Wednesday, June 25, 2008

ஆழ்ந்த சிந்தனை கொண்ட மிகச் சிறிய பதிவு

ஜூன் 25

ஒரு கேள்வி:

உலகில் அத்தனை பேரும் தங்கள் மொழிகளை 'தாய் மொழி' எனைக் கூறுவது ஏன் ?

மனதில் தோன்றுவதை சொல்லுங்கள். பதில் நாளை வெளியிடுகிறேன்.

-----

ஜூன் 26

லேபிலில் ஹாஸ்யம் என்று போட்டதால், பதில்:

"because Father seldom gets to speak"

-----

சீரியஸா பதில் சொன்னவங்களுக்கும், சிரிக்க வைக்க பதில் சொன்னவங்களுக்கும் மிக்க நன்றி.

31 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

ஈன்றெடுத்த தாய்க்கு இணையானதெனும் காரணத்தினால்?

அதிஷாsaid...

தாய்மொழி = தாய் + மொழி

தாய் = பெற்றோர்

சதங்கா (Sathanga)said...

ஆதிஷா, ராமலஷ்மி மேடம்,

உங்கள் பதில் எனக்குப் பிடிச்சிருக்கு. அது தான் உண்மை. ஆனால் ஒரு முறை லேபில் பார்த்திட்டு பதில் சொல்லுங்களேன்.

அதிஷாsaid...

இது நகைச்சுவைப்பதிவா??

:)

அப்படினா இந்தாங்க என் பதில்

உலகத்தில் யாரும் தங்கள் மொழிகளை தாய்மொழி என கூருவதில்லை , (தாய் மொழினு தமிழ்ல மட்டும்தான் கூருவர் )

ஆங்கிலத்தில் மதர்டங்
இன்னும் தெலுங்கு,ஹிந்தினு அவா அவா பாஷைல வேற வேற மாதிரி


;-)

அதிஷாsaid...

என் பேரு ஆதிஷா அல்ல

அதிஷா

கூடுதுறைsaid...

நான்கூட இப்படித்தான் அறிவு சார்ந்த பதிவினை இட்டேன்...

ஆனால் பதில்தான் இல்லை...

நீங்களும்தான் பாருங்களேன்

http://scssundar.blogspot.com/2008/04/blog-post_12.html

ராமலக்ஷ்மிsaid...

அட ஹாஸ்யம். ஆனா கடி ஹாஸ்யமா இருக்கக் கூடாது சொல்லி விட்டேன்.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

கண்டிப்பா நல்லா இருக்கும். நீங்கள் ரசிப்பீர்கள் :)

-----

அதிஷா,

இர‌ண்டு கார‌ண‌ங்க‌ளுக்கு ம‌ன்னிக்க‌வும்.
1. உங்க‌ள் பெயரைத் த‌வ‌றாக‌ சொல்லிய‌த‌ற்கு
2. ப‌தில் ம‌றுப‌டியும் முய‌ற்சி செய்யுங்க‌ளேன்.

-----

கூடுதுறை (சுந்தர் ?)

நீங்கள் எதை வைத்து பலன் இல்லை என்கிறீர்கள் எனத் தெரியவில்லை. உங்கள் பதிவினைப் பார்க்கிறேன்.

அதிஷாsaid...

ஒரு வேளை இப்படி இருக்குமோ

காக்கா ஏன் கருப்பாருக்கு
அதோட பேரண்ட்ஸ் கருப்புன்றதாலயா

நாகு (Nagu)said...

வாழ்க்கையில் மாறாத விஷயம் அதுதான்.

நாகு (Nagu)said...

1. நம் ஆரம்பம், துவக்கம் தாய்தான். அதனாலேயே நம்முடைய அடையாளங்கள்(identity) எல்லாமே 'தாய்'தான். தாய்நாடு, தாய்மொழி ( ஜெர்மானியர்கள் தந்தைநாடு என்பார்கள் - ஏனென்று தெரியாது.)

2. மாறாத விஷயம் - தாய். (mother's maiden name especially - thats why that is used for identity verification :-)

சதங்கா (Sathanga)said...

ரிச்மண்ட் குசும்பரே,

நீர் தானா இவ்வளவு பொறுப்பா பதில் சொல்றது ! லேபில் பார்த்து சொல்லும். ப்லாக் அழுவாச்சியா போகுது என்றீரே. உமக்காவே சிறப்புப் பதிவு இது :)))

சதங்கா (Sathanga)said...

அதிஷா, நல்ல முயற்சி. மீண்டும் ட்ரை பண்ணுங்க. ரொம்ப சிம்பிள்

சதங்கா (Sathanga)said...

நாகு,

ஜெர்மானியர் பற்றி நீங்கள் கூறிய தகவல் புதிது !

நாகு (Nagu)said...

கேள்வியே தவறு. உலகில் அத்தனை பேரும் தங்கள் மொழிகளைத் 'தாய் மொழி' எனக் கூறுவதில்லை. தாய்லாந்துக் காரர்களைத் தவிர... (இது எப்படி இருக்கு?)

சதங்கா (Sathanga)said...

நாகு,

இதுபோல ஒரு பதிலைத் தானே எதிர்பார்த்தேன் :)) சும்மா கேள்வியே தவறென்று சொல்லி சமாளிக்கக் கூடாது.

தாய்லாந்து தவிர யாரும் 'தாய் மொழி'னு சொல்றதில்லைனு சொல்றீங்க. 'தாய்' சரி, 'மொழி' என்ன தாய் லேங்குவேஜ்லயும் 'மொழி' தானா ?

நாகு (Nagu)said...

//'தாய்' சரி, 'மொழி' என்ன தாய் லேங்குவேஜ்லயும் 'மொழி' தானா ?//

ஆமாம்! (உங்களுக்குதான் 'தாய்' மொழி தெரியாதே? ஆனால் உங்க கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். நீங்க சிங்கையில ஒரு 'தாய்'பெண்ணிடம் விவகாரம் பண்ணியதாக கேள்வி)

SanJaisaid...

நாம் பிறந்த நாட்டை தாய் நாடு என்று சொல்கிறோம். ஆகவே நம் தாய் நாட்டின் மொழியை நாம் பேசுவதால் அதை தாய் மொழி என்று சொல்கிறோம். இன்று இருக்கும் நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் முன்பு மன்னர்கள் காலத்தில் சிறு பகுதிகளும் தனி நாடுகளாகத் தான் இருந்தது. ஆகவே அந்தந்த நாட்டு மக்கள் பேசும் மொழிகள் அவர்களின் தாய் மொழி என சொல்லப் பட்டது.

தாய்மொழி = தாய்நாட்டு மொழி.
( தாய்லாந்து நாட்டு மொழி அல்ல )

ராமலக்ஷ்மிsaid...

//லேபிலில் ஹாஸ்யம் என்று போட்டதால், பதில்:

"because Father seldom gets to speak"//

கடி ஹாஸ்யம் அல்ல சதங்கா. இது
வெடி ஹாஸ்யம். :))))))))))))))!
ரசித்தேன். வாழ்த்துக்கள்!

அதிஷாsaid...

\\ "because Father seldom gets to speak" \\

அப்படினா இன்னா????

தமிழ்ல சொல்லுங்க ?????

சதங்கா (Sathanga)said...

SanJai,

பதில் போட்ட பின் வந்து, பொறுப்பாகப் பதில் தந்தமைக்கு மிக்க நன்றி :))

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//கடி ஹாஸ்யம் அல்ல சதங்கா. இது
வெடி ஹாஸ்யம். :))))))))))))))!
ரசித்தேன். வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி. சொன்னேன் அல்லவா நன்றாய் இருக்கும் என ! :)

சதங்கா (Sathanga)said...

அதிஷா,

//அப்படினா இன்னா????

தமிழ்ல சொல்லுங்க ?????//

இது தான். இதே தான். உடுறதில்லை. பேசவே உடுறதில்லை ... பின்னே தந்தை பேசினா தானே தந்தை மொழி !!!! :))))

SanJaisaid...

//சதங்கா (Sathanga) said...

SanJai,

பதில் போட்ட பின் வந்து, பொறுப்பாகப் பதில் தந்தமைக்கு மிக்க நன்றி :))//

எப்போ போட்டிங்க.. என்ன பதில்?

ராமலக்ஷ்மிsaid...

//இது தான். இதே தான். உடுறதில்லை. பேசவே உடுறதில்லை ... //

அப்படியா Mrs.சதங்கா:)?

சதங்கா (Sathanga)said...

SanJai

//எப்போ போட்டிங்க.. என்ன பதில்?//

விளையாடாதீங்க சஞ்சய். பதிவிலேயே பதில் போட்டாச்சே :)))

சதங்கா (Sathanga)said...

//அப்படியா Mrs.சதங்கா:)?//

அவங்க இப்ப பி.ஸி.யா இருக்காங்க. அப்புறமா கேட்டுச் சொல்றேனே ! :)))))

SanJaisaid...

//"because Father seldom gets to speak"//

அட .. ஆமா.. இதை சரியா கவனிக்கவே இல்லை.. :))

சதங்கா (Sathanga)said...

சஞ்சய்,

பதில், ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்று தான் இல்லையா ? எங்க நம்மள பேச விடறாங்க :))))

கூடுதுறைsaid...

தாய்மொழி என்பதற்குப் பல விதமான வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன. மிகப் பரவலாகப் புழங்கிவரும் இச் சொல் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சொல்லாகத் தோன்றினாலும், இதற்குச் சரியான வரைவிலக்கணம் கொடுப்பது இலகுவானதல்ல.

ஒரு வரைவிலக்கணப்படி, சிறுவயதில் கற்கப்பட்டு, ஒருதலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் மொழியே தாய்மொழி எனப்படுகின்றது. வேறு சில, சிறு வயதில் முதன்முதலாகக் கற்கும் மொழியே தாய்மொழி என்கின்றன. இன்றைய நிலையில் பல நாடுகளும், சமுதாயங்களும், நிறுவனங்களும்கூடத் தங்களது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பத் தாய்மொழி என்பதற்கு விளக்கம் கொடுக்கின்றன.

இது தமிழ் விக்கியிலுருந்து http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF

ஈர வெங்காயம்said...

குட் கொஸ்டின், இதனால் அறியப்படுவது யாதெனில்....இவ்வுலகத்தில் தந்தை மொழி என எதுவும் இல்லாமையால், தாய்க்கு மட்டும் மொழி அதுவே தாய் மொழி. ( நீதி = தந்தைஸ் ஆல்வேஸ் வெட்டி பயல்ஸ் )

Post a Comment

Please share your thoughts, if you like this post !