Tuesday, July 8, 2008

இல்லங்கள் இன்றைய நிலை ...

அடுக்கு மாடி வீடுகளில்
ஆயிர மாயிரம் குடும்பங்கள்

அழகாய் நகர் அமைத்து
அதில் வாழும் குடும்பங்கள்

பெரியதொரு பங்களாக்களில்
சிலர் வாழும் குடும்பங்கள்

நீண்டு உருண்ட நீர்க்குழாய்களில்
ஒண்டி வாழும் குடும்பங்கள்

தெருவோர நடைவெளியில்
தேங்கி வாழும் குடும்பங்கள்.

-----

வயதான பெரியோருக்கு
திண்ணைக் குடியிருப்பு

வங்கி ஊழியருக்கு
பால்கனிக் குடியிருப்பு

அரசு அலுவலருக்கு
இலவசக் குடியிருப்பு

இன்ன பிற ஆட்களுக்கு
வீட்டிலேயே எங்காவது குடியிருப்பு

ஆனால் ...

ஐ.டி. வாசிக்கோ
அலுவலகமே குடியிருப்பு :)

-----

நண்பர்களே ! சமீபத்திய பயணம் பற்றிய (சில பாகங்கள்) நீண்ட கட்டுரை ஒன்று தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் முதன் முதல் பயணக் கட்டுரை !

ப்லாக் தூங்குதே என்பதற்காக இச் சிம்பிளான சிறு கவிதை உங்கள் பார்வைக்கு.

18 மறுமொழி(கள்):

Deivasaid...

Nice Song. Especially I liked the last one about IT

வல்லிசிம்ஹன்said...

சிம்பிளான கவிதை. உண்மையான வார்த்தைகள். பெரியோர்களுக்குத் திண்ணை!!!!!!!!!!

ராமலக்ஷ்மிsaid...

"எதைச் சொல்ல எதை விட" என பாராட்ட திணற வைக்கும் கவிதை. வல்லிம்மா சொல்லிய மாதிரி உண்மையான வார்த்தைகள். முதல் பாகத்தின் முதல் மூன்று பத்தி சமுதாயத்தின் ஒரு பக்கமான உயர் மட்டத்தைச் சொல்ல [குறிப்பாக
//பெரியதொரு பங்களாக்களில்
சிலர் வாழும் குடும்பங்கள்//
அடுத்த இரண்டும் அடி மட்ட வாழ்வின் அவலத்தை ஏழ்மையை
//நீண்டு உருண்ட நீர்க்குழாய்களில்
ஒண்டி வாழும் குடும்பங்கள்

தெருவோர நடைவெளியில்
தேங்கி வாழும் குடும்பங்கள்.// என
எளிமையான வார்த்தைகளில் புரிய வைக்கின்றன.

குடியிருப்பு....வரிசையிட்டு வந்து ...அப்படியே எங்கு வந்து நிற்குது பாருங்க:))))! பாராட்டுக்கள் சதங்கா!

//ப்லாக் தூங்குதே என்பதற்காக இச் சிம்பிளான சிறு கவிதை உங்கள் பார்வைக்கு.//

அப்பப்போ தரலாமே சிறுகவிதை ஸ்நாக்ஸ்:)! விருந்து (பயணக் கட்டுரை) ரெடியாகும் வரை நாங்கள் கொறித்து மகிழ..:)!

நாகு (Nagu)said...

//ஐ.டி. வாசிக்கோ
அலுவலகமே குடியிருப்பு :)//

Telecommute செய்பவர்களையும் வீட்டிலிருந்து ஆணி பிடுங்குபவர்களையும் ஒரு திட்டு திட்டவும் :-)

Ramya Ramanisaid...

ஐ.டி. வாசிக்கோ
அலுவலகமே குடியிருப்பு :)

100% கரெக்ட்

தமிழ்said...

கோர்வையாக
இயல்பாக
அழகாக இருக்கிறது

/ப்லாக் தூங்குதே என்பதற்காக இச் சிம்பிளான சிறு கவிதை உங்கள் பார்வைக்கு./

:)))))))))

Anonymoussaid...

தூங்கும் ப்லாக்கை சிம்பிளான கவிதையால்
அலறி அடித்து விழிக்க வைத்துவிட்டீர்கள்!!
சதங்கா!
ரெண்டுபேர் வாழ பெரிய பங்களா!
பத்துபேர் சேர்ந்துவாழ ஒண்டுகுடித்தனம்!
ஆனால் ஒண்டுகுடித்தனத்தில் துள்ளும் ஜீவன்,உயிர்ப்பு, கலகலப்பு,சந்தோசம்....பங்களாவில் மிஸ்ஸிங்!

Anonymoussaid...

:))))

சதங்கா (Sathanga)said...

Deiva,

//Nice Song. Especially I liked the last one about IT//

Thanks a lot for the visit and thoughts.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//சிம்பிளான கவிதை. உண்மையான வார்த்தைகள். பெரியோர்களுக்குத் திண்ணை!!!!!!!!!!//

கவிதையை ரசித்து பின்னூட்டியதற்கு நன்றி.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//"எதைச் சொல்ல எதை விட" என பாராட்ட திணற வைக்கும் கவிதை.//

இங்கயும் அதே கதை தான். எத காப்பி பேஸ்ட் பண்ணி பதிலிடலாம்னு பார்த்தா ஏகப்பட்ட பாராட்டு மழை தான் :))) நெறைய தடவ உங்க பின்னூட்டம் படிச்சிட்டேனாக்கும்.

//
அப்பப்போ தரலாமே சிறுகவிதை ஸ்நாக்ஸ்:)! விருந்து (பயணக் கட்டுரை) ரெடியாகும் வரை நாங்கள் கொறித்து மகிழ..:)!//

கண்டிப்பா, அடுத்து உருவாகிறது என் பாட்டி பற்றி ஒரு கவிதை ...

சதங்கா (Sathanga)said...

நாகு,

//Telecommute செய்பவர்களையும் வீட்டிலிருந்து ஆணி பிடுங்குபவர்களையும் ஒரு திட்டு திட்டவும் :-)//

தனியாத் தான் ஒரு கவிதை எழுதணும் இவங்களுக்கு :)))

சதங்கா (Sathanga)said...

ரம்யா ரமணி,

//100% கரெக்ட்//

நூறு சதவிகிதத்துக்கு நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

திகழ்மிளிர்,

//கோர்வையாக
இயல்பாக
அழகாக இருக்கிறது//

ரசித்துக் கவிதை போன்ற பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

சதங்கா (Sathanga)said...

நானானி மேடம்,

//தூங்கும் ப்லாக்கை சிம்பிளான கவிதையால்
அலறி அடித்து விழிக்க வைத்துவிட்டீர்கள்!!
சதங்கா!//

ஹா ஹா ஹா ... ரசிக்க வைக்கும் வரிகள் :)

//ரெண்டுபேர் வாழ பெரிய பங்களா!
பத்துபேர் சேர்ந்துவாழ ஒண்டுகுடித்தனம்!
ஆனால் ஒண்டுகுடித்தனத்தில் துள்ளும் ஜீவன்,உயிர்ப்பு, கலகலப்பு,சந்தோசம்....பங்களாவில் மிஸ்ஸிங்!//

சர்வ நிச்சயம். ஒரு பெரிய (பங்களான்றதாலேயோ) gap வந்திருதில்ல ?!!!

சதங்கா (Sathanga)said...

அனானி,

ஸ்மைலிக்கு நன்றி.

cheena (சீனா)said...

சதங்கா

கவிதை அருமை

அடுக்ககங்களில் குடியிருக்கும் ஆயிரமாயிரம் குடும்பங்களுக்கு அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதே தெரியாது. நீர்க்குழாய்களிலும் தெருவோரங்களிலும் வாழும் குடும்பங்களுக்கு அரசு தான் ஏதாவது செய்ய வேண்டும்

பணியாளர்களைப் பற்றிய சிந்தனை நன்று. அதென்ன வங்கிப் பணியாளர்கள் -பால்கனி. ம்ம்ம்ம்ம்ம் -

கணினித்துறையாளர்களுக்கு எவ்வளவு வசதிகள் - பிளெக்ஸி டைமிங், வீட்டிலலிருந்த படியே பணி செய்யும் வசதி - அதற்கேற்றபடி டாலரில் ஊதியம் - என்ன செய்வது - 23 மணி நேரம் அலௌவலில் இருக்க வேண்டிய கட்டாயம்.

நன்று நன்று

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

//
பணியாளர்களைப் பற்றிய சிந்தனை நன்று. அதென்ன வங்கிப் பணியாளர்கள் -பால்கனி. ம்ம்ம்ம்ம்ம் -//

வீட்டில் அவர்களுக்குப் பிடித்த இடம். அப்படி சேர இழுத்துப் போட்டு பால்கனியில் அமர்ந்து கொள்வர். அதான். அடடே நான் உங்களைச் சொல்ல வில்லை :))) பொதுவான ஒரு கருத்து !

//கணினித்துறையாளர்களுக்கு எவ்வளவு வசதிகள் - பிளெக்ஸி டைமிங், வீட்டிலலிருந்த படியே பணி செய்யும் வசதி - அதற்கேற்றபடி டாலரில் ஊதியம் - என்ன செய்வது - 23 மணி நேரம் அலௌவலில் இருக்க வேண்டிய கட்டாயம்.//

இது தான் தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளுவது என்பதோ ?! எல்லாம் "டாலர் படுத்தும் பாடு".

Post a Comment

Please share your thoughts, if you like this post !