Monday, July 21, 2008

ரெட்வுட் சொல்லும் க(வி)தை



ஓங்கி உய‌ர்ந்த‌ காடு
அங்கே எங்க‌ள் வாழ்வு

சுற்றுலாத் த‌ல‌மாகும் காடு
ரெட்வுட் எங்க‌ள் பேரு

-----

நீண்டு வளர்ந்து,
நீண்ட காலமும் வ‌ள‌ரும்,

எம்மைப் பாரீர்
எம்கதை கேளீர்.

ஈராயிர‌ம் ஆண்டுக‌ளுக்கும் மேல்
எவற்றிலும் எமைக் காத்து,

முன்னூறு அடிவ‌ரைக்கும்
வான் முட்டி வ‌ள‌ர்வேன்.

பூமியில் என் பாத‌ம்,
ப‌ற்றி சுற்றி வ‌ந்து‌

சிற‌கெனக் கை பிடிக்க‌,
ப‌ற்றாது இருப‌த்தி ஐவ‌ர் !

வான் முட்டும் நானும்,
வ‌ந்த‌தொரு சிறு வித்தில்.

எமைப் போன்ற‌ சில‌ரும்
வ‌ந்த‌தெல்லாம் சிறு வித்தே !

சின்னஞ்சிறு செடி வேரும்
மண்ணைத் துளைக்கும் ப‌ல‌ தூர‌ம்,

எந்த‌ன் வேரின் ஆழ‌ம்
எத்தனை அடி அறிவீரோ ?!

ஆற‌டி ப‌ண்ணிர‌ண்டுக்கு உள்ளான,
ஆழ‌ம் தானிருக்கும் !

ஆழ‌ச் சென்றால் த‌னித்துவிடலாம்
என்றெண்ணி, பட‌ர்ந்திருக்கும்.

ம‌ண்ணில் சிலஅடி ஆழ‌த்தில்,
ப‌ட‌ர்ந்து ம‌ட்டும் இல்லாமல்,

ம‌ற்ற ம‌ர‌ வேர்க‌ளுட‌ன்
பின்னிப் பிணைந்து மிருக்கும்.

-----

சூறைக் காற்றின்
சீற்ற‌ம் தாங்கி,

காட்டுத் தீயின்
தாக்குத‌ல் காத்து,

இயற்கை சீற்ற‌ம்
எல்லாம் பொறுத்து,

நீண்டு நிற்க‌
என்றும் கார‌ண‌ம் ...

ம‌ண்ணில் ப‌ட‌ர்ந்து
ஒன்று பட்டு

எதையும் தாங்கும்
பின்னிய வேரே !

5 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

ரெட்வுட் சொல்லும் க(வி)தை:
"ஓங்கி நின்றிடலாம் ஒன்று பட்டிருந்தால்"
அற்புதம் சதங்கா!

//வான் முட்டும் நானும்,
வ‌ந்த‌தொரு சிறு வித்தில்.

எமைப் போன்ற‌ சில‌ரும்
வ‌ந்த‌தெல்லாம் சிறு வித்தே !//

மனிதருக்கும் பொருந்தும் மகத்தானத் தத்துவம்!

//ஆழ‌ச் சென்றால் த‌னித்துவிடலாம்
என்றெண்ணி,//

ஆம் மனிதன் கூடத்தான் சமயத்தில் நினைக்கிறான் அப்படி!

//ம‌ற்ற ம‌ர‌ வேர்க‌ளுட‌ன்
பின்னிப் பிணைந்து மிருக்கும்.//
//எதையும் தாங்கும்
பின்னிய வேரே!//

அருமையாகச் சொல்லி விட்டீர்கள்!

சூழ்நிலை எனும் சூறைக் காற்றின் சீற்ற‌ம் தாங்கி,கஷ்டங்கள் எனும் காட்டுத் தீயின்
தாக்குத‌ல் காத்து, சுனாமியாய் சுழன்று வரும் இயற்கை சீற்ற‌ம எல்லாம் பொறுத்து எழுந்து நிற்பான் மனிதன் ஒன்று பட்டிருந்தால் மட்டுமே!

ராமலக்ஷ்மிsaid...

எனது 'ஒன்று பட்டால்' கவிதையின் பின்னூட்டத்தில் 'இதுவரை தொடாத சப்ஜெக்ட். முயற்சிக்கிறேன்' என சொல்லியிருந்த தாங்கள் வானைத் தொடும் ரெட்வுட்டை வைத்து வானைத் தொடும் உயர்ந்த கருத்தை இயல்பான நடையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்! மீண்டும் பாராட்டுக்கள்!

Anonymoussaid...

aakaa aakaa அருமை அருமை
ஈரடிக் கவைதை ரச்த்தேன் மகிழ்ந்தேன்
ஒற்றுமை என்றும் உயர்வாம் - தத்துவத்தினை உள்ளடக்கிய ரெட்வுட் கவிதை

சாதாரணமாக ஒரு மரத்தினைப் பார்த்தால் ஆமாம் மரம் என்று சொல்லி விட்டுப் போகாமல், இத்தனை மகிழ்வுடன் கற்பனைக் குதிரையைத் தட்டி, இயல்பான அழகான் எளிமையான கவிதை எழுதிய செயல் பாராட்டத்தக்கது

விதை தெறித்து மரம் வளரும் விசித்திரம் இயற்கை ஒன்றிலேயே முடியும்

நல்வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

வருகைக்கும் பல பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

//எல்லாம் பொறுத்து எழுந்து நிற்பான் மனிதன் ஒன்று பட்டிருந்தால் மட்டுமே!//

ஆமா நிச்சயமான வார்த்தை.

//எனது 'ஒன்று பட்டால்' கவிதையின் பின்னூட்டத்தில் 'இதுவரை தொடாத சப்ஜெக்ட். முயற்சிக்கிறேன்' என சொல்லியிருந்த தாங்கள் வானைத் தொடும் ரெட்வுட்டை வைத்து வானைத் தொடும் உயர்ந்த கருத்தை இயல்பான நடையில் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்! மீண்டும் பாராட்டுக்கள்!//

எழுதும் போது அதே நினைவு தான். கரெக்டா ஞாபகம் வைத்திருக்கிறீர்களே. ம்ம்ம்ம் க்ரேட். தவறாது வந்து வாழ்த்தியமைக்கு மீண்டும் நன்றி.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//சாதாரணமாக ஒரு மரத்தினைப் பார்த்தால் ஆமாம் மரம் என்று சொல்லி விட்டுப் போகாமல், //

போகமுடியல ... காரணம் இதன் உயரமும், பல்லாண்டு கால வாழ்வும், ஷேலோ ரூட் சிஸ்டமும், இந்த மரத்தைப் பற்றி கேள்விப்பட்ட போது, உடனே ஏதாவது ரூபத்தில் பதிந்துவிட வேண்டும் என்ற ஆவல். அதான்.

//இத்தனை மகிழ்வுடன் கற்பனைக் குதிரையைத் தட்டி, இயல்பான அழகான் எளிமையான கவிதை எழுதிய செயல் பாராட்டத்தக்கது//

வழக்கம் போல பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !