Sunday, August 31, 2008

வானின் நிறம் நீலம் - 7


Photo: http://commons.wikimedia.org/

"என்னால தான் லேட்டுங்கறீங்க ! நான் என்ன‌ ப‌ண்ணினேன் அண்ணி ?"

"என்ன‌ ப‌ண்ணினியா ?!! எல்லாம் உங்க‌ அண்ண‌ன் வ‌ர‌ட்டும் பேசிக்க‌லாம்"

"பாவ‌ம் அவ‌ர‌ ஏன் இதில‌ இழுக்க‌றீங்க‌ !"

"அதானே ஒருத்த‌ர‌ ஒருத்த‌ர் விட்டுக் கொடுக்க‌வே மாட்டீங்க‌ளே ! ந‌ல்ல‌ அண்ண‌ன், ந‌ல்ல‌ த‌ங்க‌ச்சி, ஹிம்ம்ம்ம்"

'நிர்ம‌லா, உங்க அண்ணி என்ன பேசினாலும் கொஞ்ச‌ம் பொறுமையா போம்மா. இதெல்லாம் உட‌னே தீர்க்க‌ற‌ விச‌ய‌மில்லை, உன‌க்குப் புரியும்னு நினைக்க‌றேன்' ர‌குப‌தியில் குர‌ல், ஒலிநாடாவைத் த‌ட்டிவிட்ட‌து போல‌ ஓடிய‌து. த‌ன் அறைக்கு சென்று க‌த‌வை சாத்தி, சுவ‌ற்றில் தெரித்த‌ நீர், நேர் கோடாய் வ‌ழிவ‌து போல் ச‌ரிந்து த‌ரையில் அம‌ர்ந்தாள்.

ஹாலில், கால்க‌ளை நீட்டி, காஃபி டேபிளில் வைத்துக் கொண்டு, டி.வியை த‌ட்டி விட்டு, அதில் மூழ்கிப் போனாள் ஜானகி.

சிறிது நேரம் கழித்து, க‌த‌வைத் திற‌ந்து கொண்டு ர‌குபதி உள்ளே வ‌ந்தான்.

நுழைந்தும் நுழையாத‌துமான‌ அவ‌னிட‌ம், டி.வியை அனைத்து விட்டு ப‌ட‌ப‌ட‌வென‌ பொறிய‌ ஆர‌ம்பித்தாள் ஜான‌கி. "இருக்கறதோ ரெண்டே பாத்ரூம். அதிலும் ஒன்னு ரெனோவேஷன் வேலை நடந்துகிட்டு இருக்கு. இந்த வீட்ல இருக்க எல்லாருக்கும் இது தெரியும் தானே ! போக, தாம் பாட்டுக்கு, இருக்கற ஒரு பாத்ரூமுக்குள் காலையில் போய் அடைஞ்சிகிட்டா என்ன அர்த்தம். மத்தவங்க என்ன செய்வாங்கனு கொஞ்சம் யோசிக்கறதில்லை ! ஏன், எங்களுக்கெல்லாம் வெளி வேலை இருக்காதா ?"

"ஜானு, என்ன இது குழந்தை மாதிரி. வர வர எல்லாத்துக்கும் அடிச்சக்கறே நீ, பாவம் இப்ப தான் பழைய கஷ்டங்களில் இருந்து மீண்டு வர்றா நிர்மலா. கொஞ்ச நாள் அமைதியா இரேன் ! ஒரு ப்ரேக்குக்கு அப்புறம் இப்ப தானே வெளிய போறா ! அதுவும் நேர்முகம், இன்னிக்கு பார்த்து தான் நீயும் ப்யூட்டி பார்லருக்கும் போகணுமா ?!"

"உங்க‌ளுக்கு எப்ப‌வுமே அவ‌ ம‌ட்டும் தான் பாவம் ! நாங்க‌ எல்லாம் எங்க‌ உங்க‌ க‌ண்ணுல‌ ப‌ட‌றோம் ! அமைதியா இரு இருனு என்னை மட்டும் நல்லா அடக்கறீங்க. என்னிக்காவது அவள ஒரு வார்த்தை சொல்லியிருப்பீங்க ? இல்ல சொல்லியிருந்தா தான் இந்த நிலைக்கு அவ வந்திருப்பாளா ?!"

"இத‌ சொல்ற‌துக்கு தான் போன் போட்டு வ‌ர‌ச் சொன்னியா ?!, அலுவகத்தில் ஏக‌ப்ப‌ட்ட‌ வேலை இருக்கு, நீ என்ன‌டானா சின்னச் சின்ன‌ விச‌ய‌த்துக்கெல்லாம் .... கூல் டௌன் ஜானு"

"கூல் டௌன் மண்ணுனு சொல்லுங்க. ஜானுவாம் ஜானு ... இன்னிக்காவது ரெண்டுல‌ ஒண்ணு தெரிஞ்சாக‌ணும் ... இந்த‌ வீட்டில் ஒண்ணு அவ‌ இருக்க‌ணும், இல்ல நான் இருக்க‌ணும். நானும் பல தடவை சொல்லிட்டேன், நீங்க கேக்கற மாதிரியே தெரியல. யாரு இருக்க‌ணும்னு இப்ப‌வே நீங்க‌ முடிவு ப‌ண்ணி சொல்ல‌ணும்."

"உஷ்ஷ் ... ச‌த்த‌ம் போடாதே, நிர்ம‌லா காதில‌ விழுந்திட‌ப் போகுது !"

"இதோ ! பாருங்க, பாருங்க !!! என்னைத் தான் அட‌க்க‌றீங்க‌. காதில் விழ‌‌ட்டுமே என்ன‌ இப்ப‌ ?!"

என்னதான் வெளியில் இவர்கள் பேசினாலும், இவை எதுவும் உள்ளே நிர்ம‌லாவின் காதுக‌ளில் எட்ட‌வில்லை. கார‌ண‌ம் இன்ட‌ர்வியூக்காக நேற்று த‌ன்னை த‌யார் செய்து கொண்ட‌ க‌ளைப்பில் தூங்கிப் போயிருந்தாள். த‌லைமாட்டில் இருந்த செல்லில் வ‌ந்த‌ சிணுங்க‌ல், நிர்ம‌லாவைத் த‌ட்டி எழுப்பிய‌து.

நாள்காட்டி பிரிப்பது போல, செல்லைப் பிரித்து "யெஸ் க்ரிஸ்டினா ?!!!" என்றாள் கேள்விக்குறியோடே.

...

"ஓ.கே. இதோ, இப்ப‌வே கெள‌ம்ப‌றேன்"

...



தொடரும் .....

Friday, August 29, 2008

வானின் நிறம் நீலம் - 6


Photo: http://en.wikipedia.org/

பசங்க இருவரும், லேட்டாக வரும் செல்வாவைப் பார்த்து, "என்னடா எம்.ஆர்.டி. ஸ்டேஷன்ல ஒரே ஜொல்லுப் பெருக்காமே" என்று நக்கலடிக்க, அவர்களுடன் சீனச்சியரும் சேர்ந்து கொண்டனர். "அவ அழகா இல்லேன்ற, பின்னே ஏன் இவ்ள நேரம், இல்ல லாபி எங்கயாவது ரெண்டு ஸ்டேஷன் தள்ளி மாத்திட்டாங்களா என்ன ?" என இருவரும் கண்கள் சுறுக்கி, பொங்கும் சிரிப்பை அடக்கி, ஆளாளாக்கு மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.

இந்த சளசளப்பில், உள்ளறையிலிருந்து வந்த க்ரிஸ்டினா அனைவருடனும் சேர்ந்து கொண்டார். உன்னையும் நேர்முகம் காண அழைக்கலாம் என இருந்தேன். நல்ல வேளை என இப்ப உணருகிறேன். நீ பாட்டுக்கு ஆளப் பார்த்து செலக்ட் பண்ணிட்டேனா என்று அவர் பக்கம் இருந்து ஒரு நக்கல் கணை வீசினார்.

"ஜோக்ஸ் அபார்ட். வாட் டு யூ ஆல் திங்க் எபௌட் நிமலா" என்று அனைவரிடமும் கேட்டார். சீனப் பெண்கள் இருவரும் "இஃப் ஷி இஸ் டெக்னிக்கலி ஓ.கே, தென் இட்ஸ் அப் டூ யூ" என்றனர்.

ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி, கூட்டணிக் கட்சிகள் நடத்தும் திறமை போல, இந்த விசயத்தில் க்ரிஸ்டினா அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். என்ன தான் "ஸ்கில்டா" அல்லது "போல்டா" இருந்தாலும், குட்டி டிபார்மென்ட் என்பதால், அனைவருக்கும் பிடித்திருக்கிறதா என நோட்டம் பார்த்து தான் புதியவர்களை எடுப்பார். "டெக்னிக்கலி அன்ட் சோஷியலி ஷி இஸ் ஓ.கே. எதற்கும் ஒரு இரண்டு நாள் டைம் எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு யாருக்காவது ஏதாவது பிடிக்கலை என்றால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்" என்று தன்னறைக்குச் சென்று விட்டார்.

மதிய உணவு இடைவேளையில் சீனர்கள் அனைவரும், ஸ்ஸு, பிஸ்ஸு என்று அவர்கள் மொழியில் அளவளாவி, ப்ரசாந்திடமும், செல்வாவிடமும் "நீங்க கடா புடானு உங்க மொழியில பேசிக்கங்க" என்று கண்சிமிட்டி சென்றனர்.

செல்வாவும், ப்ராஷாந்தும், இந்திய வழக்கப்படி சாப்பாடு டப்பாக்களைப் பிரித்து மேசையிலேயே வைத்து உண்ண ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் வரை கலகலவென்றிருந்த அந்த அலுவலக அறை, கடைசிக் கூட்டத்தை அள்ளிச் சென்ற ரயில் நிலையமென நிசப்தமாக இருந்தது. தாளித்த கடுகு, சீரகத்தின் வாசனை அறை முழுதும் பரவி உணவகத்தை நினைவூட்டியது.

"என்னடா நினைக்கறே அவளப் பத்தி", இது செல்வா.

"என்ன நினைக்கறேன்னா !? புரியல !"

"இல்ல, டெக்னிக்கலா எப்படினு ?"

"உனக்கேன்டா கவலை, அதெல்லாம் க்ரிஸ்டினா பார்த்துப்பா. உண்மைய சொல்லு, என்ன ஜொள்ளா ? இந்த கண்டவுடன் காதலை, கண்டம் விட்டு கண்டம் போனாலும் விடமாட்டீங்க !!!! ம்ம்ம்ம்"

"சே, சே அதெல்லாம் இல்லை, நீயே ஏத்தி விடுவ போலிருக்கே !!!"

"சரி சரி, ஒரு குட் நியூஸ். அவ என் ப்ராஜக்டல தான் ஒர்க் பண்ணப் போறா" என்றவன் செல்வாவையும் நோட்டம் விட்டான். லேசான முகச்சுளிவு இருக்கத் தான் செய்தது செல்வாவிடம். "என்ன பண்றது செல்வா, எல்லாம் நாம நினைக்கற மாதிரியே நடந்திருச்சுன்னா அப்புறம் சுவாரஸ்யம் ஏது !!! சரியா ? சரி, சீக்கிரம் சாப்பிடு, வாக் போய்ட்டு வரலாம், இதுங்க எல்லாம் வர்றதுக்குள்ள !" என்றான்.

செல்வாவும், ப்ரஷாந்த்தும் அலுவலகக் கட்டிடத்தை விட்டு வெளியில் வந்தனர். கூசும் கண்களை சிறிது சுருக்கி, கூட்டத்தினூடே பேசிக் கொண்டே நடந்தனர்.

வழக்கம் போல பல விதமான மக்கள். வெள்ளையர், கருப்பர், சீனர், இந்தியர், மலாயர், மற்றும் பல நாட்டவர் என பட்டியல், அங்கு பல புறமும் இருக்கும் திண்ணைகளின் நீளம் எனலாம். ரோமமில்லாதவர்களின் தலை பாளம் பாளமாக வெடிக்கும் அளவிற்கு, உச்சி வெய்யில் உள்ளந்தலையில் பட்டுத் தெரித்தது. சுற்றிலும் வான் உயர்ந்த கட்டிடங்கள். நடுவே பாதாள ரயில் நிலையம். ரயில் நிலையத்தின் மேலே வெட்ட வெளியில், வெய்யிலில் மக்கள் கூட்டம் கூட்டமாகப் போவதும் வருவதுமாக இருந்தனர். பலர் அந்த நீண்ட திண்ணைகளில் அமர்ந்து சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அனைவரையும் கடந்து சென்று கடல் பக்கம் ஓரமாக நடந்து, பாலத்தைக் கடந்து, கொஞ்ச நேரம் கடல் காற்று சுவாசித்து திரும்பி வருவது தினம் ஒரு பழக்கமாக இருந்தது இவ்விருவருக்கும். திரும்பி வந்து எஸ்கலேட்டரில் ஏறி அலுவலகம் செல்ல இருந்தவர்கள், கதவு மூடும் லிஃப்டினுள், கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் நிர்மலாவையும் காணத் தவறவில்லை !!

'இவ எதுக்கு இங்க வரணும் ? அதும் லஞ்ச் டயத்தில், இவர்கள் கதவை பூட்டி சென்று விடுவதும் அப்போது தான் உறைத்தது இருவருக்குமே. அனைவருமே ஒரு சாவி வைத்திருப்பார்கள். எதையேனும் விட்டுச் சென்று விட்டாளா ? திரும்ப எடுக்க வந்து யாரும் இல்லாமல், காத்திருந்து கிளம்பிவிட்டாளா ?' என யோசித்து,"ப்ரஷாந்த் நீ போயி கதவை திற, நான் கீழ போய் பார்த்திட்டு வருகிறேன்" என செல்வா எஸ்கலேட்டரில் கீழே தபதபத்து இறங்கினான் !!!!

தொடரும் .....

Wednesday, August 27, 2008

மனைவிக்குத் தாலி. கணவனுக்கு ?! அடையாளம் தேவையா ???!!!

சமீபத்தில் குமுதம் 'பெண்' வீடியோ பார்க்கும் போது, நடிகை ரஞ்சிதாவிடம் கேட்கப் பட்ட கேள்விக்கும், அதற்கும் சில வாரங்கள் முன்னர் நடிகை ஊர்வசியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும் அவர்களின் பதில் "கண்டிப்பா கல்யாணம் ஆன ஆண்களுக்கும் அடையாளம் தேவை". ம‌ற்ற‌ 'பெண்'க‌ளும் இதையே தான் சொல்லியிருக்க‌ணும்.

"முன்னர் மெட்டி போட்டிருந்தாங்க, அதை அப்படியே நைசா நம்ம கிட்ட தந்திட்டாங்க, இவங்களுக்குத் தனி ஒரு அடையாளம் தரணும். அதுபோக, இப்படி தாடி வைத்திருக்கணும், அல்லது இது போல மீசை இருக்கணும், இதை அரசாங்கம் எடுத்து நடத்தணும்" என்று அடுக்கிக் கொண்டே போனார் ஊர்வசி. நிற்க ...

அப்படியே அரசாங்கம் நடத்துதுனு வச்சிக்குவோம். என்ன அடையாளம் தரலாம் என அவங்க மக்களிடம் யோசனை கேக்கறாங்க. அதற்கு, உங்க 'அடையாள யோசனை' என்னவா இருக்கும். யாரும் சீரியஸா பதில் தரவேண்டாம் :) கொஞ்சம் க்ரியேட்டிவா, எல்லாருக்கும் பிடிக்கும்படி நகைச்சுவையா பின்னூட்டினீங்க என்றால் இனிமையா இருக்கும்.

