Wednesday, July 23, 2008

என்ன விலை அழகே - 1

கோவிந்த் எப்ப‌வும் அளவிற்கு அதிகமாய் சத்தத்துடன் பேசுவது வழக்கம். நண்பர்கள் கூடினால், யாரும் கொடுக்காமலேயே நாட்டாமை பதவியை எடுத்துக் கொள்பவன். அறிவில் கெட்டிக்காரன். பெண்க‌ள் விச‌ய‌த்தில் ஜொல்ல‌ன். மொத்த‌த்தில் குஜாலான பேர்வழி.

வேலை நிமித்தம் மேலைநாடுகள் பலவற்றில் பறந்து திரிபவன். கனடா சென்றால் கனடிய பெண்களுடனும், லண்டன் சென்றால் ஐரோப்பிய பெண்களுடனும், அமெரிக்காவில் அமெரிக்கப் பெண்களுடனும் ஊர் சுற்றுபவன். நண்பர்கள் அவனுக்கு வைத்த பெயர் 'மச்சக்காரன்'.

திருவல்லிக்கேணியில் ஒரு தெருவில், மளிகைக் கடைக்காரர் ஒருவர் முன்னே கடை வைத்து பின்னால் குடியிருந்தார். அந்தக் காலத்திலேயே, மாடியும் கட்டி, வாடைக்கு விட்டால் அதில் ஒரு நிரந்தர வருமானம் வருமே என்று உட்கார்ந்து யோசித்திருப்பார் போல.

பல பேச்சுலர்கள் வாழ்வில் முன்னேற இந்த மாடிப் படியில் ஏறி இறங்கியிருக்கின்றனர். தற்போதைய பேச்சுலர்கள் நம் கதாநாயகன் கோவிந்த் மற்றும் அவனுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் குழு.

"மச்சக்காரா, எப்படிடா உன்னால மட்டும் முடியுது ?!" என்று வழக்கம் போல கேட்டனர் கார்த்தியும், கிருபாவும்.

இப்படி நண்பர்கள் கேட்கும்போதெல்லாம் வாழ்கையில் பெரிசா சாதித்த நினைப்பு எழும் கோவிந்துக்கு. உணர்ச்சிகளை வெளிக் காட்டாமல், சும்மா டைம் பாஸ்டா மச்சி என்று ந‌ழுவி விடுவான்.

'டைம் பாஸ்'னாலும் எல்லாருக்கும் கெடைக்குமா என்ன‌ ?

ஒக்காந்துட்டான்டா சாட்டிங்க்ல‌, அவ‌ன‌வ‌ன் ப்லாகிங்ல‌ எறங்கிட்டான், இவ‌ன் என்ன‌டான்னா இன்னும் சாட்டிங் விட‌ மாட்டேங்க‌றான் என்றான் கார்த்தி.

காதில் விழுவ‌தைக் கேழாத‌து போல் த‌ட்ட‌ச்சிட‌ ஆர‌ம்பித்தான் கோவிந்த்.

...

அப்பா, அம்மா ட்ரிடேனி போயிருக்காங்க. போரு நான் வரலைனு சொல்லி அனுப்பிட்டேன். எனக்கு யாரு கூடவாவது ஊர் சுத்தணும்.

ஏதேது, டைடானிக் மாதிரியில்ல சொல்ற. திருத்தணியா ?

அவனது ஆளுமையும், நகைச்சுவை சாட்டிங்கும் அவளுக்குப் பிடித்திருந்தது.

அமா. நாம டி.நகர்ல மீட் பண்ணலாமா ?

டி.ந‌க‌ர் எங்கே ?

ஐய‌ப்ப‌ன் கோவில்.

டி.ந‌க‌ரில் ஐய‌ப்ப‌ன் கோவிலா ? அது அடையாறில‌ இல்ல‌ இருக்கு, ஊருக்குப் புதுசா ?

ஆமா. ல‌ண்ட‌ன் செட்டில்டு. அப்பா, அம்மா பொற‌ந்த‌ ஊரு சென்னை. வெகேச‌னுக்காக இங்க வ‌ந்திருக்கேன். இது தான் முத‌ல் முறை இங்க‌ வ‌ர்ற‌து. கோவில் பக்கத்துல தான் வீடு.

போட்டுத் தாக்கு அப்ப‌டி, சூப்ப‌ர் தான் போ, எத்த‌னை ம‌ணிக்கு ?

சாய‌ந்திர‌ம் ஆறு ம‌ணிக்கு.

ல‌ண்ட‌ன் வாசி என்று அறிந்த‌வுட‌ன் குஷியாகி குஜாலாக‌ மெசேஜ் அனுப்பினான். அவ‌ளும் அவ்வாறே ப‌தில‌ளிக்க‌. வெய்யிலில் ஐஸ்க்ரீம் உருக‌லாய் ஆனான்.

தங்கள‌து உருவ‌ம், உடை நிற‌ம் எல்லாம் ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர் இருவ‌ரும்.

தான் வரும் வண்டி, எண், அதன் கலர் எல்லாம் சொல்லி, ச‌ரி. மீட் யூ தேர் ஷார்ப்லி என்று சாட்டிங் விண்டோவை மூடினான்.

மாலை ஐந்து ம‌ணிக்கு குளித்து (!), நீட்டா அயர்ன் பண்ணின ட்ரெஸ், குச்சி செண்ட் லைட்டா ஒரு சின்ன‌ ஸ்ப்ரே அடித்து, யமஹாவின் கிக்க‌ரை லேசா அழுத்தி, உறுமிப் ப‌ற‌ந்தான் கோவிந்த் கோவிலுக்கு.

கெள‌ம்பிட்டான்டா, ஏதாவ‌து ஒரு வார்த்தை சொல்றானா பாரு. நல்லாருக்க‌ட்டும் என்று புல‌ம்பி வாழ்த்தின‌ர் கார்த்தியும், கிருபாவும்.

சாட்டிங்கில் சொன்னது போலவே நேரிலும் அழகா, மார்டனா இருக்கிறாளா, இல்ல உதாரா என்பதற்காகவே உஷாராக, சொன்ன இடத்திற்கு, சொன்ன நேரத்திற்கு போகாமல் கொஞ்சம் முன்னரே போய்விடுவான் கோவிந்த். இன்றும் அப்படித் தான். ஐந்தரைக்கெல்லாம் ஐயப்பன் கோவில் அருகில் இருந்தான்.

வண்டியை ஒரு ஓரமாக பக்கத்து கட்டிடத்தில் நிறுத்திவிட்டு, கொஞ்ச நேரம் அங்கு சுற்றி விட்டு, கோவிலுக்குள் நுழைந்தான். ஐந்து ஐம்பத்தைந்திற்கு நுழைவாயில் தெரியும் படி தூரத்தில், ஒரு தூணின் பின்னால் சாய்ந்து நின்று கொண்டான்.

அப்பட்டமா தெரியக்கூடாது என்பதற்காக கைத் தொலைபேசியை எடுத்து கிருபாவுடன் பேசினான்.

இப்ப‌ மட்டும் போன் பண்ணிடுவான். பார்ட்டி இன்னும் வந்திருக்காது என்று அலுத்துக் கொண்டான் கார்த்தி. ஏன்டா அவன் ஃபோன எடுக்கற. நெக்ஸ்ட் டைம் இந்த நேரத்தில போன் பண்ணினான்னா எடுக்காத டா என்று அத‌ட்டினான்.

"மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் என்னை" மனதிற்குள் வாலியின் பாடல் ஓட, மஹாபலிபுரம் நோக்கி ஈ.சி.ஆர் ரோட்டில் யமஹா ஓடியது.

தொடரும் .....

9 மறுமொழி(கள்):

Ramya Ramanisaid...

அருமையான தொடக்கம் :))

Kavinayasaid...

நல்லாருக்குங்க ஆரம்பம்...

cheena (சீனா)said...

நல்ல கதை - அருமையாகச் செல்கிறது - எளிய இயல்பான வர்ணனைகள் - ஆறு மணிக்கு யமஹா மகாபலிபுரம் நோக்கி ......

தொடரும் என எங்கே போட வேண்டுமெனத் தெரிந்து வைத்திருப்பது காதாசிரியரைன் அனுபவத்தினைக் காட்டுகிறது

சதங்கா - நல்வாழ்த்துகள்

ராமலக்ஷ்மிsaid...

வழக்கம் போல இனிய தொடக்கம்.

நடக்கட்டும் நடக்கட்டும்.[இந்த கமென்ட் கோவிந்துக்கு]

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

ஊக்க மருந்திற்கு நன்றி. தொடர்ந்து வந்து வாசிங்க.

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

படித்து, பிடித்து, பின்னூட்ட ஊக்கமளித்தற்கு நன்றிகள்.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

வாழ்த்துக்களுக்கு வழக்கம் போல நன்றிகள்.

//தொடரும் என எங்கே போட வேண்டுமெனத் தெரிந்து வைத்திருப்பது காதாசிரியரைன் அனுபவத்தினைக் காட்டுகிறது//

நமக்கு அந்தக் கொடுப்பினை எல்லாம் இல்லை. ஆனால், மச்சக்கார நண்பர்கள் நிறைய. அவர்களின் வாழ்வியல் தான் கதையில் ஆங்காங்கே தெளிக்கிறேன்.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

வழக்கம்போல வந்து வாழ்த்துவதற்கு நன்றிகள்.

//நடக்கட்டும் நடக்கட்டும்.[இந்த கமென்ட் கோவிந்துக்கு]//

கோவிந்த் நன்றிகள் சொன்னாரு. இந்தாங்க :)))

நாகு (Nagu)said...

நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க...

பட்சி என்ன சொல்லுதுன்னா - கடைசில பத்து வயசு பொண்ணோ இல்ல 50 வயசு 'பேரிளமோ' வந்து நிக்கப் போவுது...

Post a Comment

Please share your thoughts, if you like this post !