சிகாகோ சுத்திப் பாக்கப் போறேன்
என் இனிய இணைய தமிழ் பதிவர்களே ! வணக்கம் !!
வருகிற ஜூலை 4, விடுமுறையை முன்னிட்டு, சிகாகோ சுத்திப் பார்க்கலாம் என்று தங்கமணியின் யோசனையை நிறைவேற்றும் பொருட்டு, மூன்று நாட்களில் என்ன என்ன பார்க்கலாம் என இணையக் கடவுளிடம் கேட்ட போது, அள்ளித் தெளிக்கிறார் அவர். அதிலிருந்து எதை எடுப்பது, எதை விடுப்பது எனத் தெரியவில்லை.
சிகாகோ வாசிகளே, உங்கள் ஆலோசனைகளையும் எங்களுக்கு அள்ளித் தெளியுங்களேன்.
அட்வான்ஸ் நன்றிகள் பலப் பல.
6 மறுமொழி(கள்):
ஆலோசனை தர வழியில்லை. ஆனால் வாழ்த்தலாம்தானே 'Have a nice trip' என!
வந்து 'வழக்கம் போல்' அனுபவங்களை பதிவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்!
Balaji Temple,
Devon Street (desi Food),
Sears Towers,
Downtown View,
Obama's Home
I think you can plan for near by wisconsin as well (http://tourism.state.wi.us/Natural_Attractions.aspx)
Enjoy Thangamani & family.
சதங்கா ஷெட் அக்வாரியம் போகலாம். நேவிபியர் போகலாம்,
டூபேஜ் மியூசியம் இருக்கு.
ஸ்வாமி நாராயண டெம்பிள் ஆர்க்கிடெக்சர் ரொம்ப புகழ்வாய்ந்தது.
ராமர் கோவிலும் இருக்கு. மூணு நாள் போறாதே:))
சதங்கா!
ஜுலை 4 சிகாகோவில் இருப்பீர்களானால், டவுண்டவுனில் ஏரிக்
கரையோரம் பயர்வொர்க்ஸ் பாருங்கள்!!
அங்குதான் யூஎஸ்ஸிலேயே ரெண்டாவது பெரிய ஷோ! சிகாகோட்ரிப்யூனல் பத்திரிகையின் அதிபர், பெயர் மறந்துவிட்டது...அவரது மியூசியம் பார்க்கவேண்டிய ஒன்று. விஸ்கான்சின்னில் அமைந்துள்ள ஹவுஸ் ஆன் தி ராக், மில்வாக்கி மியூசியம் போன்றவை அவசியம் பார்க்கவேண்டியது. மற்றதெல்லாம் வல்லி சொன்னதே டிட்டோ!!
வாழ்த்துக்களுக்கு நன்றி ராமலஷ்மி மேடம். பதிவு போட்டுருவோம் !!
-----
பரிந்துரைத்த இடங்களுக்கு நன்றி ஜெய். Devon Ave விக்கிபீடியாவில் பார்த்தோம். அருமை. விஸ்கான்சின் சேர்க்க முடியுமானு பார்க்கிறோம். இருப்பது மூன்று நாட்கள் தானே !!
-----
வல்லிம்மா, மிக்க நன்றி. ஸ்வாமி நாராயண வலைத்தளம் சென்று பார்த்தோம். சூப்பரோ சூப்பர். எங்கள் லிஸ்டில் டாப்பில் இருப்பது இக் கோவில். அப்புறம் குட்டிஸுக்கு ஷெட் அக்வேரியம், நேவிபியர் ஃபார் போட் ரைடிங்க். மூனு நாள் என்றதால லிஸ்ட் சுருங்கிருச்சு :))
-----
நானானி மேடம், பரிந்துரைகளுக்கு நன்றி. டௌன்டவுன் பயர்வொர்க்ஸ் பார்க்க முடியுமானு பார்க்கிறோம். பயங்கர கூட்டமா இருக்குமே. ரெண்டு குட்டீஸ் வச்சிக்கிட்டு போவது முடியுமா ? பார்க்கிங் வசதிலாம் நல்லாருக்குமா ?
McCormick Tribune Freedom Museum தானே சொல்கிறீர்கள் ?
அதேதான் சதங்கா! கட்டாயம் பாருங்கள்.
Post a Comment
Please share your thoughts, if you like this post !