Thursday, July 10, 2008

ஹூஸ்டன் பயணம் - 1 - ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில்

வழக்கம் போல் இல்லாம இந்த முறை ப்ளான் பண்ணதாலோ என்னவோ சிகாகோ பயணம், சூழ்நிலைகளின் காரணமாக செல்ல முடியாமல் போய்விட்டது.

கடந்த ஜூன் மாதம், மிசிசிபி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து, மிசூரி மாகாணத்தில் பல இடங்களைச் சேதப்படுத்தியது. எங்க ஊரு பென்டன்வில்லில் இருந்து சிகாகோ செல்ல மிசூரி கடந்து தான் செல்ல வேண்டும். போன வாரம் வரை நிலவரம் இப்படியே இருக்கவே, தங்கமணி சொல்லிவிட்டார்கள், 'எதுக்கு ரிஸ்க்', அடுத்த முறை சிகாகோ பார்த்துக்கலாம்' என்று. அதனால் 'ப்ளான் B - ஹூஸ்டன்' ஆக்டிவ் ஆனது.

டெக்சாஸ் ஹூஸ்டனில் என்னவெல்லாம் பார்க்கலாம் என்று ஒரு லிஸ்ட் தங்கமணியிடம் நண்பி ஒருவர் தந்திருந்தார். என் பள்ளி கால நண்பன் ஒருவன் பல ஆண்டுகள் ஹூஸ்டன் வாசம். அவனையும் தொடர்பு கொண்டு ஒரு ஷார்ட் லிஸ்ட் போட்டு மூன்று நாட்களில் ... மீனாஷி அம்மன் கோவில், நாசா, கேல்வஸ்டன் பீச், மூடிஸ் கார்டன், இந்தியக் கடைகள் (எங்க போனாலும் விடறாதாயில்லை :)) பார்க்க முடிவு செய்தோம்.

நாசாவிற்கு ஐந்து டாலரும், மூடிஸ் கார்டனுக்கும் இரண்டு டாலரும் ஆஃபர் இருப்பதாக நண்பன் சொன்னான். தனியே சென்றால் இந்த ஆஃபர், டீல் எல்லாம் பற்றி ரொம்ப யோசிப்பதில்லை ;) குடும்பமாக செல்லும்போது அது அத்தியாவசியமாகிறது. ஒரு இடத்தில் இருபது டாலர் மிச்சமாகிறது எனும்போது மகிழ்ச்சி தான் இல்லையா !

டிக்கட் அங்க போய் வாங்கணுமா, கூட்டம் ஜாஸ்தியா இருந்தா என்ன பண்றது என்றெல்லாம் யோசித்தால், இப்ப நிறைய இடங்களுக்கு வீட்டிலேயே டிக்கட் ப்ரிண்ட் பண்ணி எடுத்துச் செல்லும் அளவிற்கும் வசதி பண்ணியிருக்கிறார்கள். 'நாசா'வும் அதில் ஒன்று.

ஜூலை 03, வியாழன்.

சின்னஞ்சிறு வேலைகளாலே கிளம்ப மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. இர‌வு பதினோறு மணிக்கு டாலஸ். ஹைவே விட்டு வெளி வந்து, ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து ரூம் அவைலபிலிட்டி கேட்டால், அட நம்ம குஜ்ஜூஸ் நடத்தும் ஹோட்டல் ! இங்கு அமெரிக்காவில், ஹோட்டல் பிஸினஸில் கொடி கட்டிப் பறப்பவர்கள் குஜ்ஜூஸ் என்றால் மிகையாகாது !!! இங்கு நைட் ஸ்டே அடிச்சாச்சு.

ஜூலை 04, வெள்ளி.

டாலஸில் இருந்து காலை எட்டு மணிக்கு கிளம்பினோம். ஒரு நாலு மணி நேரம் ட்ரைவ் ஹூஸ்டனுக்கு.

கல்லூரியில் 'ட்ராவலிங்க் சேல்ஸ்மேன் பாத்' என்று (ஒரு அறுவை :)) இருந்தது. பல இடங்களுக்கு ஒரே ட்ரிப் ஷார்ட்டா கண்டுபிடிக்கணும். அப்படி ஆச்சு இந்த‌ முறை. நேரா பீச் போய்ட்டு, கோவில் போலாமா. அல்ல‌து கோவில் போனால், அன்று முழுதும் வேறு எதுவும் செய்ய‌ முடியாது. நாசா பார்க்க‌ காலை தான் சிற‌ந்த‌ நேரம் (கூட்டம் குறைவாக இருக்குமென நண்பன் சொல்லியிருந்தான்), அதுவும் இன்று முடியாது.

இந்தக் குழப்பங்களிடையே நேரே பீச், மூடிஸ் கார்டன் பார்த்துட்டு, ஸ்டே. மறுநாள் நாசா, அப்புறம் கோவில் போகலாம் என்று முடிவு செய்தோம்.

விதி வலியது என்பார்கள். ஹூஸ்டன் நெருங்க நெருங்க, வானம் இருட்டிக் கொண்டு வந்தது. எப்ப‌டி என்னை வ‌ந்து க‌டைசியில் பார்க்க‌லாம் என‌ மீனாக்ஷி அம்ம‌ன் கோபித்து கொண்டாரோ என்ன‌வோ ! சட சட வென வெள்ளை அம்புகளாய், விண்ணிலிருந்து மண்ணைத் தாக்கி பெருமழை பொழிந்த‌து. முன்னாடி என்ன நடக்குதுனே தெரியல. ஹைவேல எல்லாரும் பத்து மைல் ஸ்பீட் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

லிஸ்டில் க‌டைசியில் இருந்த‌ கோவில் இப்ப‌ முத‌லிட‌த்தில். ச‌ரி ரூட்ட‌ மாத்துனு, சிறு பொட்டிய‌த் த‌ட்டி கோவில் போனால், ச‌ரியான வெயில். ட்ராபிக், ம‌ழை எல்லாம் தாண்டி கோவில் வ‌ர‌ ம‌திய‌ம் இர‌ண்டு ம‌ணி ஆன‌து.

ப‌ர‌ந்து விரிந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பில் அமைந்திருக்கிற‌து 'ஸ்ரீ மீனாக்ஷி அம்ம‌ன்' கோவில். சுற்றிலும் பெரிய மதில் சுவர். மதில் மேலே ஆங்காங்கே சிற்சில சிலைகள். கோவில் உள்ளேயும், வெளியேயும் நிறைய மரங்கள். பசும்புற் தரைகள். ராஜகோபுர‌ம் வ‌ழியே உள்ளே நுழைந்தால் ஒரு வெளிச் சுற்று பிர‌கார‌ம். நான்கு மூலைக‌ளில் ச‌ந்நிதிக‌ள். துர்கை, விநாய‌க‌ர், ஐய‌ப்ப‌ன், முருக‌ன், ராம‌ர், ல‌க்ஷ்ம‌ண‌ர், ந‌ட‌ராஜ‌ர், ந‌வ‌க்கிர‌ங்க‌ள் என‌.

நுழைவாயில் இருந்து நேரே அம்ம‌ன் ச‌ந்நிதி (அதன் எதிரே வெளியில், சிறிய‌ துவ‌ஜ‌ஸ்த‌ம்ப‌ம், குட்டி ந‌ந்தி ம‌ண்ட‌ப‌ம்). கோவிலின் உள்ளே ஒரு பெரிய ஹால் போன்ற பரப்பில் நடுவில் மீனாக்ஷி அம்மன், இட‌ப்புற‌ம் சிவ‌ன், வ‌ல‌ப்புற‌ம் வெங்க‌டாஜ‌ல‌ப‌தி. இன்ன‌பிற‌ சுவாமி சிலைக‌ள்.

நம்ம ஊரு கோவில் போல அட்டகாச வர்ணப்பூச்சு இல்லாத, வெண்மஞ்சளில், கோபுரம் முதல், மதில் சுவர் வரை ஒரே வர்ணம். கோவில் இன்டீரியர் விட எக்ஸ்டீரியர் அற்புதம். கோவிலில் பணிபுரிவோருக்கு, பின்னே வரிசையாய் குடியிருப்புக்கள். ஒரு புறம் தனிக் கட்டிடத்தில் மண்டபம், நூலகம், உணவகம். முன்னேயும், பின்னேயும் விசாலமான பார்க்கிங்க் லாட்.

ந‌ம்ம‌ ஊரு 'ஆன‌ந்த‌ ப‌வ‌ன்' போல் இருந்த‌து கோவில் கேஃப்டீரியா. இட்லி, பொங்க‌ல், ம‌சால் தோசை, பூரி, வ‌டை, ச‌ட்னி, சாம்பார். அட‌ அடா !!!

ஒரு ரூபாய் நாணய அளவுகளில் டோக்கன். மெஷினில் டாலர் போட்டு டோக்கன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனைக் கொடுத்து உணவுகளைப் பெற வேண்டும். நல்லா ஆசுவாசமா உட்கார்ந்து சாப்பிட பெரிய ஹால். சைடில் ரெஸ்ட் ரூம்ஸ், வாட்டர் ஃபௌன்டெய்ன்.

சாப்டாச்சா, கீழே கோவில் படங்கள் பார்த்துட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க. அடுத்த பதிவில் 'நாசா விண்வெளி அரங்கம்' செல்வோம்.

-----


கோவில் முகப்புத் தோற்றம்


அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்


ராஜ கோபுரம் ('மகாநதி' ஸ்டைல்ல இருக்கா ?, அதுக்கும் முன்னாடியே தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை இவ்வாறு எடுத்திருக்கிறேன் :))


ராஜ கோபுர நுழைவு வாயில்


நந்தி மண்டபம்


அம்மன் சந்நிதி


சிவன் சந்நிதி


வெங்கடாஜலபதி சந்நிதி


எண்ணெய் விளக்கு


கோவில் உள் பிரகாரம்


இடப்புற நுழைவு வாயில்


வெளிச் சுற்று மதில்

17 மறுமொழி(கள்):

வல்லிசிம்ஹன்said...

நல்ல வேளை நீங்க போனீங்களோ எங்களால மீனாட்சியைப் பார்க்க முடிந்ததோ. எப்பவுமே இந்த ஆஅமெரிக்கன் ஸ்டார்ம் ஓஒ?்?? மாதிரிப் பயப் படுத்தும். அதுவும் ஹைவே ல,!!

முன்னாடியே தெரிஞ்சிரு??தா ?டை சொ?்ல்லி இருப்பேன்:)

Jayakanthan - ஜெயகாந்தன்said...

(நாந்தான் மொத போனியா?)
படம் நல்லாயிருக்கு. கோவிலுக்கு உள்ளார படமெடுக்க விடறாங்களா!?(copyright வேற போட்டிருக்கு!!)

எங்களுக்கு பிட்ஸ்பர்க் உடுப்பி'ல மெதுவடை+சாம்பார் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வர மனசே இல்ல.. அமரிக்காவில இருக்கர 90% கொல்டிசும் நயாகராவில தான் இருந்தாங்க - மிச்சம் 10%ல சிலது தான் வேற இடத்துக்கு போயிருப்பாங்க போல!

-ஜெ

ராமலக்ஷ்மிsaid...

புகைப் படங்களே தேவையில்லாத படி அழகிய வர்ணனைகள் ஆனாலும் புகைப் படங்களும் இணைத்திருந்தால்..என நினைத்தபடி தொடர்ந்தால்..அருமை அருமை. கலாச்சாரமே வேறானதொரு பிரதேசத்தில் வாழும் நம் மக்களுக்காக அருள் பாலிக்க இப்படி கோயில்கள் கட்டி பராமரிக்கும் இறைப் பணியை என்னவென்று சொல்ல..

இறை தரிசனம் முடிந்தாயிற்று. நாளை விண்வெளி தரிசனமா? காத்திரூக்கிறோம்.

ராமலக்ஷ்மிsaid...

//ராஜ கோபுரம் ('மகாநதி' ஸ்டைல்ல இருக்கா ?, அதுக்கும் முன்னாடியே தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை இவ்வாறு எடுத்திருக்கிறேன் :))//

சரி அதை கூடிய விரைவில் வரவிருக்கும் உங்கள் புகைப்படத் தளத்தில் எதிர் பார்க்கலாமா?

Ramya Ramanisaid...

புகைபடங்கள் மிக மிக அருமை :)) அங்கு கோவிலில், தமிழ் மக்களை அதிகமா பாத்திருக்கலாம்.. கோவில்ல மல்லிகை பூ கெடச்சிதா?? அது ரொம்ப புகழ்னு சொல்வாங்க...ஹூஸ்டன்ல மொத்தம் 10 கோவில் இருக்கு,,நீங்க சுவாமி நாராயண் கோவிலுக்கு போயிருக்கனும்,,செதுக்கி செதுக்கி கட்றாங்க. இந்தியால தெல்லில இருக்கற கோவில் மாதிரியான அமைப்பு :)

Kavinayasaid...

ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைச்சிருந்த எங்க அம்மாவை இங்கேயே கூட்டி வந்து காண்பிச்சதுக்கு மிக்க நன்றி சதங்கா.

[preview விஷயத்தை நீங்க இன்னும் கவனிக்கல போல :( ]

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

ஆஹா, மீனாஷி தரிசனம் கண்டு ஆனந்தப் பட்டது குறித்து மகிழ்ச்சி.

//எப்பவுமே இந்த ஆஅமெரிக்கன் ஸ்டார்ம் ஓஒ?்?? மாதிரிப் பயப் படுத்தும். அதுவும் ஹைவே ல,!!//

ஆமா. அதுமில்லாம ட்ரைவ் பண்றோம் என்கிறதாலே ரொம்பவே யோசிக்க வேண்டியதா இருக்கு.

//முன்னாடியே தெரிஞ்சிரு??தா ?டை சொ?்ல்லி இருப்பேன்:)//

எழுத்துக்கள் சிதறியிருக்கறத பார்த்தா, பேத்திக்கு பின்னூட்ட ட்ரைனிங்க் கொடுக்கற மாதிரி இருக்கே :)) (Just fun)

சதங்கா (Sathanga)said...

வாங்க ஜெய்,

//(நாந்தான் மொத போனியா?)//

ஜஸ்ட் மிஸ். :))

//படம் நல்லாயிருக்கு. கோவிலுக்கு உள்ளார படமெடுக்க விடறாங்களா!?(copyright வேற போட்டிருக்கு!!)//

ஆமா. நல்லா எடுக்கலாம். copyright சும்மா வெளம்பரத்துக்காக :))

//எங்களுக்கு பிட்ஸ்பர்க் உடுப்பி'ல மெதுவடை+சாம்பார் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வர மனசே இல்ல.. அமரிக்காவில இருக்கர 90% கொல்டிசும் நயாகராவில தான் இருந்தாங்க - மிச்சம் 10%ல சிலது தான் வேற இடத்துக்கு போயிருப்பாங்க போல!//

சூப்பர். 10%ல யாரும் இங்க வந்தா மாதிரி தெரியவில்லை. எல்லாம் நம்ம தமிழ் மக்கள் தான். எப்படி சொல்கிறேன் என்றால், யாரும் யாரு கூடவும் பேசவில்லையே :)

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

// புகைப் படங்களே தேவையில்லாத படி அழகிய வர்ணனைகள் ஆனாலும் புகைப் படங்களும் இணைத்திருந்தால்..என நினைத்தபடி தொடர்ந்தால்..அருமை அருமை. கலாச்சாரமே வேறானதொரு பிரதேசத்தில் வாழும் நம் மக்களுக்காக அருள் பாலிக்க இப்படி கோயில்கள் கட்டி பராமரிக்கும் இறைப் பணியை என்னவென்று சொல்ல..//

நன்றி. நன்றி. ஆமா இதுபோல நிறைய ஊர்களில் அருமையாக கோவில்கள் இருக்கின்றது. நாங்க பார்த்த வரைக்கும் 'வாஷிங்க்டன் டி.ஸி.' கோவில் தான் முதலிடம். அபார்ட் ஃப்ரம் சுவாமி நாராயண் கோவில்கள்.

// இறை தரிசனம் முடிந்தாயிற்று. நாளை விண்வெளி தரிசனமா? காத்திரூக்கிறோம்.//

விண்ணில் ஏறிப் பறக்க இன்று அல்லது நாளை வரை பொறுத்திருங்களேன்.

// சரி அதை கூடிய விரைவில் வரவிருக்கும் உங்கள் புகைப்படத் தளத்தில் எதிர் பார்க்கலாமா?//

ஆனா சில மாதங்கள் காத்திருக்கணுமே. சிங்கையில் இருக்கின்றது ஒரு பெரிய புகைப்படப் பொதி. செப்டம்பர் ஊருக்கு வருகிறோம். அதில் சிங்கை விசிட்டும் உண்டு. அப்ப தான் கொண்டு வரணும்.

ராமலக்ஷ்மிsaid...

விண்வெளிப் பதிவுக்குப் பொறுத்திருக்கிறேன்.
புகைப்பட பொதிக்குக் காத்திருக்கிறேன். போதுமா சதங்கா:))?

சதங்கா (Sathanga)said...

ரம்யா ரமணி,

//புகைபடங்கள் மிக மிக அருமை :))//

நன்றிங்க.

