Tuesday, July 29, 2008

என்ன‌ விலை அழ‌கே - 5

ஞாயிறு மதியம் ரெசிடென்ஸியில் புஃபே. கூட்டத்தைப் போலவே உணவுகளும் நிறம்பி வழிந்தது. எதை விடுப்பது, எதை எடுப்பது, என ஒருவர் கூட சிந்திக்காமல் உணவு உட்கொள்வதில்லை எனலாம்.

இன்டி, கோவிந்தோடு ... கார்த்தியும், கிருபாவும்.

இந்தியச் சாயலும், ப்ரிடிஷ் ஆக்செண்ட்டும் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. கோவிந்தைவிட கார்த்திக்கும், கிருபாவுக்கும் பரவசம் தாங்கவில்லை.

டேய் இருங்கடா, ரொம்ப வழிஞ்சு பயமுறுத்திடாதீங்க இன்டிய‌. நான் கை கழுவிட்டு வர்றேன். உங்களுக்குத் தான் அந்தப் பழக்கமே இல்லையே.

இன்டி, வாட் எபௌட் யூ ?

ஐ கேன் மேனேஜ் வித் ஃபோர்க் அன்ட் ஸ்பூன்.

நாங்களும் தான், ரிப்பீட்டினர் கிருபாவும், கார்த்தியும்.

சாரி கைஸ், எனக்கென்னவோ கையில சாப்பிட்டா தான் முழு திருப்தியே. சரி பேசிட்டு இருங்க, இதோ வந்திடறேன்.

சரியான நேரம் இவ்வளவு சீக்கிரம் வாய்க்கும் என நினைக்கவில்லை இருவரும். சீக்கிரன்டா, அவன் வரதுக்குள்ள அவ கிட்ட காட்டு என கார்த்தியை அவசரப்படுத்தினான் கிருபா.

கோவிந்தின் ரெகார்டட் ஒலி, இன்டியின் பிஞ்சுக் காதுகளுக்குள் புகுந்து பஞ்சாய் மிதந்தது. அவளறிந்த சில தமிழ் பாடல்களுள், ஏனோ 'தேவதை வம்சம் நீயோ ....' என்ற பாடல் நினைவுக்கு வந்தது. மனம் லயிக்கையில் தாய்மொழி தான் துணையோ !?

எங்கே அவனுங்க என்றான் திரும்பி வந்த கோவிந்த்.

யாரோ 'மாயா'வாம். போன் பண்ணதா சொல்லி, கெளம்பிட்டாங்க‌. உன்கிட்ட சொல்லச் சொன்னாங்க.

தொலையறானுங்க. நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். சரியான ஜொல்லனுங்க. டண் டண்ணா ஊத்திருப்பானுங்களே.

'தெய் ஆர் ... ஹிம்ம்ம்.' என்று மனதிற்குள் புன்னகைத்தாள்.

இந்த சாப்பாடெல்லாம் உங்க ஊருல கிடைக்குமா ?

யப் வீ காட் எ லாட், பட் எ லில் எக்ஸ்பென்ஸிவ்.

அப்புறம், இன்டி, ஒரு முக்கியமான செய்தி. அலுவல் சம்பந்தமா ஒரு வாரம் நான் யு.எஸ். போறேன். நீ மேனேஜ் பண்ணிப்பியா ? மறக்காம அவளது கண்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

ஒன் வீக் ... என க்ரீச்சிடும் ரயில் வண்டியாய் இன்டி கத்த, அவள் கையிலிருந்த ஃபோர்க் கோவிந்தின் சூப் கப்பில் விழ, சூப் தெரித்து, கோவிந்தின் பாக்கெட்டை நனைத்தது.

ஓ மை காட், ஸாரி ஃபார் தட், என எழுந்து துடைக்க வந்தவளை, கையமர்த்தி, பரவாயில்ல ... வேண்டும் என்றே பண்ணலை நீ, பின்னே எதுக்கு ஸாரி எல்லாம் என்றான் ?

என்ன இவ்வளவு ஈசியா எடுத்துக்கற. ஐம் ஸாரி, ரியலி ரியலி சாரி. என்ன இருந்தாலும் மேனர்ஸ் என்று இருக்கில்லையா என்றாள்.

இந்த ஃபார்மாலிடி கொஞ்சம் கூட பிடிக்கவில்லை கோவிந்துக்கு. ஒரு தூரத்தில் தான் இன்னும் அவள் இருக்கிறாள் என்ற நினைப்பு. ஆனாலும் அவள் கண்களில் தெரித்த வேதனை காட்டியது அவளது நெருக்கம். 'எகிறி குதித்தேன் வானம் இடிந்தது' என்ற பாடலுடன் உள்ளூர ஒரு குறுகுறுப்பு. அத்தோடு மேனேஜ் பண்ணிடுவியா என மீண்டும் நினைவூட்டினான்.

ஒரு வாரமா ... ஐயோ இதுக்கு நான் உன்னை மீட் பண்ணாமலே இருந்திருக்கலாமே. ஐ மைட் என்கேஜ் மைசெல்ஃப். ஹிம்ம்ம்ம். அம்மாவோட பழைய ஃப்ரெண்ட்ஸ்லாம் இருக்கதா சொன்னாங்க. ஆஃப்டர் மெனி இயர்ஸ், திரும்ப அவங்கள்ல சிலர மீட் பண்றதாவும் சொன்னாங்க. அங்க யாராவது பையன் கிடைக்கறானானு பார்க்கிறேன் என்றாள், கோவிந்தின் கண்களைப் பார்த்துக் கொண்டே.

நல்லா கிடைக்கட்டும், மூனு வாரமும் அவன் கூடவே சுத்திக்கோ என்று சொல்ல நினைத்தாலும், காட்டிக் கொள்ளாமல், சினிமாலாம் பார்ப்பியா என்றான்.

திசை திருப்புகிறான் என்பதை உணர்ந்து, பார்க்காதவங்க யாராவது இருக்காங்களா என்ன ? என்றாள்.

ஐ மீன், தமிழ் படங்கள்.

ஓ யா. அம்மா நிறைய பார்ப்பாங்க. நல்ல படங்கள என்னையும் பார்க்க சொல்லுவாங்க. என்னோட தமிழ் இந்த அளவிற்கு இருப்பதற்கு முதலில் என் அம்மா, பின் தமிழ் சினிமா.

அப்படியே டிப்பிக்கல் ஆக்ட்ரஸ் மாதிரியே இருக்கு உன் டயலாக்

யூ மீன் ஐம் அன் ஆக்ட்ரஸ். ஆம் ஐ ஆக்டிங் ?

சீறும் பெண் சிங்கத்தின் முன் ஆண் (சிங்கம்) பாவம் தான் அல்லவா !

கூல் டவௌன். பேருலே கூல் வச்சிகிட்டா மட்டும் போதுமா. நிஜத்தில் இருக்கணும். என்ன மாதிரி.

மேல் டாமினேஷன் கூல் டவௌன் பத்தி பேசறான் ... ஹூம்ம்ம்ம்

சரி படம் பார்ப்ப, தமிழ் பாடல்கள் கேப்பியா ?

எ லாட். பெரிய கலெக்ஷனே வச்சிருக்கேன். ரீசன்டா 'நாக்க முக்க' வரைக்கும். தோ இட்ஸ் நாட் தட் மீனிங்ஃபுல், பட் ஐ லைக் இட். உனக்கு ?!!

அப்படிப் போடுடி என் லண்டன் சீமாட்டியே என மனதிற்குள் நினைத்து, யா யா மீ டூ என்றான்.

பேசிட்டே இருக்கோம். இன்னிக்கு ஈவினிங் ஷோ சினிமா போலாமா ? எப்போதும் தயங்காத, இன்று சற்றே தயக்கத்துடன் கோவிந்தின் கேள்வி !

தொடரும் .....

11 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

யு.எஸ் போகும் முன் சினிமா வரை வந்தாச்சு. "ஓ எஸ்" சொன்னாளா இன்டி?

சதங்கா (Sathanga)said...

//யு.எஸ் போகும் முன் சினிமா வரை வந்தாச்சு. "ஓ எஸ்" சொன்னாளா இன்டி?//

ஆஹா கவித்துவமான வரிகள். ரசித்தேன் மேடம்.

ஐ திங் சோ. அநேகமா அபிராமி இல்ல சத்யத்தில தசாவதாரம் போவாங்கனு நெனைக்கறேன். :))

Ramya Ramanisaid...

அட இவ்வளவு சீக்கிரம் ஒரு பொண்ணு பழகராங்களா..ஆச்சிரியமாத்தான் இருக்கு..ஆனா இப்படியும் சில பேர் இருக்காங்க போல :) நல்லா போகுது கதை...

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

//ஆனா இப்படியும் சில பேர் இருக்காங்க போல :)//

ஆமா. அதுக்காக தானே 'இன்டி'ய‌ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி பண்ணியிருக்கிறோம் :))

அப்படி இல்லை. நாயகியின் தனிமை, தெரியாத ஊர், ஒரு நட்பு கிடைக்கும் போது, இருவருக்குமே ஆரம்பத்தில் இருக்கும் அந்த 'ட்ரஸ்ட்வொர்த்திநெஸ்'. இதெல்லாம் அங்க அங்க தெளிச்சிருக்கேனே. அதும்போக ஏன் வழவழானு இழுக்கணும் என்றதும் காரணமாக இருக்கலாம்.

//நல்லா போகுது கதை...//

மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன்said...

நாயகியின் தனிமை, தெரியாத ஊர், ஒரு நட்பு கிடைக்கும் போது, இருவருக்குமே ஆரம்பத்தில் இருக்கும் அந்த 'ட்ரஸ்ட்வொர்த்திநெஸ்'. இதெல்லாம் அங்க அங்க தெளிச்சிருக்கேனே. அதும்போக ஏன் வழவழானு இழுக்கணும் என்றதும் காரணமாக இருக்கலாம்.//

இந்த யதார்த்தமே அழகா இருக்கு சதங்கா.

ராஜ நடராஜன்said...

எனக்கு கதை கேட்டா தூக்கம் வந்திடும்.இருந்தாலும் வந்தேன் சொல்லிப்போறேன்.

சதங்கா (Sathanga)said...

//இந்த யதார்த்தமே அழகா இருக்கு சதங்கா.//

நன்றி வல்லிம்மா.

சதங்கா (Sathanga)said...

ராஜ நடராஜன்,

//எனக்கு கதை கேட்டா தூக்கம் வந்திடும்.//

கேட்டா தானே ? படிச்சாலுமா ? ;))

//இருந்தாலும் வந்தேன் சொல்லிப்போறேன்.//

அட்டென்டன்ஸ்க்கு நன்றிங்க

cheena (சீனா)said...

ரெசிடென்ஸீயில் பஃபே - கூடவே நண்பர்கள் - போட்டுக்குடுத்து விட்டார்களா - இண்டியின் மாற்றம் கோவிந்துக்குத் தெரிந்ததா - கண்களைப் பார்த்தே பேசுவது - சற்றே தயக்கத்துடன் பேசுவது - அம்மா வின் நண்பர்கள் வீட்டுலே நல்ல பையன்களைத் தேடுவது - திசை திருப்புவது - பொய்க் கோபம் - சீறுவது - மாறுவது - திரைப்படப் பாடல்களிலே தொஅடங்கி திரைப்படத்திற்கு அழைப்பது - ஆகா ஆகா - சொல்லக் கேட்டு எழுதுவது போலத் தெரியவில்லை- அனுபவமாய் இருக்க வேண்டும் அல்லது கற்பனையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என எழுதுவது - எபாடியும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

நீங்கள் அனுபவித்து அசைபோட்டு பதிவெழுதுவர் மட்டுமல்ல. மறுமொழியிலும் கூட. நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//ஆகா ஆகா - சொல்லக் கேட்டு எழுதுவது போலத் தெரியவில்லை- அனுபவமாய் இருக்க வேண்டும்//

இதே தான் தங்கமணியும் சொல்லிகிட்டே இருக்காங்க. நீங்களும் எழுதினதும் பிடித்துக் கொண்டார்கள். தினம் அப்படியா, அப்படியா தான். ஒரு கதைய அனுபவித்து எழுத விடமாட்டேங்கிறாங்கப்பா ... :))

Post a Comment

Please share your thoughts, if you like this post !