டீல் மா கண்ணு ! (Part - 2)
Photo: Thanks to Google maps
இரவு பதினோறு மணிக்கு நியூஜெர்ஸி அடைந்தனர். இவர்கள் வேலை செய்யும் இந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ராகுல், ப்ரசன்னாவின் அபார்மென்ட் களை கட்டியது. ஒரு பக்கம் ஆப்பிள் ஐபாட், ஸ்பீக்கரில் கனெக்ட் பண்ணி லேட்டஸ்ட் தமிழ் பாடல்கள் சினுங்க, மறுபுறம் டி.வி.ஓட, இது எதுவுமே கேட்காமல், பார்க்காமல், ஒரே பேச்சும், கும்மாளமும், செல் ஃபோன் அரட்டைகளும், அடி தடியும் என அமர்களப்பட்டது அந்த அபார்ட்மென்ட்.
புயலடித்து ஓய்ந்த அமைதியில் காலை மூனுமணிக்கு நித்திரைக்குச் சென்ற அனைவரும், ஏழு ஏழரைக்கெல்லாம் எழுந்து பயணத்தைத் தொடர்ந்தனர். பிரிட்ஜ் வாட்டர் டெம்பிள், வரிசையாய் இந்தியக் கடைகள் கொண்ட (சென்னை, மும்பை எனத் தோன்றும்) டைசன் வீதியில் ஒரு உலா, மற்றும் சில முக்கிய வீதிகளில் ஒரு சுற்று என்று அதுவே சாயந்திரம் வரை ஆனது.
வண்டியா ஓட்டறான். அருபத்தி அஞ்சுக்கு, அம்பதுல போறான் பாரு என டென்சனாகி, முன் சென்ற காரை ஓவர் டேக் செய்தான் ஞானம். ஊஊஊ என சந்தோசத்தில் இளரத்தங்கள் ஆர்ப்பரித்தன.
வெள்ளி இரவு நியூயார்க் நண்பர்களின் அப்பார்ட்மென்டை விழிக்க வைத்து, ஆட்டம் போட்டு, துயிலெழுந்தனர். மறுநாள் ட்ரைவ் செய்யவில்லை. உள்ளே லோக்கலில் பஸ் டிக்கட் எடுத்து, மாடி பஸ்ஸில் மேலே அமர்ந்து, பறவையாய்ப் பறந்து திரிந்தனர் நியூயார்க் நகர வீதிகளில்.
மதியம் பிட்ஸ்பர்க் புறப்படத் தயாராயினர்.
லாவண்யா சொன்னாள், ஒரே டயர்டா இருக்கு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு நைட் கிளம்பலாம் என்று.
சும்மா வர்ற உனக்கே டயர்டுனா, ஓட்டற எங்களப் பத்தி யோசிச்சீங்களா கண்ணுகளா ?!! இதுக்கு தான் இந்த பொன்னுங்கள ஆட்டையில சேர்த்துக்கவே கூடாது என்று ஆரம்பித்தான் ஞானம்.
லாவண்யா இப்ப கிளம்பினா தான் நைட் பிட்ஸ்பர்க் போய் சேரலாம். அப்புறம் நண்பர்கள் அரட்டை, கோவில் இதெல்லாம் முடிச்சி ஞாயிறு மதியம் அங்க இருந்து கிளம்பணும். நடுநிசிக்கு கார ட்ராப் செய்யனும். அதனால எதையும் தள்ளிப் போட வேண்டாம் என்றான் செந்தில்.
கச்சிதாமா ப்ளான் படி எல்லாம் முடித்து ஞாயிறு மதியம் பிட்ஸ்பர்கிலிருந்து கிளம்பினர். குளிர் காலம் ஆதலால் ஐந்து மணிக்கே வானம் இருட்ட ஆரம்பித்திருந்தது. லேசான பனி பெய்யத் துவங்கியது. இப்ப வருகிற எக்ஸிட் எடு செந்தில், மெக்கியிலாவது, 'சப்'பாவது போய் டின்னர் கொட்டிக்கலாம் என்றான் வருண். அனைவரும் ஆமோதித்தனர்.
மணி எட்டு ஆகுது, இன்னும் ஒரு அறுபது அறுபத்தி அஞ்சு மைல்ல நாம ஊருல இருப்போம். இப்பவாவது பொறுமையா உக்காந்து சாப்பிட்டுட்டு கிளம்பலாமா என்றாள் லாவண்யா !
ரெண்டு பார்ட்டோட முடிக்கலாம் என்று இருந்தேன், ஆனா அடுத்து ஒரு பார்ட் போற மாதிரி இருக்கவே, ரெண்டாவது பார்ட் தொடரும் .....
அனைத்து பாகங்களும்:
பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
பாகம் - 4 (நிறைவுப் பகுதி)
6 மறுமொழி(கள்):
//ரெண்டு பார்ட்டோட முடிக்கலாம் என்று இருந்தேன், ஆனா அடுத்து ஒரு பார்ட் போற மாதிரி இருக்கவே, ரெண்டாவது பார்ட்//
அடுத்த பார்ட்டா..போட்டும் போட்டும்.
அப்படி அது என்னதான் டீல்னு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
ஆமாம் மேடம்,
எப்படியும் மூனாவதோட முடிக்கலாம் என எண்ணியிருக்கிறேன். சில நேரங்களில் சில சம்பவங்கள் கோர்க்கையில் நீண்டு விடுகிறது. உங்க ஆவல் குறித்து மிக்க மகிழ்ச்சி.
சதங்கா, அனுபவம் பேசுகிறது சதங்கா. நல்ல கற்பனை - அல்ல அல்ல உண்மை.
கதை நன்கு செல்கிறது - நல்வாழ்த்துகள்
//சதங்கா, அனுபவம் பேசுகிறது சதங்கா. நல்ல கற்பனை - அல்ல அல்ல உண்மை. //
மெய்யாலுமே உண்மை தான், அதில் கொஞ்சம் கற்பனை கலந்து தந்திருக்கிறேன்.
//கதை நன்கு செல்கிறது - நல்வாழ்த்துகள்//
நன்றி சீனா ஐயா.
அப்பாடி, பசங்க இப்படியா சுத்துது உங்க ஊரில. எங்க வீட்டுப் பசங்க (கல்யாணம் ஆகாதது ) ரெண்டு அங்க இருக்கே.
அப்படியே நேரில பாக்கிற மாதிரி இஎஉக்கு.
//அப்பாடி, பசங்க இப்படியா சுத்துது உங்க ஊரில//
ஆமா ஆமா.
//எங்க வீட்டுப் பசங்க (கல்யாணம் ஆகாதது ) ரெண்டு அங்க இருக்கே.//
உங்க வீட்டுப் பிள்ளைகள்னு சொல்றீங்க. எப்படி லிமிட் தாண்டுவார்கள். அதுனால தைரியமா இருக்கலாம்.
//அப்படியே நேரில பாக்கிற மாதிரி இஎஉக்கு.//
ரொம்ப நன்றி வல்லிம்மா. இது போல பெரியவங்க சொல்றது படிக்க சந்தோசமா இருக்கு :)
Post a Comment
Please share your thoughts, if you like this post !