Monday, August 25, 2008

வானின் நிறம் நீலம் - 4

"அட‌ப் பாவிங்க‌ளா, ரெண்டு வில்லன்க‌ளுமா ? என்னை அழைத்திருக்க‌க் கூடாதா, சட்டு புட்டுனு ரெண்டொரு ஈஸியான கேள்வியா கேட்டு, புள்ளைய எடுத்திருக்கலாமே" என‌ வாய் பிள‌ந்த‌ செல்வாவை, என்ன‌டா "உங்க ஊரு சினிமா ஓடுதா மனசுல‌" என‌ச் சீண்டின‌ர் சீன‌ச்சிய‌ர் இருவரும். மேலும், "ஷி லுக்ஸ் ப்ரெட்டி ... இந்திய‌ர்க‌ள் நிறம் கம்மியா இருந்தா கூட‌, பொதுவா பெண்க‌ள் அழ‌கா இருக்காங்க‌ எப்ப‌டி ?" என்றும் செல்வாவை ப்ர‌ம்ம‌னாய் பாவித்து கேட்டுக் கொண்டிருந்த‌ன‌ர்.

'அழ‌கு ம‌ட்டும‌ல்ல‌, திமிரான‌வ‌ர்க‌ளும் கூட' என்று சொல்ல நினைத்தான் நிர்மலாவை மனதில் வைத்து. "அவ‌ அழ‌கா இருக்கானு சொல்றீங்க‌ ?! என‌க்கென்ன‌வோ அப்ப‌டித் தோன‌லை. ஒரு வேளை அவ‌ள் க‌ண்ண‌ப் பார்த்து சொல்றீங்க‌ளோ என்னவோ. உங்களுக்கு தான் பெரிய கண்கள், நீண்ட ஐ லேஷஸ் இருந்தாப் போதுமே. இந்தியப் பையன் என்றால் ஹேன்ட்சம், பெண் என்றால் ப்ரெட்டி" என்று குறுந‌கை பூத்தான்.

என்ன‌ தான், செல்வா அழ‌கில்லை என்று சொன்னாலும், அவ‌ன் ம‌ன‌சாட்சி போல‌வே அவ‌ர்க‌ள் ம‌ன‌தும் 'என்ன‌ இருந்தாலும் அவ‌ அழ‌கி தான்' என்ற‌து.

அடுக்கு ம‌ல்லிப் ப‌ல் வ‌ரிசையில் அழ‌காய் சிரித்து வெளி வ‌ந்தாள் நிர்ம‌லா. "ஐ வில் லெட் யூ நோ விதின் டூ டேய்ஸ்" என்று வாய் நிறைய‌ புன்ன‌கையோடு வ‌ழி அனுப்பி வைத்தார் க்ரிஸ்டினா.

வெளியில் இருந்த‌வ‌ர்க‌ளுக்கு கை குலுக்கி, ந‌ன்றி தெரிவித்துச் சென்ற‌வ‌ளை நிறுத்தி, "கைஸ், கேன் ச‌ம் ஒன் ஹெல்ப் ஹெர் டூ த‌ லாபி" என்று க்ரிஸ்டினா சொல்லி முடிக்குமுன், செல்வா வாச‌லில் நின்றான்.

"நீங்க‌ த‌மிழா ?" என‌க் கேட்டு இருவ‌ரும் அதிச‌யித்த‌ன‌ர்.

"நான் இங்க‌ வ‌ந்து ரெண்டு வ‌ருட‌ங்க‌ள் ஆகிற‌து, இப்பொழுது எங்க‌ அண்ண‌ன் வீட்டில் இருக்கிறேன். படிச்சது ஸ்டெல்லா மேரீஸ், அப்புறம் என்.ஐ.ஐ.டில ஒரு ஆரக்கல் கோர்ஸ் எடுத்தேன். சென்னையிலேயே கொஞ்ச நாள் வேலை பார்த்துட்டு, அப்புறம் இங்க வந்திட்டேன். சரி, மேடம் எப்படி ?" என்றாள் நிர்மலா.

"ம். ம். ஓ.கே தான், ஆனால் ..."

"என்ன‌ ஆனால் ?"

"கொஞ்ச‌ம் ஈகோயிஸ்ட். ம‌த்த‌ப‌டி ஷி இஸ் சோ ஃப்ரெண்ட்லி, ஹ்யுமானிட்டி உள்ள ஒரு பெண்மணி"

"திஸ் இஸ் க்ரேட். ஈகோயிஸ்ட் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது என‌க்கு. சரி, ந‌ல்லா பேசினாங்க‌ளே, அதை வைத்து நான் செல‌க்ட‌ட் என‌ எடுத்துக்க‌லாமா ?" என்றும் கேட்டாள்.

"நான் பார்த்த‌ வ‌ரைக்கும் அம்ம‌ணி அள‌ந்து பேசினாங்க‌ என்றால் தான் ச‌ந்தேக‌ப்ப‌ட‌ணும் !!! உன்னை விட‌ அவ‌ங்க‌ தானே இன்று நிறைய‌ப் பேசினார்க‌ள். அதானால் நைன்ட்டி நைன் பெர்ஸ‌ன்ட் யு ஆர் செல‌க்ட‌ட்"

"தாங்க் காட்" என்ற‌வ‌ளின் பூரிப்பு முக‌த்தில் காட்டியது, இருட்டில் பொட்டாய் தோன்றும் மின்மினிப் பூச்சிக‌ளின் ப்ர‌காச‌த்தை.

"செல்வா, நீங்க‌ எவ்வ‌ள‌வு நாள் இங்க‌ இருக்கீங்க‌ ?"

"சிங்கை, இந்த‌ அலுவ‌ல் எல்லாம் க‌ட‌ந்த நான்கு மாத‌ங்க‌ளாக‌."

"அதுக்கு முன் ?"

"சென்னையில் ஒரு ஆட்டோமொபைல் உற்ப‌த்தி க‌ம்பெனியில் க‌ணினி துறையில், மூன்று வருடங்கள் பல மட்டங்களிலும் இருந்து, அப்புறம், வெளிநாடெல்லாம் எப்ப பார்க்கிறது என்று சிங்கை வந்தேன்."

"சென்னை தான் ஊருமா ?"

"இல்லைங்க‌, ஊட்டி ப‌க்க‌த்தில‌ ஒரு கிராம‌ம். ப‌ட் மைக்ரேட்ட‌ட் டூ சென்னை, அம்பத்தூர்"

"நீங்க‌ நிர்மலா ?"

"அதான் சொன்னேனே !!! வ‌ள‌ர்ந்தது, ப‌டிச்ச‌து, வேலை பார்த்த‌து மற்றும் ஊரும் அது தான்."

"சென்னையில‌ எங்க‌ ?"

"வேளச்சேரி. சென்னையில், நீங்க‌ அந்த‌ என்ட் என்றால் நாங்க‌ இந்த‌ என்ட்" என்றாள்.

"இப்ப இவ்ள‌ பேச‌றீங்க, காலையில் ஏன் அப்ப‌டி ந‌ட‌ந்துகிட்டீங்க ?"

"எப்போ ? எப்ப‌டி ந‌ட‌ந்துகிட்டேன் ? நினைவில்லையே !! நானே இன்டர்வியூ டென்ஷன்ல இருந்தேன். ஏதாவ‌து த‌வ‌றுத‌லா இருந்தா ம‌ன்னிச்சிக்கோங்க‌ !"

ப‌ர‌வாயில்ல‌, ப‌ர‌வாயில்ல‌ என்று சொல்லி 'நாம‌ தான் இவ‌ பாத்திருப்பா, க‌ண்டுக்காம‌ இருக்கா, திமிர் பிடிச்சவ என்றெல்லாம் நினைக்கிறோமா ! என்ன ஒரு முட்டாள் தனம்' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

"செல்வா நீங்க‌ கெள‌ம்புங்க, நேரம் ஆச்சு, தேட மாட்டாங்க ?!!" என்று நிர்ம‌லா சொல்லும்போது தான், அட !! ட்ரெய்ன் வ‌ரைக்கும் வ‌ந்த்துட்டோமே என‌ ஆச்ச‌ரியித்தான். இதே இட‌த்தில‌ தானே காலையில் உதாசீன‌ப்ப‌டுத்திச் சென்றாள். இப்ப‌ பேசுகிறாளே, அதுவும் அழகாக, என‌ பூரிப்புட‌ன் வ‌ழி திரும்பினான்.


தொடரும் .....

8 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

இப்போது தெரிந்ததா செல்வாவுக்கு, என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் லாபி வரை செல்ல வேண்டியவன் ரயிலடி வரை வ்ந்து நிற்கையில்...
அந்தச் சீனப் பெண்கள் இந்த ப்ரம்மனிடம் இப்போ
முதல் பத்தியிலிருந்த கேள்வியைக் கேட்டால் அவன் பதில் என்னவாயிருக்கும்:))))?

Ramya Ramanisaid...

\\"அவ‌ அழ‌கா இருக்கானு சொல்றீங்க‌ ?! என‌க்கென்ன‌வோ அப்ப‌டித் தோன‌லை.\\

எப்படித்தோணும்..தோணினாலும் வெளிய சொல்ல மனசு தான் வருமா??


\\ ஒரு வேளை அவ‌ள் க‌ண்ண‌ப் பார்த்து சொல்றீங்க‌ளோ என்னவோ. உங்களுக்கு தான் பெரிய கண்கள், நீண்ட ஐ லேஷஸ் இருந்தாப் போதுமே. இந்தியப் பையன் என்றால் ஹேன்ட்சம், பெண் என்றால் ப்ரெட்டி" என்று குறுந‌கை பூத்தான்.\\

அய்யோடா அந்த பொண்னை வர்னிக்கறாப்பல இவரு தன்னையே சொல்லிக்கறாரா.. பலே கில்லாடி தான் :)


சுப்பரு அவங்களுக்குள்ளே நட்பு மொட்டு விட்டிருச்சா.. அருமை :))

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//இப்போது தெரிந்ததா செல்வாவுக்கு, என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் லாபி வரை செல்ல வேண்டியவன் ரயிலடி வரை வ்ந்து நிற்கையில்...//

இந்தப் பசங்களே இப்படித் தான். இன்று வரை இது தொடர்கிறது :))

//அந்தச் சீனப் பெண்கள் இந்த ப்ரம்மனிடம் இப்போ
முதல் பத்தியிலிருந்த கேள்வியைக் கேட்டால் அவன் பதில் என்னவாயிருக்கும்:))))?//

அதெல்லாம் க்ரிஸ்டினா கில்லாடியான பெண்மணி. ஒரு பெண்ணை எடுக்க, மற்ற பெண்களை வைத்தே நேர்முகம் எடுக்க சம்மதிக்க மாட்டார் :)))

சதங்கா (Sathanga)said...

ரம்யா,

//எப்படித்தோணும்..தோணினாலும் வெளிய சொல்ல மனசு தான் வருமா??//

அதானே. அதுமில்லாமல் சீனச்சியர் கோபித்துக் கொள்வார்கள் எனவும் செல்வா நினைத்திருக்கலாம் அல்லவா !

//அய்யோடா அந்த பொண்னை வர்னிக்கறாப்பல இவரு தன்னையே சொல்லிக்கறாரா.. பலே கில்லாடி தான் :)//

இது இன்று வரை சிங்கையில் நிஜம்ங்க. ஆனால் வெளிப்படையா யாரும் சொல்வதில்லை சிலரைத் தவிர.

//சுப்பரு அவங்களுக்குள்ளே நட்பு மொட்டு விட்டிருச்சா.. அருமை :))//

ஆரம்பிச்சிருச்சு. அடுத்தடுத்த பாகங்களில் சூடு பறக்கும் பாருங்க. :))

cheena (சீனா)said...

ம்ம்ம்ம் - ஆரம்பிச்சுடுச்சு - லாபி வரை வர வேண்டியவன் ரயிலடி வரை வருகிறானா - தலை கால் புரியவில்லையா - அடுத்து இறுதி வரை வருவான்

நல்வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்said...

"வேளச்சேரி. சென்னையில், நீங்க‌ அந்த‌ என்ட் என்றால் நாங்க‌ இந்த‌ என்ட்" என்றாள்.//
எப்படியோ ரெண்டு எண்டும் மீட் செய்தாச்சு.


லவ் பண்ணுங்கொ சார் நான் வேண்டாங்கலேனு யாரோ பாடற சத்தம் கேக்குது. விரைவாப் போகிறது சதங்கா.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//தலை கால் புரியவில்லையா - அடுத்து இறுதி வரை வருவான்//

ஆமாம். வருவானானு பார்ப்போம். இப்பவே சொல்லிடலாம், ஆனா ஒரு இன்ட்ரஸ்டிங் போயிடும். வெய்ட்டீஸ்ஸ் ப்ளீஸ்ஸ்ஸ்

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//எப்படியோ ரெண்டு எண்டும் மீட் செய்தாச்சு.//

லவ் பண்ணுங்கொ சார் நான் வேண்டாங்கலேனு யாரோ பாடற சத்தம் கேக்குது. விரைவாப் போகிறது சதங்கா.//

சில உரையாடல்களுக்கு பின் வேகமெடுக்கும்னு நினைக்கறேன். ஒரு இன்சிடென்ட் 'நச்னு' சொல்றதுக்கு தான் ரொம்ப தவிச்சிட்டு இருக்கேன்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !