Wednesday, June 18, 2008

டீல் மா கண்ணு ! (Part - 3)


"வி ஹேவ் ஐடென்டிஃபைட் ஹூ தெய் ஆர். பட், திஸ் இஸ் டூ ஏர்லி டு டிஸ்க்ளோஸ் எனிதிங், கிவ் அஸ் டென், ஃபிஃப்டீன் மினிட்ஸ்", தீர்க்கமாக தொலைக்காட்சிகளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார், வாஷிங்டன் டிஸி உயர் போலீஸ் அதிகாரி, ஜெனரல் டேவிட் ரைட்.

"அவங்க யாருனு ஐடென்டிஃபை பண்ணிட்டோம் என்கிறீர்கள். அதையாவது எங்களுக்கு ... இந்த உலகுக்கு, சொல்லலாம் அல்லவா ?" நிருபர்கள் விடுவதாய் இல்லை !

அதிகாலை பண்ணிரண்டு மணிக்கு, டி.ஸி. மெட்ரோவில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வழக்கத்திற்கும் மாறாக இந்தியத் தலைகள் நிறையத் தென்பட்டன.

ஒரு குறிப்பிட்ட நுழைவு வாயிலில், போலீஸ் செக்யூரிட்டி என அச்சிட்ட மஞ்சள் ரிப்பன்கள் சுற்றிலும் கட்டியிருந்தது. அதனைத் தாண்டி, அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் செக்கப் செய்து முடிக்க‌, காஞ்சனா மேடமும், யமுனசாகரும் மிகுந்த பரபரப்புடன் ஜெனரல் டேவிட்டை நெருங்கினர்.

கம்பெனி அடையாள அட்டை மற்றும் ட்ரைவர்ஸ் லைசென்ஸ் பரிசோதித்து, இருவரையும் உள்ளே தனியறைக்கு அழைத்து சென்றார் டேவிட்.

எப்படி ஆச்சு, என்ன ஆச்சு, வெளியே கேட்டா எதுவுமே சொல்ல மாட்டேங்கறாங்க. யாருக்கும், எதுவும் ஆயிடலையே. மிகுந்த படபடப்புடன் பொறிந்த காஞ்சனாவை, "கொஞ்சம் அமைதியா நான் சொல்றத கேளுங்க", கதவைத் தாழிட்டு பேச்சினை ஆரம்பித்தார் டேவிட்.

சுமார் பதினோறு மணிக்கு 911க்கு ஒரு கால். மிகுந்த பரபரப்புடன், ஒரு மிரட்சித் தொனியுடன் ஒரு பெண்மணி தழுதழுத்தார். நீங்களே கேளுங்கள் என்று ஒரு ஒலி கோப்பை தட்டி விட்டார்.

அதில் விட்டு விட்டு,

"ஹெலோ 911, வீ ஆர் இன் ஹை டேஞ்சர்".

"அவர் வெகிக்கிள் காட் ஃபாலென் ஃப்ரம் எ ப்ரோகன் ரோட் அன்ட் என்ட்டெட் இன் அ ஐஸி ரிவெர் நியர் பை"

"அவர் வெகிக்கிள் இஸ் சன்கிங்க் இந்த ஐஸ்"

"வீ கேனாட் ஓபன் எனி ஆஃப் தி கார் டோர். ப்ளீஸ் ஹெல்ப் அஸ், ப்ளீஸ் ........"

ஓடிக் கொண்டிருந்த, ரெகார்ட் செய்யப்பட்ட உரையாடல் ஒலிக் கோப்பை நிறுத்தினார் டேவிட்.

எங்கேயிருந்து கால் வந்தது என அறிந்து, ஒரு ஹெலிகாப்டர், இரு ஆம்புலன்ஸ், நான்கு போலீஸ் வேன்கள் என சம்பவ இடத்தில், பத்தாவது நிமிடத்தில் இருந்தோம்.

ஹை பீம் லைட் எல்லாம் போட்டு சுற்றி முற்றி ஐஸ் ரிவரில் பார்த்தபோது, ஒரு இடத்தில் சிகப்பு வண்ணம் லேசாகத் தெரிந்தது. ரத்தக் கறை என நினைத்தோம் முதலில், பின் தான் தெரிந்தது அது அவர்கள் சென்ற வாகனம் என்று.