உதாரணத்திற்கு: இடது காதில் சிகப்பு கலர் கடுக்கண் - டேஞ்சர் கிட்டே போகாதே. (அந்தக் காலத்தில தான் பெண் குனிந்து வரும்போது மெட்டி பார்த்து அறிவாள், இப்ப அப்படி இரும்மா என்றால் அரிவாளத் தூக்கிற‌மாட்டாங்க !! அதான் காதில அடையாளம் :))

Tuesday, August 26, 2008

வானின் நிறம் நீலம் - 5

அண்ணி வீட்டில் இல்லை என்று அமைதியான‌ சூழ்நிலை தெரிவித்த‌து. ந‌ல்ல வேளை அவ‌ர்க‌ள் இல்லை என‌ நினைத்துக் கொண்டாள். வெளிக் கதவைத் தாழிட்டு, த‌ன‌து ரூமிற்கு சென்று பையை வைத்து விட்டு, ப‌டுக்கையில் ச‌ரிந்து விழுந்தாள் நிர்மலா.

வாழ்வில் எத்த‌னை எத்த‌னை மாற்ற‌ங்க‌ள். கால‌ம் தான் வேக‌மெடுத்து ஓடுகிற‌தென்றால், மாற்றங்க‌ளும் போட்டி போட்டுக் கொண்டு அல்ல‌வா வ‌ருகிற‌து.

இர‌ண்டு வாரங்கள் முன்பு வ‌ரை வேலை செய்த‌ இட‌ம் எத்த‌னை ர‌ம்மிய‌மாக‌ இருந்த‌து. எத்தனை எத்த‌னை ந‌ண்ப‌ர்க‌ள். இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ சேர்த்து வைத்த‌ ந‌ட்பு இப்ப‌டி ச‌ட்டென‌ ஆளையே சாய்த்து விடும் என‌ நிர்ம‌லா நினைத்தும் பார்த்த‌தில்லை.

'ந‌ல்ல‌ வேளை க‌ணினித் துறை எடுத்தேன். அடுத்த‌ வேலை கிடைக்காம‌ல் போய்விடாது'. ஆனாலும் இரு வார‌ இடைவெளியில் அண்ணியின் ஆக்கிர‌மிப்பு, ம‌ற்றும் அண்ண‌ன் மேல் அவ‌ள் செலுத்தும் ஆளுமை, சமீப காலமாய் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல‌ உள்ள‌ர்த்த‌ம் கொண்ட‌ வார்த்தைகள் என எல்லாவ‌ற்றையும் தாங்கி அம்மி போலக் க‌ல்லென‌ இருந்தாள்.

ஆடிக் காற்றில் அம்மியும் ந‌க‌ரும் தானே !

நிர்ம‌லாவின் அண்ண‌ன் ர‌குப‌தி. பிட்ஸ் பிலானியில் ப‌டித்து விட்டு, ஒரு கெமிக்க‌ல் க‌ம்பெனியில், ப்ராஜ‌க்ட்டிற்காக பல வருடங்கள் முன்னர் சிங்கப்பூர் வ‌ந்தவ‌ன். அங்கேயே வேலையும் தர, அப்ப‌டியே ப‌டிப்ப‌டியாக‌ முன்னேறி, தற்சமயம் 'வைஸ் ப்ரெசிடென்ட்' அந்த‌ஸ்த்தில் இருப்ப‌வ‌ன்.

படிக்கும் போதே, சென்னையிலேயே ந‌ல்ல‌ குடும்ப‌த்தில் இருந்து, ச‌க‌லமும் முறைப்ப‌டி பெரியோர்க‌ளால் ஏற்பாடு செய்ய‌ப்பட்டு, ஜானகியைக் க‌ர‌ம் பிடித்தான்.

சென்னையில், நிர்ம‌லாவின் த‌ந்தை கட்டுமானத் தொழிலில் கொடிக‌ட்டிப் ப‌ற‌ப்ப‌வ‌ர். ஜான‌கியின் த‌ந்தை பல தொழில்கள் செய்து எதுவும் சரிவராமல், ச‌மீப‌ கால‌மாக‌ உண‌வ‌க‌த் தொழிலில் நாட்ட‌ம் செலுத்தி வ‌ருப‌வ‌ர். ஜான‌கி ஒரே பெண் அவ‌ருக்கு. அத‌னால் செல்ல‌த்திற்கு அள‌வே இல்லை என‌ச் சொல்ல‌வும் வேண்டுமோ ! க‌ட்டுக்க‌ட‌ங்காத‌ ப‌ச்சிள‌ங்க‌ன்றாய் சுற்றித் திரிந்தாள் ஜான‌கி இள‌வ‌ய‌தில். அப்பா செல்ல‌ம் என்பதால், அம்மா அவ்வ‌ப்போது அறிவுரைக‌ள் கூற‌த் த‌வ‌ற‌வில்லை. இத‌னாலேயே அம்மாவைப் பிடிக்காது அவ‌ளுக்கு !!

திரும‌ண‌த்திற்குப் பின், நிர்மலாவிற்கு உற்ற‌ தோழியாய், உட‌ன் பிற‌ப்பினும் மேலாய் இருந்தாள் ஜான‌கி. 'நான் கொடுத்து வைத்த‌வ‌ள் அண்ணி' என்று ப‌ல‌முறை நிர்மலா சொல்ல‌ .... "நாம் இருவருமே ! அண்ணி எல்லாம் இல்லை, உனக்குத் தோழி சரியா ?" என்பாள் க‌ண்ண‌க் குழி மூடி புன்சிரிப்புடன்.

ர‌குப‌தியின் வீட்டில் அவன‌து அப்பா, அம்மா ரொம்ப‌ க‌ண்டு கொள்ளாத‌து, டீன் ஏஜ் நிர்ம‌லாவின் ஃப்ரெண்ட்ஷிப், அப்புற‌ம் சிங்க‌ப்பூர் சென்ற‌து, அங்கே க‌ல்லூரித் தோழிக‌ள் சில‌ரைச் ச‌ந்தித்த‌து, என எல்லாம் அவளுக்குப் பிடித்த மாதிரியே இருக்க, அப்ப‌டியே செட்டிலும் ஆனாள் ஜான‌கி.

கால‌ மாற்ற‌த்தில், அன்றிருந்த தோழி இன்று அண்ணியானாள், அன்னிய‌னானாள்.

இத்த‌னைக்கும் நிர்ம‌லா சிங்கை வ‌ந்த‌ புதிதில், ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ ஜான‌கி தான் ரொம்பப் பெருமை கொண்டாள். "வெளியில் எல்லாம் நீ த‌ங்க‌ வேண்டாம், எங்க‌ வீட்டிலேயே தான் இருக்க‌ணும். அதான் எங்களுக்கும் பெருமை" என்று, விடாப்பிடியாய் வெளியில் செல்ல‌ இருந்த‌ நிர்ம‌லாவைத் த‌ன் வீட்டில் தங்கவும் வைத்தாள்.

நினைவுக‌ளினூடே வெளிக் க‌த‌வு திற‌க்கும் ச‌ப்த‌ம் கேட்ட‌து. அண்ணி தான் வ‌ருகிறாள் என‌ அவ‌ள‌து பாத‌ணிக‌ள் கதறியது. வ‌ந்த‌தும் வ‌ராத‌துமாக‌, "இறைவா, ஏன் இப்ப‌டி என்ன‌ சோதிக்க‌ற‌. அவ‌ கிட்ட‌ போன் ப‌ண்ணிட்டு தானே போனேன். கொஞ்சம் லேட்டாயிடுச்சு, அதற்காக எதிர்பாராத விதமா பி.ஸி., நாளைக்கு வாங்க‌னு அனுப்பிட்டாளே. என்ன‌ திமிர், என்ன‌ தைரிய‌ம். எல்லாம் நாலு காசு பார்க்கிறோம் என்கிற‌ அழிச்சாட்டியம், எல்லாம் நம்ம நேரம், இதுங்க சொல்றதெல்லாம் கேட்க வேண்டும் என்று !!!" என‌ பியூட்டி பார்ல‌ர் பெண்ணைத் திட்டுவ‌து போல் த‌ன்னையும் சேர்த்து திட்டுகிறாள் என உணர்ந்தாள் நிர்மலா.

"ம‌த்த‌வ‌ங்க‌ மாதிரி அழ‌கா பொற‌க்கவில்லை என்றாலும், அழ‌கா இருக்க‌ணும் என்று நினைக்கிற‌து த‌ப்பா ! ஒரு ஐப்ரோ, ச்ஃபேசிய‌ல் இது கூட‌ நினைத்த‌வுட‌ன் செய்துக்க‌ முடிய‌லையே !!! இதுல, உன‌க்கு க‌ல‌ர் காம்பினேச‌ன் ச‌ரியா ப‌ண்ண‌த் தெரிய‌லை, அவ‌ கிட்ட‌ க‌த்துகனு, இவ‌ரு ரெக‌மென்டேஷ‌ன் வேற !!! எல்லாம் என் தலை எழுத்து ...."

கோப‌மும் ஆத்திர‌மும் பொங்கினாலும், 'பொறுத்தார் பூமி ஆள்வாராய்' அமைதி காத்தாள் நிர்ம‌லா.

"எவ்வ‌ள‌வு பொலம்பிட்டு இருக்கேன். ஏதாவ‌து விழுதா காதில‌, இல்ல விழாத‌ மாதிரி ந‌டிக்க‌றியா ?!!" என்று நேர‌டியான‌ கேள்விக்குத் தாவினாள் ஜான‌கி.

ச‌டாரென‌ க‌த‌வைத் திற‌ந்து தன்ன‌றையிலிருந்து வெளி வ‌ந்த‌ நிர்ம‌லா "அண்ணி, எதுக்கும் ஒரு அள‌வு இருக்கு, வாய் இருக்க‌ன்ற‌தால‌ நினைத்த‌தை எல்லாம் பேசாதீங்க. உங்க காரியம் நடக்கலைனா அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் !? அவளத் திட்டற மாதிரி என்னையும் திட்டறீங்க‌"

அப்படிக் கேளுடி என் நாத்தினாம‌ணி. காரிய‌ம் ந‌ட‌க்காத‌தே உன்னால‌ தானே !!!!


தொடரும் .....

Monday, August 25, 2008

வானின் நிறம் நீலம் - 4

"அட‌ப் பாவிங்க‌ளா, ரெண்டு வில்லன்க‌ளுமா ? என்னை அழைத்திருக்க‌க் கூடாதா, சட்டு புட்டுனு ரெண்டொரு ஈஸியான கேள்வியா கேட்டு, புள்ளைய எடுத்திருக்கலாமே" என‌ வாய் பிள‌ந்த‌ செல்வாவை, என்ன‌டா "உங்க ஊரு சினிமா ஓடுதா மனசுல‌" என‌ச் சீண்டின‌ர் சீன‌ச்சிய‌ர் இருவரும். மேலும், "ஷி லுக்ஸ் ப்ரெட்டி ... இந்திய‌ர்க‌ள் நிறம் கம்மியா இருந்தா கூட‌, பொதுவா பெண்க‌ள் அழ‌கா இருக்காங்க‌ எப்ப‌டி ?" என்றும் செல்வாவை ப்ர‌ம்ம‌னாய் பாவித்து கேட்டுக் கொண்டிருந்த‌ன‌ர்.

'அழ‌கு ம‌ட்டும‌ல்ல‌, திமிரான‌வ‌ர்க‌ளும் கூட' என்று சொல்ல நினைத்தான் நிர்மலாவை மனதில் வைத்து. "அவ‌ அழ‌கா இருக்கானு சொல்றீங்க‌ ?! என‌க்கென்ன‌வோ அப்ப‌டித் தோன‌லை. ஒரு வேளை அவ‌ள் க‌ண்ண‌ப் பார்த்து சொல்றீங்க‌ளோ என்னவோ. உங்களுக்கு தான் பெரிய கண்கள், நீண்ட ஐ லேஷஸ் இருந்தாப் போதுமே. இந்தியப் பையன் என்றால் ஹேன்ட்சம், பெண் என்றால் ப்ரெட்டி" என்று குறுந‌கை பூத்தான்.

என்ன‌ தான், செல்வா அழ‌கில்லை என்று சொன்னாலும், அவ‌ன் ம‌ன‌சாட்சி போல‌வே அவ‌ர்க‌ள் ம‌ன‌தும் 'என்ன‌ இருந்தாலும் அவ‌ அழ‌கி தான்' என்ற‌து.

அடுக்கு ம‌ல்லிப் ப‌ல் வ‌ரிசையில் அழ‌காய் சிரித்து வெளி வ‌ந்தாள் நிர்ம‌லா. "ஐ வில் லெட் யூ நோ விதின் டூ டேய்ஸ்" என்று வாய் நிறைய‌ புன்ன‌கையோடு வ‌ழி அனுப்பி வைத்தார் க்ரிஸ்டினா.

வெளியில் இருந்த‌வ‌ர்க‌ளுக்கு கை குலுக்கி, ந‌ன்றி தெரிவித்துச் சென்ற‌வ‌ளை நிறுத்தி, "கைஸ், கேன் ச‌ம் ஒன் ஹெல்ப் ஹெர் டூ த‌ லாபி" என்று க்ரிஸ்டினா சொல்லி முடிக்குமுன், செல்வா வாச‌லில் நின்றான்.

"நீங்க‌ த‌மிழா ?" என‌க் கேட்டு இருவ‌ரும் அதிச‌யித்த‌ன‌ர்.

"நான் இங்க‌ வ‌ந்து ரெண்டு வ‌ருட‌ங்க‌ள் ஆகிற‌து, இப்பொழுது எங்க‌ அண்ண‌ன் வீட்டில் இருக்கிறேன். படிச்சது ஸ்டெல்லா மேரீஸ், அப்புறம் என்.ஐ.ஐ.டில ஒரு ஆரக்கல் கோர்ஸ் எடுத்தேன். சென்னையிலேயே கொஞ்ச நாள் வேலை பார்த்துட்டு, அப்புறம் இங்க வந்திட்டேன். சரி, மேடம் எப்படி ?" என்றாள் நிர்மலா.

"ம். ம். ஓ.கே தான், ஆனால் ..."

"என்ன‌ ஆனால் ?"

"கொஞ்ச‌ம் ஈகோயிஸ்ட். ம‌த்த‌ப‌டி ஷி இஸ் சோ ஃப்ரெண்ட்லி, ஹ்யுமானிட்டி உள்ள ஒரு பெண்மணி"

"திஸ் இஸ் க்ரேட். ஈகோயிஸ்ட் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது என‌க்கு. சரி, ந‌ல்லா பேசினாங்க‌ளே, அதை வைத்து நான் செல‌க்ட‌ட் என‌ எடுத்துக்க‌லாமா ?" என்றும் கேட்டாள்.

"நான் பார்த்த‌ வ‌ரைக்கும் அம்ம‌ணி அள‌ந்து பேசினாங்க‌ என்றால் தான் ச‌ந்தேக‌ப்ப‌ட‌ணும் !!! உன்னை விட‌ அவ‌ங்க‌ தானே இன்று நிறைய‌ப் பேசினார்க‌ள். அதானால் நைன்ட்டி நைன் பெர்ஸ‌ன்ட் யு ஆர் செல‌க்ட‌ட்"

"தாங்க் காட்" என்ற‌வ‌ளின் பூரிப்பு முக‌த்தில் காட்டியது, இருட்டில் பொட்டாய் தோன்றும் மின்மினிப் பூச்சிக‌ளின் ப்ர‌காச‌த்தை.

"செல்வா, நீங்க‌ எவ்வ‌ள‌வு நாள் இங்க‌ இருக்கீங்க‌ ?"

"சிங்கை, இந்த‌ அலுவ‌ல் எல்லாம் க‌ட‌ந்த நான்கு மாத‌ங்க‌ளாக‌."

"அதுக்கு முன் ?"

"சென்னையில் ஒரு ஆட்டோமொபைல் உற்ப‌த்தி க‌ம்பெனியில் க‌ணினி துறையில், மூன்று வருடங்கள் பல மட்டங்களிலும் இருந்து, அப்புறம், வெளிநாடெல்லாம் எப்ப பார்க்கிறது என்று சிங்கை வந்தேன்."

"சென்னை தான் ஊருமா ?"

"இல்லைங்க‌, ஊட்டி ப‌க்க‌த்தில‌ ஒரு கிராம‌ம். ப‌ட் மைக்ரேட்ட‌ட் டூ சென்னை, அம்பத்தூர்"

"நீங்க‌ நிர்மலா ?"

"அதான் சொன்னேனே !!! வ‌ள‌ர்ந்தது, ப‌டிச்ச‌து, வேலை பார்த்த‌து மற்றும் ஊரும் அது தான்."

"சென்னையில‌ எங்க‌ ?"

"வேளச்சேரி. சென்னையில், நீங்க‌ அந்த‌ என்ட் என்றால் நாங்க‌ இந்த‌ என்ட்" என்றாள்.

"இப்ப இவ்ள‌ பேச‌றீங்க, காலையில் ஏன் அப்ப‌டி ந‌ட‌ந்துகிட்டீங்க ?"

"எப்போ ? எப்ப‌டி ந‌ட‌ந்துகிட்டேன் ? நினைவில்லையே !! நானே இன்டர்வியூ டென்ஷன்ல இருந்தேன். ஏதாவ‌து த‌வ‌றுத‌லா இருந்தா ம‌ன்னிச்சிக்கோங்க‌ !"

ப‌ர‌வாயில்ல‌, ப‌ர‌வாயில்ல‌ என்று சொல்லி 'நாம‌ தான் இவ‌ பாத்திருப்பா, க‌ண்டுக்காம‌ இருக்கா, திமிர் பிடிச்சவ என்றெல்லாம் நினைக்கிறோமா ! என்ன ஒரு முட்டாள் தனம்' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

"செல்வா நீங்க‌ கெள‌ம்புங்க, நேரம் ஆச்சு, தேட மாட்டாங்க ?!!" என்று நிர்ம‌லா சொல்லும்போது தான், அட !! ட்ரெய்ன் வ‌ரைக்கும் வ‌ந்த்துட்டோமே என‌ ஆச்ச‌ரியித்தான். இதே இட‌த்தில‌ தானே காலையில் உதாசீன‌ப்ப‌டுத்திச் சென்றாள். இப்ப‌ பேசுகிறாளே, அதுவும் அழகாக, என‌ பூரிப்புட‌ன் வ‌ழி திரும்பினான்.


தொடரும் .....

Friday, August 22, 2008

வானின் நிறம் நீலம் - 3

'அப்பாடா ! இன்று செல்ல‌த்தின் பிடியில் இருந்து த‌ப்பிச்சாச்சு' என்று பையை மேசையில் ஓர‌த்தில் வைத்து, த‌ன‌து க்யூபிகலில் ச‌ரிந்த‌ம‌ர்ந்த செல்வா, திரும்பி ப்ர‌ஷாந்தையும், க்ளிஃப‌ர்டையும் பார்த்தான்.

இருவ‌ர் க‌ண்க‌ளும் குறுகுறுவென‌ குறுஞ்செய்திப் ப‌றிமாற்றம் செய்து கொண்டிருந்த‌ன‌. 'அட‌ப் பாவிங்க‌ளா, நம‌க்கு வில்ல‌ன்கள் ஆகிவிடுவான்க‌ள் போலிருக்கே !' என்று எண்ணி ச‌ற்று திரும்பி பாலினையும், ரெபேக்காவையும் பார்த்தான். த‌லை க‌விழ்ந்து க‌ணினி திரை பார்த்தாலும், அவ‌ர்க‌ள‌து பாடி லேங்குவேஜும், அவர்களிடம் ஒரு மாற்ற‌த்தை காட்டிய‌து.

இவர்கள் அனைவ‌ருக்கும் பின்னால் செல்லம் 'க்ரிஸ்டினா'வின் அறை. மங்கிய க‌ண்ணாடி வழி உருவங்கள் அருவங்களாக. அறிமுக‌க் கேள்வி ப‌தில்கள் மெலிதாய் வெளி அறையிலும் விழுந்து கொண்டிருந்த‌து. அவள் வந்த சாயல் நேர்முகத்திற்கு தான் என எளிதாய் அனைவருக்கும் உணர்ந்தினாலும், அனைவ‌ருக்குமே ஒரு ஆர்வ‌ம், என்ன‌தான் உள்ளே பேசுகிறார்கள் என‌ !!!

"இந்தியாவில் எந்த‌ப் ப‌குதி ?"

"சௌத். சென்னை தெரியுமா உங்க‌ளுக்கு ?"

"ஓ, க‌மான் ! இரு முறை சென்றிருக்கிறேன். ந‌ம்ம‌ வ‌ங்கி, த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌த்திற்கென‌ த‌னியே ஒரு அலுவ‌ல‌க‌ம் அங்கு திற‌க்க‌ப் போகிறார்கள் என்றொரு செய்தியும் சமீப காலமா பேசப்படுகிறது."

ப‌ள்ளி, க‌ல்லூரி, உட‌ன்பிற‌ப்புக்க‌ள், அப்பா, அம்மா என‌ ஒரு மினி ஜென‌ர‌ல் உரையாடலுக்குப் பின், "டூ யூ ஹேவ் எனி கொஸ்டின்ஸ் ?" என்றார் க்ரிஸ்டினா.

சற்றும் தயங்காமல், "இஃப் ஐம் செல‌க்ட‌ட், என்னோட‌ முக்கிய‌ ப‌ணி என்ன‌வா இருக்கும் ? " சேல‌ஞ்சிங்கா எதா இருந்தாலும் எடுத்து செய்ய‌த் த‌யார் என்றும் சொல்ல‌ப் போன‌வ‌ள், வாழ்வில் ஒரு முறை செய்த‌ த‌வ‌றை மீண்டும் செய்ய‌க் கூடாது என்று நினைத்து, முத‌ல் கேள்வியோடே நிறுத்திக் கொண்டாள்.

"ஐ லைக் யுஅர் ப்ரோ‍ஆக்டிவ்னெஸ், இருந்தாலும் டெக்னிக்க‌ல் இன்ட‌ர்வியூ முடிச்சிட்டு சொல்றேன்" என்ற‌வ‌ர், க‌தவைத் திற‌ந்து வெளியில் வந்தார்.

"கேல்ஸ் அன்ட் கைஸ்," கண்கள் சுருக்கி ஒரு கேள்விக்குறியோடே, அவளைப் பார்த்து "ஷி இஸ் நிமலா ?!" என்றார்.

"நிர்ம‌லா" என்று 'ர்'க்கு ஒரு அழுத்த‌ம் கொடுத்தாள் நிர்ம‌லா.

திரும்ப‌வும் முய‌ற்சித்த‌ க்ரிஸ்டினா, 'நிமலா' என்றே மீண்டும் சொன்னார். அவருக்கு 'ர்' ஒரு பெரிய‌ ச‌வாலாக‌வே இருந்த‌து. நீந்துகையில், கை நீட்டி நீரை வ‌ழிப்ப‌து போல‌ செய்து, "சாரி ஃபார் த‌ட், வென் டேய்ஸ் கோஸ் ஆன், ஐ வில் க‌ரெக்ட் இட்" என்று சொல்லி அவளைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்து வைத்தார் எல்லோருக்கும்.

இந்த‌ ஒரு வாக்கியம், நிர்ம‌லாவுக்கு, அங்கு வேலை உறுதி என‌க் காட்டிய‌து. அம்மையாருக்கு ந‌ம்மைப் பிடித்து விட்ட‌து என்று ம‌கிழ்ச்சி கொண்டாள். இங்க‌ உட்கார்ந்திருப்ப‌வ‌ர்களில் யாரோ ஒருவர் அல்லது இருவர் தான் டெக்னிக்க‌ல் கேள்வி கேட்க‌ப் போகிற‌வ‌ர்க‌ள் என்று சுற்றிலும் அனைவ‌ரையும் ஒரு முறை பார்த்தாள்.

அது ஒரு பன்னாட்டு நிறுவன வங்கி. ஆயிரமாயிரம் பேர் உலகெங்கிலும் வேலை பார்க்க, இந்த அளவிற்கு ஒரு குட்டி டிப்பார்ட்மென்ட் இன்று தான் பார்க்கிறாள் நிர்மலா. 'ரிஸ்க் மேனேஜ்மென்ட்'ன் மென்பொருள் தயாரிப்பு, மற்றும் ஆணி பிடுங்குதல் ப்ராதன வேலை.

ஒரு மினி ஃப்ரிட்ஜ், அத‌ன் மேல் த‌ண்ணீர் சுட‌ வைக்க‌ கெட்டில், அத‌ன‌ருகே காபி த‌யாரிக்க‌, அத்த‌னை இன்ஸ்ட‌ன்ட் பொடிக‌ள், தேயிலை பொட்ட‌ல‌ங்க‌ள், ச‌ர்க்க‌ரை. அறையின் நீளவாகில் இருபுற‌மும் அல‌ங்கார‌ ட்ராய‌ர்க‌ள். அத‌ன் மேல் புத்த‌ர் சிலைக‌ள். வ‌ரிசையாய் கோப்புக்க‌ள். ந‌டுவே மீன் முள் போல க்யூபிக‌ல்க‌ள். ஒரு க்யூபிகலில் உட்கார்ந்து சுற்றினால் அனைவ‌ரையும் பார்த்து பேசும் வ‌ண்ண‌ம் ஒரு அமைப்பு. அனைத்து மேசைகளிலும் க‌ணினி பார்க்க‌ அலுவ‌ல‌க‌ம் போன்று தோன்றினாலும், மொத்த‌த்தில் ஒரு ஹோட்ட‌ல் சுயீட் போல‌வே காட்சி த‌ந்தது அந்த‌ இர‌ட்டை அறை.

ஒவ்வொருவ‌ரிட‌மும் கை குலுக்கி அறிமுக‌ம் செய்து கொண்டு, அவர்களைப் பற்றியும் அறிந்து கொண்டாள். எல்லோரிட‌மும் போல‌வே செல்வாவிட‌மும் கை குலுக்கிப் பேசினாள். 'என்ன‌து !! வெளியில் க‌ண்டுக்காத‌வ‌ள், உள்ளே வெகு இய‌ல்பாய் பேசுகிறாளே !!!' என்று நினைத்திருந்தான்.

"ப்ர‌ஷாந்த், க்ளிஃப‌ர்ட், க‌மான் இன். யூ டூ நிம‌லா" என்று சொல்லி அடுத்த‌ க‌ட்ட‌ டெக்னிக்க‌ல் இன்ட‌ர்வியூவிற்கு, இவர்களைத் தன் அறைக்கு அழைத்து சென்றார் க்ரிஸ்டினா.

தொடரும் .....

Thursday, August 21, 2008

வானின் நிறம் நீலம் - 2

சிங்கை வ‌ந்த நான்கு மாத‌த்தில், அது வரை இந்தியாவில் வாழ்ந்த‌ இருப‌த்தி ஐந்து வய‌து வாழ்க்கை முறை மாறியே போன‌து செல்வாவிற்கு. முதன் முதலாய் ஐந்த‌ரை ம‌ணிக்கு எழ‌ க‌ற்றுக் கொண்டான். கொஞ்ச‌ லேட்டா எழலாம் என‌ நினைத்தால் போதும், பாத்ரூம் ப்ராப்ள‌ம் ப்ரதான‌மாய் இருக்கும் அந்த‌ ப‌த்தாவ‌து த‌ள‌த்தின் அடுக்குமாடி வீட்டில்.

மூன்று அறை கொண்ட வீடு அது. அறைக்கு இருவராய் மொத்த‌ம் அறுவ‌ர். அதுமில்லாம‌ல் இவ‌ன் தான் நெடுந்தூர‌ம் ப‌ய‌ண‌ம் செய்ய‌ வேண்டும். ம‌ற்ற‌ நண்ப‌ர்க‌ள் ப‌க்க‌த்தில், சில‌ என்ஜினிய‌ரிங் நிறுவ‌ன‌ங்க‌ளில் பணிபுரிந்த‌ன‌ர்.

வெளியே எங்கிலும் வானுய‌ர்ந்த அடுக்குமாடி வீடுக‌ளும், சுத்த‌மான‌ தெருக்க‌ளும், எவ்வ‌ள‌வு கூட்ட‌த்திலும் இடிக்காத‌ ம‌க்க‌ளும், எம்.ஆர்.டி யா இருக்க‌ட்டும், ஏ.டி.எம் மா இருக்க‌ட்டும், காஃபி க‌டையா இருக்கட்டும், எங்கிலும் முறையே வ‌ரிசையில் நிற்ப‌தும், ப‌த்தாத‌ற்கு ரயிலிலோ, பஸ்ஸிலோ கூச்ச‌மே ப‌டாம‌ல் க‌ட்டிப் பிடித்துக் க‌ருத்தொருமித்த‌ காத‌ல‌ர்க‌ள் வ‌ரிசையாக‌ட்டும் ... எல்லாம் இந்த‌ நான்கு மாத‌ங்க‌ளில் ப‌ழ‌கிவிட்டாலும், இன்னும் ஆச்ச‌ரிய‌ம் தீர்ந்த‌பாடில்லை செல்வாவிற்கு.

குளித்து, காஃபி போட்டுக் கொண்டு, அன்றைய முக்கிய செய்திகள், சிறிது நேர‌ம் டி.வி.யில் பார்த்து விட்டு, நேற்றைய சமையலை இன்று மதியத்திற்கு டப்பாவில் அடைத்துக் கொண்டு, காலை உணவாக‌ சீரிய‌ல் சாப்பிட‌வும் க‌ற்றுக் கொண்டான். இந்தியாவில் இருந்த‌ வ‌ரை, அம்மா ச‌மைய‌ல் சாப்பிட்டு ஒரு முறை கூட‌ பாராட்டி சொல்லாத‌வ‌ன், தற்போது போன் செய்யும் போதெல்லாம் பாராட்டித் த‌ள்ளினான்.

ஏழு ம‌ணிக்கு வீட்டிலிருந்து நடக்க ஆரம்பித்தால், கால் ம‌ணி நேர‌த்தில் ர‌யில் நிலைய‌த்தில் இருப்பான். ஊரில் முக்கு கடைக்கு போறது கூட சும்மா ச‌ள் சள்ளென்று பைக்கில் சுற்றிய‌வ‌ன், இங்கு லொங்கு லொங்கென்று நெடுந்தொலைவு ந‌ட‌க்க‌வும் க‌ற்று கொண்டான். காலை நேரமா ?!, ம‌ற்ற‌ நேர‌ங்க‌ளிலேயே சிட்டி ப‌ஸ் பிடிக்காத‌வ‌ன், தின‌ம் போராடி ர‌யிலேற‌வும் க‌ற்றுக் கொண்டான்.

இவை எல்லாமே ப‌ழ‌கிவிட்டாலும் ஏதோ ஒன்று ம‌ட்டும் குறைவ‌தாய் உண‌ர்ந்தான் இன்று வ‌ரை. அதுவும் சில‌ நொடிக‌ள் வ‌ரை. இங்குள்ள‌ வாலிபிக‌ளிட‌ம் ஒரு செய‌ற்கை த‌ன‌ம் இருப்ப‌தாய் உண‌ர்ந்த‌தாலோ என்ன‌வோ, ம‌ஞ்ச‌ள் மேனி பாவையாக‌ட்டும், க‌ருப்பு தேவ‌தைக‌ளாக‌ட்டும், ம்.ஹிம். திரும்பிக் கூட‌ பார்க்க‌ மாட்டான்.

இத‌ற்கு மாறாக‌ இன்று க‌ண்ட‌வ‌ளை எண்ணி அதிச‌யித்து வ‌ந்த‌வ‌னை, மீண்டும் 'எக்ஸ்க்யூஸ் மீ' என்று சொல்லி அவ‌னைக் க‌ட‌ந்து இற‌ங்கினாள். பார்த்தால் அட 'ராஃபிள்ஸ் ப்ளேஸ்' வ‌ந்திட்ட‌தா என்று கதவு மூடு முன் அல‌றி அடித்து இற‌ங்கினான்.

