வேல் காக்கும் வெண் சோலை
பாற்கடலில் விழுந்த
பட படக்கும் வண்டே
வெண்பூவை மொய்த்து
சுற்றி வரும் வண்டே
விரியும் சிப்பிக்குள்
உருளும் கருமுத்து வண்டே
வேல் காக்கும் வெண்சோலையில்
சிறைப்பட்ட சிறு வண்டே
வெண்பனியில் ஓடியாடி
விளையாடும் கரு வண்டே
கற்பானையில் கதகதப்பாய்
நீந்தும் கரு வண்டே
அப்பார்வையிலே மயங்கி
பூ மொய்க்கும் வண்டை
என்றென்றும் எண்ணி
என் மனம் மொய்க்கலானதே !
10 மறுமொழி(கள்):
போன பதிவிலே "விழியில் விழுந்து" பாடலை நினைவு படுத்தினாலும் படுத்தினேன், படித்து விட்டீர்கள் அருமையான கவிதை. கண்ணின் கருவிழியைக் கரு வண்டாக்கி..வெண் விழிக்கு வெவ்வேறு உவமானங்களுடன்..பாராட்டுக்கள் சதங்கா!
முருகன் பத்தி தான் எதோ நல்ல அருணா சாய்ராம் பாட்டுனு தலைப்பை பாத்து ஓடோடி வந்தேன். செம அல்வா. :))
கண்ணின் கருவிழியை வண்டாக்கி, அதன் மீது மையல் கொண்ட சதங்கா
//வெண்பனியில் விளையாடும் கருவண்டே //
இயல்பான உவமை - அருமை அருமை
நல்ல சிந்தனை நல்வாழ்த்துகள்
//வேல் காக்கும் வெண்சோலையில்
சிறைப்பட்ட சிறு வண்டே//
நான் ரசித்த வரிகள்.. நானும் அம்பி மாதிரிதான் நினைச்சு வந்தேன் :)
ராமலஷ்மி மேடம்,
//போன பதிவிலே "விழியில் விழுந்து" பாடலை நினைவு படுத்தினாலும் படுத்தினேன்//
ஆமா. ஆமா. அப்புறம் எங்க தங்கமணி தான் இதற்கு முதல் இன்ஸ்பிரேஷன் (கோச்சுக்கப் போறாங்க :))). இன்னும் சில கவிதைகள் 'கண்' பற்றி எழுதி இங்கு பதிந்திருக்கிறேன் 'வழக்கம் போல்'. பழைய பதிவுகள், நேரம் இருக்கும்போது பாருங்க.
//வெண் விழிக்கு வெவ்வேறு உவமானங்களுடன்..பாராட்டுக்கள் சதங்கா!//
மிக்க நன்றி.
அம்பி,
//முருகன் பத்தி தான் எதோ நல்ல அருணா சாய்ராம் பாட்டுனு தலைப்பை பாத்து ஓடோடி வந்தேன். செம அல்வா. :))//
இப்படி வைத்தால் தானே நீங்கள் வருவீர்கள் என்று கணவிலும் நினைக்கவில்லை .... (இதுவும் அல்வானு சொல்லிடாதீங்கககககக ....)
வந்தது வந்திட்டீங்க, பாட்டப் பத்தி ஒன்னும் சொல்லலையே :)
சீனா ஐயா,
//நல்ல சிந்தனை நல்வாழ்த்துகள்//
வழக்கம் போல் வந்து வாழ்த்திப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.
கவிநயா,
ரசித்து கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
//நானும் அம்பி மாதிரிதான் நினைச்சு வந்தேன் :)//
நானும் யோசிச்சேன். ஆன்மீக டைட்டிலா இருக்கேனு. மாற்றி பார்த்தேன், எதுவும் நல்லா வரலை. இதுவே அருமையா தோணுச்சு. சரி இருக்கட்டும்னு விட்டுட்டேன்.
//வந்தது வந்திட்டீங்க, பாட்டப் பத்தி ஒன்னும் சொல்லலையே //
கவிதை பக்கங்கள் நமக்கு கத்ரிக்காய் மாதிரி. ஒத்துக்காது.
இருந்தாலும் இது ரொம்ப எளிமையா எனக்கு கூட புரியற மாதிரி இருக்கு. இதுவும் அல்வானு சொல்லிடாதீங்கககககக ....)
ஹிஹி, அந்த போட்டோவ முழுசா போட்ருக்க கூடாதா? :p
அம்பி,
//இருந்தாலும் இது ரொம்ப எளிமையா எனக்கு கூட புரியற மாதிரி இருக்கு. இதுவும் அல்வானு சொல்லிடாதீங்கககககக ....)//
:))) ரசித்தேன் இவ்வரிகளை.
//ஹிஹி, அந்த போட்டோவ முழுசா போட்ருக்க கூடாதா? :p//
போடலாம் தான். ஆனா நீங்க பதிவ படிக்க மாட்டீங்களே ;) அதான்.
Post a Comment
Please share your thoughts, if you like this post !