Friday, June 20, 2008

ஓம் ப்லாகாய நமஹ !சுருக்காக, நறுக்கென்று மணிரத்னத்தின் திரைக்கதை வசனங்கள் இருந்தாலும், 'அக்னி நட்சத்திரம்' படத்தில் 'தங்கமணி ஊருக்குப் போய்ட்டா' என்பதை தமிழ்கூறு நல்லுலகம் மறக்க வாய்ப்பேயில்லை.

என்ன தான் மறுபாதி, என் உசுரு, செல்லம் என்றெல்லாம் நெய்யாய் உருகினாலும், தங்கமணி தனியா ஊருக்குப் போறாங்க என்றால் ரங்கமணிகளுக்கு வெண்ணெய் போல் கொண்டாட்டம் தான். உதாரணம் மேற்கூறிய திரைப் படத்தில், ஜனகராஜ் அவர்கள், ரங்கமணிகளின் மனோபாவத்தை அற்புதமாகக் காட்டியிருப்பார்.

அது ஏன், எப்ப‌டி என்றெல்லாம் நாம் இங்கு அல‌சப் போவ‌து இல்லை. மாறாக‌ அவ‌ர்க‌ள் ஊருக்கு செல்லும்போது என்ன‌வெல்லாம் சொல்லிச் செல்வார்க‌ள் என‌க் கொஞ்சூண்டு பார்ப்போம். வழக்கம் போல,

  • மறந்திடாதீங்க யுடிலிட்டி பில், ஃபோன் பில் இதெல்லாம் இன்னும் ஒரு வாரத்தில கட்டணும்.
  • வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க.
  • ரெண்டு வாரத்துக்கு மாவு ஆட்டி ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன், கொஞ்சம் கொஞ்சமா எடுத்து ஊத்திக்கங்க.
  • புளி, லெமன் இதெல்லாம் காய்ச்சி வச்சிருக்கேன். சாதம் மட்டும் வச்சிக்கிட்டாப் போதும்.
  • தினம் டாய்லட் வெறும் தண்ணில மாப் பண்ணுங்க, வாரம் ஒரு முறை சோப் போட்டு கழுவுங்க‌.
  • ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வேக்கு(வ)ம் போடுங்க.
  • இந்த அளவு தண்ணி, இந்த அளவு சோப்பு. அப்புறம் நார்மல் ட்ரை செலக்ட் பண்ணிக்கங்க வாஷிங்க் மெஷின்ல, உங்களுக்கு கொஞ்ச துணி தான் இருக்கும்.
  • தூங்கும்போது எல்லா லைட்டும் அனைச்சிருக்கோமா, அடுப்பெல்லாம் அனைச்சிருக்கோமானு ஒரு தரம் பாத்துட்டு படுங்க.
  • மறக்காம டி.விய ஆஃப் பண்ணிடுங்க.
  • (எந்த உள்குத்தும் இல்லாமல்) நான் இல்லையே என்று வருத்தமெல்லாம் படாதீங்க, கொஞ்ச நாள் தான், வந்திருவேன்.
இவ்வளவு வேலையும் செய்யும் தங்கமணிகள் தனியே ஊருக்குப் போகிறார்கள் என்றால் ரங்கமணிகள் வருத்தம் அல்லவா படவேண்டும் !!!! யோசிக்கணும் :)

இப்ப புதுசா ஒன்னு சேர்த்து சொல்லிட்டுப் போறாங்களாம். சும்மா ப்லாக் ப்லாக்னு கட்டி அழுகாம, வெளில போய் ஃப்ரெண்ட்ஸோட தீர்த்தம் கீர்த்தம் சாப்பிட்டு, கொஞ்சம் வெளி உலகிலும் இருங்க என்று =;)

28 மறுமொழி(கள்):

Jayakanthan - ஜெயகாந்தன்said...

//சும்மா ப்லாக் ப்லாக்னு கட்டி அழுகாம// இந்த டயலாக போன வாரம் யாரோ சொல்ல கேட்டேன்.

கவிநயாsaid...

//இப்ப புதுசா ஒன்னு சேர்த்து சொல்லிட்டுப் போறாங்களாம். சும்மா ப்லாக் ப்லாக்னு கட்டி அழுகாம//

இத நம்பறேன்...

//தீர்த்தம் கீர்த்தம் சாப்பிட்டு//

இது உங்களுக்கே ஓவரா இல்லை? :)

சின்ன அம்மிணிsaid...

இங்கெல்லாம் ரங்கமணிகள் என்ன செய்வாங்க தெரியுமா! யார் வீட்லயாவது தங்கமணி ஊருக்கு போறாங்கன்னு தெரிஞ்சாப்போதும், பயிலரங்கம் தான். பயிலரங்கம்னா தண்ணி அதுக்கு தொட்டுக்க ஊறுகாய் எல்லாம்தான். நாங்களும் போனாப்போகுதுன்னு விட்டுட்டு இருக்கோம்

ராமலக்ஷ்மிsaid...

//சும்மா ப்லாக் ப்லாக்னு கட்டி அழுகாம//

கடந்த ஒரு மாதமாய் இதை சொல்லாமல் சொல்கின்றன, படிக்காமல் பைல் ஆகிக் கொண்டிருக்கும் மேகசின்களும், சேர்த்து வைத்து நான்கு நாளுக்கு ஒரு முறை படிக்கின்ற பேப்பர்களும், எவ்ரி வீக் என்னிடமிருந்து தவறாமல் செல்லும் கர்டஸி கால்ஸ் நின்று போக, "என்னாச்சு உனக்கு, ஊரிலில்லையா, உடம்பு சரியில்லையா என வரும் போன் கால்களும், கம்ப்யூட்டரைத் திறந்தும் செக் பண்ணாத தினசரி மெயில்களும் (கவிநயாவுக்குத் தெரியும்:))..எனப் பட்டியல் நீளுது. நல்ல காலத்துக்கு..வீட்டில் எந்த முணுமுணுப்பும் இதுவரை எழவில்லை.

ராமலக்ஷ்மிsaid...

//மேற்கூறிய திரைப் படத்தில், ஜனகராஜ் அவர்கள், ரங்கமணிகளின் மனோபாவத்தை அற்புதமாகக் காட்டியிருப்பார்.//

அது 'அக்னி நட்சத்திரம்' படத்தில் வரும் காமடி ட்ராக் என்று ஞாபகம்.[எத்தனை அவசியமான தகவல்:)]

வந்த புதிதில் வலையுலகில் எங்கு பார்த்தாலும் ரங்கமணிகளும் தங்கமணிகளுமாய் வலம் வர, நானானி பதிவின் பின்னூட்டத்தில் (சிந்துபைரவி ஜனகராஜ் போல) நான் தலையைப் பிய்த்துக் கொள்ள அபிஅப்பாவும் இது அக்னிநட்சத்திர காமெடி ட்ராக்கில் வருவது என என் சந்தேகத்தைப் போக்கி தலையையும் காப்பாற்றினார்:)))!

நாகு (Nagu)said...

////சும்மா ப்லாக் ப்லாக்னு கட்டி அழுகாம// இந்த டயலாக போன வாரம் யாரோ சொல்ல கேட்டேன்.
போன வாரமா, போன மாசமா? :-)
உம்ம தங்கமணி போன மாசம்தானே போனாங்க? என் கூட ரெண்டு வாரமா திரியிறீரு. நாங் கேக்காத டயலாக் எப்படி உம்ம காதுல விழுந்துது?

யப்பா சதங்கா - இந்த கமெண்டுப் பொட்டிய சரி பண்ணுய்யா - scroll பண்ணி scroll பண்ணி தாவு தீருது. பாப்அப் வந்தால் கொலைவெறி வரும் மக்களை கண்டுக்காதீர்!

துளசி கோபால்said...

//தீர்த்தம்..............//


நெசமாவா சொல்லிட்டுப் போனாங்க?

நாகு (Nagu)said...

//இப்ப புதுசா ஒன்னு சேர்த்து சொல்லிட்டுப் போறாங்களாம். சும்மா ப்லாக் ப்லாக்னு கட்டி அழுகாம, வெளில போய் ஃப்ரெண்ட்ஸோட தீர்த்தம் கீர்த்தம் சாப்பிட்டு, கொஞ்சம் வெளி உலகிலும் இருங்க என்று =;)

பதித்தது : சதங்கா (Sathanga) at 8:27 AM //

என்ன சதங்கா - இவ்வளவு நாள் ஆபிஸ்ல மத்தியானத்துலதான் தூங்கி கனவு - இப்பா காலங்காத்தலயேவா - ஏதோ உம்ம காலைக்கனவு பலித்து ரங்கமணி ஊருக்கு இப்படி சொல்லிட்டு போறாங்களான்னு பாப்போம்...

துளசி கோபால்said...

//ஏதோ உம்ம காலைக்கனவு பலித்து ரங்கமணி ஊருக்கு இப்படி சொல்லிட்டு போறாங்களான்னு பாப்போம்... //

ரங்கமணி?

ஓஓஓஓஒ..அப்ப தீர்த்தம் தங்குகளுக்கா? :-))))

இப்பக் கனவு காண்பது நாகு:-))))

cheena (சீனா)said...

சதங்கா, வீட்டில் தங்கமணிகள் இல்லாவிட்டால் நாம் படும் பாடு இருக்கிறதே ! சொல்லி மாளாது. நம்மைக் கெடுத்தவர்களே அவர்கள் தான். அவர்கள் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலா வண்ணம் நம்மை ஆக்கி விட்டார்கள்.

இருக்கட்டும். இப்போ எங்கியாச்சும் அனுப்பிச்சுட்டு தீத்தம் கீத்தாம் சாப்ப்ட்ருவோம் - ( துளசியின் கண் பார்வைக்கு அல்ல- இதைப் படிக்க வேண்டாம்- நான் ரொம்ப நல்லவன்)

வல்லிசிம்ஹன்said...

அந்தப் படம்
லச்சுமிபதீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈனு விகேஆர் கூப்பிடுவாரே
அதுதானே!!

நான் நம்பமாட்டேன். உடனே உங்க வீட்டு நம்பர் கொடுங்க.:)

சதங்கா (Sathanga)said...

ஆன்றோர்களே, சான்றோர்களே,

பின்னூட்டப் பதிலளிக்க காலதாமதமாகிறது. கொஞ்சம் பொறுத்துக்கங்க

நானானிsaid...

தீர்த்தத்தைவிட ப்லாக்கை கட்டி அழுவது தேவலாம். கொஞ்சம் புத்தியாவது தெளியும், வளரும்.
தங்கமணி கொடுத்த லிஸ்டைப் பாக்கையில் திரும்பிவர மாசக்கணக்காகும் போல. அதுவும் தப்பு.
திரும்பிவந்து வீட்டைப் பாத்தால்.....
அலறிடுவாங்க. //நம்மைக் கெடுத்தவர்கள்// என்று சீனா சொன்னார்கள். யார் உங்களை
கெடச் சொன்னார்கள்? இது நொண்டிச் சாக்கு, கூடமாட இயன்ற வேலைகளை
பழகிக்கவேணாமுன்னா சொன்னார்கள்?
சமைக்கிறேன் பேர்வழி என்று கிச்சனை ரணகளம் ஆக்குவார்கள். ஏன்னா மறுபடி கிச்சன் உள்ளே விடமாட்டார்கள் அல்லவா?
உங்களுக்கும் அதுதானே வேண்டும்?

cheena (சீனா)said...

ஆகா ஆகா நான்னாஇ - தங்க்ஸ் சார்பா போர்க்கொடி உயர்த்திட்டீங்க போல - நான் நல்ல படியாத்தானே தங்க்ஸ் பத்தி சொன்ன்னேன். ஒண்ணும் கொறச்சுச் சொல்லலீயே !!

//சதங்கா, வீட்டில் தங்கமணிகள் இல்லாவிட்டால் நாம் படும் பாடு இருக்கிறதே ! சொல்லி மாளாது.//

இது எவ்வளவு பெரிய பாராட்டு - தங்க்ஸ்களூக்கு - ம்ம்ம்ம்ம்ம்

அதெப்படி கரெக்டா கண்டு பிடிச்சுடூறீங்க நொண்டிச் சாக்குன்னு ?

சல்யூட் டு ஆல் தங்க்ஸ் - சரண்டர்

ராமலக்ஷ்மிsaid...

cheena (சீனா)said...
//சல்யூட் டு ஆல் தங்க்ஸ் - சரண்டர்//

இது நல்லாயிருக்கு. நானானி நாம ஜெயிச்சுட்டோம்.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//அது 'அக்னி நட்சத்திரம்' படத்தில் வரும் காமடி ட்ராக் என்று ஞாபகம்.[எத்தனை அவசியமான தகவல்:)]//

பின்னே. பதிவுல மாத்திட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி.

//வந்த புதிதில் வலையுலகில் எங்கு பார்த்தாலும் ரங்கமணிகளும் தங்கமணிகளுமாய் வலம் வர, நானானி பதிவின் பின்னூட்டத்தில் (சிந்துபைரவி ஜனகராஜ் போல) நான் தலையைப் பிய்த்துக் கொள்ள அபிஅப்பாவும் இது அக்னிநட்சத்திர காமெடி ட்ராக்கில் வருவது என என் சந்தேகத்தைப் போக்கி தலையையும் காப்பாற்றினார்:)))!//

அப்போ நான் மட்டும் இல்லை ! என்னைப் போல இன்னும் நிறைய பேரு இருக்காங்கனு தெரிஞ்சு எவ்வளவு சந்தோசம். மிக்க நன்றி தகவல்களுக்கு :)

சதங்கா (Sathanga)said...

வாங்க ஜெய்,

மாஸ்டர் ஆஜர் பாருங்க. அதும் துளசி டீச்சரின் கேள்விக்கு என்ன பதில் தருகிறார்னு பார்ப்போம். வெயிட்டிங் :))

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//இது உங்களுக்கே ஓவரா இல்லை? :)//

சின்ன அம்மிணி, போனா போகுதுனு விட்டுகிட்டு இருக்கோம்னு சொல்றாங்க. சீனா ஐயா தங்கமணிகள் தான் கெடுக்கறாங்கனு சொல்றாரு. இதுல நான் என்ன சொல்றதுக்கு இருக்கு :))

நாகு (Nagu)said...

//ரங்கமணி?//

சதங்கா ஒரு பெண்மணின்னு ரிச்மண்டுல ஒரு புரளி. அதான் ஹி... ஹி... (பித்த உடம்பாச்சா.....)

ராமலக்ஷ்மிsaid...

//பின்னே. பதிவுல மாத்திட்டேன்.//

(நல்)அது! :)!

சதங்கா (Sathanga)said...

துளசி டீச்சர்,

//நெசமாவா சொல்லிட்டுப் போனாங்க?//

அப்புறம் ! ஆமாங்க டீச்சர். அதுலயும் ஒரு டாக்டிஸ் இருக்கு. வெளியில் போய் தீர்த்தம் சாப்பிட்டாலும், திரும்ப நாம் தானே ட்ரைவ் பண்ணி வீட்டுக்கு வரணும். அதுனால அது தீர்த்தம் அளவிலேயே நின்றும் விடும் அல்லவா ?!! என்னா ஒரு மூளை பா ....

சதங்கா (Sathanga)said...

சின்ன அம்மிணி,

கருத்துக்கும் நன்றிங்க அம்மிணி.

//நாங்களும் போனாப்போகுதுன்னு விட்டுட்டு இருக்கோம்//

ஒரு லிமிட்டுக்குள்ள இருந்தா நல்லது தானே. அதுனால விட்டுருங்க :))

சதங்கா (Sathanga)said...

//நல்ல காலத்துக்கு..வீட்டில் எந்த முணுமுணுப்பும் இதுவரை எழவில்லை.//

நீங்க கொடுத்து வைத்தவர் என்று தான் சொல்லணும். ரொம்ப சந்தோசம்.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//சதங்கா, வீட்டில் தங்கமணிகள் இல்லாவிட்டால் நாம் படும் பாடு இருக்கிறதே ! சொல்லி மாளாது. நம்மைக் கெடுத்தவர்களே அவர்கள் தான். அவர்கள் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலா வண்ணம் நம்மை ஆக்கி விட்டார்கள்.//

உண்மை. உண்மை. ஆனா அது பாராட்டுனு ஏன் எடுத்துக்க மாட்டேங்கிறாங்கனு தான் தெரியலை, இல்லையா ?

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//அந்தப் படம்
லச்சுமிபதீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈனு விகேஆர் கூப்பிடுவாரே
அதுதானே!!//

அதே அதே.

//நான் நம்பமாட்டேன். உடனே உங்க வீட்டு நம்பர் கொடுங்க.:)//

சொன்னா நம்பணும். நம்பர் தனிமடலில் அனுப்பி வைக்கிறேன் :)) இங்க வேணாம்.

சதங்கா (Sathanga)said...

நானானி மேடம்,

//திரும்பிவந்து வீட்டைப் பாத்தால்.....
அலறிடுவாங்க.//

இது ஹன்ட்ரட் பெர்ஸன்ட் உண்மை :)

//சமைக்கிறேன் பேர்வழி என்று கிச்சனை ரணகளம் ஆக்குவார்கள். ஏன்னா மறுபடி கிச்சன் உள்ளே விடமாட்டார்கள் அல்லவா?
உங்களுக்கும் அதுதானே வேண்டும்?//

இன்னும் ஜூடா இருக்கியளா :))) ஏன் இந்த அளவு பாசம் ரங்கமணிகள் மேலே ? ஏன் ஏன்.

சதங்கா (Sathanga)said...

//நான் நல்ல படியாத்தானே தங்க்ஸ் பத்தி சொன்ன்னேன். ஒண்ணும் கொறச்சுச் சொல்லலீயே !!//

அதானே.

//சல்யூட் டு ஆல் தங்க்ஸ் - சரண்டர்//

ஆஹா, இப்படி டமால்னு ... சரி பெரியவங்களே இப்படினா, எங்க கதி :)))

சதங்கா (Sathanga)said...

//இது நல்லாயிருக்கு. நானானி நாம ஜெயிச்சுட்டோம்.//

ஜெயிச்சிட்டிங்களா ? யாரு, என்ன போட்டி, எங்க நடந்தது ? :))

'நாங்க விட்டுக் கொடுத்திடறோம்' இந்த டயலாக் கேட்ட மாதிரி இருக்கா ?

Post a Comment

Please share your thoughts, if you like this post !