ஹெலிகாப்டர் உதவியுடன், காரை மேலே உயரத் தூக்கி, கரைக்கு கொண்டு வந்து அனைவரையும் வெளியே எடுத்தோம்.

தொப்பு தொப்பென கை கால்கள் விழ, மூச்சிருக்கிறதா எனச் சோதித்ததில், அனைவரது நாடியும் விட்டு விட்டு மெல்ல துடித்துக் கொண்டிருந்தது. அது குறைந்து கொண்டே வருவது போலவும் இருந்தது.

(அடுத்த பகுதியில் நிறைவுறும் ...)

அனைத்து பாகங்களும்:

பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
பாகம் - 4 (நிறைவுப் பகுதி)

10 மறுமொழி(கள்):

Anonymoussaid...

Looks like Stillwater,MN incident...

சதங்கா (Sathanga)said...

அனானி,

வருகைக்கு நன்றி. ஆம் நீங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி தான் அடிப்படைக் காரணம். முடிவு தெரிவித்து இது பற்றி கூறலாம் என இருக்கிறேன்.

DHANSsaid...

இது சமீபத்தில் என் நண்பனின் அண்ணனுக்கு நனைந்தது போல உள்ளதே.......

ராமலக்ஷ்மிsaid...

சதங்கா, தமிழ்மணம் முகப்பில், முதல் இரண்டு வரிகளைக் கண்டதுமே தெரிந்து விட்டது கதை எதை நோக்கி நகர்கிறது என்று. அவசரமாய், வேலைகளை முடித்து விட்டு விரைந்து வந்தேன்..இப் பதிவிலும் முடியவில்லை. தாங்கள் அனானிக்கு அளித்திருக்கும் பதிலில் இருந்து இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது என்பது புரிந்ததும் இன்னும் 'பக் பக்' என்றிருக்கிறது. அவர்கள் பிழைத்தார்களா சதங்கா?

சதங்கா (Sathanga)said...

தன்ஸ்,

உங்களுக்கும் அனானி அவர்களுக்கு அளித்த பதில் தான். நிறைவுப் பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன்.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

ஆம் இது உண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி பற்றி, கற்பனை சேர்த்து எழுதியிருக்கிறேன். விவரங்கள் அடுத்த பகுதியில் தருகிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.

cheena (சீனா)said...

சதங்கா, மனம் பக் பக் என்கிறது. பயமுறுத்தாதீர்கள். உண்மைச் சம்பவமெனினும் என் முதல் மறு மொழியும் அதற்கு தாங்கள் அளித்த உறுதி மொழியும் நினைவில் கொள்ளுங்கள்.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//சதங்கா, மனம் பக் பக் என்கிறது. பயமுறுத்தாதீர்கள். உண்மைச் சம்பவமெனினும் என் முதல் மறு மொழியும் அதற்கு தாங்கள் அளித்த உறுதி மொழியும் நினைவில் கொள்ளுங்கள்.//

நினைவில் இருத்தி நல்ல விதமாய் முடித்திருக்கிறேன். இந்நேரம் அந்தப் பதிவையும் பார்த்திருப்பீர்கள் :)

வல்லிசிம்ஹன்said...

//சதங்கா, மனம் பக் பக் என்கிறது. பயமுறுத்தாதீர்கள். உண்மைச் சம்பவமெனினும் என் முதல் மறு மொழியும் அதற்கு தாங்கள் அளித்த உறுதி மொழியும் நினைவில் கொள்ளுங்கள்.//


ஆமா ஆமாம். உண்மையில் நடக்கும் துயரம் போதும். பதிவில் வேண்ட்டாம்.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//
ஆமா ஆமாம். உண்மையில் நடக்கும் துயரம் போதும். பதிவில் வேண்ட்டாம். //

ஆரம்பிக்கும்போதே சீனா ஐயா வாக்குறுதியே வாங்கிட்டாரு, முடிவு நல்லதா இருக்கணும் என்று. ராமலஷ்மி மேடமும் அதையே சொல்ல, இப்ப நீங்களும். முடிவு நல்லவிதமா தான் சொல்லியிருக்கிறேன்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !