Friday, July 11, 2008

ஹூஸ்ட‌ன் ப‌ய‌ண‌ம் - 2 - நாசா விண்வெளி அர‌ங்க‌ம்

கோவிலில் இருந்து 45 நிமிட ட்ரைவில் 'கீமா' எனும் இடத்திற்கு சாயந்திரம் ஏழு மணி போல் சென்று, பார்க்கிங் கிடைக்காமல் தவித்து, கூட்ட நெரிசலில் மிதந்து, நீண்ட வரிசையில் நின்று குழந்தைகளுக்கு சில ரைட் ஏற்றி, ஃபையர் வொர்க்ஸ் பார்த்து முடிக்க இரவு மணி பத்துக்கும் மேல் ஆகிவிட்டது.

சுற்றி இருபது, முப்பது மைல் தூரத்தில் இருக்கும் ஹோட்டல்கள் எதிலும் இடம் இல்லை தங்குவதற்கு. ஆரம்பத்தில் இருந்தே அழைத்த நண்பனைத் தொல்லை பண்ண வேண்டாம் என நினைத்தால், கடைசியில் அவன் அப்பார்ட்மெண்ட்லேயே தங்கும்படி ஆகிவிட்டது.

ஜூலை 05, சனி.

நண்பனின் வீட்டின் வெகு அருகாமையிலேயே இருந்தது நாசா விண்வெளி அரங்கம். "முதலில் ட்ராம் டூர், மற்றதெல்லாம் பிறகு பாருங்கள், ஏனெனில் கூட்டம் அதிகமாகிவிடும்" என்றான் நண்பன். அதனால் முதலில் சென்றது ட்ராம் டூர். எங்களை நிற்கச்சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ராக்கெட் எல்லாம் பார்க்கப் போறோம் இல்லையா, அதனால் செக்யூரிட்டிக்காக என்று நினைத்துக் கொண்டோம்.

சிவப்பு மற்றும் ஊதா என இரு டூர் பிரிவுகள். என்ன‌ என்ன‌ இருக்கிற‌து என்று பார்த்து சிவ‌ப்புக்கான‌ வ‌ரிசையில் நின்றோம். நாங்க தான் ஃபர்ஸ்ட் :) ந‌ண்ப‌ன் கூறிய‌து போல் சில‌ நிமிட‌ங்க‌ளில் ஏக‌ப்ப‌ட்ட‌ கூட்ட‌ம்.

ஏழெட்டு பெட்டிகள் கொண்டு நீட்டாக இருந்தது ட்ராம். ஓட்டுநர், மற்றும் நடத்துநர், ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கிறார்கள். ட்ராமின் பின்னால் அமர்ந்து மைக்கில் நடத்துனர் நமக்கு விளக்கம் சொல்லிக் கொண்டே வருகிறார்.

நாசா வளாகமே ஒரு பெரிய ஊர் போல இருக்கிறது. உள்ளேயே ஏகப்பட்ட கட்டிடங்கள், சாலைகள், ட்ராஃபிக் லைட்டுகள் என. முதலில் ஒரு கட்டிடத்தில் இறக்கி விட்டனர். உள்ளே ஒரு வீடியோ காட்சி. எப்படி விண்வெளியில் போய் வேலை செய்வது என ப்ராக்டிஸ் செய்யும் 'டெஸ்ட் லாப்' மாதிரி இங்கே மண்ணிலேயே. அடடா வீடியோ பாக்கறதுக்கா இப்படி பில்டப் பண்ணி கூட்டி வருகிறார்கள் என நினைத்தால் ...

வீடியோ முடிந்தவுடன் மேலே கூட்டிச் செல்கிறார்கள். கண்ணாடி அடைப்பு வழி, பரந்து விரிந்த கூடத்தில், அத்தனையும் விண்வெளி வீரர்கள் பயிற்சி பெரும் கருவிகள், பங்கெடுக்கும் நாடுகளின் அறிவிப்புகள், விண்ணில் செலுத்திய கலங்களின் செய்திகள் என நம்மை பிரமிக்கச் செய்கிறார்கள்.

இங்கு காட்சியளிக்கும் அனைத்தையும் மாக்‍-அப் என்கிறார்கள். விண்ணுக்குச் செல்லும் விண்கலம் முதல், சர்வதேச விண்வெளிக் கூடத்தில் வசிப்பது வரை எல்லாமே இங்க செட்டிங்.

விண்ணில் இருப்பது போலவே செட்டிங் செய்து பயிற்சி பெற வேண்டும் எனும் போது, மண்ணிலும் ஒரு பொருளை '0 க்ராவிட்டியில்' பறக்கச் (மிதக்க) செய்வது போலவும் வேண்டுமல்லவா. அதற்கும் ஒரு ப்ரத்யேக அறை செய்திருக்கிறார்களாம் (அதைக் காட்டவில்லை :((). அதுவும் போக நீரிலும் இது போல சோதனைகள் மேற்கொள்வார்களாம்.

திரும்பவும் ட்ராமில் ஏறி, சிறிது தூரத்தில் அடுத்த கட்டிடம். இதன் வழியில் ஓரிடத்தில், சுற்றி வட்டமாக பதினாறு மரங்கள். அந்த‌ இடத்தில் ட்ராம் நிற்கிறது. "கொலம்பியா விண்கல விபத்தில் உயிர் துறந்தவர்களின் நினைவாய்" ப்ரெஸிடென்ட் புஷ்ஷின் ரெக்கார்டட் உரை, நம்மை ஒரு கனம் சிலிர்க்க வைக்கிறது. சில நொடிகள் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய பின் ட்ராம் நகர்கிறது.

கட்டிடத்தின் வெளியே பெரிதாய் இரு ராக்கெட்டுகள் நிற்க, அதை விடப் பெரிதாய் ஒன்றை கட்டிடத்தின் உள்ளே, மலைக்க வைக்கும் மலை போல் படுக்க வைத்திருக்கிறார்கள் !! ஆங்காங்கே செய்திக் குறிப்புகள்.

இதை முடித்து, ட்ராமில் ஏறிய இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். 45 நிமிடங்கள் போல் ஆகிறது இந்த டூருக்கு. கூடத்தினுள் நுழைகையில், அட நம்மை எடுத்த புகைப்படத்தை சில பல வடிவங்களில் ப்ரிண்ட் செய்து விற்பனை செய்கிறார்கள். 'செக்யூரிட்டி' என நினைத்ததை எண்ணி சிரித்துக் கொண்டோம்.

கூடத்தின் உள்ளே விண்வெளி பற்றி சில ஆவணப்படங்கள். விண்ணில் செலுத்தும் விண்கலம், அதைப் பார்த்து ரசிக்கும் மக்கள், டென்ஷனில் இருக்கும் அதிகாரிகள், வெற்றிகரமாக அமையும் போது அவர்கள் படும் ஆனந்தம்.

விண்வெளியில் வீரர்கள் சாப்பிடுவது, விளையாடுவது, தூங்குவது, என சில காட்சிகள். சர்வதேச விண்வெளி அரங்கம் பற்றி நிறைய பேசினார்கள். 'மார்ஸ்'க்கு மனிதனை அனுப்புவது பற்றி சொன்னார்கள். இன்னும் இருபது, அல்லது முப்பது ஆண்டுகளில் நிறைவேற்றபடும் என்றார்கள்.

பின் விண்ணிலிருந்து கொண்டு வந்த ஏகப்பட்ட பொருட்களை காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள்.

நாம் இங்கிருந்து நிலவினை பந்து போல பார்ப்பது மாதிரி, நிலவில் கால்வைத்த வீரர்களைப் போன்றும், அங்கிருந்து பூமிப் பந்து தெரிவது போலவும் செய்திருக்கும் விதம் வித்தியாசம்.

'டச் த மூன்' என்ற ஒரு கண்ணாடியினுள், ஒரு சிறு கல் போலத் தெரிந்ததில் கை வைத்துப் பார்த்தால், நம்ம ஊரு கல்லு மாதிரி தான் இருக்கு :))

குழந்தைகள் விளையாட நிறைய செய்திருக்கிறார்கள். குறிப்பாக 'பர்மீஸ் பன்ஜி (spider web)', ரங்கூன் ரோப்ஸ், மற்றும் பல‌. பெரியவர்களும் சேர்ந்து விளையாடலாம்.

