Thursday, June 19, 2008

டீல் மா கண்ணு ! (Part - 4) - நிறைவுப் பகுதி


Photo : www.freefoto.com

சிறு முதலுதவி செய்து இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். அவர்களுடைய உடமைகளை சோதித்ததில் உங்களது தொலைபேசி எண்கள் கிடைத்தன. நீங்கள் தான் உங்கள் கம்பெனிக்கு, இங்கு தலைமை அதிகாரிகளா ? என வினவினார் டேவிட்.

ஆமாம். இப்ப எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் ? இந்தியாவில் இருந்து அதுக்குள்ள‌ ஏக‌ப்ப‌ட்ட‌ போன்கால்க‌ள், எங்க‌ளால என்ன சொல்லி சமாளிக்க வைக்கிறது தெரியல, சீக்கிரம் சொல்லுங்கள் என்றார் யமுனசாகர்.

ஆல் ரைட், ஆல் ரைட் என்றார் மிஸ்டர் ரைட். யாருக்கும் ஒன்னும் ஆகல. நாலு பேரு கோமால இருக்காங்க, ரெண்டு பேரு அதவிட கொஞ்சம் பெட்டர் பொஸிஸன்ல இருக்காங்க. உயிர் சேதம் எதும் இல்லை, ஆகவும் வாய்ப்பில்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க.

பெட்டரா இருக்க ரெண்டு பேருகிட்ட இன்வெஸ்டிகேட் பண்ணனும். டாக்டர்ஸோட அட்வைஸ்க்கு காத்துகிட்டு இருக்கோம்.

இன்னும் கொஞ்ச தூரம் தானே என்று ஆற அமற மெக்கில சாப்பிட்டுட்டு, பத்து மணிக்கு வெளில வந்து பார்த்தா, எங்கும் பனி. உள்ளே அரட்டை அடிச்சுக் கொண்டு சாப்பிட்டதில் வெளியே என்ன நடந்தது என்றே தெரியவில்லை. சரி லேசா தானே பனி பெஞ்சிருக்கு, போயிடலாம் என வண்டியை எடுத்தோம்.

எக்ஸிட்டிலிருந்து ஹைவே புடிக்க ரொம்ப சுத்திட்டோம். வெளியில் விசாரிக்க கூட யாருமில்லை. நேரம் வேற ஆகிறது, டீல் டைம் வேற ப்ரெஷ‌ர் கொடுக்க ஆரம்பித்து விட்டது. என்ன, ஒரு எக்ஸிட் எடுத்தாப் போதும் எனும் நிலை.

சுத்தி சுத்தி, ஏதோ ஒரு ரோட்டில போய்க்கிட்டே இருந்தப்ப தான், அந்த உடைந்த ரோடு, பக்கத்தில் இருந்த ஐஸ் ரிவரில் எங்களை இறக்கி விட்டது. கொஞ்சம் ஸ்பீடா வேற போனோம், ப்ரேக் புடிக்க, பனியில் ரொம்ப சருக்கி, வண்டிய கன்ட்ரோல் பண்ணவே முடியல.

வண்டி அப்படியே ஐஸ்குள்ள அமுங்குது. எங்களுக்கு என்ன செய்யறதுனே புரியல. குய்யோ, முய்யோனு ஆளாளுக்கு கத்திக்கிட்டு, கட்டிக்கிட்டு, சாமிய வேண்டிகிட்டு, பெத்தவங்கள நெனச்சிக்கிட்டு, 911 அழைத்தோம். அதுக்கப்புறம் என்ன நடந்ததுனே தெரியாது.

வருணும், தீபிகாவும் சொல்லச் சொல்ல மடிக் கணினியில் தட்டச்சிட்டுக் கொண்டார் டேவிட்டின் அசிஸ்டென்ட்.

"'ரோட் ப்ரோக்கன், டீடோர்' என்ற எச்சரிக்கை அட்டையை, அவர்கள் இருந்த பரபரப்பில் காணத்தவறிவிட்டனர்" என்ப‌தையும் சேர்த்துக் கொள்ள‌ச் சொன்னார் டேவிட் !

-----

அனைத்து பாகங்களும்:

பாகம் - 1
பாகம் - 2
பாகம் - 3
பாகம் - 4 (நிறைவுப் பகுதி)


சமீபத்தில் இங்கு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை செய்தியில் படித்து, மனம் ஒரு கனம் அதிர்ச்சியுற்று, அறிவுரை என இல்லாமல், அன்பாக, அடக்கமாக ஒரு கதை வடிவில் சொல்ல நினைத்தேன்.

இளரத்தங்களுக்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தெரியாத இடங்களில், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதை எப்பாடுபட்டாவது தவிர்த்து விடுங்கள்.

உண்மைச் சம்பவம் பற்றி அறிந்து கொள்ள நினைப்பவர்கள், மனதை திடப்படுத்திக் கொண்டு இங்கு க்ளிக் செய்து வாசியுங்கள்.

10 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

நிஜத்தில் என்ன நடந்திருந்தாலும் கதையில் நீங்கள் அவர்களைப் பிழைக்க வைத்து விட வேண்டுமே என இருந்தேன்.
//"'ரோட் ப்ரோக்கன், டீடோர்' என்ற எச்சரிக்கை அட்டையை, அவர்கள் இருந்த பரபரப்பில் காணத்தவறிவிட்டனர்" என்ப‌தையும் சேர்த்துக் கொள்ள‌ச் சொன்னார் டேவிட் !//

முடிவும் நச்.


//இளரத்தங்களுக்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தெரியாத இடங்களில், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதை எப்பாடுபட்டாவது தவிர்த்து விடுங்கள்.//

இளரத்தங்களுக்கு நல்ல அறிவுரையாக கதை இருந்ததெனில், கொடுத்துள்ள லின்க் நல்ல பாடமாகவும் இருக்கும்.

இதே போன்ற சம்பவம் இரண்டு வருடங்களுக்கு முன் பெங்களூரிலும் நடந்தது. ஒரு கல்லூரி மாணவன், மூன்று பள்ளி மாணவிகள் லேட் நைட் பார்ட்டி முடிந்து மைசூருக்கு உறவினர் வீட்டிக்கு (ஒரு மாணவியின் பெற்றோர் திருமண நாள் விழாவுக்காக) நடுநிசி தாண்டி ஸ்கோடா ஆக்டேவியாவில் பயணிக்க, கண்மண் தெரியாத ஸ்பீடில் லாம்ப் போஸ்டில் முட்டி, ஸ்பாட்டிலேயே ஓட்டியவன் போய்ச் சேர, இருவருக்கு பலத்த காயம். ஒரு பெண் கோமாவில்(அவள் என மகனது பள்ளியில் அவனுக்கு ஒரு வருடம் சீனியர்). இள இள ரத்தங்களுக்கு அதீத சுதந்திரம் கொடுக்கும் பெற்றோரும் பின் வருந்திப் பயனில்லை.

cheena (சீனா)said...

நன்றி சதங்கா

மனம் மகிழ்கிறது. கதையின் முடிவில்.

நல்ல முடிவு நல்வாழ்த்துகள்

Jayakanthan - ஜெயகாந்தன்said...

விஸ்கான்சின்'ல் உள்ள வின்னிபாகோ ஏரியில் ஐஸ் ஆனபின் அதன் மீது நடந்து சென்று சிறு துளையிட்டு மீன் பிடிப்பது வாடிக்கை. (ஒரு வெள்ளக்கார தொர சொன்னாரு)

அதை நம்பி நானும் இரு நண்பர்களுடன் வின்னிபாகோ ஏரியின் மீது எங்கள் suv'ஐ ஓட்டி சென்றோம். சிறிது தூரம் சென்றதும் அதன் மீது நின்று படமெடுத்தோம். 5 நிமிடம் கழித்து, ஐஸில் சிறு விரிசல் தென்பட ஆரம்பித்தது.. வண்டியை உடனே கிளப்பி வெளியே வந்து விட்டோம்! அந்த வாலிப (!) வயசுல பண்ணினத இப்ப திரும்ப பண்ணலாம்ங்கர எண்ணமெ வராது!!

பிகு: கதை நச்.

நாகு (Nagu)said...

//இளரத்தங்களுக்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.//

பெருசு சொல்லிட்டீங்கல்ல... நான் அப்படியே ஜாக்கிரதயா இருந்துக்கறேன்...

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//நிஜத்தில் என்ன நடந்திருந்தாலும் கதையில் நீங்கள் அவர்களைப் பிழைக்க வைத்து விட வேண்டுமே என இருந்தேன். //

அதை நிறைவேற்றி விட்டேன்.

நீங்கள் குறிப்பிட்டது போன்ற சம்பவங்களும் பெற்றோர்களுக்குப் பேரிடியே.

//இள இள ரத்தங்களுக்கு அதீத சுதந்திரம் கொடுக்கும் பெற்றோரும் பின் வருந்திப் பயனில்லை.//

இது நூத்துக்கு நூரு உண்மை.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//மனம் மகிழ்கிறது. கதையின் முடிவில்.

நல்ல முடிவு நல்வாழ்த்துகள்//

நான் தான் நன்றி சொல்லணும், தொடர்ந்து வாசித்து மறுமொழி இட்டதற்கு :)

சதங்கா (Sathanga)said...

வாங்க ஜெய்,

த்ரில்லிங்கா இருந்தது நீங்க சொன்னது. வீரமான ஆளு தான் நீங்க. உங்க ப்ராக்டிகலான பின்னூட்டம் அருமை. அதுவும் மற்றவர்களுக்குப் பாடமே.

சதங்கா (Sathanga)said...

ப்லாக லைட்டென் பண்ண வந்த எளரத்தம் நாகு வாழ்க, வாழ்க.

வல்லிசிம்ஹன்said...

நன்றி சதங்கா. நானும் சொல்லி வைக்கிறேன். எங்க வீட்டுச் சின்ன பசங்களுக்கு.
ரொம்ப நன்றி.
இளசுகள் அறிவோடு சுகமாக வாழ்க்கையில் பயணிக்கட்டும்.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//நன்றி சதங்கா. நானும் சொல்லி வைக்கிறேன். எங்க வீட்டுச் சின்ன பசங்களுக்கு//

நிச்சயமா. இதை அறிந்து,

//இளசுகள் அறிவோடு சுகமாக வாழ்க்கையில் பயணிக்கட்டும். //

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய் :))

Post a Comment

Please share your thoughts, if you like this post !