ஹூஸ்டன் பயணம் - 4 - மூடிஸ் கார்டன்
ஜூலை 06, ஞாயிறு.
காலை எழுந்து ஹோட்டலிலேயே ப்ரேக்ஃபஸ்ட் முடிச்சாச்சு. எல்லாம் பேக் பண்ணி, ஒரு முறை எதும் மிஸ்ஸாகி இருக்கா என்று சரி பார்த்து, செக்அவுட் செய்து மூடிஸ் கார்டன் சென்றோம். மணி அப்பொழுதே காலை பதினொன்று ஆகியிருந்தது.
இங்கிருந்து ஊருக்குச் செல்ல பத்து மணி நேரம் ட்ரைவ். நண்பன் முன்னாடியே சொல்லியிருந்தான், ரெய்ன் ஃபாரஸ்ட் மிஸ் பண்ணக் கூடாது என்று. அப்புறம் 'டைட்டானிக்' பற்றி புதுசா காட்சிக் கூடம் ஆரம்பித்திருக்கிறார்கள் அதுவும் பார்க்கணும் என்று. ஊருக்கு ட்ரைவ் பண்ணும் நேரத்தைக் கணக்கிட்டு 'ரெய்ன் ஃபாரஸ்ட்' மட்டும் டிக்கட் வாங்கினோம்.
சிங்கையில் சென்டோசாவா, இல்ல வேறு தனி இடமா என்று சரியே நினைவில் இல்லை. அதே போல் தான் இதுவும். ஆனால் இங்கு வெளித் தோற்றம் பெரிய கண்ணாடி பிரமிட் போன்றது. உள்ளே நிறைய வண்ணங்களில் பூக்கள், பறவைகள், தவளைகள், பாம்புகள், ஒரு மகாப் பெரிய அனகோன்டா கூட.
தவளையைத் தொட்டால் எப்படி இருக்கும், அதன் பாதம் எப்படி இருக்கும் என்றெல்லாம் செயற்கையாய் செய்து வைத்து, நம்மை தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். இப்படித் தான் இருக்கும் என்று. இதை ஏன் தொட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள் என்று ஒரு கேள்வி என்னுள். அப்புறம் தான் தெரிந்தது, இவர்கள் எங்கே நிஜத் தவளை பிடித்திருக்கப் போகிறார்கள் என.
சின்ன வயசில நாம பிடிக்காத தவளையா. அதும் மழைக் காலங்களில், சட்னியில் கொட்டிய தாளித்த கடுகு மாதிரி :), தெருவோரம் ஓடும் நீரில் எவ்வளவு குட்டி குட்டித் தவளைகள் மிதக்கும். சிலவற்றைப் பிடித்து கண்ணாடி டம்ளர்கள், தீப்பெட்டி டப்பாக்கள் என போட்டு வைப்போமே ! அதெல்லாம் மேற்கத்தியர்களுக்கு எட்டாக் கனி தானே.
இதனைக் கடந்து உள்ளே சென்றால், நெடுங் கண்ணாடிக் கூரை. அங்கு ஏகப்பட்ட பறவையினங்கள் சுதந்திரமாக விட்டிருக்கிறார்கள். பல வண்ணங்களில் மக்காவ்கள். இரு பஞ்சவர்ணக் கிளிகள். அணில்கள், வௌவால்கள், ஆமைகள், மீன்கள், பல்லிகள், பல விதமான பறவைகள், மற்றும் பூக்கள்.
ஆங்காங்கே சில இளம் வயதினர் பாம்பையோ, பல்லியையோ வைத்து, அங்கு கூடும் மக்களுக்கு அதனைப் பற்றிய செய்திகள் கூறுகிறார்கள்.
பீச்சுக்கு அப்புறம் குட்டீஸ் விரும்பிய இடம் இந்த 'ரெய்ன் ஃபாரஸ்ட்'
நேரம் இருந்தால் நல்லா ஒரு நாள் செலவழிக்கலாம் இந்த கார்டனில். கார்டனுக்குள்ள நிறைய இருந்தாலும், நாங்க போகணும் என்று முடியாமல் போனது 'டைட்டானிக்', அப்புறம் 'பால்ம் பீச்'. என்ன குழந்தைகள் நல்லா நீரில் விளையாடி இருக்கும்.
ரெண்டு மணி நேரம் சுற்றி விட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிகிட்டு, ஒன்னரை மணிக்கு வண்டியைக் கிளப்பினோம். வழியில் சில ட்ராபிக் ஜாம்கள், சில நிறுத்தங்கள் எல்லாம் தாண்டி வீடு வந்து சேர அதிகாலை இரண்டு மணி.
தூங்கி எழுந்து அலுவலகம் ஓடணுமே என்று நினைக்கும்போது ஒரு பக்கம் கவலையா இருந்தாலும், ஒரு திருப்தியான ட்ரிப் போய்ட்டு வந்ததை நினைத்து நிம்மதியாகத் தூங்கினோம் அன்று.
கீழே படங்களைக் கண்டு ரசியுங்கள்.
-----
ரெய்ன் ஃபாரஸ்ட் பிரமிட்
ஆரஞ்சும் பச்சையும் போட்டி போடும் அழகு
பூவுக்குள் புல்
லேவண்டர் கோதுமை ?!
சொட்டும் நீரழகா, இப் பூ அழகா ?
லேவண்டர் ஆர்க்கிட்
ஆரஞ்சு ஆர்க்கிட்
ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை
ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை
ப்ளாஸ்டிக் (போன்ற) தவளை
ப்ளாஸ்டிக் (போன்ற) டோட்
ட்ராகன் லிசார்ட்
ப்லூ டங் (நாக்க படம் எடுக்க எவ்வளவோ முயற்சித்தேன், முடியல :()
நானும் மரத்தில் தொங்குவேனே !
மலை (முழுங்கி) என பருத்து நீண்ட அனகோன்டா
நீரடியில் பஞ்சவர்ணத்தின் ரொமான்ஸ்
இன்னான்றே என்று சண்டையிடும் மக்காவ்
பூவில் தான் ஆரஞ்சு இருக்கணுமா, நாங்களும் தான்.
-----
நண்பர்களே, வலையில் எனது முதல் பயணக் கட்டுரை இது (பள்ளிகளில் எழுதியதன் பின் இப்பொழுது தான் எழுதுகிறேன் :))). இதுவரை வந்து வாசித்து, ஸ்டார க்ளிக்கி, கருத்து சொல்லி, பல(வித)மாய் ஊக்குவித்த நல் உள்ளங்களுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!
16 மறுமொழி(கள்):
படம் நல்ல வந்திருக்கு. பொர்ட்ரேய்ட்/ க்லொசப் படங்கள கொஞ்சம் பேக்ரௌண்ட ப்ளர் செஞ்சா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்! (பிக்காசா(வெப்)ல அப்டேட் பண்ணீங்களா?)
அது என்ன இந்த "அசத்த போவது யாரு"ல சொல்ற மாதிரி "நன்றி ! நன்றி !! நன்றி !!!"
படங்கள் யாவும் அருமை. மலர்களின் க்ளோஸ் அப், பஞ்சவர்ணக் கிளிகள், சண்டை போடும் மக்காவ், அந்த ஆரஞ்சு ஜோடிப் பறவை...எனக் கலர் கலர் கண்காட்சி! கட்டுரையும் அருமை சின்ன வயது தீரச் செயல்களுடன்:)!
//ஒரு திருப்தியான ட்ரிப் போய்ட்டு வந்ததை நினைத்து நிம்மதியாகத் தூங்கினோம் அன்று.//
இன்றும் அதே போல தூங்கலாம் நீங்கள் அருமையான பயணக் கட்டுரையை நான்கு பதிவுகளாக சுவாரஸ்யம் குறையாமல் சொன்னதற்கு!
//வலையில் எனது முதல் பயணக் கட்டுரை //
இனி உங்கள் எல்லா பயணங்களும் இனிதாய் அமைந்து இங்கு பதிவுகளாக மலரட்டும். வாழ்த்துக்கள் சதங்கா!
ஜெய்,
//படம் நல்ல வந்திருக்கு. பொர்ட்ரேய்ட்/ க்லொசப் படங்கள கொஞ்சம் பேக்ரௌண்ட ப்ளர் செஞ்சா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்! (பிக்காசா(வெப்)ல அப்டேட் பண்ணீங்களா?)//
எங்கே நேரம் இருக்கு. அப்படியே க்ளிக் பண்ணத, அளவு மட்டும் சுருக்கி, ப்லாகர்ல ஒன்னு ஒன்னா ஏத்தறதுக்கே அதிக நேரம் பிடிக்குது. அதனால டச்சப் வேலைகள் கட்.
//அது என்ன இந்த "அசத்த போவது யாரு"ல சொல்ற மாதிரி "நன்றி ! நன்றி !! நன்றி !!!"//
சொல்லுவாங்கல்ல, முத்தாய்ப்பா எதையும் முடிக்கணும் என்று அதான் மூனு தடவை. :))
ராமலஷ்மி மேடம்,
//கட்டுரையும் அருமை சின்ன வயது தீரச் செயல்களுடன்:)!//
நன்றிங்க. தீரச் செயல் ஸ்மைலிக்கும் சேர்த்து தான்.
//இன்றும் அதே போல தூங்கலாம் நீங்கள் அருமையான பயணக் கட்டுரையை நான்கு பதிவுகளாக சுவாரஸ்யம் குறையாமல் சொன்னதற்கு!//
ஆமா. ட்ரிப் போய்ட்டு வந்ததை விட, அதை தட்டச்சிட்டு, இது கூட பெரிசா தெரியல, படங்கள ஒன்னு ஒன்னா ஏத்தறது தான் அதிக நேரம் எடுக்கிறது. தேவையான தகவல்களை மட்டும் சேர்த்து, படங்களும் சேர்த்தவுடனேயே பதிவு ரொம்ப பெசா ஆகிறது. அதானல பார்த்து, பார்த்து செதுக்கினது என்று சொல்லலாம். இந்த சிரத்தைக்கெல்லாம் உங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஊக்கம் தான் முதலான காரணம் :)) அதற்கு நன்றிகள் பல.
//இனி உங்கள் எல்லா பயணங்களும் இனிதாய் அமைந்து இங்கு பதிவுகளாக மலரட்டும். வாழ்த்துக்கள் சதங்கா!//
நன்றிங்க. ஆஹா அடுத்து எங்க போகலாம் (மனதிற்குள் கேள்வி :)))).....
GOOD PHOTOGRAPHS
KANNAN
நன்றி கண்ணன்.
//பார்த்து, பார்த்து செதுக்கினது என்று சொல்லலாம்.//
உண்மை. இதைத்தான் ரிஷான் தன் பதிவுத் திருடர்கள் பற்றிய பதிவில "ஒவ்வொரு பதிவும் ஒரு பதிவாளருக்கு பிரசவம் போல" எனக் கூறியிருந்தார்.
//அப்படியே க்ளிக் பண்ணத, அளவு மட்டும் சுருக்கி, ப்லாகர்ல ஒன்னு ஒன்னா ஏத்தறதுக்கே அதிக நேரம் பிடிக்குது.//
// ட்ரிப் போய்ட்டு வந்ததை விட, அதை தட்டச்சிட்டு, இது கூட பெரிசா தெரியல, படங்கள ஒன்னு ஒன்னா ஏத்தறது தான் அதிக நேரம் எடுக்கிறது. //
இது போன்ற படங்கள் பெரும்பாலும் நாம் பிரிண்ட் செய்வதில்லை. ஸ்லைட் ஷோ ஓட்டுவதோடு சரி. அதிக பிக்சல் உள்ள காமிரா என்றால் எடுக்கும் போதே 3 வைத்து எடுங்களேன் இவற்றை. வலையேற்ற எளிதாக இருக்கும். இது சரியான ஐடியாதானா என புகைப் பட வல்லுநர் யாரிடமாவது எதற்கும் கேட்டுக் கொள்ளுங்கள்:))!
////அப்படியே க்ளிக் பண்ணத, அளவு மட்டும் சுருக்கி, ப்லாகர்ல ஒன்னு ஒன்னா ஏத்தறதுக்கே அதிக நேரம் பிடிக்குது.//
irfanview அப்படின்னு ஒரு சாப்ட்வேர் இருக்கு. ஃப்ரீ தான். அதுல பேட்ச் ப்ராசசிங்க் மோட்ல மொத்தப் போட்டோவும் வலையேத்தற அளவுக்கு ( 1024x768 aporx ) ஒரேடியா செஞ்சுட்டா வலையேத்தற நேரமும் குறையும். பொதுவா பிக்காசாவில் மேலே குறிப்பிட்ட அளவுக்கு மேல் வலையேற்றம் பெரிய அளவில் ஒன்றும் சுகப்படாது. (( ஒரிஜினல சிடி ல காப்பி செஞ்சுட்டு அப்புறமா மேலே சொன்ன விஷயங்களை செய்யுங்க )
// ட்ரிப் போய்ட்டு வந்ததை விட, அதை தட்டச்சிட்டு, இது கூட பெரிசா தெரியல, படங்கள ஒன்னு ஒன்னா ஏத்தறது தான் அதிக நேரம் எடுக்கிறது. //
பிக்காசா டூல் உபயோகிக்கலாம். அப்படி இல்லையா ஃப்ளிக்கர்ல போடுங்க. ஃப்ளிக்கர் டூல் அப்லோட் பண்ணும்போதே தானா அளவு குறைச்சு போடற வசதியோட இருக்கு.
//
இது போன்ற படங்கள் பெரும்பாலும் நாம் பிரிண்ட் செய்வதில்லை. ஸ்லைட் ஷோ ஓட்டுவதோடு சரி. அதிக பிக்சல் உள்ள காமிரா என்றால் எடுக்கும் போதே 3 வைத்து எடுங்களேன் இவற்றை. வலையேற்ற எளிதாக இருக்கும். இது சரியான ஐடியாதானா என புகைப் பட வல்லுநர் யாரிடமாவது எதற்கும் கேட்டுக் கொள்ளுங்கள்:))!//
பிரிண்ட் போடுவது என்பது ஏறக்குறைய என் விஷயத்தில் அற்றே போனது.
ஏற்கனவே எடுத்தது திருப்தியாக இல்லாமல் போனாலோ அல்லது நன்றாக இல்லாமல் இருக்கும் என்ற சந்தேகம் தோன்றினாலோ இரண்டு மூன்று எடுப்பது எல்லாருக்கும் வழக்கம் தான்.
சற்றே பிற்தயாரிப்புக்குட்படுத்தினால் பல படங்கள் இன்னும் ஜொலிக்கும் - IMHO
ராமலஷ்மி மேடம்,
//உண்மை. இதைத்தான் ரிஷான் தன் பதிவுத் திருடர்கள் பற்றிய பதிவில "ஒவ்வொரு பதிவும் ஒரு பதிவாளருக்கு பிரசவம் போல" எனக் கூறியிருந்தார்.//
ஆம். அசோகமித்திரன், அல்லது பிரபஞ்சன் இவர்களில் யாரோ சொல்லியும் படித்திருக்கிறேன். அருமை. அருமை.
//இது சரியான ஐடியாதானா என புகைப் பட வல்லுநர் யாரிடமாவது எதற்கும் கேட்டுக் கொள்ளுங்கள்:))!//
இதோ ஜீவ்ஸ் வந்திருக்காரே. அவர் சொல்வதையும் கவணிக்கிறேன். :))
ஜீவ்ஸ்,
வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
irfanview, பிக்காஸா முயற்சிக்கிறேன். அற்புதமாக அழகாக விவரித்திருக்கிறீர்கள். நன்றிகள் பல.
எதுக்கு IMHO எல்லாம் சொல்லிகிட்டு, ஒரு வல்லுநர் சொன்னா நாங்க கேக்க மாட்டமா :)))
ஜீவ்ஸ், தாங்கள் கூறிய irfanview முயற்சித்துப் பார்த்தேன். அற்புதம். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் தந்துள்ள தகவல். நன்றி!இதையே PIT பதிவொன்றில் தாங்கள் கூற முடிந்தால் இன்னும் பலபேரைச் சென்றடையுமோ?
Jeeves said..// ஒரிஜினல சிடி ல காப்பி செஞ்சுட்டு அப்புறமா மேலே சொன்ன விஷயங்களை செய்யுங்க//
நான் ட்ரையலாக செய்து பார்க்கையில் அளவைக் குறைத்த படங்களை வேறு லொகேஷனில் சேவ் செய்து பார்க்கையில் ஒரிஜனல்கள் பழைய சைஸில் பழைய இடத்திலேயே இருந்தன. அப்படியும் செய்யலாம்தானே?
சதங்கா (Sathanga)said...
// ஒரு வல்லுநர் சொன்னா நாங்க கேக்க மாட்டமா :)))//
அதானே:))!
ஆஹா.. வல்லுனரா எங்க எங்க ?
//ராமலக்ஷ்மிsaid...
ஜீவ்ஸ், தாங்கள் கூறிய irfanview முயற்சித்துப் பார்த்தேன். அற்புதம். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் தந்துள்ள தகவல். நன்றி!இதையே PIT பதிவொன்றில் தாங்கள் கூற முடிந்தால் இன்னும் பலபேரைச் சென்றடையுமோ?
//
முடிந்தவரை சொல்ல முயற்சித்திருக்கிறோம். இன்னும் முயல்வோம். இது மிகக் குறைந்த தகவல். இது போன்ற பல தகவல்களைக் கொண்டு ஒரு பதிவிடுகிறேன்.
-- ஜீவ்ஸ்
Post a Comment
Please share your thoughts, if you like this post !