Wednesday, June 11, 2008

வானமே எல்லை !


Photo courtesy: msn.com

ஹலோ பென், வணக்கம். என் பேரு ...

எந்த நுழைவு வாயிலுக்குப் போகணும் நீங்க.

மெயின் என்ட்ரன்ஸ்.

சரி, இப்படி வாங்க. என்ன பிடிச்சிக்கறீங்களா ?

ஓ, ரொம்ப தேங்க்ஸ்.

நுழைவு வாயிலுக்கு செல்ல எண்ணி, குச்சியைத் தட்டிக் கொண்டே வேறு திசையில் பயணித்து, தண்ணீர் பைப்பில் கால் தடுக்கிய போது, அவருக்கு சில நொடிகள் உதவ முடிந்தது என்னால்.

பார்வையற்ற சகோதரரான பென் போன்று நிறைய பேர் அலுவலகத்தில் வேலை செய்கின்றனர். ஆனால் இது போல் நுழைவு வாயிலுக்குச் செல்வதற்கு தயங்கி நான் பார்த்ததில்லை. புதிதாகச் சேர்ந்திருப்பார் என எண்ணிக் கொண்டேன்.

கதவை நெருங்குகிறோம், இப்படி வாங்க என்று நன்றாக கதவைத் திறந்து விட்டேன்.

சில அடிகளில் ம‌ற்றொரு க‌த‌வையும் தாண்டினோம்.

இப்ப செக்யூரிட்டிக்கு முன்னால இருக்கிறோம். நீங்கள் எங்கு செல்ல வேண்டும்.

இனி நான் போய்க் கொள்வேன். இந்த DVD ட்ராப் பண்ணிவிடுகிறீர்களா ?

ஓ, தாராளமாக என்றேன்.

அது வரை நின்று, மெஷின் க்ர்ர்ர், ச்ச்ச்க் என்ற DVD விழுங்கும் சத்தம் கேட்டு, மிக்க நன்றி நண்பரே என விடை பெற்றார் பென்.

எனக்குள் ஓராயிரம் கேள்விகள். ஒன்றே ஒன்று மட்டும் கேட்டேன் அவரிடம்.

தவறாக எண்ண வேண்டாம், பதில் சொல்ல இயலவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்களிடம் ஒரு கேள்வி கேக்கலாமா என்றேன்.

இந்த DVD எப்படி பார்ப்பீர்கள் என்றேன்.

பி.எஸ். வீரப்பா மாதிரி ஒரு சிரிப்பு அவரிடமிருந்து.

நான் எப்படிப் பார்ப்பேன், என் குழந்தைகள் பார்ப்பார்கள் !!!

அப்ப உங்க மனைவி இந்த வேலை எல்லாம் செய்யலாமே ?

ஏன் ப‌ண்ணாம‌ல், இன்னிக்கு என்னோட‌ ட‌ர்ன் என்றார்.

பென்னின் மனைவியும் பார்வையற்றவர் என அறிந்து அதிர்ந்து நின்றேன்.

சில விநாடிகள் சிந்தனையில் மனம் பறந்தது ...

இதிலிருந்து, பென் ஒரு நிறைவான‌ வாழ்க்கை வாழ்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிற‌த‌ல்லவா ?!!!

நமக்கு எல்லாம் இருந்தும், நம்மை நாம் குறுக்கிக் கொள்கிறோமோ ?!! நான் இவ்வளவு தான், என்னால் இவ்வளவு தான் முடியும், இதுக்கு மேல எக்ஸ்ட்ரா ஒரு பெர்சன்ட் கூட எதிர்பார்க்காதீங்க என்றெல்லாம் !!!!

12 மறுமொழி(கள்):

வல்லிசிம்ஹன்said...

பரிபூர்ணமான உறவுகளுக்கு இப்படித்தான் விளக்கம் இருக்கும் போல.. சதங்கா ஒரு நல்லவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

VIKNESHWARANsaid...

நச்சுனு ஒரு கருத்து...

ச்சின்னப் பையன்said...

தலைப்பு, பென், பதிவு, கருத்து - அனைத்தும் சூப்பர்.. நன்றி...

கவிநயாsaid...

நீங்க சொல்றது உண்மைதாங்க, சதங்கா.

ராமலக்ஷ்மிsaid...

//நமக்கு எல்லாம் இருந்தும், நம்மை நாம் குறுக்கிக் கொள்கிறோமோ ?!! நான் இவ்வளவு தான், என்னால் இவ்வளவு தான் முடியும், இதுக்கு மேல எக்ஸ்ட்ரா ஒரு பெர்சன்ட் கூட எதிர்பார்க்காதீங்க என்றெல்லாம் !!!!//

'வானமே எல்லை' என வாழ்கிறார் பென். 'வருமா தொல்லை இப்படி வாழ்ந்து விட்டால்' எனக் கேட்கிறார் சதங்கா இவ் வரிகளிலே..! யோசிக்க வேண்டுகிறேன்.

cheena (சீனா)said...

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்னும் கருத்தினைத் தவறாகப் புரிந்து கொண்டு - தன் திறமையினை, தன்னால் முடிந்தவற்றைச் செய்யாமல் வாழுபவர்களுக்கு பென் ஒரு எடுத்துக்காட்டு.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா, உங்க கருத்துக்கும், பென் பற்றி அறிந்து, நீங்கள் காட்டிய சந்தோசம் குறித்தும் மிக்க மகிழ்ச்சி.

சதங்கா (Sathanga)said...

நன்றி விக்னேஸ்வரன்.

சதங்கா (Sathanga)said...

வாசித்து, நிறைவான கருத்துக்கு நன்றி ச்சின்ன பையன்.

சதங்கா (Sathanga)said...

ஆமாங்க கவிநயா. கருத்துக்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி மேடம்,

ஆஹா கவிதை மாதிரி தங்கள் கருத்து குறித்து மிக்க மகிழ்ச்சி.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

மிகச் சரியாகச் சொன்னீர்கள். எல்லாம் இருந்தும் என்னிடம் எதுவும் இல்லை என்று கூட சொல்லுபவர்களும் உண்டல்லவா. என் கல்லூரி வட்டத்து நெருங்கிய நண்பர்களே, இன்று இங்கு மிக நல்ல நிலையில் இருந்தும், ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால், எடுத்த உடனேயே, "என்னத்த வாழ்க்கை என்று இழுக்கையில்" நொந்து நூலாகிற மாதிரி இருக்கும். பென் போன்றவர்களை அவர்களும் பார்க்கத் தான் செய்கிறார்கள் என்பது இன்னும் கூடுதல் தகவல்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !