Monday, July 28, 2008

என்ன‌ விலை அழ‌கே - 4

நாளைக்கேவா ?! உடனே கெளம்பு என்றால் நான் என்ன செய்வேன் ?

என்னைய்யா எப்பவும் இல்லாம இப்ப இப்படி சொல்ற ? சரி எத்தன நாள் அவகாசம் வேண்டும் ? ரெண்டு மூனு நாள் ?

ப‌ழைய‌ கோவிந்தாய் இருந்தால் இந்நேர‌ம் பேக்கிங்கில் இற‌ங்கியிருப்பான். இன்டி மேல் அப்ப‌டி என்ன‌ ஈர்ப்பு ?! மாலினி, ந‌ந்தினி, ப‌த்மினி என‌ மினிமினிக்க‌ளுட‌ன் சுற்றும் போதெல்லாம், முத‌ல் முறை ப‌ர‌வ‌ச‌மாய் இருக்கும், அப்புறம் சே என்றாகி விடும். அதுபோல‌த் தான் இதுவுமா ? ஜ‌ஸ்ட் லைக் த‌ட் ? டைம் பாஸ் ?!

த‌ன‌க்குள் கேள்விப் பிர‌வாக‌மெடுக்க, க‌ளைப்பில் உற‌ங்கிப் போனான்.

முடியாது ஹ‌ரி சார். என்னை ல‌ண்ட‌னுக்கு வேணா அனுப்புங்க‌. இந்த‌ நேர‌த்தில் யு.எஸ். வேண்டாம்.

கோவிந்த் தூக்கத்தில் கொஞ்ச‌ம் உர‌க்க‌ பினாத்த‌வே, ப‌த‌றி எழுந்தான் கார்த்தி. கிருபாவை த‌ட்டி எழுப்பி, டேய் அங்க பாருடா ! நம்ம‌ ம‌ச்ச‌க்காரன ... புதுசா தூக்க‌த்தில் பித‌ற்ற ஆர‌ம்பிச்சிருக்கான். இன்னிக்கு அப்ப‌டி யாரு கூட‌ சுத்திட்டு வ‌ந்திருப்பான் ?! ல‌ண்ட‌னுக்கு அனுப்புங்க‌னு சொல்றான். நாளைக்கு பார்த்துக்க‌லாம் இவ‌ன‌.

வ‌ழ‌க்க‌ம் போல‌ முதலாவதாய் எழுந்து, வாய் கொப்ப‌ளித்து, முக‌த்தில் குளிர்ந்த‌ நீர் சில‌முறை தெளித்து, ப்ர‌ஷ் பண்ணலாம் என ப்ரஷ் எடுக்க‌ப்போன‌வன், அத‌ன‌ருகில் சிறு காகித‌த் துண்டு, இவ‌ன் க‌வ‌ண‌த்தைக் க‌வ‌ருவ‌து போல‌வே இருக்க‌, அத‌னை எடுத்து பிரித்தான்.

'next' என்று மட்டும் இருந்தது அதில். என்னதிது ?! சில விநாடிகள் யோசனையில், ஒன்னும் புரியல, என்று கசக்கி குப்பையில் போட்டான்.

கப்போர்ட் திற‌ந்து ஷேவிங் க்ரீம் எடுக்கப் போன இடத்தில், அதே போல் ஒரு காகித மடிப்பு. அதிலும் 'next' என்று மட்டும் இருந்தது.

அடடா ட்ரஷர் ஹண்ட் மாதிரியில்ல இருக்கு. யாரு வேலை இது ?! காலங்கார்த்தால என்ன பெரிய கண்டுபிடிப்பு பண்ண சொல்றானுங்க. டேய் எழுந்திரிடா என்று சுருண்டிருந்த கிருபாவை முதுகில் தட்டி, போர்வையை விரைந்து இழுத்தான்.

என்னடா 'next' 'next'னு பிட்டு பிட்டா அங்க அங்க போட்டு வச்சிருக்க. என்னாது இதெல்லாம் என கோவிந்த் கேட்க ...

நீ எந்த 'next'ல இருக்க இப்போ, இல்ல கடைசி 'next' வரைக்கும் போய்ட்டியா என்றான் கண்களை கசக்கிக் கொண்டே கிருபா.

டேய் அவனையே ஏன் வாட்டற. இந்தா உன் வாடலை இதுல கேளு என்று கார்த்தி தன் செல்லை கோவிந்தை நோக்கி வீசினான். ரெக்கார்ட‌ட் மெஸேஜ் போ, அதில‌ மூனாவ‌த கேளு.

"முடியாது ஹ‌ரி சார். ல‌ண்ட‌ன் வேணா போறேன் ...
...
இப்பணு பார்த்து யு.எஸ். போக சொல்றானே ... ஹேய் இன்டி ல‌ஞ்ச் வ‌ந்திரு அவசியம்."

மச்சி என்னடா இதெல்லாம் ? கோவிந்தா ... நீ தானாடா இப்படி ?!! த பாரு உனக்கு சொல்லணுமா என்ன ? இதெல்லாம் ஆரம்பத்திலேயே முற்று புள்ளி வச்சிரு. இல்ல புள்ளி வச்சி கோலம் போடலாம்னு நெனச்சே அது காம்ப்ளிகேட்டட் ஆகிடும் சொல்லிட்டோம்.

உன் லைஃப் தான் பெட்டர்னு நாங்க நெனச்சிட்டு இருக்கோம். நீ என்னடானா ... பாரு 'கிருபா'வ. ரெண்டு மாசம் தான் மாயா பின்னாடி சுத்தறான். உருகி ஓடா தேஞ்சிட்டான். ஒடிசலா தேமேனு இருந்தவ பளபளனு இருக்கா இப்ப.

உங்க கிட்ட நான் கேட்டனா ? இல்ல ஏதாவது சொன்னனா ? எனிவே தாங்க்ஸ் ஃபார் யுவர் ஃப்ரீ அட்வைஸ். 'டேய், டேய் ... எனக்கும் ஒரு காலம் வராமலா போயிடும்' என்று மெஸேஜை டெலிட் பண்ணப் போனான் கோவிந்த்.

சட்டென செல்லைப் பறித்த கார்த்தி, அதெப்படி ... அடுத்த முறை நீ லண்டன மீட் பண்ணும் போது நாங்களும் இருப்போம். சரின்னா சொல்லு, அதுக்கப்புறம் இத டெலிட் பண்ணிடலாம். இல்லேன்னா ...

இல்லேன்னா ?

முதல் சுற்று, உன் நெருங்கிய தோழிகளுக்கு இந்தச் செய்தி அனுப்பப்படும். துவம்சம் பண்ணிட மாட்டாங்க ?!

தொடரும் .....

6 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

தங்களது 'டீல் மா கண்ணு" கதையைப் போலவே இதுவும் உண்மைச் சம்பவத்தை அடிப் படையாகக் கொண்டது என நீங்கள் சொல்லியிருக்கா விட்டாலும் கூட வாசிப்பவர்களுக்கு அப்படி தோன்ற வைத்து விடும், நண்பர்கள் கோவிந்துக்கு (அரட்டல் உருட்டலுடன் :) என்றாலும் கூட) நிஜமான அக்கறையுடன் வழங்கும் அறிவுரைகள்.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

ஆமாம். சில நேரம் நண்பர்கள் தான் உதவி. பல நேரங்களில் அன்புத் தொல்லைகளில் ஆட்படுத்தி விடுபவர்களும் அவர்களே :)) இத விரிவா சொன்னா அப்புறம் கதையில ஒன்னும் (ஏற்கனவே என்ன இருக்குனு நெனைப்பீங்க) இருக்காது :))))

வல்லிசிம்ஹன்said...

பசங்க வாழ்க்கையை அப்படியே கண் முன்னால் நிகழ வைக்கிறீங்க சதங்கா. இந்த உலகம் நான் பார்க்காதது.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//இந்த உலகம் நான் பார்க்காதது.//

என்ன இருக்கு, டூர் எல்லாம் முடிச்சிட்டு ஊருக்கு போனவுடன் சிங்கத்த டேக் கேர் பண்ண சொல்லுங்க :))

பி.கு. நான் சொன்னேன் என்று அவரிடம் சொல்லிடாதீங்க ப்ளீஸ்.

cheena (சீனா)said...

பல மின்மினிக்களுடன் பழகிய கோவிந்த் - அறைத்தோழர்களுடன் இயல்பாஉப் பழகும் கோவிந்த் - நிறுத்தாவிடில் துவம்சம் தான் - ஆகா ஆகா -கதை அருமையாயச் செல்கிறது

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

தொடர்ந்து நேரம் ஒதுக்கி தொடரை படித்து, தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

Post a Comment

Please share your thoughts, if you like this post !