வ‌ழக்கமாக‌ கார்ட் அடித்து வ‌ல‌து புற‌ம் செல்ப‌வ‌ன், எப்புற‌ம் செல்வ‌து என‌க் குழ‌ம்பி நின்ற‌வ‌ளைக் க‌ண்டு தானும் நின்றான். "ஏதாவ‌து உத‌வி வேணுமா உங்க‌ளுக்கு" என்ற‌வ‌னை உதாசீனித்து, கௌண்டரில் விசாரித்துக் கொண்டிருந்தாள்.

இருக்க‌ வேண்டிய‌து தான், எத‌ற்காக இத்த‌னை திமிர். தேவையில்லை என்றாவ‌து சொல்லியிருக்க‌லாமே !! பெண்க‌ளே இப்ப‌டித் தான். ஆண்கள் என்றாலே ஏ.இ.கொ.வெ. ? ஒரு புற‌ம் டென்ஷ‌ன் அதிக‌ரித்தாலும், 'ஏற்க‌ன‌வே லேட்டு ராசா நீ' என்று, அடுத்த‌ ர‌யிலில் வ‌ந்த‌ கூட்ட‌ம் நினைவூட்டிய‌து.

அடித்துப் பிடித்து ப‌டிக‌ளேறி, வ‌ளைந்து நெளிந்து, மேலே வ‌ந்து சில நொடிகள் வெளிக் காற்றை சுவாசித்தான். ஓடு ஓடு என்று ம‌ன‌ம் த‌ள்ள‌, ஓடிய‌வ‌ன் எதிரில் சிலர் வர, அவர்கள் மேல் மோதாம‌ல் இருக்க‌ வேண்டுமே என‌ எண்ணி ச‌ற்று வில‌கிய‌வ‌ன், சாலைக் க‌ம்ப‌த்தில் இடித்து கீழே விழுந்தான்.

இடுப்பில் கை வைத்து எழுந்தவனுக்கு, பறக்கும் காகித‌ங்களையும் சாப்பாடு ட‌ப்பாவையும், வ‌ரிந்து எடுத்துக் கிள‌ம்ப‌ சில‌ நிமிட‌ங்க‌ள் பிடித்த‌து.

இவ‌ன் இருக்கும் அலுவ‌ல‌க‌க் க‌ட்டிட‌த்தில் நுழைந்து, எஸ்க‌லேட்ட‌ரில் உய‌ரே போய்க் கொண்டிருந்தவளை செல்வா காணத் தவறவில்லை. 'இந்த வழியே தான் வந்திருக்கிறாள். என்னைக் கடந்து தான் போயிருக்கணும். ஜ‌ஸ்ட் லைக் த‌ட் ஒரு ஹெல்ப் ப‌ண்ணியிருக்க‌லாமே !' என்று நொந்து எஸ்க‌லேட்ட‌ரில் ஏறினான்.

நேரம் கடப்பதை உணர்ந்தவன், ஏறியதோடு நிற்காம‌ல், ப‌ட‌ ப‌ட‌வென‌ ஓடும் எஸ்க‌லேட்ட‌ரில் ஓடி ஏறினான். வ‌ல‌ப்புற‌ம் திரும்பி, இட‌ப்புற‌ம் இர‌ண்டாவ‌து அறையில் நுழைந்த‌வ‌ன் வாய் பிள‌ந்து நின்றிருந்தான்.

'மேன‌ஜ‌ரி'யுட‌ன், வளை குலுங்க கை குலுக்கி, ச‌ரியும் ஹேன்பேக்கை இழுத்து மேல் விட்டு, எடுப்பான பல் வரிசை, எதார்த்த சிரிப்பின் ஓசையோடு, எடுத்துரைத்துக் கொண்டிருந்தாள் தன் பெயரை !

தொடரும் .....

Tuesday, August 19, 2008

வானின் நிறம் நீலம் - 1

காலை மணி ஏழு பதினைந்து. 'ஜூரோங் ஈஸ்ட்' நோக்கி செல்லும் துரித ரயில் 'புக்கிட் பாத்தோக்' நிலையத்தை அடைந்து, ஊரும் புழு போல ஊர்ந்து நின்றது.

ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த‌ கூட்ட‌ம் ர‌யிலை நோக்கித் திரள, ப‌ருத்த மேனியரின் வெடித்த சட்டை போல, பட் பட்டென கதவுகள் திறக்க, வெளியில் நின்ற‌ கூட்ட‌ம் வ‌கிடு போல‌ வ‌ழி விட‌, சில‌ர் மட்டுமே துள்ளி இற‌ங்கின‌ர் !

நொடியும் தாம‌தியாம‌ல் வெளியில் நின்ற கூட்ட‌ம் த‌ள்ளாம‌ல் உள்ளேற‌, அகோரப் ப‌சிகொண்ட‌ கும்ப‌கர்ண‌ப் புழு அனைவ‌ரையும் விழுங்கி அடுத்த‌ நிலைய‌ம் நோக்கி விரைந்த‌து.

நெற்றியில் திர‌ண்ட‌ நீர் நேர் கோடாய் சொட்ட‌, கை தூக்கித் துடைக்க‌க் கூட‌ இட‌மில்லை ர‌யிலினுள்ளே. நேர் கோடு முதுகிலும் இறங்க, காலை வெம்மையும், ஜன நெருக்கத்தின் புழுக்கமும், 'ஏன் தான் தினம் இப்படி இருக்கோ' என்ற அயர்ச்சியை ஏற்படுத்தினாலும், சில‌ நிமிட‌ங்க‌ளில் ர‌யிலின் குளிர்ச்சியை உண‌ர்ந்த‌ செல்வ‌குமார், 'ந‌ல்ல‌ வேளை இன்றும் நேரத்துக்கு ட்ரெயின‌ப் பிடிச்சாச்சு' என்று ம‌கிழ்ச்சி கொண்டான்.

உயர்ந்த நீள் பாலத்தில் பறந்த ரயிலுனிலுள்ளே வழக்கம் போல, தமிழ் உள்பட நான்கு அரசு மொழிகளிலும் அடுத்த நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வர, 'ஜூரோங்க் ஈஸ்ட்டில்' இற‌ங்கி, அடுத்து 'ராஃபிள்ஸ் ப்ளேஸ்' ர‌யிலைப் பிடிக்க‌ வேண்டுமே என்று ம‌ன‌ம் எண்ணுகையில் இவ்விரு நிமிட நிம்மதியும் குறைவ‌தாய் உண‌ர்ந்தான் செல்வா.

ஜூரோங்க் ஈஸ்ட்டில் ஏழு இருப‌த்தி ஐந்தை விட்டால், அதோ க‌தி தான் செல்வாவுக்கு. நேரம் ஆக ஆக கூட்டமும் அதிகம் சேரும் நேரம். டாக்ஸி பிடித்தால் கூட எட்டு ம‌ணி அலுவ‌ல‌க‌த்திற்கு செல்ல முடியாது. சில நிமிடங்கள் லேட்டானாலே போதும், 'மேன‌ஜ‌ரி'யின் செல்ல‌த்துக்கு ஆளாக‌ நேரிடும். இத‌ற்காக‌வே ஒரு ஐந்து ப‌த்து நிமிட‌ங்க‌ள் முன்னால் கிள‌ம்ப‌ணும் என்று நினைத்துக் கொள்வான். இன்று வ‌ரை அது தொட‌ர்ந்து கொண்டுதானிருக்கிற‌து.

ராஃபிள்ஸ் பக்கம் எங்கேயாவது தான் அடுத்து வாடகைக்கு வீடு எடுக்கணும் என்ற எண்ணத் தொடரில் மூழ்கி, அத்தனை கூட்டத்திலும் ஒருவர் மேல் ஒருவர் உரசாமல் நிற்பது கண்டு அதிசயித்து ஜன்னல் வழி வேடிக்கை பார்த்து வந்தான் செல்வா.

அணிலின் வரிகளாய் மூன்று தடங்களில், நடுவே ரயில் நிற்க, கரை தொட்ட அலை மீண்டும் கடலுக்குள் செல்வது போல், ஒரு கூட்டத்தை இறக்கி, மறு கூட்டத்தை இருபுறமும் ஏற்றிக் கொண்டிருந்தது செல்வா வந்த ரயில் ஜூரோங்க் ஈஸ்ட்டில்.

இருப்பினும் செல்வா செல்லும் அடுத்த ரயிலுக்கு காத்திருப்போர் எண்ணிக்கையும், ராணுவ அணிவகுப்பாய் அடுக்கடுக்காய் நின்றிருந்தது. சரியா ஏழு இருபத்திஐந்து ரயில் வந்து நிற்க, முன்னின்ற பலர் ஏற, சில நொடிகளில் கதவு மூட, வெளி நின்ற பலருள் செல்வாவும் ஒருவன்.

என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றுகையில், கூடவே ஒரு மின்னலும் தோன்றியது. "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லி, விலகும் செல்வாவைத் தாண்டி ப்ளாஃபாரத்தின் அருகில் சென்று நின்றிருந்தாள்.

வெண் ப‌ருத்தி உடையில் முழ‌ங்கை வ‌ரை மேலாடை. 'வி' க‌ழுத்தில் ஓர‌மே எம்ப்ராய்ட‌ரி செய்த‌ க‌ரும‌ஞ்ச‌ள் பூக்கள். வான் நீல‌த்தில் ஜீன்ஸ். போனி டெய்ல், அதில் அழ‌கிய‌ ஜீன்ஸ் க‌ல‌ருக்கு ஏற்ற‌ ஹேர்பேன்ட். அதே ஊதா வ‌ண்ண‌ங்க‌ளில் இழுத்து விட்ட‌ டைம‌ன்ட் போல‌ காத‌ணிக‌ள். வெண் ம‌ஞ்ச‌ள் மேனி எல்லாம் இல்லை. வெய்யிலில் கருத்த வெள்ளைக் காரர்கள் நிறம் எனலாம். மெல்லிய‌ ஆர‌ஞ்சு உத‌ட்டுச் சாய‌ம். CK ஹேன்பேக் ஒரு புறம் தொங்க, மறுபுறம் கையிடுக்கில் கோப்பு ஒன்றை வைத்திருந்தாள்.

அழகிய பதுமைப் பெண்கள் அரைகுறை உடையுடன் ஆயிரமாயிரம் நின்றாலும், மின்னலின் வரவு அங்கிருந்த அனைவரையும் ஈர்த்திருக்க வேண்டும். அந்த இடத்தில் அனைவரும் அவளை ஒரு முறையாவது பார்க்கத் தவறவில்லை.

தின‌ம் வ‌ருகிறாளா ? இல்லை இன்றைக்கு தான் பார்க்கிறோமா ? யாரிவ‌ள் ? சீன‌ச்சியா, த‌மிழ‌ச்சியா, வெள்ளைக்காரியா ?!!! எந்த‌ நாட்டுக்காரிய‌ ம‌ன‌தில் வைத்துப் பார்த்தாலும், அந்த‌ நாட்டுக்காரி மாதிரியே இருக்கிறாளே !!! என‌ ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்ப் எறிய, செல்வாவின் எண்ண‌ அலைக‌ளின் ஊடே அடுத்த‌ ர‌யிலும் வ‌ந்து நின்ற‌து.

தொடரும் .....

Wednesday, August 13, 2008

பெண்ணின் மனதைத் தொட்டு

என்னடி, வந்ததும் வராததுமா லபோ திபோனு குதிக்கறே !!! வழக்கம்போல நாப்பத்தியேழு ஏ கூட்டமா தானே இருந்திருக்கும், தினம் என்ன சலிப்பு. சரி, சரி ட்ரெஸ் மாத்திட்டு, முகம் கழுவிட்டு வா. சூடா காஃபி போட்டு வைக்கிறேன். சரளமான பேச்சோடு, வேலையிலும் மும்மரமாக‌ இருந்தார் மல்லிகா.

ஆடையின்றித் திறிந்த போதும்
காமமின்றி கண்ட கண்கள்
நாகரீகம் வளர்ந்த போது(ம்)
நஞ்சு போலக் காணுதே !!!

இருகரம் பற்றி துண்டால் முகத்தைத் துடைத்து முணுமுணுத்துக் கொண்டே வந்த சிவ‌ர‌ஞ்சனி, ஹாலில் ஃபேனைப் போட்டு, டிவியை தட்டி விட்டு, காலை ஆங்கில எழுத்து 'Z' போல மடித்து ஷோபாவில் அமர்ந்தாள்.

அம்மாடி !! என்ன‌ பாட்டு பலமா இருக்கு ?! வார்த்தைகள் விட்டுத் தெறிக்குது பட்டாசாய், காஃபியோடு சிவரஞ்சனியின் அருகில் வந்தமர்ந்தார் மல்லிகா.

பொத்தாம் பொதுவா ஏன் சிவா எல்லாரையும் திட்ட‌றே ?! உன் க‌வ‌னத்தை இதில் ஏன் முன்னிருத்தற ? ஏதோ சொல்லுவாங்களே !!, துஷ்ட‌னைக் க‌ண்டால் தூர‌ வில‌குனு ... அது மாதிரி நம்ம‌ பாட்டுக்கு வேலைக்கு போன‌மா, வ‌ந்த‌மானு மட்டும் இருக்க‌லாம்ல.

துஷ்ட‌னைக் க‌ண்டால் வில‌கி போயிட‌லாம், துஷ்ட‌ர்க‌ளா அல்ல‌வா நிறைய‌ பேர் இருக்கிறார்க‌ள். பெண் என்றால் ஏன் இத்த‌னை இள‌க்கார‌ம் ?!! ஒரு பெண் த‌னித்து வாழ்ந்தால் அவ்வ‌ள‌வு தான். ப‌க்க‌த்து வீட்டுப் பெண்ணே போதும், களமிறங்காமலேயே ப‌ந்தாட‌ !!!

ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க‌னு சொல்லிட்டே இருக்கேன். கொஞ்ச நாள் போகட்டும், போகட்டும்னு சொல்லி ரயில் தண்டவாளம் மாதிரி நீட்டிக்கிட்டே இருக்க‌. க‌ல்யாண‌ வ‌ய‌தெல்லாம் தாண்டி ப‌ல‌ வ‌ருடங்கள் ஆச்சு.

உடல் நிலை போல மனதோடும் போராடும் சித்தி ப‌டும் க‌ஷ்ட‌ம் போதாதா. சித்த‌ப்பா பாதி நாள் வீட்டுக்கே வ‌ர்ற‌தில்லை. கார்த்திகாவுக்கு க‌ல்யாண‌ம் ப‌ண்ணிட்டு, அவ‌ளும் சென்னையில தான் இருக்கா. ஒரு நாள் கூட‌ அம்மாவ‌, வ‌ந்து பார்க்கிற‌தோ, இல்ல அம்மாவ‌ வீட்டுக்கு கூட்டிப் போற‌தோ இல்லை. கேட்டா, என் கணவர், குழந்தைகளை கவணிக்கவே நேர‌ம் ச‌ரியா இருக்குனு சொல்றா.

என் அம்மாவை இந்த‌ மாதிரி விட்டுப் போக‌ ம‌ன‌மில்லை. எத‌ற்கு க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டு, அப்புற‌ம் கார்த்திகா மாதிரி நானும் ஆகிட்டேன்னா. அந்த‌ ப‌ய‌ம் தான். போதுமா ?!!! இனிமேலாவ‌து க‌ல்யாண‌ப் பேச்சை எடுக்காம‌ல் இருக்கிறாயா .... எதுக்காக‌ நாள் க‌ட‌த்துறேனு இத்தனை நாள் உன‌க்குப் புரியவே இல்லையா ?

இந்த‌க் கால‌த்துப் புள்ளைங்க‌ என்ன‌மா யோசிக்குது ? ந‌ம்ம‌ கால‌ம் மாதிரியா இருக்கு. தன் வாழ்வை தியாகம் செய்யும் பெத்த‌ ம‌க‌ளின் பாச‌ம் ஒரு புற‌ம் ம‌கிழ்வைத் த‌ந்தாலும், அவ‌ளின் வ‌ரும் நாட்க‌ள் வேத‌னையை அளித்த‌து ம‌ல்லிகாவுக்கு.

எல்லாம் ச‌ரிதாம்மா. நான் இன்னும் கொஞ்ச நாள் இருப்பேனா ?!! என‌க்கு நீ இருக்க மாதிரி, அப்புற‌ம் உனக்கு யாரும்மா இருக்கா ?

சிமெண்டு சுவ‌ற்றில் அடித்த‌ ஆணி போல் தலையில் இற‌ங்கிய‌து தாயின் சொற்க‌ள்.

எல்லோருமே கெட்ட‌வ‌ங்க‌ இல்லை சிவா. அதுக்காக எல்லோரையும் நம்பிவிடவும் செய்யாதே !!! இன்னும் சில‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ இருக்க‌த் தான் செய்கிறார்க‌ள். இந்த‌ சில‌ர் இன்னும் பெருக‌ணும். அதுக்கு உன்னைப் போல‌ இருக்க‌வ‌ங்க‌ க‌ண்டிப்பா க‌ல்யாண‌ம் செய்துக்க‌ணும், குழ‌ந்தைக‌ள் பெத்துக்க‌ணும். என்னைப் ப‌ற்றின‌ க‌வ‌லையை விடு. என‌க்கு அவ‌ர் த‌ந்து சென்ற‌ தைரிய‌த்தை விட‌, உன் செய‌ல் த‌ரும் தைரிய‌ம் ப‌ண்ம‌ட‌ங்கா தெரியுது.

அமெரிக்கா, ல‌ண்ட‌ன்ல‌ இருந்து நிறைய‌ வ‌ர‌ன்க‌ள் இருக்கும்மா. எல்லாம் இந்தியால‌ இருக்க‌ பொண்ணு தான் வேணும்கிறாங்க‌. பொண்ணு ஓரளவு படிச்சிருந்தா போதும், வரதட்சணை என்ற பெயரில் ஒரு பைசா தேவையில்லை, மிடில் க்ளாஸா இருந்தா போதும் .... அடுக்க‌டுக்காய் சொல்லிக் கொண்டே போனார் புரோக்க‌ர் வேதாச‌ல‌ம்.

அதெல்லாம் வேண்டாம், சென்னையிலேயே ந‌ல்ல‌ குடும்ப‌த்தில‌ இருந்து வ‌ர‌ன்க‌ள் வ‌ந்தா சொல்லுங்க‌ என்று சிவ‌ர‌ஞ்ச‌னி சொல்வ‌தை, ம‌ல்லிகா ஆவ‌லோடு கேட்டுக் கொண்டிருந்தார் !!!

Saturday, August 9, 2008

என்ன விலை அழகே - 14 - The End

அழைப்பு ம‌ணி கேட்டு அழ‌கே வ‌ந்து க‌த‌வைத் திற‌ந்த‌து !

ஹேய் இன்டி ! என‌ கோவிந்த் அதிச‌யிக்க‌, விர‌ல் ப‌ற்றி வீட்டினுள் இழுத்து சென்று ஷோஃபாவில் அம‌ர்த்தினாள். இதோ வ‌ந்திட‌றேன் என‌ புள்ளி மானாய் துள்ளி, மாடி ஓடினாள்.

நிச‌ப்த‌மான‌ சில‌ நொடிக‌ள். சுவ‌ர்க‌டிகார‌த்தின் டிக், டிக் துல்லிய‌மாக‌, கோவிந்தின் இருத‌ய‌த் துடிப்போடு போட்டி போட்ட‌து. வீட்டில் யாரும் இல்லையா, இவ்வள‌வு அமைதியா இருக்கே என‌ சுற்றிலும் நோட்ட‌ம் விட்டான்.

வாங்க‌ மிஸ்ட‌ர் கோவிந்த். இன்டி சொல்லிட்டிருந்தா நீங்க‌ வ‌ருவீங்க‌னு என்று ஒரு கரம் நீட்டி, கை குலுக்கி வரவேற்றார் சுவாமிநாத‌ன்.

கோவிந்த் எழுந்து, என்ன‌து வ‌ர‌வேற்பெல்லாம் ப‌ல‌மா இருக்கு. சொல்லிட்டாளா வீட்டில‌ ? என்று யோசிக்க, க‌மான் பீ சீட்ட‌ட் என்றார் சுவாமிநாத‌ன்.

இருங்க கோவிந்த், ராஜி இப்ப‌ வ‌ந்திருவா.

வாங்க‌ த‌ம்பி, உங்க‌ளுக்கு இன்டிய‌ எத்த‌னை நாளா தெரியும். என்று கேள்வியோடே, த‌ன் க‌ண‌வ‌ரின் அருகில் வ‌ந்த‌ம‌ர்ந்தார் ராஜி.

ரெண்டு நாள்.... இல்ல‌ இல்ல‌ மூனு நாள்.

ஓஹோ !!! மூனு நாளில் அவ‌ள‌ப் ப‌த்தி என்ன‌ தெரிஞ்சுகிட்டீங்க‌. அவ‌ சின்ன‌ பொண்ணு, அதுமில்லாம‌ இங்க‌ வ‌ள‌ர்ந்த‌வ‌ கிடையாது. அவ‌ளுக்கு எதும் தெரியாது, ஷி இஸ் எ கிட்.

என்ன‌து இவ‌ங்க‌ பாட்டுக்கு கேள்விக்க‌ணைக‌ள் தொடுக்க‌ ஆர‌ம்பிச்சிட்டாங்க‌ ? அவ‌ எங்க‌ போய்ட்டா, இங்க‌ இருக்காம‌. என்ன‌ ப‌ண்ணுகிறீர்க‌ள், எந்த‌ ஊரு, அப்பா அம்மா யாரு இதெல்லாம் கேட்பாரு என‌ நினைத்தால், ஹூம் ஒரு வார்த்தை அது ப‌ற்றி பேச‌வில்லை இருவ‌ரும்.

இன்டி த‌ன்னைப் ப‌ற்றி பேசின‌தைக் காட்டிலும் உங்க‌ளைப் ப‌ற்றி தான் நிறைய‌ பேசியிருக்கா. அத‌னால‌ அவ‌ளை விட‌ உங்க‌ளைத் தான் நிறைய‌ அறிந்து வைத்திருக்கிறேன். அவ‌ளுக்கு ஒன்னும் தெரியாதுங்க‌றீங்க‌, என்னிக்காவ‌து, எந்த‌ வித‌த்திலாவ‌து தவறுதலாக அவ‌ளை ஃபோர்ஸ் ப‌ண்ணியிருக்கேனா என்று கேட்டுப் பாருங்க‌ள். க‌ல்யாண‌ம் பேச‌றாங்க‌ என்ற‌வுட‌ன் நேரே உங்க முன்னாடி வ‌ந்து நிக்க‌றேன்.

மாம், டாட் இன‌ஃப் டீஸிங்க் கோவிந்த்.

கோவிந்த் அது வ‌ந்து ... நான் சொல்றேம்மா நான் சொல்றேன் என்று சிறு குழ‌ந்தைபோல் த‌ன் குழ‌ந்தையிட‌ம் போட்டி போட்டார் சுவாமிநாத‌ன். இப்பாவாவ‌து பேச‌ விடுங்க‌ என்னை என்ப‌து போல் இருந்த‌து.

அதாவ‌து மிஸ்ட‌ர் கோவிந்த், நேத்து நீங்க‌ சாப்பிட‌ப் போனிங்க‌ இல்லியா அன்ன‌ல‌ஷ்மிக்கு ...

‍‍‍‍‍-----

ஓரமே இருந்த, இன்டி கோவிந்தின் மேசையில், பாதி காலியான கண்ணாடி டம்ளர்களில், கீற்று சிரிப்போடு, நீர் நிறப்பினார் பழுத்த மாது ஒருவர். வீட்டில ஏதும் ப்ரச்சனையாம்மா. இந்தக் காலத்து புள்ளைகளுக்கு சொல்லியா கொடுக்கணும். எல்லாம் நல்ல படியா நடக்கும் என்று ஆசி கூறுவது போல் சொல்லி நகர்ந்தார். அரையிருட்டில் அவ‌ர் முக‌ம் ச‌ரிவ‌ர‌த் தெரிய‌வில்லை.

சென்ற‌ சிறிது நேர‌த்தில், ச‌மைய‌ல் க‌ட்டில் இருந்து, ராஜேஸ்வ‌ரியை தொலைபேசியில் அழைத்தார்.

ராஜி, உன் பொண்ணுக்கு ஏத்த‌ மாப்பிள்ளை நான் பார்த்துட்டேன்.

மைத்திலி அவ‌ச‌ர‌ப்ப‌டாதே, என் பொண்ணு கொஞ்ச‌ம் முர‌ண்டு ப‌ண்றா. அவ‌ள‌ கொஞ்ச‌ம் யோசிக்க‌ சொல்லியிருக்கேன். கொஞ்ச‌ நாள் க‌ழித்து இது ப‌த்தி பேச‌லாம்.

நான் எங்கே அவ‌ச‌ர‌ப் ப‌ட‌றேன். நான் சொல்ற‌த‌ க‌வ‌ண‌மா கேளு. இப்ப‌ல்லாம் இந்த‌ உண‌வ‌க‌த்துக்கு சேவை செய்ய‌ அடிக்க‌டி வ‌ந்துருவேன். இன்னிக்கு உன் பொண்ணை ஒரு பைய‌னோட‌ பார்த்தேன் இங்க‌.

கோவிந்த்ங்க‌ற‌ பைய‌னோட‌ ஃப்ரெண்ட்ஷிப்பா இருக்கா. இங்க‌ போர‌டிக்குது அந்த‌ப் பைய‌ன் தான் எல்லா இட‌த்துக்கும் இவ‌ள‌ கூட்டிட்டுப் போறான், வ‌ர்றான். ந‌ல்ல பையனாத் தான் இருப்பான் போல‌.

நேத்து கூட‌ கோவில்ல‌ உன் பொண்ண‌ப் பார்த்தேன். ஒரு டௌட்டாவே இருந்துச்சு அவ‌ தான‌ன்னுட்டு. அவ‌ கூடப் பேசி உறுதி படுத்திக்கிட்டேன். அப்பவே நெனச்சேன் உன் பொண்ணு தான் ராமுக்கு என்று. ஆனா இன்னிக்கு இவ‌ங்க‌ பேசின‌து கேட்டு, கோவிந்த் தான் ச‌ரியான‌ மாப்பிள்ளைனு தோணுது. நான் ராமு கிட்ட‌ பேசிக்கறேன். இவ‌ங்க‌ ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா உருகறத பார்த்து எனக்கே எங்க வீட்டுக்காரர், இன்னும் கொஞ்ச நாள் இல்லாம போய்ட்டாரேனு வருத்தம் ஆகிட்டுது.

என்ன‌ சொல்றே மைத்திலி என‌ அதிர்ந்தார் ராஜி !

...

ப‌ட், உன‌க்கே தெரியுமே நான் தெரிந்த‌ இட‌ங்க‌ளில் தானே மாப்பிள்ளை பார்க்கிறேன். இந்த‌ப் பையன் யாரு, எந்த‌ ஊரு, அப்பா, அம்மா என்ன‌ ப‌ண்றாங்க‌ எதுமே தெரியாம.!!!! இல்ல‌ மைத்திலி, இதுக்கு நான் ஒத்துக்க‌ மாட்டேன்.

எல்லாம் தெரிஞ்ச‌ பைய‌ன் தான் ராஜி. ரெண்டு மூனு முறை ராமு கூட‌ ந‌ம்ம‌ வீட்டுக்கு வ‌ந்திருக்கான். ஹி இஸ் வெரி ஸ்ட்ரைட் ஃபார்வ‌ர்ட். கோவிந்த் வெளியூர் என்றாலும் ப‌ள்ளி நாட்க‌ளில் இருந்து இங்க சென்னை தான். ராமுக்கு ரொம்ப‌ க்ளோஸ்.

ச‌ரி, நான் சொன்ன‌ மாதிரி காண்பிச்சிக்கிட்டாலும் ச‌ரி, இல்ல‌ நீயே க‌ண்டுபிடிச்சு பேச‌ற‌ மாதிரி இருந்தாலும் ச‌ரி, ந‌ல்ல‌ ப‌டியா க‌ல்யாண‌த்தை ந‌ட‌த்தி வை என போனை வைத்தார்.

குறுகுறுப்போடு சுவாமிநாத‌ன் சொல்லி முடிக்க‌ ஆன‌ந்த‌ அதிர்ச்சியில் உறைந்திருந்தான் கோவிந்த்.

ஹேய் ராம் என்ன‌டா இங்க‌. எப்ப‌டி இருக்க‌. யு. எஸ். போறதுக்குள்ள, நானே உன்ன‌ மீட‌ ப‌ண்ண‌னும்னு இருந்தேன்.

ச‌ரி, ச‌ரி.... கூடவே விக்கிரகம் இருக்கப்ப, நாங்க‌ல்லாம் எப்ப‌டி உன் க‌ண்ணுல‌ ப‌டுவோம். அது வ‌ந்து, அம்மா இங்க‌ வால‌ன்டிய‌ர் ச‌ர்வீஸ் ப‌ண்ண‌ வ‌ந்திருக்காங்க‌.

உள்ளேயா இருக்காங்க, நாங்க‌ பார்க்க‌லையே ?

எவ்வ‌ள‌வு கூட்ட‌ம் வ‌ருது, போகுது நீங்க‌ க‌வ‌ணிச்சிருக்க‌ மாட்டீங்க‌.

ஓ.கே டா ராம். நேர‌ம் ஆகுது, இவ‌ள‌ வீட்டில‌ ட்ராப் ப‌ண்ண‌னும். நாளைக்கு பேச‌லாம்.

‍‍‍‍‍-----

என‌ ராமின் வ‌ருகையும் தெளிவாகப் புரிந்த‌து இப்போது.

ச‌ரி என்ன‌ வெயிடிங்க் ? கொண்டாம்மா அந்த‌ ரிங்க‌ ! என்றார் சுவாமிநாத‌ன்.

கோவிந்த் கொடுத்த‌ அதே அழ‌கிய‌ ப‌ழுப்பு ம‌ஞ்ச‌ள் பெட்டி இன்டியின் கைகளில்.

கோவிந்த், நீங்க‌ இன்னைக்கு அமெரிக்கா போற‌தா இன்டி சொன்னா, அதான், சின்ன‌தா ந‌ம்ம‌ வீட்டிலேயே, இப்ப‌வே ஒரு என்கேஜ்மென்ட். நீங்க ஊர்ல இருந்து வந்தப்புறம் ஃபார்மலா என்கேஜ்மென்ட் வச்சிக்கலாம் என்றார் சுவாமிநாதன்.

ஹேய் என்ன‌திது ?

ஆமா, அம்மா போன‌ முறை வ‌ந்த்த‌ப்ப‌ என‌க்காக‌ வாங்கி இங்கேயே விட்டுட்டு வ‌ந்த‌ டெர‌க்கோட்டா மண் சிற்ப‌ம்.

அழ‌கா இருக்கு, உன்னை மாதிரியே !

ஒரு வா.....ர‌ம் போறே, என்ன‌ மிஸ் ப‌ண்ண‌க்கூடாதில்லையா அதான், கண் சிமிட்டினாள் இன்டி.

ஆமா, ஆமா மிஸ் ப‌ண்ண‌க்கூடாது என்று இருக்கை பின் தள்ளி, அழகிய குதிரையின் கழுத்தை, இருகரத்தில் இறுக்கி அணைத்து, கால் நீட்டி, இன்டியின் நினைவோடு விமானத்தில் பயணித்தான் கோவிந்த் !

முற்றும் !!!!!!

Friday, August 8, 2008

என்ன விலை அழகே - 13

ஐ வான்டட் டு மீட் யூ கோவிந்த். சம்ஹௌ ஐ ஃபீல் லைக், ஐம் லூசிங் மை கன்ட்ரோல்.

லவ்லி, மீ டூ இன்டி. இன்னிக்கு சாயந்திரம் மீட் பண்ணலாம். எனக்குப் புரியுது, உன்னால என்ன பார்க்காம இருக்க முடியல இல்ல. உடனே கெளம்பி வரட்டா ?

அவன் சொல்லும் லவ்லியை மனம் ரசித்தாலும், அரை மனதாய் புன்முறுவ‌ல் பூத்தாள்.

டைரக்டா அம்மா கிட்ட பேசிட்டா என்ன என நினைத்து, முடியாது என ஒரு வேளை அம்மா பிடிவாதம் பிடித்தால் என்றும் யோசித்தாள்.

இன்னிக்கு டின்னர் மௌன்ட் ரோட், அன்னலக்ஷ்மி போலாம்.

...

ஹேய் என்ன ஒரே டல்லடிக்கரே. ஐ தாட் யூ ஆர் ஆல்வேஸ் கூல்

நத்திங் கோவிந், சரி அது பத்தி சாயந்திரம் பேசலாம். நீ எப்போ யு.எஸ். கெளம்பறே ?

நாளைக்கு நைட். நீயும் வரயா ?

நோ ஜோக்ஸ் ப்ளீஸ்.

இந்த ப்ளீஸ் இன்னும் நீ விடலை இல்ல.

ஓ மை காட், லிஸ‌ன், நீ ஊருக்கு போறதுக்கு முன், வீ நீட் டு டேக் அன் இம்பார்டண்ட் டெஸிசன்.

அதான் நேத்தே அஷ்டலஷ்மி கோவில்ல எடுத்திட்டோமே. மனசு மாறிடுச்சா ?

ஹஹஹஹஹ என நரசிம்மமாகி, வில் டாக் டு யூ இன் டீடெய்ல்ஸ் திஸ் ஈவ்னிங் என்று போனை வைத்தாள்.

என்ன ஆச்சு இவளுக்கு என்று நினைத்து, பின் வேலையில் மூழ்கிப் போனான் கோவிந்த்.

மாலை மணி ஏழு. பரபரப்பான அண்ணா சாலை.

சாலை விட்டு சற்று உள் தள்ளி, சுற்றிலும் இடம் விட்டு அழகிய கட்டிடம். உள்ளே நுழைந்தால் அழகிய வழுவழுப்பான ஹால். காலணி கழட்டி தரையில் கால் வைத்தால், தலை உச்சி சிலிர்க்கும் குளிர். ஹாலில் நடுவே அழகிய அலங்காரங்களுடன லஷ்மி சிலை. மெல்லிய வெய்யில் கதிராய், கசியும் மஞ்சள் விளக்கொளி. எங்காவது ஒரு மரத்துண்டு ஒரு மூலையில் கிடந்தால் கூட, அதுவும் ஒரு கலைப் பொருளோ என எண்ண வைக்கும் அளவிற்கு, திரும்பிய இடமெல்லாம் அழகிய கலை வேலைப்பாடுகள்.

இங்க கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ் ஃபுட் தான். ஆனா இந்த ஹோட்டல் பற்றி நிறைய சிறப்புக்கள் சொல்லுவாங்க இன்டி. இங்க வேலை செய்றவங்க எல்லாம் வாலன்டியர்ஸ், பல பெரிய இடங்களில் வேலை பார்ப்பவர்கள். சமையல் கூட வீட்டு சமையல் போலத் தான். சமையலுக்கு என்று வேலையாள் எல்லாம் கிடையாது. நம்ம அம்மாக்கள், பாட்டிமாக்கள் மாதிரி நிறைய பேர் கை வண்ணம்.

முன்னெல்லாம் இது போல் செய்திகள் சொல்லும் போது ஆர்வமாய் கேட்ட இன்டி, ஏனோ இன்று தாமரை இலை நீராய் ஒட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். சுற்றிலும் கலை வேலைப் பாடுகள் பார்த்து, இந்நேரம் அத்தனை லவ்லி சொல்லியிருப்பவளின் அமைதி, என்னமோ நடக்கிறது, நடந்திருக்கிறது என கோவிந்துக்கு உணர்த்தியது.

இஸ் எனிதிங் ராங்க அட் யுஅர் என்ட் ?

ஆமா கோவிந்த், என்ன பண்ணலாம்னு ஒரே யோசனையா இருக்கு.

சம்திங் ரிலேட்டட் டு போத் ஆஃப் அஸ் ?

ஆமா.

டிட் யூ டோல்ட் யுஅர் மாம் ?

இல்ல.

தென் ?

வந்து, இன்னிக்கு லிட்டரலா என்னைப் பொண்ணு பார்க்காத குறை. அம்மாவோட ஃப்ரெண்ட் ஒருத்தங்க வீட்டுக்கே வந்திட்டாங்க. முன்னாலேயே இத பத்தி எதும் சொல்லலை அவங்க. அதனால அம்மா கூட ஒரு மினி ஆர்க்யூமென்ட்.

நம்ம காதலை சொல்லிட்டியா அம்மா கிட்ட ?

இல்ல ...

அதான் இவ்ள ஃப்ரீயா இருக்காங்களே. பின் ஏன் தயக்கம்.

வந்து ஃபார் சம் ரீசன்ஸ், அவங்க வேண்டாம் என்று சொல்லிட்டாங்கனா அவ்ளோ தான். இட் டேக் ஏஜஸ் டூ கன்வின்ஸ் ஹெர். ஐ கேன் சே இட்ஸ் இம்பாசிபில். சம் ஹௌ ஐம் லவ்விங் யூ டீப்லி டீப்லி கோவிந்த் சில நாள் தான் உன்ன மீட் பண்ணினதுனாலும் ஏதோ ஒரு யுகம் நாம சுத்திட்டு இருக்க மாதிரி ஒரு ஃபீலிங்க். அது கடைசி வரைக்குமா இருக்கணும். ஐ ஷுட் நாட் லூஸ் யூ கோவிந்த்.

எனக்கு ஏத்த ஒருவன் கிடைக்கணும் என நான் இதுவரைக்கும் நினைக்கல. சும்மா கூலா, ஜாலியா ஃப்ரெண்ட்ஷிப் அவ்ளோ தான். பட் உன்னப் பார்த்து பழகினதுல இருந்து ஒரு கணம் கூட உன்ன விட்டுப் பிரியாமல் இருக்கணும் என்று மனசு கிடந்து துடிக்கிறது. உன்னுடைய ஒவ்வொரு செயலும் அட்ராக்ட்க்டிங் மீ மோர் அன்ட் மோர். கூட்டமும், குப்பையுமா இருக்கற சென்னைய கூட அழகான கோணத்தில காட்டியிருக்க.

நான் சொல்ல நினைத்ததெல்லாம் நீ சொல்லுகிறாய். எனக்கும் முன்னெல்லாம் என்னது காதல், கத்தரிக்காய் என ஒதுங்கிருவேன். பட், உன்னப் பார்த்ததுக்கப்புறம் எவ்ரிதிங்க் ஹேட் சேஞ்ட்.

தப்பு பண்ணிட்டேன். முன்னமே உன்னை என் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கணும்.

ஓரமே இருந்த, இன்டி கோவிந்தின் மேசையில், பாதி காலியான கண்ணாடி டம்ளர்களில், கீற்று சிரிப்போடு, நீர் நிறப்பினார் பழுத்த மாது ஒருவர். வீட்டில ஏதும் ப்ரச்சனையாம்மா. இந்தக் காலத்து புள்ளைகளுக்கு சொல்லியா கொடுக்கணும். எல்லாம் நல்ல படியா நடக்கும் என்று ஆசி கூறுவது போல் சொல்லி நகர்ந்தார். அரையிருட்டில் அவ‌ர் முக‌ம் ச‌ரிவ‌ர‌த் தெரிய‌வில்லை.

இஸ் ஷி லிசனிங் டூ அஸ். என்னதிது அடுத்தவங்க ப்ரைவசில இன்டர்ஃபியர் பண்றது, என்று மனம் நினைத்தாலும், செவ்விதழ் சிரித்தாள் இன்டி.

நான் வேணா பேசட்டுமா உங்க அம்மா, அப்பா கிட்ட ? இல்ல எங்க அப்பா, அம்மா யாரையாவது பேசச் சொல்லட்டுமா ?

ஆமா, நீ ஊருக்குப் கெளம்பறதுக்குள்ள ஏதாவது செய் !

உருவமிலா ஒரு உருண்டை கோவிந்துக்குள் உருளத் தொடங்கியது. கூட்டம் வருவதும், போவதுமாக உணவகம் பிஸியாகவே இருந்தது, இவ்விருவரின் எண்ணங்களைப் போலவே.

சரி, நான் நாளைக்கு உங்க வீட்ல பேசறேன் என்று சொல்லி படியிறங்குகையில், இடப்புறம் தோள் தட்டியவனைப் பார்த்து, ஹே ராம் என்று ஆச்சரியித்தான் கோவிந்த்.


தொடரும் .....

Thursday, August 7, 2008

என்ன விலை அழகே - 12

என்ன‌ங்க‌ இப்ப‌டி சொல்றீங்க‌. பொத்தி பொத்தி வ‌ள‌ர்த்த ஒரே பொண்ணு. என்னதான் பால்ய சிநேகிதம்னாலும், எப்ப‌டிங்க‌ ச‌ட்டுனு கொடுத்திட முடியும். ஒரு எட‌த்துக்கு, ரெண்டு எடமா பார்த்தா, ஏதாவது ஒன்று ந‌ல்லா அமையும்னு தான். அவ மேல இருக்க கான்ஃபிடண்ட்ல என்னதான் சுதந்திரமா வளர்த்தாலும், எத்தனை நாள் தான் இப்படி இருக்கது. எப்ப அவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்றோமோ அப்ப தானே நமக்கு சுதந்திரம்.

நீ எது செய்தாலும் க‌ரெக்டா தான் இருக்கும், ஐ ஹேய்வ் ஃபுல் கான்ஃபிடன்ட் ஆன் யூ. சரி நான் கொஞ்சம் தோட்ட வேலை பார்க்கப் போறேன் என்று சொல்லி சென்று விட்டார் சுவாமிநாத‌ன்.

என்ன ட‌ல்லா இருக்கே ?! சாரி ஃபார் த‌ ஷார்ட் நோட்டீஸ்மா.

கொஞ்சம் முன்னால தான் வந்து சொல்ற. அதும் சேல வேற கட்டிவிட்டு, ஏதோ பொம்மை மாதிரி, இல்ல இல்ல, கொஞ்ச நேரத்தில ஒரு ஜோக்கர் மாதிரி ஆக்கிட்ட. எதுக்கு ஷார்ட் நோட்டீஸ்ல இப்படி பண்ற ? ஐம் நாட் எ கிட்.

முன்னாடியே சொல்லிருந்தா, நீ பாட்டுக்கு வெளில கெளம்பி போயிடறே. நேத்து பாரு மைத்திலி ரொம்ப கோபிச்சிக்கிட்டா. நாம வரமாட்டேன்கிறோம்னு.

என்னம்மி இப்படி எம்பாரஸ் பண்ண வச்சிட்டே. எனக்கு இதல்லாம் சுத்தமா பிடிக்கலை.

கோச்சுக்காதடா கண்ணு. இதெல்லாம் இங்க நடைமுறை.

இருக்கட்டும், பட் ஒய் ஃபார் மீ ?

அவங்க வந்ததே உன்னைப் பார்க்க தான்.

வாட் டூ யூ மீன் ?

...

இதெல்லாம் ஏன் முன்னாடியே சொல்லலை. அப்ப ஏதோ ஒரு ப்ளான்ல தான் இந்த முறை என்னை இங்க வரவழைத்திருக்கிறீர்கள். யு அன்ட் டாட் ஹெய்ட் சீட்டட் மீ. யூ லையர்ஸ். எல்லா செய்திகளையும், நான் மட்டும் தெளிந்த நீரோடையில் தெரியும் சிறு துகள்கள் மாதிரி எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்றேன். ஆனா, நீங்க அப்படி செய்ய மாட்டீங்க‌. ஐ ஹேய்ட் யூ, ஐ ஹேய்ட் யுஅர் ஹஸ்பண்ட், ஐ ஹேய்ட் எவ்ரிதிங் ....

என்ன தான் லண்டன், அமெரிக்கா என்று போனாலும் கல்யாணத்துக்கு இங்க தான வரணும். எங்க தலைமுறையிலும் தொடரும் இந்த பந்தத்தை, நாங்களும் தொடரணும் என்று பார்க்கிறோம். எங்க பிள்ளைகளும் அதையே செய்யணும் என எதிர் பார்க்கிறோம்.

கூல், கூல் டௌன் என்று கோவிந்தின் குரல் ஒலித்தது. ஹேன்டில் த சிச்சுவேசன் என மனம் சொன்னது. இந்த நேரத்தில் கோவிந்த் பற்றி சொல்லலாமா ? சொன்னா அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவா ?

இல்லம்மா, உனக்கும் வயசாயிட்டுதில்ல. இந்த வயதில் கல்யாணம் பண்ணிக்காம அப்புறம் எப்ப பண்ணிப்ப. தெரிஞ்ச இடத்தில மாப்பிள்ளை எடுக்கறது தான் எல்லாத்துக்கும் நல்லது. அதும் நல்ல நட்புள்ள இடங்களில் மாப்பிள்ளை கிடைக்கறதுக்கே கொடுத்து வச்சிருக்கணும்.

சரி, எல்லாத்துக்கும் ஃபுல் ஃப்ரீடம் கொடுத்த நீங்க, ஏன் இந்த விஷயத்தில் என் போக்குக்கு விடல ?! அதுமில்லாம எனக்குப் பிடிக்குமா என்றெல்லாம் கேக்காம ?!!!

ஒன்னும் அவசரமில்லை. இப்போதைக்கு ஒரு சின்ன என்கேஜ்மென்ட் வச்சிப்போம். அப்புறம் நீ எப்ப சொல்றியோ அப்ப கல்யாணத்த வச்சிக்கலாம். தென் இஃப் யு வான்ட், யு கேன் ஸ்டே ஹியர், இல்லேன்னா மாப்பிள்ளைய கூட்டிட்டு லண்டன் வந்திரு.

நான் கேட்டதுக்கு பதில் சொல்லலை நீ இன்னும். எனக்கு இது சுத்தமா பிடிக்கலை. என் இஷ்டத்திற்கு இதிலும் விட்டுடுங்க. டோன்ட் இன்டர்ஃபியர்.

ஐம் சாரி இஃப் ஐ ஹர்ட் யுஅர் ஃபீலிங்க்ஸ் இன்டி. யு ஷுட் அன்டர்ஸ்டான்ட். இது சும்மா சுத்தினோமா, ஷாப்பிங் பண்ணினோமான்ற அளவுக்கு ஈஸி கிடையாதும்மா. அதனால‌ ஃபார் மெனி ரீசன்ஸ் நாங்க எடுக்கற முடிவு தான் உனக்கு பெட்டரா இருக்கும். சில‌ வார‌ங்க‌ள் இங்க‌ தான் இருக்க‌ப் போறோம். டேக் யுஅர் ஓன் டைம். எப்ப‌ க‌ம்ஃப‌ர்ட‌பிலா ஃபீல் ப‌ண்றியோ, அப்ப‌ இது ப‌த்தி கன்டினியூ பண்ணலாம்.

மிகுந்த யோசனைகளுடன் தன் ரூமிற்கு சென்ற இன்டி, கோவிந்தை செல்லில் அழைத்தாள்.


தொடரும் .....

Wednesday, August 6, 2008

என்ன விலை அழகே - 11

வா கமலா, பல வருடங்கள் முன்னாடி பார்த்தது, அப்படியே இருக்கியே. வாங்க, வாங்க !!! என்னங்ககககக, அவங்க வந்தாச்சு கீழ வர்றீங்களா ?

இதோ வந்திட்டேம்மா என்று மனைவியின் அன்பான அழைப்பிற்கு பதில் சொல்லி, வாங்க, வாங்க, எப்படி இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டே மாடிப் படிகளில் இறங்கி வந்தார் சுவாமிநாதன்.

ஞாபகம் இருக்கா, உங்க கிட்ட நிறைய சொல்லியிருக்கேன் இவங்கள பத்தி. இவ தான் கமலா. பள்ளி நாட்கள் முழுதும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்காத கூத்தில்லை. சரி சரி, அதெல்லாம் அப்புறம் பொறுமையா பேசலாம். இவர் இவளோட ஹஸ்பண்ட் நாகராஜன். ரெண்டு பேரும் கல்லூரிப் பேராசிரியர்கள். இவங்களுக்கு ரெண்டு பொண்ணு, ஒரு பையன். பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகி, பையன் மட்டும் வெய்டிங் ஃபார் த வெட்டிங். இப்ப அமெரிக்கால வாசம்.

தெரியும்மா, போன முறை வந்தப்ப கூட இவங்கள மீட் பண்ணிருக்கோமே. இவங்களப் பத்தி சமீப காலமா நீ பேசாத நாள் இல்லியே. சோஃபாவில் இருந்து சற்று குனிந்து, இது பத்தாவதோ, பதினொன்னாவதோ உங்களப் பத்தி சொல்றது என்றார். ஒரு மரியாதைக்காக எண்ணிக்கைய கொறச்சு சொல்றேன். அது போகும் நூறு இருநூறு முறை.

ஆமா, உம் பொண்ணு எங்க ராஜி என்றார் கமலா.

மேல இருக்கா. இரு வரச் சொல்றேன் என்று எழுந்து மேலே சென்றார் ராஜி.

கீழ இருந்தே அப்பாவை அழைத்த மாதிரி அழைக்காமல் ஏன் மேலே போறா, என கமலாவும், நாகராஜனும் ஆச்சரியமாய் ஒருவரை ஒருவர் பார்க்க, வந்து, பாருங்க உங்கள உக்கார்த்தி வச்சிட்டு ஒன்னுமே தரலை பாருங்க. எனி ஹாட் ஆர் கோல்ட் ட்ரிங்க்ஸ் ? என்றார் சுவாமிநாதன்.

சிறிது நேரம் கழித்து, இதோ ரெடியாயிட்டு இருக்கா என முந்தானை முழங்கை தாங்க கீழ இறங்கிய ராஜேஸ்வரி, பார்த்தியா நானும் மறந்துட்டேன் பாரு. என்ன சாப்பிடறீங்க ?

சாப்பிடறது இருக்கட்டும், மொதல்ல பொண்ணப் பார்த்துக்கறோம் என்றனர் இருவரும்.

லஷ்மி கடாட்சமா இருக்கா, என் கண்ணே பட்டுடும் என தலையில் விரல்கள் மடக்கி, சொடக்கொடித்தார் கமலா.

இத்தனைக்கும் இன்டியின் உடையலங்காரம் காஞ்சிப் பட்டோ, தக தகக்கும் தங்க நகையோ அல்ல. பச்சை பார்டரில் மாம்பழக் கலர் காட்டன் சேலையும், பார்டருக்கேற்ற கலரில் ஜாக்கெட்டும், நேர் வகிடெடுத்த நெற்றியில் ஆச்சரியக் குறிப்புள்ளி போல சிறு குங்குமப் பொட்டும், கழுத்தை விட்டு சற்று கீழிறங்கி, வெண் கடுகு போல் முத்து மாலையும், காதில் ஆடும் சிறு கம்மலும், அழகாய் பராமரிக்கப் பட்ட விரல் நகங்களும் ....

"தேவதை போலொரு பெண்ணிங்கு வந்ததை எண்ணி"

என்று எல்லோருக்கும் பாடத் தோன்றும் அளவிற்கு இருந்தாள் இன்டி.

சின்னப் புள்ளையில பார்த்தது, என்னமா வளர்ந்திருக்கு உம் பொண்ணு. வாம்மா, இப்படி உட்கார் என்றார் கமலா.

முதல் முறையாய் ஒரு அன் கம்ஃபர்டபில் நிலையை உணர்ந்தாள் இன்டி. என்னம்மா இதெல்லாம் என்பது போல் தாயைப் பார்த்தாள். கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ என்பது போல் முகத்தில் பதிலளித்தார்.

அப்புறம், என்ன ரெண்டு பேரும் பேசவே மாட்டேங்கறீங்க என்று நிசப்தத்தை உடைத்தார் சுவாமிநாதன்.

மிஸ்டர் சுவாமிநாதன், நீங்க டாக்டரா இருக்கீங்கன்றது தெரியும். உங்க பொண்ணு டாக்டருக்கு படிக்கறாங்கன்றதும் தெரியும். அவங்களுக்கு ஒரு டாக்டர் மாப்பிள்ளை பார்க்கலாமில்லையா. அவளுக்கும் கல்யாண வயசு மாதிரி தான் இருக்கு என்றார் நாகராஜன்.

என்ன ஒரே எம்பாரஸ்ஸிங்கா இருக்கு, வாட் திஸ் நான்சென்ஸ் இஸ் என்பது போல் முகம் மாறினாலும் வெளிக்காட்டாமல், எக்ஸ்க்யூஸ் மீ, நீங்க பேசிட்டு இருங்க, என்று சொல்லி மாடியேறி மறைந்தாள் இன்டி.

ஷி இஸ் நாட் ஃபீலிங் வெல். வாங்க நம்ம சாப்பிடலாம் என எழுந்தார் ராஜேஸ்வரி. எத்தனை நாட்கள் இங்க இருப்பீங்க, என்னவெல்லாம் பிடிக்கும், மகன், மகள், மறுமகள், பேரன், பேத்தி என பெரியவர்களுக்கே உரிய பேச்சுக்களுடன் லஞ்ச் முடிந்தது இன்டியின் வீட்டில் செவ்வாய் மதியம்.

சரி நாங்க கெளம்பறோம் ராஜி. சீனுவ அமெரிக்கால இருந்து வரச் சொல்லியிருக்கோம். வியாழன் நைட் அல்லது வெள்ளி காலை வந்திருவான். வந்தப்புறம் ஒரு நாள் திரும்ப மீட் பண்ணலாம்.

அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து ...

ஏம்மா, மைத்திலி மகன் ராமுக்கு வேற சொல்லிவிட்டிருக்கே. இப்ப கமலா மகன் சீனு ... வாட் இஸ் தேர் இன் யுஅர் மைன்ட் நௌ ? என்று ஆச்சரியத்தோடு கேட்டார் சுவாமிநாதன்.


தொடரும் .....

Tuesday, August 5, 2008

என்ன விலை அழகே - 10

ஏன் ஒரு மாதிரியா இருக்கே என்று மூச்சிறைக்க‌ வ‌ந்த‌ கோவிந்த் கேட்டான்.

ஒன்னும் இல்ல, உன்ன‌ பார்த்துட்டே வ‌ந்து ஒரு அம்மா மேல‌ தெரியாம‌ இடிச்சிட்டேன், ந‌ல்ல‌ வேளை ஒன்றும் ஆக‌லை. நீ எங்கே திடுதிப்புனு ஓடின‌ ?

சொல்றேன். சொல்றேன். மொத‌ல்ல வா சாமி கும்பிட்டு வ‌ர‌லாம்.

தங்க விக்ரகமாய் அஷ்டலஷ்மிகளும் ஜொலிக்க, அவர்களோடு நவலஷ்மியாய் இன்டி ஜொலித்தாள் கோவிந்துக்கு.

சிறிது கோவிலுள் சுற்றிவிட்டு, உக்காரு கொஞ்சம். அப்புறம் போகலாம் என்றான்.

ஒரு ஓரமே அமர்ந்தனர்.

கெளம்பறதுக்கு முன், நிமிர்ந்தமர்ந்து, ஒரு ரெண்டு செகண்ட் கண்மூடி தியானித்துவிட்டுப் போலாம் என்றான்.

ஏன் ? எதும் காரணம் இருக்கா அப்படி செய்றதுக்கு என்றாள் இன்டி.

இல்ல, கண்களைத் திறந்து லக்ஷ்மிகளைப் பார்த்தோம் இதுவரை. கண்மூடி அந்த பிம்பங்கள் காணுகையில் ஒரு பரவசம் வரும். யூ ஷுட் ஃபீல் இட் இன்டி.

ச‌ரியென க‌ண்மூடிய‌வ‌ளின் விரல் பிரித்து, முத்துப் போல் பெட்டியை உள் வைத்து, சிப்பி போல் மூடினான்.

ஒரு வித‌ ஆன‌ந்த‌ம், ஆச்ச‌ரிய‌ம், இனிமையான‌ ம‌கிழ்வு எல்லாம் க‌ல‌ந்து இன்டியினுள் தாண்ட‌வ‌ம் ஆடினாலும், ஐ டோன்ட் நோ ஹ‌வு டு ரியாக்ட் ஃபார் திஸ் கோவிந்த். எதுக்கு இவ்ளோ எக்ஸ்பென்சிவ் கிஃப்ட் ? நீ ரொம்ப‌ செல‌வு ப‌ண்றே என்றாள்.

என்ன‌ விலை அழ‌கே
உன்னை விலைக்கு வாங்க‌ வருவேன்
என்ன‌ விலை என்றாலும் த‌ருவேன்
உன் அழ‌கைக் க‌ண்டு விய‌ந்து போகிறேன் ...

என்ன‌மா க‌விஞ‌ன் அனுப‌வித்து எழுதியிருக்கிறான். என‌க்காவே எழுதியிருப்பானோ ? இவ‌ள் அழ‌கென்றாலும், அதைவிட ஒரு சக்தி அவளை நோக்கி இழுக்கிறதே ?!!!

ஹேய் கோவிந்த். வாட் ஹேப்ப‌ன்ட் ... கொய‌ட் ஆகிட்டே

கிஃப்ட் பிடிச்சிருக்கா இன்டி ?

பிடிச்சிருக்கு.

என்னை ?

ஐ ஹேய்வ் டோல்ட் யூ ஃப்யூ டைம்ஸ் ரைட். பிடிக்காமலா உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேன்.

நீ இத‌ போட்டுக்க‌ணும் என்கிற‌தில்லை. ப‌ட் திருப்பித் த‌ர‌ மாதிரி எண்ண‌ம் ம‌ட்டும் வைத்துக் கொள்ளாதே.

அம்மா கேட்டா ?

அதான் போட்டுக்க‌ வேணாம் என்றேனே. பின்ன‌ அவ‌ங்க‌ளுக்கு எப்ப‌டித் தெரியும் ?!

நம்ம என்ன குழந்தையா. சாரி கோவிந்த், ஐம் மோர் ட்ரான்ஸ்ப‌ர‌ன்ட் டு மை பேர‌ண்ட்ஸ் தென் யூ. இதுவ‌ரைக்கும் ஐ ஹேய் க‌ன்வெய்ட் எவ்ரிதிங் டூ தெம். நீயே சில‌ நேர‌ங்க‌ளில் நோட்டீஸ் ப‌ண்ணியிருப்ப‌ !!!

ச‌ரி, நான் கொடுத்தேன் என்று சொல்லு.

சொல்ல‌லாம். ஆனா அம்மா கொஞ்ச‌ம் அந்த‌க் கால‌த்து ஆளுங்க‌ மாதிரி. க‌ல்ச்ச‌ர், டிசிப்ளின் இதெல்லாம் ரொம்ப‌ முக்கிய‌ம். நகை எல்லாம் க‌ட்டிக்க‌ப் போற‌வ‌ன் தான் வாங்கித் த‌ர‌ணும்னு பிடிவாத‌ம் செய்வாங்க‌.

உங்க‌ அப்பா எப்ப‌டி ?

அப்பா ரொம்ப‌ ந‌ல்லவ‌ர். அம்மா சொல் த‌ட்ட‌ மாட்டார்.

ஏனோ தெரிய‌ல‌, இவ்ளோ ஓப‌னா இருக்க‌து, எதையுமே தீர்க்க‌மா பேச‌ற‌து, எப்பவுமே ஒரு ஷார்ப்ன‌ஸ் உன் க‌ண்க‌ளில். இதெல்லாம் தான் உன்னை ம‌ற்ற‌வ‌ர்களில் இருந்து வேறுப‌டுத்திக் காட்டுதோ. ம‌ன‌ம் கேள்விக‌ளில் ந‌னைந்து மித‌ந்த‌து.

ச‌ரி, அம்மா கிட்ட‌ பேசிப் பாரு ...

எத‌ப் ப‌த்தி ?

என்னைப் ப‌ற்றி ...

உன்னைப் ப‌ற்றி அவ‌ங்க‌ளுக்கு என்ன‌ தெரிய‌ணும் ?

ம‌ண‌ல்ல‌ உக்கார்ந்திருக்கும் போது கூட‌ சொன்னியே அதைப் ப‌ற்றி ...

என்ன‌ சொன்னேன் ?! அந்த‌ அம்மாவ‌ இடித்த‌தில் இருந்து, கொஞ்ச‌ம் முன் ந‌ட‌ந்த‌தெல்லாம் ம‌ற‌ந்து போச்சே என்றாள் த‌லை திருப்பாமல், விழி திருப்பி, ஓர‌க் க‌ண்ணில் பார்த்துக் கொண்டே.

அடிக் க‌ள்ளி, என்ன‌தான் ல‌ண்ட‌ன்னாலும், பொண்ணுங்க‌ பொண்ணுங்க‌ தான். ஹிம்ம்ம்ம்.

ஹேய் டோன் பீ கொய‌ட் அகெய்ன். வந்து ஃபார் ச‌ம் ரீச‌ன்ஸ், ஐ ல‌வ் யூ கோவிந்த்.

த‌ட‌ த‌ட‌வென‌ பால‌த்தின் மேலோடும் ர‌யில்வ‌ண்டியாய் ஆன‌து கோவிந்தின் ம‌ன‌து.


தொடரும் .....

Monday, August 4, 2008

என்ன‌ விலை அழ‌கே - 9

வித்யா வீட்டில் அவ‌ளை இற‌க்கி விட்டு ப‌ன‌க‌ல் பார்க் வ‌ழியே வ‌ந்த‌ கோவிந்த். ஒரு பூக்க‌டையில் நிறுத்தினான். சில‌ முழ‌ங்க‌ள் ம‌ல்லி வாங்கிக் கொண்டான்.

ப்ரின்ஸ் ஜ்வெல்லர்ஸ் சென்று, ஒரு அழ‌கிய‌ ஒற்றைக் க‌ல் வைர‌ மோதிர‌ம் வாங்கினான். மோதிரத்தை எடுத்து மெதுவே இருவிரல்களில் திரித்துப் பார்க்க, மஞ்சள் வானில் சிறு மின்னல் கீற்றுக்களாய் பளீரிட்டது.

யாருக்கும் கிஃப்டா சார். வீ கேன் டூ எ நைஸ் கிஃப்ட் ராப்பிங் ஃபார் ஃப்ரீ, சேல்ஸ்வும‌ன் சொல்லிக் கொண்டிருந்தார்.

இல்ல‌ நார்ம‌ல் பேக்கிங் போதும். அதான் அட‌க்கமா, ச‌ர்ப்ரைஸா கொடுக்க‌ ந‌ல்லா இருக்கும்.

கோவிந்த் அட்டை தேய்த்துக் கையெழுத்திட, மெல்லிய‌ சிரிப்புட‌ன் 'ஆல் தெ பெஸ்ட்' சொல்லிக் பேக்கிங்க்கை கொடுத்தாள்.

என்ன கோவிந்த், அரை மணியில வர்றேனு சொல்லிட்டு இவ்ளோ லேட்டு எனச் செல்லமாய்க் கோபித்தாள் இன்டி. அம்மா வேற‌ இன்னிக்கு அவ‌ங்க‌ ஃப்ரெண்டு ஒருத்த‌ர் வீட்டுக்குப் போலாம்னாங்க‌. நான் வ‌ர‌லைனு சொன்னதற்கு, என்ன‌வோ தெரிய‌ல‌ எப்ப‌வும் இல்லாம் இன்னிக்கு ஃபோர்ஸ் ப‌ண்ண‌ற‌ அள‌வுக்கு ஆகிட்டாங்க.

ஆர்வம் இல்லாமல் கேட்டுக் கொண்டு, ச‌ரி வா போலாம் என்றான் கோவிந்த்.

கோவிலை அடைந்த போது வானம் வெளுப்பாகவே இருந்தது. வ‌ண்டியை பார்க் செய்து, இன்னும் வெளிச்ச‌மா தான் இருக்கு, கொஞ்ச‌ நேர‌ம் பீச்சில‌ இருந்திட்டு அப்புற‌ம் கோவிலுக்குப் போலாம் என்றான்.

ஓ.எஸ். எனக்கும் தண்ணிரீல் நடக்க ஆசை என்றாள் சிறு குழந்தையாய்.

கணுக்கால் அலை தொட, கால்கள் அன்ன நடை போட, உள்ள‌மெங்கும் ஆனந்தம் ப‌ர‌வ‌ச‌த் தாண்ட‌வ‌ம் ஆட‌, இன்டி ஐம் கோயிங்க் டூ கிவ் யூ எ ச‌ர்ப்ரைஸ் கிஃப்ட். வேண்டாம் என்று சொல்லாம‌ல் வாங்கிக்க‌ணும் என்றான் கோவிந்த்.

எதுக்கு கோவிந்த் இதெல்லாம். ஏற்க‌ன‌வே எக்ஸ்பென்ஸிவான ஐஃபோன். அம்மா திட்ட‌ற‌ அள‌விற்கு அட்வைஸ் ஆர‌ம்பிச்சிட்டாங்க‌. ஊருக்குப் போகும் போது திருப்பிக் கொடுத்திட‌றேனு சொன்ன‌ப்புற‌ம் தான் விட்டாங்க.

என்னது திருப்பித் தருகிறாளா ? இன்று இவ‌ள் ம‌ன‌தை எப்ப‌டியாவ‌து அறிய‌ வேண்டும். ஏன் இவள் இந்த‌ அள‌விற்கு ஈர்க்கிறாள் என்னை. ந‌ண்ப‌ர்க‌ள் சொல்வ‌து போல் ப‌ழைய‌ மாதிரியே இருந்திருக்க‌ணுமோ ?

கூட்டம் குறைய ஆரம்பித்தது. இருட்ட ஆர‌ம்பித்து விட்ட‌து, வா கோவிலுக்குப் போலாம் என‌ ம‌ண‌ல் த‌ட்டி எழுந்தான்.

என‌க்கு ஸ்லோலி இந்த‌ க்ரௌடட் சென்னை பிடிக்க‌ ஆர‌ம்பிக்குது கோவிந்த்.

ல‌வ்லி, எத‌னால‌ இந்த‌ மாற்ற‌ம் ?

தெரிய‌ல‌. எத்தனை கூட்டத்திலயும் அத்தனை பாதுகாப்பாய் அர‌ணென‌த் தாங்குவ‌து போல‌ நீ இருப்ப‌தாய் ஒரு உள்ளுண‌ர்வு. கூப்பிடும் முன்னால வர, எங்க போகனும் என்றாலும் சரிங்கற. உன்னைப் போல் ஒருவன் க‌டைசி வ‌ரையில் என் வாழ்வில் வரணும். வ‌ருவாயா கோவிந்த் ?!

செவ்வித‌ழ் தேன் பொழிய‌, ரீங்க‌ரிக்கும் வ‌ண்டானான் கோவிந்த். கோவில் ப‌டி மிதிக்கும் வேளையில், ஜீன்ஸ் பாக்கெட்டில் கைவைத்த‌வ‌ன், சிறிது ப‌த‌ற்றத்துட‌ன், அனைத்து பாக்கெட்டுக‌ளையும் தேடி, செய‌லிழ‌ந்தான் சில‌ நொடிக‌ள்.

கோவிலுள் அதிகக் கூட்டமில்லை.

இன்டி, நீ உள்ள‌ போ. யாருகிட்ட‌யும் ரொம்ப‌ பேசாதே. இதோ வ‌ந்திட‌றேன் என்று சிட்டாய்ப் ப‌ற‌ந்தான்.

ஓ.கே. என‌ வில் போல் புருவ‌ங்கள் விரிய‌, ஆச்ச‌ரியமாய், ஓடும் கோவிந்தைப் பார்த்து உள் சென்ற இன்டி, எதேச்சையாக‌ ஒரு வ‌ய‌தான‌ அம்மாவை இடிக்க‌, இருவ‌ரும் ஒரு க‌ண‌ம் த‌ள்ளாடி, வ‌ய‌தான‌வ‌ர் கீழ‌ விழாத‌ குறை.

ஏம்மா பார்த்து வ‌ர்ற‌தில்லை என்றார் வ‌ய‌தான‌வ‌ர் எரிச்ச‌லுட‌ன்.

ஐம் சாரி. ஐ வாஸ் லுக்கிங்க் அட், அதாவ‌து வேணும் என்றே இல்ல‌, ம‌ன்னிச்சிடுங்க‌. உங்க‌ளுக்கு ஒன்னும் ஆக‌லையே.

ஒன்னும் இல்ல‌, இல்ல‌, கொஞ்ச‌ம் ப‌ட‌ப‌ட‌ப்பா இருக்கு அவ்வளவு தான், இப்ப‌டி உக்காரு சித்த.

ரொம்ப அழகா இருக்கியே, பசங்க இல்ல உன்னைப் பார்த்து செயலிழக்கணும், நீ யாரப் பார்த்துட்டு வந்து என் மேல மோதின‌, சென்னை தானா நீ.

...

எவ்வ‌ள‌வு நாட்க‌ள் இங்க‌

...

அப்பா என்ன‌ செய்ய‌றார்

...

அம்மா

....

ஏம்மா, ஒரு பொண்ண‌ விட‌ற‌தில்லையா. நான் தான் க‌ல்யாண‌த்துக்கு ச‌ரினுட்டேனே. ஏன் சித்த‌ம் க‌ல‌ங்கின‌ மாதிரி ஆயிட்டே. பாவ‌ம் அந்த‌ப் பொண்ணு, நீ கேக்க‌ கேக்க ப‌தில் வேற‌ சொல்லிகிட்டு இருக்கு, எந்திரிமா என்று தாங்க‌லாய் தூக்கினான், சற்று தூரத்தில் இருந்து வந்த‌ ராம் அம்மாவை. இன்டியிட‌ம், ஐம் சாரி, நீங்க‌ போங்க‌, அம்மா எப்ப‌வும் இப்ப‌டித் தான் என்று அனுப்பி வைத்தான்.

இன்டி ச‌ற்று ந‌க‌ர்ந்த‌வுட‌ன், ராம் காதில் 'டேய் இதான் பொண்ணு உன‌க்கு'. என் ஃப்ரெண்ட் சொன்னேனே, ராஜேஸ்வ‌ரி ல‌ண்ட‌ல‌ இருக்கானுட்டு. அவ‌ள் பிடிவாத‌மா இருக்கா, என்ன‌ தான் பொண்ண‌ ல‌ண்ட‌ல‌ வ‌ள‌ர்த்தாலும் நம்ம‌ நாட்டு க‌லாச்சார‌ப் ப‌டி தான் க‌ல்யாண‌மும் ப‌ண்ண‌னும்ட்டு. அதுமில்லாம‌ நாமெல்லாம் தூர‌த்து சொந்த‌ம் வேற‌. இன்னிக்கு ந‌ம்ம‌ வீட்டுக்குத் தான் வ‌ர‌தா சொன்னா. ஆனா இவ‌ வ‌ர‌மாட்டேன்னு சொல்லிட்டாளாம். கோவிலுக்கு போறதா ம‌க‌ள் சொன்ன‌தா சொன்னா. அதான் நான் வ‌ந்தேன். ந‌ம‌க்கும் வாக் போன‌ மாதிரி இருக்கும், பொண்ணையும் பார்த்த‌ மாதிரி இருக்கும், சாமியையும் கும்பிட்ட‌ மாதிரி இருக்கும்.

நடந்த இடமெல்லாம் ஓடித் தேடி, கடைசியில் சுவாமிக்கு வாங்கின மல்லிப்பூ ஞாபகம் வர, அதை வண்டியில் இருந்து எடுத்தான் கோவிந்த். அதன் கீழே அழகிய பழுப்பு மஞ்சள் அட்டைப் பெட்டி, என்னை எடுத்து அழகிடம் சேர் என்று கெஞ்சியது.

தொட‌ரும் .....

Sunday, August 3, 2008

என்ன விலை அழகே - 8

கோவிந்த்ங்கறது நீ தானடா ... மறுமுனையில் அதட்டல் குரல்

மிகுந்த யோசிப்புடம். ஆமா நீங்க யாரு என்றான்

நான் யாருன்றதெல்லாம் இருக்கட்டும். ஒரு பொண்ணோட ரொம்ப இன்டிமேட்டா சுத்திகிட்டு இருக்கியாமே, அவ என் சொந்தம், சொத்து.

அதுக்கென்ன இப்போ ?

அவள விட்டுரு. அவ என்னோட ஆளு.

முடிஞ்சா அவளப் பாத்து பேசு, வெளில கூட்டிட்டுப் போ. என்கிட்ட ஏன் கேக்கறே ?

நீ தான் ச‌ரியான‌ ஆளு. அவ‌ எங்க‌ இருக்கா, எப்ப‌டி கான்டாக்ட் ப‌ண்ற‌து இதெல்லாம் நீ தான் சொல்ல‌ணும். ஏன்னா நான் அந்தப் பொண்ண‌ பார்த்ததே இல்ல‌ !!!

எவனோ விளையாடறான் என்ற யோசிப்புக்கிடையில், இந்த‌க் குர‌ல‌ எங்கேயோ கேட்ட‌ மாதிரி இருக்கே ... டேய் ராம், நீ காஷ்மீர்ல தான இருக்க, லோக்கல் நம்பர் வருது ?

ஆமா, சென்னை வந்திருக்கேன் இப்ப. ஒரு ஷார்ட் அன்ட் ஸ்வீட் ட்ரிப் இது. ப‌ட் பொண்ணு கொடுக்கப் போறவன் தான் பாவ‌ம். நானோ மிலிட்டரில இருக்கேன். வேண்டாம் என்றாலும் விட‌ மாட்டேங்க‌றாங்க‌. வ‌ய‌சாயிட்டே போகுதுனு அம்மா பொல‌ம்பாத‌ நாள் கிடையாது. அதான் க‌ல்யாண‌த்துக்கு ச‌ரினு ச‌ம்ம‌திச்சிட்டேன். ச‌ரி உன் விச‌ய‌த்த‌ ஜொல்லுட‌ ஜொல்லு ம‌ன்னா.

உன் கிட்ட அதுக்குள்ள ரெண்டு லூசுங்களும் வத்தி வச்சிட்டானுங்களா. கருமமா குரல மாத்தி பேசி, ஒரு செக‌ண்ட் என்னை நிலைகுலைய‌ வ‌ச்சிட்டியேடா பாவி .... ச‌ரி, ச‌ரி, நான் ஒரு முக்கிய‌மான‌ காலுக்கு வெய்ட் ப‌ண்ணிட்டு இருக்கேன். அப்புற‌ம் உன் கிட்ட‌ பேச‌றேன்.

ராமின் ப‌திலுக்குக் காத்திராம‌ல் செல்லை மூடினான் கோவிந்த். அடுத்த‌ நொடியே இன்டியை அழைத்தான். கால் ப‌ண்றேனு சொன்னியே ?

ஐ வாஸ் சோ ட‌ய‌ர்ட் கோவிந்த். ஐ ஹேய்வ் டுக் எ கம்ப்ளீட் ரெஸ்ட் டுடே.

சரி, த‌ட்ஸ் குட். ரெடியாகறயா, ஐ வில் பிக் யூ அப் அன்ட் தென் அஷ்ட‌ல‌ஷ்மி கோவிலுக்குப் போலாம்.

அது எங்க‌ இருக்கு ?

உங்க‌ வீட்டுல‌ இருந்து கொஞ்ச‌ தூர‌ம் தான். பெஸன்ட் நகர் பீச்ல இருக்கு.

லவ்லி, இதும் மஹாபலிபுரம் மாதிரியா ?

ம். ஆமா. இல்ல.

வாட் ஆர் யு ட்ரையிங் டு சே ? ஆமாவா, இல்லையா ?

அதாவது மஹாபலிபுரம் மாதிரி பீச் இருக்கு, கோவிலும் இருக்கு.

பின்ன என்ன இல்லை ?

ப்ரைவசி இல்லை. கொஞ்சம் க்ரௌடட் வேற‌. அதான்.

அப்ப அங்க‌ வேணாம். வேற‌ எங்காவ‌து போக‌லாம்.

ச‌ரி, உன‌க்கு எந்த‌ மாதிரி இட‌ம் போக‌ப் பிடிக்கும் ?

கொஞ்ச‌ம் ஷாப்பிங் ப‌ண்ண‌லாமா ?

ஷாப்பிங்க் எல்லாம் இத‌ விட‌க் கூட்ட‌மா இருக்குமே.

என்ன‌து எங்க‌ போனாலும் கூட்ட‌மா இருக்கு, இருக்கும் என்றே சொல்ற‌. ச‌ரி இப்ப‌வே டைம் வேற ஆகிட்டிருக்கு, ப‌க்க‌த்தில‌ சொல்ற‌ கோவிலுக்கே போலாம். உள்ளங்கை உண்டிய‌லின் சில்ல‌ரைக‌ளாய் சிணுங்கினாள் இன்டி.

மேச‌யிலிருந்து கிள‌ம்ப‌ நினைத்த‌வ‌ன் மேசைத் தொலைபேசி அடிக்க‌ எடுத்தான். கோவிந்த், இன்னும் கிள‌ம்ப‌வில்லை அல்ல‌வா, ஒரு உத‌வி ப‌ண்ணேன். என் வ‌ண்டி ப்ர‌ச‌னை ப‌ண்ணுது. செக்யூரிட்டிகிட்ட‌ சொல்லிட்டேன். மெகானிக் வ‌ந்து ச‌ரி பார்த்துருவான். இன்னிக்கு வீட்டில‌ என்னை ட்ராப் ப‌ண்ணிடேன் என்றாள் வித்யா.

இல்ல வித்யா நான் அவசரமா கெளம்பறேன். வேற யாராவது கேட்டுப் பாரு.

என்னடா கோவிந்த் நாங்கள்லாம் கூப்பிட்டா வருவியா ? இதே மாலதி கூப்பிட்டா மட்டும் ஓடி வருவ. இல்ல யாராவது வெளிநாட்டில இருந்து வந்தா படத்துக்கு கூட்டிப் போவ. ஹிம்ம்ம்ம்ம்ம்

என்னது வண்டியில் ஆரம்பித்து, சம்பந்தமே இல்லாமல் எங்கே எங்கேயோ போறா, சரியான மல்டி மைண்டட். சரி சரி வா என்று அரை மனதாய் சம்மதித்தான்.

வழி நெடுக வித்யாவின் சொற்கள் முள்ளாய் தைத்தது. அவள் வீட்டை நெருங்கும்போது, ஏன்டா இப்படி ஆகிட்ட. லிமிட்டோட சும்மா ஜாலியா சுத்தினோமா, ஃப்ரெண்ட்ஷிப்பா இருந்தோமா, நேரம் வரும்போது கல்யாணமாகி செட்டிலானோமா என்று இருக்கறத விட்டுட்டு.

வண்டியை நிறுத்தி, வித்யா கீழ எறங்கு. சாரி அன்ட் தாங்க்ஸ் ஃபார் யுவர் ஃப்ரீ அட்வைஸ், என்று சொல்லி அடையாறு நோக்கிப் பறந்தான்.

தொடரும் .....