ஒரு பெரிய உணவகமும் இருக்கிறது. ஒரு சுற்று நமக்கு ஏத்த மாதிரி ஏதாவது கிடைக்குதா என்று பார்த்தால். ம்.ஹூம்.

காலை சீக்கிரமே சென்று, ஒரு ஐந்தாறு மணி நேரத்தில் எல்லாவற்றையும் பார்த்து வெளியில் சென்று சாப்பிடுவது சிறந்தது.

இன்னும் ஏராளச் செய்திகள், காட்சிகள், ஆவணப் படங்கள் எனத் தாங்கி, வரும் பெருங் கூட்டத்தையும் சமாளிக்கிறது 'நாசா விண்வெளி அரங்கம்'.

நாசா படங்கள் பார்த்துட்டே இருங்க, அப்புறம் பீச்சுக்கு போகலாம், ரெடியா இருங்க.

-----


ட்ராம் உள்ளிருந்து


ட்ராம் வெளிப்புறம்


மாக்கப் விண்வெளிக் கூட‌ம்


மாக்க‌ப் விண்க‌லம்


க‌ம்பீர‌மாய் நிற்கும் இரு ராக்கெட்டுக‌ள்


ப‌டுத்திருக்கும் ராக்கெட் - பின் ப‌குதி


ப‌டுத்திருக்கும் ராக்கெட் - முன் ப‌குதி


கைய மேல தூக்கிக் காட்டுப்பா, பூமிப் பந்து அங்கே இருக்கு பாரு !


விண்வெளியில் உறங்கும் இடம்


விண்வெளிக் குளியலறை


விண்கலக் கட்டுப்பாட்டு அறை


விண்கலம் பயணிக்கும் பாதை, விண்வெளி வீரர்கள், மற்றும் மண்ணிலிருக்கும் கட்டுப்பாட்டு அறை, அதிகாரிகள் பற்றி விளக்கும் பெண்மணி.


ரங்கூன் ரோப்


பர்மீஸ் பன்ஜி

15 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

Very good, very good! நாளை எனத் தள்ளிப் போட்டது இன்றே எங்கள் பார்வைக்கா, நன்றி.

விளக்கமான தகவல்களும் அவற்றை விளக்குகின்ற படங்களும் அருமை.

அடுத்து "காத்து வாங்க வாரோம்". கவிதையா ஒரு பதிவு பாக்கப் போறோம்...:))!

Ramya Ramanisaid...

படங்கள் மிக மிக அருமை. விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடனும்,தூங்கனும், இயற்கை உபாதைகளுக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும் எல்லாம் விளக்கி சொல்வாங்க..கேக்கவே மலைப்பா இருக்கும்.நாங்க போயிட்டு வந்த அப்பறம் ஒரு பதிவு போட்டிருந்தேன். நேரம் இருக்கும் போது படிங்க

cheena (சீனா)said...

ஹா ஹா - பயணக்கட்டுரை. பள்ளியில் எக்ஸ்கர்ஷன் அழைத்துச் செல்வார்கள் - மகிழ்வாகச் செல்வோம். மறு நாள் பயணக் கட்டுரை எழுதச் சொல்வார்கள். அந்த மலரும் நினைவுகள் மகிழ்ச்சியைத் தந்தன.

சிறு சிறு செய்திகளைக் கூட விடாமல் படத்துடன் விளக்கியது நன்று.

தஞ்சாவூரான்said...

ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போன இடங்களில் இதுவும் ஒன்று. எப்படியோ, பணம் பண்ணுவது எப்படின்னு அமெரிக்காகாரன் கிட்டேதான் கத்துக்கனும். ஒரு தடவை போய் பார்க்கலாம் :)

Vassansaid...

நன்றாகவுள்ளது நேசா பற்றிய உங்கள் பதிவு. உணவகங்களில் புதிய உணவுகளை முயன்று பாருங்கள்,ஆச்சரியங்கள் இருக்கலாம்-தாவர உணவையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

அமேரிக்கா பற்றி வெறும் காறி துப்பலாக இல்லாமல், அமேரிக்க வெள்ளி மீது மட்டும் பற்றுதல் கொண்ட சில சிறுமதியாளர்கள் போன்றில்லாமல் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. இதமாக உள்ளது; வாழ்த்துகள்.

சதங்கா (Sathanga)said...

நாசாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள் பல. பொறுமையாய் வந்து பதிலிடுகிறேன் அனைவருக்கும் !

பிரேம்ஜிsaid...

ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.நிறைய விஷயம் தெரிஞ்சிகிட்டேன்.

Deivasaid...

interesting information about NASA. would like to come visit there

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//Very good, very good! நாளை எனத் தள்ளிப் போட்டது இன்றே எங்கள் பார்வைக்கா, நன்றி.//

ஆமா. ஆமா.

//விளக்கமான தகவல்களும் அவற்றை விளக்குகின்ற படங்களும் அருமை.//

நன்றி. நன்றி.

//அடுத்து "காத்து வாங்க வாரோம்". கவிதையா ஒரு பதிவு பாக்கப் போறோம்...:))!//

பொறுங்க. பொறுங்க. :))

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

//படங்கள் மிக மிக அருமை. //

ரொம்ப நன்றிங்க.

//நாங்க போயிட்டு வந்த அப்பறம் ஒரு பதிவு போட்டிருந்தேன். நேரம் இருக்கும் போது படிங்க//

கண்டிப்பா, படிச்சிட்டு சொல்றேங்க ! ஆமா சுட்டி கொடுக்கலையே :))

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//ஹா ஹா - பயணக்கட்டுரை.//

எதுக்கு ஹா ஹா. பள்ளிக் குழந்தை போல் எழுதியிருக்கிறேன் என்ற காமெடி தான ?!! :)))

//அந்த மலரும் நினைவுகள் மகிழ்ச்சியைத் தந்தன.//

மலரும் நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சி கொண்டது குறித்து சந்தோசமே.

//சிறு சிறு செய்திகளைக் கூட விடாமல் படத்துடன் விளக்கியது நன்று.//

ஆமா. எல்லாம் உங்களுக்காகவே. மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

தஞ்சாவூரான்,

//ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போன இடங்களில் இதுவும் ஒன்று.//

எங்களைப் பொறுத்தவரை இக்காட்சிகள் வெளியில் எங்கும் பார்க்க முடியாது. அதனால், நீங்க சொன்ன ....

// ஒரு தடவை போய் பார்க்கலாம் :)//

க்கு ஒரு ரிப்பீட்டேய்ய்.

சதங்கா (Sathanga)said...

வாசன்,

//உணவகங்களில் புதிய உணவுகளை முயன்று பாருங்கள்,ஆச்சரியங்கள் இருக்கலாம்-தாவர உணவையும் சேர்த்துதான் சொல்கிறேன்.//

அடுத்த முறை (எப்போ ?! :)) போகும்போது முயற்சிக்கிறோம்.

//அமேரிக்கா பற்றி வெறும் காறி துப்பலாக இல்லாமல், அமேரிக்க வெள்ளி மீது மட்டும் பற்றுதல் கொண்ட சில சிறுமதியாளர்கள் போன்றில்லாமல் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. இதமாக உள்ளது; வாழ்த்துகள்.//

ஆஹா ரொம்ப ப்ராக்டிகலான வரிகள். பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

பிரேம்ஜி

// ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.நிறைய விஷயம் தெரிஞ்சிகிட்டேன்//

நன்றிங்க. நாசா இதுவரை பார்க்காம இருந்தீங்க என்றால் கண்டிப்பா ஒரு முறை பாருங்க.

சதங்கா (Sathanga)said...

Deiva

// interesting information about NASA. would like to come visit there//

ஆமா, நான் சொன்னது ரொம்ப சிலது மட்டும் தான். இன்னும் நிறைய இருக்கிறது, அவசியம் சென்று பாருங்கள்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !