் ராமு கிட்ட பேசிக்கறேன். இவங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா உருகறத பார்த்து எனக்கே எங்க வீட்டுக்காரர், இன்னும் கொஞ்ச நாள் இல்லாம போய்ட்டாரேனு வருத்தம் ஆகிட்டுது.
என்ன சொல்றே மைத்திலி என அதிர்ந்தார் ராஜி !
...
பட், உனக்கே தெரியுமே நான் தெரிந்த இடங்களில் தானே மாப்பிள்ளை பார்க்கிறேன். இந்தப் பையன் யாரு, எந்த ஊரு, அப்பா, அம்மா என்ன பண்றாங்க எதுமே தெரியாம.!!!! இல்ல மைத்திலி, இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.
எல்லாம் தெரிஞ்ச பையன் தான் ராஜி. ரெண்டு மூனு முறை ராமு கூட நம்ம வீட்டுக்கு வந்திருக்கான். ஹி இஸ் வெரி ஸ்ட்ரைட் ஃபார்வர்ட். கோவிந்த் வெளியூர் என்றாலும் பள்ளி நாட்களில் இருந்து இங்க சென்னை தான். ராமுக்கு ரொம்ப க்ளோஸ்.
சரி, நான் சொன்ன மாதிரி காண்பிச்சிக்கிட்டாலும் சரி, இல்ல நீயே கண்டுபிடிச்சு பேசற மாதிரி இருந்தாலும் சரி, நல்ல படியா கல்யாணத்தை நடத்தி வை என போனை வைத்தார்.
குறுகுறுப்போடு சுவாமிநாதன் சொல்லி முடிக்க ஆனந்த அதிர்ச்சியில் உறைந்திருந்தான் கோவிந்த்.
ஹேய் ராம் என்னடா இங்க. எப்படி இருக்க. யு. எஸ். போறதுக்குள்ள, நானே உன்ன மீட பண்ணனும்னு இருந்தேன்.
சரி, சரி.... கூடவே விக்கிரகம் இருக்கப்ப, நாங்கல்லாம் எப்படி உன் கண்ணுல படுவோம். அது வந்து, அம்மா இங்க வாலன்டியர் சர்வீஸ் பண்ண வந்திருக்காங்க.
உள்ளேயா இருக்காங்க, நாங்க பார்க்கலையே ?
எவ்வளவு கூட்டம் வருது, போகுது நீங்க கவணிச்சிருக்க மாட்டீங்க.
ஓ.கே டா ராம். நேரம் ஆகுது, இவள வீட்டில ட்ராப் பண்ணனும். நாளைக்கு பேசலாம்.
-----
என ராமின் வருகையும் தெளிவாகப் புரிந்தது இப்போது.
சரி என்ன வெயிடிங்க் ? கொண்டாம்மா அந்த ரிங்க ! என்றார் சுவாமிநாதன்.
கோவிந்த் கொடுத்த அதே அழகிய பழுப்பு மஞ்சள் பெட்டி இன்டியின் கைகளில்.
கோவிந்த், நீங்க இன்னைக்கு அமெரிக்கா போறதா இன்டி சொன்னா, அதான், சின்னதா நம்ம வீட்டிலேயே, இப்பவே ஒரு என்கேஜ்மென்ட். நீங்க ஊர்ல இருந்து வந்தப்புறம் ஃபார்மலா என்கேஜ்மென்ட் வச்சிக்கலாம் என்றார் சுவாமிநாதன்.
ஹேய் என்னதிது ?
ஆமா, அம்மா போன முறை வந்த்தப்ப எனக்காக வாங்கி இங்கேயே விட்டுட்டு வந்த டெரக்கோட்டா மண் சிற்பம்.
அழகா இருக்கு, உன்னை மாதிரியே !
ஒரு வா.....ரம் போறே, என்ன மிஸ் பண்ணக்கூடாதில்லையா அதான், கண் சிமிட்டினாள் இன்டி.
ஆமா, ஆமா மிஸ் பண்ணக்கூடாது என்று இருக்கை பின் தள்ளி, அழகிய குதிரையின் கழுத்தை, இருகரத்தில் இறுக்கி அணைத்து, கால் நீட்டி, இன்டியின் நினைவோடு விமானத்தில் பயணித்தான் கோவிந்த் !
முற்றும் !!!!!!
12 மறுமொழி(கள்):
இனிய முடிவு. சுபம். இத்தனை பாகங்களையும் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறையாமல் கொண்டு சென்று அருமையாக முடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!
//இனிய முடிவு. சுபம். இத்தனை பாகங்களையும் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறையாமல் கொண்டு சென்று அருமையாக முடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!//
ரிப்பீட்டிக்கிறேன்!
very nice story like Vikraman movie...no villain...all are good people..well done...
\\கவிநயாsaid...
//இனிய முடிவு. சுபம். இத்தனை பாகங்களையும் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறையாமல் கொண்டு சென்று அருமையாக முடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!//
ரிப்பீட்டிக்கிறேன்!
\\
மீ டு :))
நாங்களும் கதையோடவே பயணிக்கிறா மாதிரி இருந்தது..இதுவே உங்க தொடரின் வெற்றி தான் சதங்கா சார் !
ராமலஷ்மி மேடம்,
//இத்தனை பாகங்களையும் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் குறையாமல்//
நானும் ரிப்பீட்டிக்கறேன் இப்படி ... தாங்கள் படு பி.ஸி.யிலிருந்தாலும், தினம் நேரம் செலவு செய்து, வந்து வாசித்து, சுவாரஸ்யமாய் அடுத்து என்ன என்று கேட்டு, மேலும் நல்லா எழுதணும் என்று ஆவலை தூண்டி விட்டு ... நன்றிகள் பலப் பல.
நீங்களும் ஆர்வமாய் வந்து தொடர்ந்து படித்ததற்கு நன்றி கவிநயா.
ஆனந்த் நடராஜன்,
//very nice story like Vikraman movie...//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. விக்கிரமனின் திரைப்படம் அளவிற்கு உயர்வாக சொல்லியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அந்த உயரத்தில் கொஞ்சம் கூட எட்டவில்லை என்று சொல்லிக்கறேன்.
//no villain...all are good people..well done...//
வாழ்வில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஹிம்ம்ம்ம்
ரம்யா,
//மீ டு :))
நாங்களும் கதையோடவே பயணிக்கிறா மாதிரி இருந்தது..இதுவே உங்க தொடரின் வெற்றி தான் சதங்கா சார் !//
ரொம்ப சந்தோசம் ரம்யா. நீங்களும் தவறாது வந்து ஊக்கப்படுத்தியதும் காரணம் இந்த வெற்றிக்கு. என்னது சார் எல்லாம் சொல்லி ஓட்டறீங்க. நான் எப்பவும் சின்ன பையன் தான் :)))
அழைப்பு மணியினைக் கேட்டு அழகே கதவைத் திறந்தது.
பலப்பல வர்ணனைகள் - அருமையாகச் சென்ற கதை. தொடரும் போட வேண்டிய நேரத்தினில் சரியாகத் தொடரும் போட்டு - பின் வருபவனவற்றைக் குறிப்பால் முன்பே உணர்த்தும் திறமை. சதங்கா ஒரு கதாசிரியராக உருவாகி விட்டார். தமிழ் வார இதழகளில் எழுதத் தொடங்கலாம்.
நல்வாழ்த்துகள்.
டெரகோட்டா குதிரையுடன் அயலகம் செல்லும் கோவிந்த் - பழுப்பு நிற மோதிரம் மாற்றிய பின் - இண்டியின் தாய் ( தந்தை - நோ பிராப்ளம் ) மனதை மாற்றிய ராமின் தாய் - அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் கடமையைச் சரிவரச் செய்திருக்கிறார்கள்
நல்வாழ்த்துகள் சதங்கா
சீனா ஐயா,
வழக்கம்போல எனது தகுதிக்கும் மேலாய் புகழ்ந்து வாழ்த்தியிருக்கிறீர்கள். ஒரு பக்கம் மன மகிழ்ச்சி தந்தாலும், உங்களின் புகழின் அளவிற்கு, அந்த உயரத்தை எட்டவில்லை என்று தான் சொல்லணும். மேலும் சிறப்பாக எழுத உங்கள் மறுமொழி பிடித்துத் தள்ளுகிறது :))
அழகான அன்பான முடிவு சதங்கா. ரொம்ப நன்றி சுபமாக முடித்ததுக்கு. அன்பு வாழட்டும் வளரட்டும்.
வல்லிம்மா,
கதையை தொடர்ந்து நேரம் செலவிட்டு வாசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.
//அன்பு வாழட்டும் வளரட்டும்.//
ஆமா. நானும் ரிப்பீட்டிக்கறேன்.
Post a Comment
Please share your thoughts, if you like this post !