என்ன விலை அழகே - 6
ஓ. எஸ். லவ்லி என உற்சாகமானாள். ஓராயிரம் பட்டாம் பூச்சிகள் படபடத்துச் சிறகடிப்பதாய் உணர்ந்தான் கோவிந்த்.
விபரத்தை கேட்டுக் கொண்டாள். கிவ் மீ யுஅர் செல் என அவன் பாக்கெட்டிலிருந்து செல்லை விரைந்தெடுத்து, சில அடிகள் நகர்ந்து, தந்தைக்கு விபரத்தை சொன்னாள்.
இஸ் தெ ஷோ அட் சிக்ஸ் தெர்ட்டி ? சரி அதுவரை என்ன பண்ணலாம் என்று கேட்டுக் கொண்டே செல்லைத் திணித்தாள்.
என்ன பண்ணலாம் ?! ம்ம்ம் வண்டியில் ஏறு.
கோவிந்த், ஐ லைக் தெ பெட்டல் பேக்.
வாட் ? ஓஓஓ பீடா. எதையும் சொல்லித் தந்த அம்மா இதை சொல்லவில்லையா ?
சொல்லியிருக்காங்க. சடன்லி ஐ ஃபர்காட் தெ நேம்.
அரை மணியில் ஸ்பென்சரில் பார்க் செய்தான் யமஹாவை. வா என் கூட ...
எங்கே கூட்டிட்டுப் போறே. ஓட்டமும், நடையுமாக அவனைப் பின் தொடர்ந்தாள்.
இந்த ஃபார்ம் ஃபில் பண்ணுங்க சார்.
எ.கோவிந்த், எண் பதினைந்து, ஆதிமூலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை
பாஸ்போர்ட், ரேஷன் கார்ட், இல்ல ட்ரைவிங் லைசென்ஸ் காப்பி வேணும் சார்.
என்ன ப்ரீ பெய்ட் கார்டுக்கே இவ்ளோ டீடெய்ல் கேக்கறீங்க.
ஆமா சார். கம்பெனி உத்தரவு.
தங்கத் தாம்பளத்தில் வைத்த கருப்பு ரோஜா போல், சில நொடிகளில் இன்டியின் உள்ளங்கையில் அழகிய ஐஃபோன்.
ஹேய் எதுக்கு இவ்ளோ எக்ஸ்பென்ஸிவ்வா ....
பரவாயில்ல பிடி. இனிமேல் நோ லிமிட்டட் சாட்டிங்க். தோ வீ ஆர் அபார்ட், வீ ஷுட் பீ கனெக்ட்டட் ஆல்வேய்ஸ்.
வாட் டு யூ மீன் ?
கனெக்ட்டட் பை தெ ஃபோன்.
சத்யம் காம்ப்ளக்ஸ் கூட்டத்தில் மிதந்தது.
இட்ஸ் க்ரௌடட் எவ்ரிவேர் கோவிந்த். அதும் சண்டே ஈவ்னிங் ?!
சென்னை அப்படித்தான். இதெல்லாம் என்ன கூட்டம் ?! படம் ரிலீஸ் ஆன சமயத்தில் வந்திருக்கணும். நிற்க கூட இடம் இல்லை.
அப்ப ஏற்கனவே இந்தப் படம் பார்த்திட்டியா ? திரும்ப பார்க்கிற அளவிற்கு படம் நல்லா இருக்கா ?
அப்படி சொல்ல முடியாது !
தென் ?
இது உனக்காக என்றான்.
தாங்க்ஸ், ஐம் ப்ளீ.....ஸ்ட். ஐ டோன்ட் நோ ஹௌ ஆம் ஐ கோயிங் டூ ரீபே ஆல் யுஅர் ஹெல்ப்ஸ் கோவிந்த் !
எதுவும் பண்ண வேணாம். இன்க்லூடிங் இந்த ஃபார்மாலிட்டீஸ். கொறச்சிக்கறியா ப்ளீஸ்
நீ மட்டும் என்னவாம் ... இஸ் 'ப்ளீஸ்' நாட் எ ஃபார்மாலிட்டி ? என்றாள் இன்டி.
நீரில் மின்னும் வெள்ளிப் பொட்டுக்களாய், இருவர் முகத்திலும் புன்முறுவல் தோன்றி மின்னியது.
தியேட்டருக்குப் படம் பார்க்க வந்த சிலர், இங்கு முன்னோட்டம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஈரைந்து விரல்கள் பின்ன, முதல் முறையாக இறுகக் கரம் பற்றினர் இருவரும்.
ஸீ த க்ரௌட் இஸ் வாட்சிங் அஸ். அந்த செகப்பு சட்டை பாரு, சரியான ஜொல்லன். ஆரஞ்சுக் காதோரம் கிசுகிசுத்தான் கோவிந்த்.
ஹீ இஸ் நாட் பெட்டர் தென் யூ என்று கோவிந்தை சீண்டிச் சிரித்தாள் அச்சு வெல்லத் தொண்டையில் இன்டி.
வீட்டுக்கு போக நைட் லேட்டாகுமே, ஒன்னும் சொல்ல மாட்டாங்க ? புரியாத ஊரு, தெரியாத பையன் !!!
ஹேய், ஐம் நாட் எ கிட். அதுமில்லாம ஐ ஹேய்வ் பாஸிட்டிவ் ஜட்ஜ்மென்ட் ஆன் யூ, விச் ஐ கன்வேய்ட் டூ மை மாம் லாஸ்ட் நைட். அன்ட் ஷீ நோஸ் மீ வெல்.
'எகிறி குதித்தேன் அண்டம் இடிந்தது, அலையாய் அலையாய்' என்று வானில் பறந்தான் கோவிந்த்.
தொடரும் .....
15 மறுமொழி(கள்):
ஒவ்வொரு பாகத்திலும் சஸ்பென்ஸ் கூடிட்டே போகுதே சதங்கா! அப்புறம்...:)?
nice writing!
//ஒரு சில வார்த்தை, நல்லதா சொல்லிட்டுப் போங்க !//
இப்படிச் சொல்லிட்டீங்க. அதனால நான் இதைச் சொல்லலாமான்னு தெரியல. நீங்க பிரசுரிக்காமயும் இருக்கலாம்.. ஆனா.. ஆங்கிலம் ரொம்பக் கடிக்குது. லண்டன் பொண்ணு, அதெல்லாம் புரியுது.. நெறயப்பேரு இதான் ரொம்ப இயல்புன்னும் நினக்கலாம்... இருந்தாலும்... கொஞ்சம் குறைச்சுக்கலாமோ? என் கருத்தை நீங்க ஏத்துக்கணும்னு அவசியம் இல்லை :)
"இறுக" என்பதே சரி.
ஆனாலும் இப்படி ஒரு சஸ்பென்ஸ் வெக்கறீங்களே சதங்கா..இயல்பா இருக்கு அவங்க சம்பாஷனை..கோவிந்த் ரொம்ப நல்லவரோ கொஞ்ச நாள் பழகின பொண்ணுக்கு ஐபோனா???
.
நீரில் தெரியும் வெள்ளிப் பொட்டுகளா!!!
அழகு.
அடுத்து என்ன ? சஸ்பென்ஸ் இன்கிரீஸாயிட்டே போகுதே.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
//நீரில் மின்னும் வெள்ளிப் பொட்டுக்களாய், இருவர் முகத்திலும் புன்முறுவல் தோன்றி மின்னியது.//
ஆமாம் வல்லிம்மா, எப்போதுமே சதங்கா உவமானங்களில் அசத்துவார்.
ராமலஷ்மி மேடம்,
//ஒவ்வொரு பாகத்திலும் சஸ்பென்ஸ் கூடிட்டே போகுதே சதங்கா! அப்புறம்...:)?//
ஆர்வமான அப்புறம் கண்டு மகிழ்ச்சி. அடுத்த பாகம் போட்டாச்சு.
கவிநயா,
//இப்படிச் சொல்லிட்டீங்க. அதனால நான் இதைச் சொல்லலாமான்னு தெரியல.//
நீங்கள் தவறாக சொல்லவில்லையே. ஏன் யோசிக்கிறீர்கள். உங்கள் கருத்து ஏற்று கொள்ளப் பட்டது :))) அடுதத்தடுத்து கொறஞ்சிடும். ஓ.கே.வா ...
