என்ன விலை அழகே - 2
இரண்டாயிரத்து மூனோ, நாலோ சுனாமி வந்துச்சு தெரியுமா ?
ஆமா, இப்போ அதுக்கு என்ன ?
யூ வோன்ட் பிலீவ், அதுக்கு முதல் நாள் இதே கடற்கரையில இந்த மாதிரி தான் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தோம் நண்பர்கள் சிலர். அடுத்த நாள் நான் யூ.எஸ் கெளம்பறேன். ப்ஃப்ளைட்ல முப்பது மணி உக்கார்ந்து போரடிச்சு, கீழ இறங்கினவுடன், ஹோட்டலுக்கு டாக்சி பிடித்தேன். நான் இந்தியால இருந்து வர்ரேன் என்று சொன்னவுடன் டாக்சிகாரன் கேக்கரான் சுனாமி பத்தி. முதலில் ஏதோ சின்ன டிஸாஸ்டரா இருக்கும் என்று நினைத்தால், அவன் சொல்ல சொல்ல எனக்கு திகிலெடுக்க ஆரம்பித்தது.
ஹோட்டலுக்குப் போய்ட்டு மொத வேலையா மளிகைக்கடைக்கு போன் அடிச்சேன். நண்பர்கள் நலமெல்லாம் விசாரித்து, நாங்க தினம் போற கடற்கரை ரோடெல்லாம் கடல் தண்ணிடானு பசங்க சொல்றது கேட்டு செம த்ரில்லிங். நல்ல வேளை மளிகைக் கடை வீடு ஒரு நாலஞ்சு தெரு தள்ளி தான் இருந்தது.
சரி இப்போ எதுக்கு அதுபத்தி சொல்ற.
காரணம் இருக்கு. சொல்லி முடிச்சுக்கறேன், அப்புறம் பேசு.
'சுத்த மேல் டாமினேஷன்' மனதிற்குள் திட்டி, புன்னகை பூத்தாள்.
நாங்க வந்த மறுநாள், நாம் நிக்கறோமே இங்கெல்லாம் நமக்கும் மேல தண்ணியாம். அடுத்த நாள் இங்க வந்திருந்தா என்ன ஆகியிருக்கும் !
என்ன ஆகியிருக்கும் ?!
என்ன, இன்னிக்கு உன்னைப் பார்த்திருக்க முடியாது என்றான் மெல்லிய சிரிப்போடு. நானும் அதுக்கப்புறம் எத்தனையோ முறை இங்க வந்திருக்கேன். ஆனா இப்ப தான் சுனாமி ஞாபகம் வருது. ஆங். காரணம் சுனாமி தான்.
வாட் டூ யூ மீன்
அன்னிக்காவது மறு நாள் சுனாமி வந்ததது. இன்னிக்கு, கூடவே வந்திருக்கே !
அன்னிக்கு வந்த சுனாமி பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இன்னிக்கு வந்திருக்க சுனாமி என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துது.
புரியல ?!
சரி விடு, பெருசா ஒன்னும் இல்ல, அப்புறம் பேசலாம் இது பத்தி. நானே பேசிட்டு இருக்கேன். நீ ஒன்னும் சொல்ல மாட்டேங்கறே ? ஆங்கிலம் கலந்த உன்னோட தமிழ் லவ்லி. அத கேக்கறதுக்காக காத்துகிட்டு இருக்கேன். தமிழ் நல்லா பேசற. படிக்கத் தெரியுமா ?
மேல் டாமினேஷன் என்று திட்டினாலும் கோவிந்தின் வரிகள் அவளை கிறங்கடித்தது.
ஓரளவுக்குத் தெரியும். அம்மா சொல்லித் தந்திருக்காங்க. லண்டன்ல சில நாவல்கள் வீட்டில வச்சிருக்கோம். கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன் இவங்கள்ளாம் அம்மாவோட ஃபேவரிட்ஸ். எனக்கு இதெல்லாம் அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்லை.
வேற எதெல்லாம் இன்ட்ரஸ்ட் ?
ஆர்ட். கலைகள் பிடிக்கும்.
இங்க இருந்து வாங்கிட்டு போற கலைப் பொருட்கள் பெரிய லிஸ்டே வச்சிருக்கேன்.
பர்ஸை தொட்டுப் பார்த்துக் கொண்டான் கோவிந்த்.
டெரகோட்டா ரொம்ப ரொம்ப பிடிக்கும். லிஸ்ட்ல எது வாங்கறனோ இல்லையோ டெரகோட்டா வாங்காமப் போறதில்லை.
வாங்கிட்டாப் போச்சு, அப்புறம் ?
நான் நெனச்சத விட சென்னை ரொம்ப ஹாட்டா இருக்கு. வந்து ரெண்டு நாள் தான் ஆகுது. சரியான போரு. எங்கயும் வெளியில போக முடியல. இன்னிக்கு என்னை இந்த அழகான கடற்கரைக்கு கூட்டிட்டு வந்ததற்கு ரொம்ப தாங்கஸ்.
அழகே அழகுனு சொல்லும்போது இன்னும் அழகாத் தான் இருக்கு என்று மனதுள் நினைத்துக் கொண்டான் கோவிந்த்.
எப்படி இங்க டைம் ஸ்பெண்ட் பண்ணப் போறோம்னு தவிச்சேன். இனி ஊருக்கு போர வரைக்கும் எனக்குக் கவலை இல்லை.
என்னிக்கு ஊருக்குப் போறே ?
இன்னும் மூனு வாரத்தில.
அப்பாடா என்று பெருமூச்சு விட்டான்.
சரி நாளைக்கு எங்க போகலாம் ?
ரொம்ப உரிமை எடுத்துக்கற நீ. தினம் எல்லாம் முடியாதும்மா. ரெண்டு மூனு நாளைக்கு ஒரு தரம் வேணா இதே போல ஈவ்னிங் எங்காவது போகலாம். ஓகே ?!
பேசிக் கொண்டிருக்கும் போதே கோவிந்தின் செல் சிணுங்கியது.
யாரு ... கார்த்தி இல்ல கிருபாவாத்தான் இருக்கும் என்று நினைத்தான். ஆனால் செல்லில் அவனது மேலாளர் ஹரி.
ஹரி சார் ... சொல்லுங்க ....
தொடரும் .....
8 மறுமொழி(கள்):
நன்றாகச் செல்கிறது கதை.
//பர்ஸை தொட்டுப் பார்த்துக் கொண்டான் கோவிந்த்.//
தேவைதானா அவருக்கு..:)? சரி "என்ன விலை அழகே" என்ற தலைப்பைப் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் (சொன்ன விலைக்கு வாங்க) தயாராகத்தான் இறங்கியிருக்கணும் கோவிந்து:)!
கதை நல்லா போகுது. ஜமாய்ங்க. லண்டன் பொண்ணுங்க ஒரு சாட் பண்ணிட்டு உடனே பார்க்க வந்துருவாங்களா என்ன? இந்தியாவுல வளர்ர பொண்ணு/பசங்க மாதிரி அவ்ள ஃபாஸ்ட் இல்லைன்னு கேள்வி.... :-)
வாங்க அவர் தயார? இரூஉந்தாலும் அந்தப் பொண்ணு எப்படியோ.:)
சதங்கா, அந்தப் பொண்ணை பத்திரமா
லண்டனுக்கு அனுப்பிருங்க:)
ராமலஷ்மி மேடம்,
//(சொன்ன விலைக்கு வாங்க) தயாராகத்தான் இறங்கியிருக்கணும் கோவிந்து:)!//
பின்னே. அதெல்லாம் கோவிந்த் ரெடி டூ பே. செலவு பண்றாரானு பொறுத்திருந்து பார்ப்போம் :))
நாகு,
//லண்டன் பொண்ணுங்க ஒரு சாட் பண்ணிட்டு உடனே பார்க்க வந்துருவாங்களா என்ன?//
அடுத்த பகுதியில் இதற்கான விடை இருக்கிறது :) படித்துப் பாருங்கள்.
வல்லிம்மா,
வரணும். பயணக் களைப்பையும் மறந்து வந்திருக்கீங்க.
//வாங்க அவர் தயார? இரூஉந்தாலும் அந்தப் பொண்ணு எப்படியோ.:)//
அதானே. தொடர்ந்து என்னவெல்லாம் நடக்கிறதுனு பார்ப்போம்.
//சதங்கா, அந்தப் பொண்ணை பத்திரமா
லண்டனுக்கு அனுப்பிருங்க:)//
நிச்சயமா. ஒரு உண்மை சம்பவத்த அடிப்படையா வச்சு தான் கதையை ஆரம்பித்தேன், அதில் கதாநாயகன் தான் பாதிக்கப்பட்டிருக்கான். பட் சரி, அதெல்லாம் எதுக்கு, விட்டுடலாம். கதை நல்லா தான் போகும். கவலையே படாதீங்க. சரியா.
ஆகா கட நல்லாப் போகுது - மேல் டாமினேஷன் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும் - ஆமா - அழகே அழகுன்னு ரசிக்கற கடற்கரையிலே சுத்தும் போது எப்படி எல்லாம் கதா நாயகன் பேசுறான் - கதாசிரியரின் நண்பர்கள் சொன்னதெ இப்படி கற்பனை கலந்து தூள் கிளாப்புறாரா ?
நாகு - உங்கள் மறுமொழியில் பொருட்குற்றம் இருக்கிறது
சீனா ஐயா,
//கதாசிரியரின் நண்பர்கள் சொன்னதெ இப்படி கற்பனை கலந்து தூள் கிளாப்புறாரா ? //
ஆமா. நண்பர்களின் செயல்கள் + இயல்பு + கற்பனை கொஞ்சம் = இக்கதை.
Post a Comment
Please share your thoughts, if you like this post !