Wednesday, June 11, 2008

டீல் மா கண்ணு ! (Part - 1)



டேய் இங்க பாரேன், என்டர்ப்ரைஸ்ல வீக்கெண்ட் டிஸ்கௌண்ட் போக இன்னும் 20% கம்மியா தர்றானாம் என்றாள் லாவன்யா.

நீ இன்னும் என்டர்ப்ரைஸ விடலயா ? 'பட்ஜட்' பாரு, பேருக்கேத்த மாதிரி டீல் தர்றான், இது வருண்.

டாலர், த்ரிஃப்டி என ஆளாளுக்கு கார் வாடகை டீலில் மூழ்கி அந்த அப்பார்ட்மென்ட் வீடு அல்லோல கல்லோலப்பட்டது !

செல்லில், பக்கத்து ப்ளாக்கில் இருந்து மதுமிதா அழைத்தாள். "அருண், செவன் சீட்டர் எடுக்கலாமா, இல்ல ரெண்டு வண்டியா புக் பண்ணிக்கலாமா ?"

எத்தன தடவை சொல்லியிருக்கேன். அருண் இல்ல, வருண் என்று. மெதுவாகத் தான் பேசினான்.

படபடவென எதிர்முனையில் சரவெடி. "என்ன தப்பா சொல்லிட்டேன். அது என் அண்ணா பேரு, உன்னை என் அண்ணன் மாதிரி அழைத்தது தப்பா. நானும் எத்தனை தடவ இத உன்னிடம் சொல்லியிருக்கிறேன்".

லாவன்யா, வருண், மதுமிதா, செந்தில், ஞானம், தீபிகா இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து இங்கு வந்து பல ஆண்டுகள் ஆனதென நினைப்போம். இப்ப தான், சமீபத்தில் ஒருசில மாதங்கள் முன் வந்தவர்கள் தான். வந்த நாள் முதல் டீல் தான்.

எல்லாம் கல்லூரி முடித்து ஒரு வருடம் கூட இல்லை. அமெரிக்கா வந்தவுடன் ஒரு பரம சுதந்திரம் பெற்ற உணர்வு. பரந்து விரிந்த, யாரையும் எதற்குள்ளும் கட்டுப்படுத்த முடியாத சுதந்திரம். சென்ற ஆண்டு கல்லூரி முடித்த இள ரத்தங்கள், கேக்கவே வேண்டாம். ரெண்டு மூனு நாள் லீவு விட்டாப் போதும், மேலே பார்த்த நிலை தான்.

வாஷிங்டன் டி.ஸியில் இருந்து, மூன்று நாட்களில், நியூ யார்க், நியூ ஜெர்ஸி, பிட்ஸ்பெர்க் சுத்திட்டு வர்ற மாதிரி ப்ளான் இவர்களது.

போற இடமெல்லாம் பார்த்துப் போம்மா. அமெரிக்கால எல்லாமே ஈஸியாமே, அங்கலாய்த்தாள் தீபிகாவின் அம்மா. நான் என்ன கொழந்தையாம்மா, இன்னும் சின்ன பிள்ளையாவே பாக்கறீங்களே. இதே அமெரிக்கா என்றால் ....

இது தீபிகாவின் வீட்டு உரையாடல் மட்டும் இல்லை, அவள் வயதைக் கொண்ட மற்ற அனைவரின் பெற்றோரும் இதையே சொல்லி அனுப்பியிருந்தனர்.

இதுவரைக்கும் ஏழெட்டு ஸ்டேட் போய்ட்டு வந்திட்டோம். எல்லாம் ஃப்ளை பண்ணி. போரடிச்சுப் போச்சு, அதான் இப்ப இங்க ட்ரைவ் பண்ணலாம் என்று ப்ளான், என அடுக்கினான் ஞானம். ப்ளை பண்ணி, என்றவுடன் அதற்கான டீல், எப்படி டீல் பண்ணியிருப்பார்கள் என நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

செவன் சீட்டர் போய்டுச்சாம் பட்ஜட்ல. வேற எங்கயும் இல்ல. புதுசா ஒரு ரென்டல் கம்பெனி வந்திருக்கு, அவன் ஒரு மாதிரி டீல் சொல்றான். ஞாயிறு இரவு நடுநிசியில் கார ட்ராப் பண்ணிட்டா, மொத்த ரென்ட்டும் 35% கொடுத்தாப் போதும் என்றான் ஞானம். கொஞ்சம் லேட் ஆனாக் கூட முழுசா தரணுமாம்.

லேட்டாவாவது, லேட்டஸ்டாவாவது எல்லாம் இல்லை கரெக்டா கன் டயத்துக்கு வர்றோம். வண்டிய ட்ராப் பண்றோம் !

என்னடா கன், கின் என்று சொல்லிக்கிட்டு. எவனாவது போலீச கூப்பிடப் போறான் என்றான் செந்தில்.

ஆனா டீல், செம டீல். 'ஞானம் பேருல டீலு' என அனைவரும் கோரசாக வட்டமடித்து பங்கரா டான்ஸ் ஆடினர். தமிழ்மணத்தில தான் ஜிலேபி பிழியாறங்க என்றால் இங்கயுமா என்று புலம்பினாள் மது.

வியாழன் மதியம், சிகப்பு நிற ரென்டல் எஸ்.யூ.வியை பார்க் செய்தான் வருண். எல்லாம் பேக் பண்ணி, செக் பண்ணிக் கொண்டனர் ஆறு பேரும்.

எல்லா டைரக்ஷன் மேப் ப்ரிண்ட் இதுல இருக்கு, நீட்டினாள் தீபிகா. வாங்கி முன்னால் வைத்துக் கொண்டான் வருண்.

சிக்ஸ் சி.டி. ப்ளேயரா. அட அடா. இந்தா, புடி என கொத்து சிடிக்கள் கொண்ட பையை கொடுத்தாள் லாவன்யா. நல்ல பாட்டா போடப்பா என பின்னால் இருந்து கூவினான் ஞானம். 'குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' என பெங்களூர் ரமணியம்மா பாட அனைவரும் எச பாட்டுப் பாட, தடபுடலாய் அபார்ட்மென்ட் வளாகம் விட்டுப் பறந்தனர்.

க்ளிக், ஷ்ஷ்ஷ்ஷ்யூ என்று கேன் ஒபன் பண்ணியதில், அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டியா என்றாள் மது, ஞானத்தைப் பார்த்து.

ஹி. ஹி. அது ஒன்னும் இல்ல மது, நீ பரவா இல்ல, பேருலே கிக் இருக்கு, நாங்க பாவம் இல்லியா ?!! எனக்கும் ஒன்னு குடுடா என்றான் செந்தில்.

டேய் நிறுத்துங்கடா, முழுசா என்ன ஓட்ட விட்டுருவீங்க போல இருக்கே என பதறினான் வருண்.

தொடரும் ...

அனைத்து பாகங்களும்:

பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
பாகம் - 4 (நிறைவுப் பகுதி)

6 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

கலக்கலான பார்ட் 1. தொடர்ந்து எப்படி கலக்குதுன்னு பாக்கலாம்.

//தமிழ்மணத்தில தான் ஜிலேபி பிழியாறங்க என்றால் இங்கயுமா என்று புலம்பினாள் மது.//

மது புலம்பறாளா? வந்த அழைப்பை நினைத்து நீங்கள் புலம்புகிறீர்களா:))??

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

ரெண்டோட முடிச்சிடலாம் என்று எண்ணியிருக்கிறேன். தொடர்ந்து வாசியுங்கள்.

//மது புலம்பறாளா? வந்த அழைப்பை நினைத்து நீங்கள் புலம்புகிறீர்களா:))??//

கதை இப்ப நடக்கற மாதிரி காட்டனும்ல :))) அதான்.

cheena (சீனா)said...

இளமையின் துவக்கம் - பெற்றோர்களின் ஆதங்கம் ( பயம்) - நல்ல துவக்கம் - நன்கு நடைபெற நல் வாழ்த்துகள்.

கதை அமர்க்களாமாய்ப் போகிறது - தொடர்க பகுதி இரண்டினை - மகிழ்வு மட்டுமே கதையில் இருக்க வேண்டும். மனம் படபடக்கிறது. ஏதேனும் எழுதி விடுவீர்களோ என்று

சதங்கா (Sathanga)said...

நன்றி சீனா ஐயா,

கண்டதையும் எழுதிவிட மாட்டேன். தொடர்ந்து வாசியுங்கள்.

வல்லிசிம்ஹன்said...

ஒரு சில வார்த்தை, நல்லதா சொல்லிட்டுப் போங்க //
அதேதாங்க. நல்லா இருக்கு சதங்கா. பயப்படாமல் படிக்கலாமில்ல?:)

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//நல்லா இருக்கு சதங்கா. //

மிக்க நன்றி.

//பயப்படாமல் படிக்கலாமில்ல?:)//

இது என்ன கேள்வி ?! வழக்கம் போல நடக்கறத பதிய தானே, தளத்திற்கே வழக்கம் போலனு (அப்பாடா ஒரு சான்ஸ் கெடச்சுருச்சு வெளக்கறதுக்கு !!:) பேரு வச்சிருக்கேன். முறணா எதும் இருக்காது, தாராளமா நீங்க பதிவுகளப் படிக்கலாம்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !