Monday, June 30, 2008

வலையில் விழுந்து விட்டேன்

சமீபத்தில் ராமலஷ்மி மேடம் அவர்களின் பதிவில் (மெகா முதலைகள்), அநேக மூத்த, இளைய பதிவர்கள் வலையில் விழுந்து விட்டோம் என்று சொன்னதைப் படித்து விளைந்த பாடல். பாடலைக் கீழ்க் கண்ட படத்தில் உள்ள பாடல் மெட்டில் படித்து இன்புறுங்கள்.

அப்படியே ஒரு வரி, எப்படி இருக்குனு சொன்னிங்கன்ன்னா, ப்லாகுல விழுந்த புண்ணியம் உங்களுக்கும் உண்டு :))

-----

படம்: (ஸ்டூடன்ட்) ப‌திவ‌ர்
பாடியவர்கள்: S.P.B.சரண், சித்ரா

-----

என் எழுத்துக்க‌ளைப் பிரசுரிப்பவன் நீ தான் என்று
ந‌ல்ல‌ ந‌ட்புக்க‌ளைத் தேடித் த‌ரும் தோழ‌ன் என்று

எனக்குத் தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே
ப்லாகிற்குள்ளே ப‌திவ‌ர்க‌ளே விழுந்து எழுகிறேன்

விழாமலே இருக்க முடியுமா
விழுந்து விட்டேன் ப்லாக் வ‌லையிலே !

நிஜம் தான் நிஜம் தான்
இங்கு பாச‌ங்க‌ளின் தொல்லை தாங்க‌ல‌

விழாமலே .....

ப்லாகுகுள்ளே உள்ள‌தென்ன‌ என்ன‌ ச‌க்தியோ
பக்கம் பக்கமாக பதிய‌ இழுக்கும் காந்த சக்தியோ

ஓஓஓஓஓ .....

ப‌திவின் த‌லைப்பினிலே வைக்க‌ வேண்டும் ம‌ந்திர‌ச் சொல்லோ
படித்தவுடன் வந்து விழும் பின்னூட்டங்களின் குவியலோ

ப்லாகு ஒரு ப‌ர‌ம‌ப‌த‌ம்
த‌ட்ட‌ச்சிட‌ ப‌திவு விழும்

ப்லாகு .....

பதிவு மேல பதிவு போட‌
பின்னூட்டங்கள் குவிந்திருந்தால்

விழாமலே .....

வாசகர் எண்ணிக்கை பெருகிடுமா என்று நினைத்தாலும்
பதிவுகளைப் பதியும் போது ஆனந்த நடனம்

ஓஓஓஓஓ .....

என் பதிவு உந்தன் மனதைத் தொட்டால் அற்புத நடனம்
பின்னூட்டங்களின் அணிவகுப்பில் கோடி சஞ்சலம்

பதிந்திருந்தால் வாழ்வு ருசி
பதிவருக்கு ஒரே குஷி

ப்லாகு வந்து வலையை விரிக்கும்
மாட்டிக் கொண்டு நீ பதி

விழாமலே .....

8 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

வலையில் விழுந்து பதிவைப் பார்த்து மறுமொழியில் மலர்ந்த நட்பே!

கீழ்கண்ட பாடல் மெட்டில் முணுமுணுக்கவும்.
பாடல்:" விழியில் விழுந்து.."
படம்: அலைகள் ஓய்வதில்லை.

உங்கள் பாடல் அசத்தல் சதங்கா!

cheena (சீனா)said...

oooo அருமை அருமை - பதிவும் அருமை - மறுமொழியும் அருமை

இருவருக்கும் நல்வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//வலையில் விழுந்து பதிவைப் பார்த்து மறுமொழியில் மலர்ந்த நட்பே!//

ஆஹா அற்புதம். சிம்ப்ளி சூப்பர்.

நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க. கொஞ்ச நாளாவே இந்த மெய்ன் பாட்டு என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. என்னமா ரசிச்சு கவிஞன் எழுதியிருக்கான் என்று வியந்து கொள்வேன்.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//இருவருக்கும் நல்வாழ்த்துகள்//

பாடலை ரசித்து, மறுமொழியையும் ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல.

ராமலக்ஷ்மிsaid...

//கொஞ்ச நாளாவே இந்த மெய்ன் பாட்டு என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.//

ரொம்ப நாளே ஓடும் இந்த..."வலைகள் ஓய்வதில்லை", வெற்றித் திரைப் படமாக:))!

சீனா said...
//இருவருக்கும் நல்வாழ்த்துகள்//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சீனா சார்!

வல்லிசிம்ஹன்said...

பாட்டில் சொ?ன்ன அத்தனையும் உண்மை சதங்கா. பாடவும் வைத?துவிட்டீர்கள். ராமலக்ஷமி இசைப்படுத்தியது இன்னும் சூப்பர்:)

வல்லிசிம்ஹன்said...

ரொம்ப நாளே ஓடும் இந்த..."வலைகள் ஓய்வதில்லை", வெற்றித் திரைப் படமாக:))!


ஆமென்:)

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா வரணும்.

// பாட்டில் சொ?ன்ன அத்தனையும் உண்மை சதங்கா. பாடவும் வைத?துவிட்டீர்கள். ராமலக்ஷமி இசைப்படுத்தியது இன்னும் சூப்பர்:)//

மிக்க மகிழ்ச்சி. ஆமா அவர்கள் எடுத்துக் கொடுக்க அதை வைத்து அடுத்து ஒரு கவிதையும் போட்டேனே, நேரம் இருக்கும்போது பாருங்கள்.

// ரொம்ப நாளே ஓடும் இந்த..."வலைகள் ஓய்வதில்லை", வெற்றித் திரைப் படமாக:))!

ஆமென்:)//

கண்டிப்பா நல்ல விதமா தொடரும்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !