Friday, July 25, 2008

என்ன விலை அழகே - 3

எதோ முக்கியம் என்று தெரிகிறது. அதான் இப்ப கால் பண்ணியிருக்கீங்க. ஒரு அரைமணி கழித்து திரும்ப அழைக்கவா ?

சரி, பரவாயில்லை. மறக்காம கால் பண்ணு.

ஓ.கே.

நன்றாக கருத்திருந்தது வானம், கோவிந்தின் மனம் போலே.

கெளம்பலாமா, உங்க வீட்டில் தேட மாட்டாங்களா ?

ஐ ஹேய்வ் டோல் யுஅர் டீடெய்ல்ஸ் டூ மை பேரண்ட்ஸ். அப்பா செல் வச்சிருக்கார்.

சரி நான் கரெக்டான இன்ஃபர்மேஷன் தான் தந்திருக்கேன் என்று எப்படி உனக்குத் தெரியும்.

வெரிஃபை பண்ணினே, நீ வண்டி ஸ்டார்ட் பண்ணும்போதே ... வண்டி கலர், வண்டி எண் எல்லாம். சரியா இருக்கத் தானே நிம்மதியாய் உன் பின் அமர்ந்தேன்.

தோடா ... செம கில்லாடி மா நீ .... திடீரென சென்னைத் தமிழுக்கு மாறினான்.

எத்தனையோ பெண்களுடன் சுற்றியிருந்தாலும், இவளிடம் ஏதோ ஒரு வசீகரம் இருப்பதை உணர்ந்தான். என்னவாயிருக்கும் ?! உடையா, நடையா, பேச்சா ....

வெள்ளைக்காரப் பெண்களுடன் சுற்றியதெல்லாம், ஜடப் பொருட்க‌ள் போலத் தெரிந்தது இப்போது கோவிந்துக்கு. ஏன் இங்க‌ கூட‌ சில டேட்டிங் ஃப்ரென்ட்ஷிப் இருக்காங்க அவனுக்கு. கொஞ்ச‌ம் ஜெல‌சி பெர்ச‌னாலிட்டீஸ், அத‌னால் த‌விர்த்து விடுவான்.

ஏறு, உன்னை வீட்டில ட்ராப் பண்ணிட்டு நான் ரூமுக்கு போறேன். நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை, லஞ்ச் போலாம். சரியா ? இந்தா என் செல் நம்பர், மறக்காம நோட் பண்ணிக்கோ.

அவ‌ள் ல‌ஞ்சுக்கு ச‌ரி என்கிறாளா, இல்லையா என்ப‌து ப‌ற்றி எல்லாம் அவ‌ன் க‌வ‌லைப் ப‌ட‌வில்லை.

வீட்டருகே மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு, வந்து படுக்கையில் படுத்தான்.

அதென்ன சாட்டிங்க்ல பேரு 'இஸ்கூல்' ... சென்னை பாஷையில அப்படினா பள்ளிக்கூடம் தெரியுமா ...

ஓஓஓ கூல்ல்ல்ல்ல் என்று, காற்றில் கேசத்தைப் பின் தள்ளி சிரித்தாள்.

ஃபர்ஸ்ட் டூ லெட்டர்ஸ் ஆர் மை இனிஷியல்ஸ். அதோட கூல் ஆட் பண்ணிகிட்டேன். எனக்கு இந்தப் புலம்பல், பிதற்றல் இதெல்லாம் அலர்ஜி மாதிரி. ஐ வான்ட் டு பீ ஆல்வேஸ் கூல்.

சுருக்கமான இனிஷியலுக்குள்ள ஒளிச்சிருக்கற அழகான பேரு தெரிஞ்சுக்கலாமா ?

'யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்' என்பதை விட இது பிடித்திருந்தது 'இன்டி'க்கு.

இந்திரா சுவாமிநாதன், 'இன்டி'னு கூப்பிடுவாங்க.

வாட் எ லவ்லி நேம், உன்னைப் போலவே.

நினைவுகளினூடே, திடீரென ஹரி நினைவுக்கு வந்தார். ஆஹா, கால் பண்ணச் சொன்னாரே ....

கோவிந்த், உங்க பி1 விஸா இன்னும் எவ்ளோ நாள் வேலிட் ?

இன்னும் ரெண்டு வருசத்துக்கு இருக்கும் ஹரி சார். சரியான டேட் வேண்டும் என்றால் பார்த்து சொல்லணும்.

வெரி குட். இது போதும். கலிஃபோர்னியால ஒரு ரிய‌ல் எஸ்டேட் ப்ராஜ‌க்ட். நம்ம‌ சீனிவாச‌ன் தான் லீட். ஏதோ பெர்ச‌ன‌ல் விச‌ய‌மா அவ‌ச‌ர‌மா இந்தியா வ‌ர‌ணும்னு சொல்றார். ப்ராஜ‌க்ட் க்ரிடிக‌ல் பொசிஷன்ல‌ இருக்கு. அவ‌ருக்கு ஈக்குவ‌லா நீங்க‌ தான் ச‌ரியான‌ ஸ்கில்ட் பெர்ச‌ன்.

எப்ப கிளம்பணும் ?

நாளைக்கே !


தொட‌ரும் .....

14 மறுமொழி(கள்):

Kavinayasaid...

ஐயோ பாவம்... நல்ல சமயத்துல போய் அவர வெளியூர் அனுப்புறீங்களே...

Anonymoussaid...

கதை நன்றாகப் போகிறது. எளிய உவமைகளால் கதை முழுதும் அழகான தோரணம் கட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
அன்பன்,
rvc

Ramya Ramanisaid...

அடடே மிஸ் பண்ணிட்டேனே இரண்டாவது பாகத்தை.. நல்லா இருக்கு சதாங்கா.. பாராட்டுக்கள் :))

\\இந்திரா சுவாமிநாதன்\\

நல்லா இருக்கு பெயர்..

ஜியாsaid...

இன்னைக்கு இது அஞ்சாவது தொடர் கதை.... எல்லாருமே சூப்பரா தொடர் எழுதறீங்க... கலக்குங்க சதங்கா....

ராமலக்ஷ்மிsaid...

அடடா கிளம்பிடுவாரா கோவிந்த்..? சரி இப்ப என்ன ட்விஸ்ட் கொண்டு வர்றீங்கன்னு பார்க்கிறோம்:)!

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//ஐயோ பாவம்... நல்ல சமயத்துல போய் அவர வெளியூர் அனுப்புறீங்களே...//

ரசிப்புக்கு நன்றி. ஆஹா இப்படி எல்லாரும் கேட்டிட்ருந்தா, கதைய முன்னாடியே லீக் பண்ற மாதிரியில்ல ஆகிடும்.

(பெரிய சிதம்பர ரகசியம் ..., அப்படினு எல்லாரும் சொல்வீங்க, தெரியுது :))

சதங்கா (Sathanga)said...

rvc,

//கதை நன்றாகப் போகிறது. எளிய உவமைகளால் கதை முழுதும் அழகான தோரணம் கட்டியுள்ளீர்கள். //

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், உவமை ரசிப்புக்களுக்கும் மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

நன்றி ரம்யா.

மிஸ் பண்ணினாலும் நேரம் இருக்கும்போது வந்து படிங்க. நாயகியின் பெயர் பிடித்திருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

சதங்கா (Sathanga)said...

நன்றி ஜி. கலக்கலான வாழ்த்துக்களுக்கு !

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//அடடா கிளம்பிடுவாரா கோவிந்த்..? சரி இப்ப என்ன ட்விஸ்ட் கொண்டு வர்றீங்கன்னு பார்க்கிறோம்:)!//

பெரிய ட்விஸ்ட் எல்லாம் எதிர்பார்க்காதீர்கள். ஓரளவுக்கு நடைமுறை வாழ்வை மையப்படுத்தி இன்ட்ரஸ்டிங்கா நடத்திச் செல்ல ஆசை. முடியுமானு பார்க்கிறேன் !!!

வல்லிசிம்ஹன்said...

நல்லா இருக்கு.கேள்வி பதில் இந்தத் தலைமுறை கதை இப்பத்திய நிலைமையைப் புரிஞ்சுக்கலாம்னு ஆர்வம இருக்கு. வாழ்த்துகள் சதா.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//நல்லா இருக்கு.கேள்வி பதில் இந்தத் தலைமுறை கதை இப்பத்திய நிலைமையைப் புரிஞ்சுக்கலாம்னு ஆர்வம இருக்கு. வாழ்த்துகள் சதா.//

ரொம்ப‌ ச‌ந்தோச‌மா இருக்கு உங்க‌ள் வாழ்த்துக்க‌ள் ப‌டிக்க‌. நிக் நேமுக்கு, நிக் நேம் தந்ததும் நல்லா இருக்கு :))

அடுத்தடுத்து பாகங்கள் போட்டாச்சு / போட்டுகிட்டே இருக்கேன். அதையும் படிச்சுப் பார்த்து சொல்லுங்க.

cheena (சீனா)said...

மேலாளரின் சிவ பூசையில் கரடி - கோவிந்தின் மனம் வானம் போலவே இருந்தது - தோடா - செம கில்லாடிமா - இந்திரா சுவாமிநாதன் பெயரை அறிந்து கொள்ளும் விதம் - நாளைக்கே கலிபோர்னியா (மென்பொருளாளர்களின் தலைவிதி)- அருமையாக இயல்பாகச் செல்கிறது கதை. அடுத்த பகுதிக்கு அவசரமாகச் செல்கிறென்

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

வாசித்து, ஒவ்வொரு வரியையும் மறக்காமல் குறிப்பிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள்.

//அருமையாக இயல்பாகச் செல்கிறது கதை. அடுத்த பகுதிக்கு அவசரமாகச் செல்கிறென்//

படிங்க படிங்க, படிச்சிட்டு சொல்லுங்க

Post a Comment

Please share your thoughts, if you like this post !