முதல் பாகத்திலேயே குறைக்க தான் எண்ணம், நம் 'தமிழ்' சங்கத் தலைவர் தான் நாயகியின் 'தங்லிஷ்' அருமையா இருக்கு, நீங்க என்னடானா, அழகு, கடற்கரை, என்றெல்லாம் சொல்றீங்க என்றார். வரட்டும் அவரை கவணிச்சிக்கறேன் :))))
ரம்யா,
//ஆனாலும் இப்படி ஒரு சஸ்பென்ஸ் வெக்கறீங்களே சதங்கா..இயல்பா இருக்கு அவங்க சம்பாஷனை..//
ஏற்கனவே ராம் மேடத்திற்கு சொன்னதது தான் ரம்யா. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் இதெல்லாம் இல்லை. ஒரு இயல்பான நடைமுறை வாழ்வு. பணக்காரனோ, ஏழையோ, காதல் என்றால் சில ப்ரச்சனைகள், சோகங்கள், சுகங்கள் எல்லாம் இருக்கும் இல்லையா. அதைத் தான் சொல்லப் போறேன் இனி வரும்ம்ம்ம்ம்ம்ம் பாகங்களில் :))
//கோவிந்த் ரொம்ப நல்லவரோ கொஞ்ச நாள் பழகின பொண்ணுக்கு ஐபோனா???//
ஆமா, இந்த விசயத்தில் பொண்ணுங்க ரொம்ப கெட்டி. என் நண்பர்கள் சிலர் ஐபோனிற்கும் மேல் கிஃப்ட் வழங்கியிருக்கின்றனர்.
வல்லிம்மா,
//நீரில் தெரியும் வெள்ளிப் பொட்டுகளா!!!
அழகு.//
நன்னி, நன்னி. (ஒன்னு உங்களுக்கு, இனோன்னு ராம் மேடத்திற்கு)
இது ஏற்கனவே படித்த நாவல்கள், பின் வாழ்வில் அதே போல் எங்காவது நாம் காணுகையில், நமக்கும் எழுத வருகிறது என்று தான் சொல்லணும்.
கோவை விஜய்,
//அடுத்து என்ன ? சஸ்பென்ஸ் இன்கிரீஸாயிட்டே போகுதே.//
மேலே சொன்ன பதில் தான் விஜய் உங்களுக்கும். ஒரு இயல்பான காதல் கதை. அவ்ளோ தான். அடுத்த பாகம் போட்டாச்சு. தொடர்ந்து வாசிச்சுப் பாருங்க. உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க :))
மலர்,
//nice writing!//
நன்றிங்க.
உறசாகப் பட்டாம் பூச்சிகள் - ஆறரை வரை என்ன செய்வது - தந்தையிடம் சொன்ன முன்னெச்சரிக்கை - பீடா போடுவது - தங்கத் தாம்பாளம் - கறுப்பு ரோஜா - அதனை வாங்குவதற்கு பிளட் குரூப் கொடுத்த தகவல்கள் - கெட் கனெக்டட் - இண்டிக்காக மறுபடியும் படம் - பிளீஸ் வேண்டாமே - வெள்ளிப்பொட்டு நீரினில் - அடுத்தவர் பார்க்க - ஈரைந்து விரல்கள் பின்ன - பெரியவர்களின் அனுமதி - ஆரஞ்சுக் காது - அச்சுவெல்லத் தொண்டை - வானில் பறத்தல்
அடடா அடடா - இதுவல்லவோ கதை -இயல்பாய்ச் செல்கிறது - அருமை அருமை
சீனா ஐயா,
வழக்கம் போல அருமையான மறுமொழி.
//அடடா அடடா - இதுவல்லவோ கதை -இயல்பாய்ச் செல்கிறது - அருமை அருமை//
ராம் மேடமும், தாங்களும் ரொம்ப புகழ்கிறீர்கள். அந்த அளவிற்கு ஒன்றும் புதிதாய் சொல்லவில்லை என எண்ணுகிறேன். நடந்தவை, நடப்பவை இதைத் தான் கதைப் படுத்தி சொல்கிறேன்.
Post a Comment
Please share your thoughts, if you like this post !