// அங்கு கோவிலில், தமிழ் மக்களை அதிகமா பாத்திருக்கலாம்.. கோவில்ல மல்லிகை பூ கெடச்சிதா?? அது ரொம்ப புகழ்னு சொல்வாங்க...//

ஆமா ஒரளவுக்கு கூட்டம். எல்லாம் தமிழ் மக்கள் தான். மல்லிப்பூ செய்தி தெரியாதே. எல்லா காலங்களிலும் கிடைக்குமா அங்கே ?!

//ஹூஸ்டன்ல மொத்தம் 10 கோவில் இருக்கு,,நீங்க சுவாமி நாராயண் கோவிலுக்கு போயிருக்கனும்,,செதுக்கி செதுக்கி கட்றாங்க. இந்தியால தெல்லில இருக்கற கோவில் மாதிரியான அமைப்பு :)//

அடுத்த முறை போயிருவோம். தகவலுக்கு நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைச்சிருந்த எங்க அம்மாவை இங்கேயே கூட்டி வந்து காண்பிச்சதுக்கு மிக்க நன்றி சதங்கா.//

திருப்தியாக இருக்கிறது உங்க பின்னூட்டம்.

//[preview விஷயத்தை நீங்க இன்னும் கவனிக்கல போல :( ]//

நினைவில் இருக்கிறதுங்க. முயற்சித்துப் பார்த்தேன் சரியா வரலை. நம்ம குரு, நாகு வேற பி.ஸி.யா இருக்காரு.

சதங்கா (Sathanga)said...

//விண்வெளிப் பதிவுக்குப் பொறுத்திருக்கிறேன்.
புகைப்பட பொதிக்குக் காத்திருக்கிறேன். போதுமா சதங்கா:))?//

ஆஹா, நாளைக்கு என்பதை இன்றே செய்யணும் என யோசிக்க வைக்கும் ஊக்கமிகு வரிகள்.

cheena (சீனா)said...

பயணக்கட்டுரை அருமை. எத்தனைதான் திட்டமிட்டாலும் தடங்கல்கள் தான். அத்தனையையும் மீறி அழகாகப் பயணம் செய்து காண விரும்புவதைக் கண்டு மகிழ வேண்டும். மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் அருமை.

ஆமாம் செப்டம்பரில் இங்கு வருகிறீர்களா - வாருங்கள் வாருங்கள் - சிவகங்கை காரைக்குடி மதுரை அதிக தூரமில்லை. மதுரைக்கு அழைக்கிறேன் நண்பரே !

Unknownsaid...

அமெரிக்காவில், நாங்கள் பார்த்த கோவில்களில், இந்த கோவில்தான் அருமை!! நூலகம் ஒரு தனிச்சிறப்பு!

படங்கள் அருமை, சதங்கா.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//பயணக்கட்டுரை அருமை. எத்தனைதான் திட்டமிட்டாலும் தடங்கல்கள் தான். அத்தனையையும் மீறி அழகாகப் பயணம் செய்து காண விரும்புவதைக் கண்டு மகிழ வேண்டும். மீனாட்சி அம்மன் கோவில் படங்கள் அருமை.//

நன்றி, நன்றி.

//ஆமாம் செப்டம்பரில் இங்கு வருகிறீர்களா - வாருங்கள் வாருங்கள் - சிவகங்கை காரைக்குடி மதுரை அதிக தூரமில்லை. மதுரைக்கு அழைக்கிறேன் நண்பரே !//

அழைப்பிற்கு நன்றி ஐயா. கண்டிப்பா வருகிறேன். சந்திப்போம். "கெடா, கோழி எல்லாம் ஞாபகம் இருக்கிறதல்லாவா ?!! :))"

சதங்கா (Sathanga)said...

தஞ்சாவூரான்,

வருகைக்கு நன்றி.

//அமெரிக்காவில், நாங்கள் பார்த்த கோவில்களில், இந்த கோவில்தான் அருமை!! நூலகம் ஒரு தனிச்சிறப்பு!//

இதுவும் ஒரு அருமையான கோவில், அப்படினு சொல்லலாமா ? :) நூலகம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நம்ம ஊரு அம்புலிமாமா டைப் புத்தகங்கள் ஏராளம். குழந்தைகள் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டு சில நொடிகளில் மூழ்கி விட்டனர்.

//படங்கள் அருமை, சதங்கா.//

நன்றிகள் பல.

Post a Comment

Please share your thoughts, if you like this post !