ஜிலேபி சுத்த வாரீயளா ?
ராமலக்ஷ்மி மேடம் கூப்பிட்டாஹ, ஜிலேபி சுத்த ரெடியானு. வல்லிம்மா அதெல்லாம் சதங்கா ரெடினு சொல்லிட்டாக, அப்புறம் மறுப்பேது ?!! இதோ எனது மொக்கை ....
-----
விருந்தினராக, கொங்கு நாட்டிற்கு வந்திருந்த மன்னர் சிவாஜி விடை பெறும் நிகழ்ச்சி. எந்த மன்னரின் விடைபெறுதலின் போதும், ஒரு பெரிய ஜிலேபி செய்து ஊரைக் கூட்டி, அங்கு வரும் சிறு குழந்தைகளுக்கு தருவது வழக்கமாக இருந்தது அங்கு.
அரண்மனையின் ஆஸ்தான சமையற்காரர் அந்தப் பணியை சிரமேற்கொண்டு, அழகிய சுருள் சுருளாக அற்புதமாக ஒரு ஜிலேபி சுற்றினார். அதை அழகிய தங்கத் தாம்பளத்தில் வைத்து போர்த்தி, பட்டத்து யானை மீதேற்றி அரண்மனைக்கு அனுப்பியும் வைத்தார்.
முக்கிய வீதிகளில் ஊர்கோலம் சென்ற யானை அரண்மனையை அடைந்தது. அழகிய பதுமைகள் இருவர் தாம்பளத்தை எடுத்துச் சென்று அரசரின் முன் வைத்து வணங்கினர்.
போர்த்திய துணிகளை விலக்கிய அரசர் அதிர்ச்சியுற்றார். ஜிலேபியைக் காணவில்லை.
அரசர் மந்திரிமார்களுக்கு கட்டளையிட்டார். இது யாரு வேலையா இருக்கும். இதைக் கண்டுபிடிக்கறவங்களுக்கு ஆயிரம் ஜிலேபி தருவதாக தண்டோராப் போடச் சொன்னார்.
இதோ நம்ம தருமி பாட்டோட வந்திட்டார் அரண்மனைக்கு,
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிரைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறிவளை போன்ற ஆரஞ்சின்
தேன்சுவை உடைய சுருள் வரிகள்-
சிவா சிவா இலேசிலே பி !
அரசருக்குப் புரிந்து விட்டது யாரு ஜிலேபிய எடுத்தது என்று. உங்களுக்கு ???? நம்ம தருமி சுத்தத் தமிழ்வாதி. 'ஜி' எல்லாம் சொல்ல மாட்டார்.
மராட்டியத்தில் இருந்து அரசியார் ஓலை அனுப்பியிருந்தார், மன்னர் சிவாஜிக்கு சுகர் இருக்கு, அதனால் இனிப்பு எதும் வழங்காதீர்கள் என்று. அந்த ஓலை நம்ம தருமிக்கு கிடைக்கவே, சூப்பராக பாட்டு (வாங்கி) கொண்டு வந்து கலக்கிவிட்டார்.
புரியலேனா மன்னிக்கவும். இவங்க என்ன சொல்றாங்கனு பார்ப்போம். நான் அழைக்க விரும்புவது செல்வி ஷங்கர், நாகு, ஜெயகாந்தன்.
அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு இம் மூவருக்கும் இப்பதிவின் மூலம் நன்றி ஜொல்லிக்கறேன்.
என்ன ஜொல்றீக ?!!!! என்ன மாதிரி ஜொதப்பாம, ஜொல்லவர்றத தெளிவா ஜொல்லுங்க .... :)
25 மறுமொழி(கள்):
சதங்கா,
நல்லாவே சிலேபி சுத்தி இருக்கீக - அதுவும் ஆன மேலெ சுத்தி இருக்கீக - பட்டத்து ஆனை - பரிசு இல்லாமலேயா - தருமிக்கு ஆயிரம் மொக்க எழுதி வழங்கிடலாம்.
சிவா சிவா இலேசிலே பி
சிவா சிவா யிலேசிலே பி தானே !!
//சிவா சிவா இலேசிலே பி//
இது சூப்பர்! :)
கலக்கலான சுத்தல். நன்றி சதங்கா!
ஆரவாரமாய் தங்கத் தாம்பாளத்தில் சிலேபிக்குப் பெரிய மரியாதை தந்து எனக்கும் பெருமை சேர்த்து விட்டீர்கள்!
//செறிவளை போன்ற ஆரஞ்சின்
தேன்சுவை உடைய சுருள் வரிகள்-
சிவா சிவா இலேசிலே பி !//
சிலேடயாகப் பாடி தருமி சிவாசியைக் காட்டிக் கொடுக்கும் இடம் அட்டகாசம்.
// நம்ம தருமி சுத்தத் தமிழ்வாதி. 'ஜி' எல்லாம் சொல்ல மாட்டார்.//
'ஜி' சொன்னால் அம்பி மருத்துவரிடம் போட்டுக் கொடுத்து விடுவாரோ என நானானி கூட என் பதிவின் பின்னூட்டதில் உசாராயிட்டாங்க:)))))!
ஒன்று சொன்னால் நம்புவீர்களா சதங்கா. இந்தப் பின்னூட்டம் வேண்டாம் என்றுதான் நினைத்தேன் முதலில். ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. காணாமல் போன தங்க ஜிலேபியைக் கண்டு பிடிக்க கிருஷ்ணதேவராயர் அல்லது அக்பர் பரிசு அறிவிக்க, தெனாலி ராமன் அல்லது பீர்பால் இது போன்ற ஒரு சிலேடை மூலம் உண்மையை அரசவையில் அவிழ்ப்பது போன்ற கதை ஒன்றைத்தான் முதலில் யோசித்திருந்தேன். நேரமின்மையால் அதைக் கை விட்டேன். தங்கள் பதிவைப் படித்ததும் ஆச்சரியம் தாளவில்லை. இதைத்தான் 'same wavelength' என்பார்களோ?
பி.கு: இதைக் கட்டாயம் பிரசுரிக்க வேண்டும் என்பதில்லை.
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜிலேபி பிழிந்திடுவோம்...
நம்ப மடத்தில் இன்னிக்கு ஜிலேபி! ஹேப்பி எர்த் டே!(அதாங்க ரீசைக்கிள்)
/கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிரைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறிவளை போன்ற ஆரஞ்சின்
தேன்சுவை உடைய சுருள் வரிகள்-
சிவா சிவா இலேசிலே பி !
/
கலக்கலான சுத்தல்
நம்ம கொத்ஸ் ஜிலேபியை கொதறிப்
போட்டாலும் போட்டார்...யார்யார் வாயிலெல்லாம் சுத்தி சுழன்று பற்பல கற்பனை ஜீராவில் நனைந்து...தாம்பாளத்தில்..அதுவும் தங்கத் தாம்பாளத்தில் சுனாமியாய்
சுழன்றடிக்குதே...!போதும்டா சாமி..!
அடேங்கப்பா சிவா சிலேபியை வாயில போட்டுக்கிட்டாரா இல்லையா.
அவருக்குமா சுகர்:)
இப்படி அருமையான தமிழில சிலேபிய பிழிஞ்சா அமுதும் தேனும் எதற்குனு பாடலாம் மாதிரி இருக்கு.
சீனா ஐயா,
//தருமிக்கு ஆயிரம் மொக்க எழுதி வழங்கிடலாம். //
இது ஜூப்பரா இருக்கே.
//சிவா சிவா யிலேசிலே பி தானே !!//
ஆமா ஆமா.
////சிவா சிவா இலேசிலே பி//
இது சூப்பர்! :)//
நன்றிங்க கவிநயா.
ராமலஷ்மி மேடம், தங்கள் பின்னூட்டங்கள் பார்த்து அதிசயித்து நிற்கறேன். மத்தவங்களுக்கு சொல்லிட்டு மெதுவா வந்து நன்றி சொல்றேன் உங்களுக்கு.
நாகு,
வாருமையா. ஜூடான ஜிலேபிப் பதிவு போட்டு 'ஜில்பா'ன்ஸ் பண்ணியதற்கு முதலில் நன்றி.
ரீசைக்கிள் பதிவுனாலும் இன்னிக்கும் ஜாலியா படிக்கற ஜிலேபி பதிவு உங்களது :))
//கலக்கலான சுத்தல்//
நன்றி திகழ்மிளிர்.
//அதுவும் தங்கத் தாம்பாளத்தில் சுனாமியாய்
சுழன்றடிக்குதே...!போதும்டா சாமி..!//
நானானி மேடம், இது பாராட்டா, திட்டா ... எப்படி எடுத்துகிறது ? :)
//அடேங்கப்பா சிவா சிலேபியை வாயில போட்டுக்கிட்டாரா இல்லையா.
அவருக்குமா சுகர்:)//
பின்னே, விருந்துக்கு வந்திட்டு மருந்துக்கு கூட இனிப்பு காமிக்காம இருந்ததுக்கு, அவர் பண்ண காரியம் தான், அவரு வாயில ஜிலேபி போட்டுக்கிட்டது :)))
//இப்படி அருமையான தமிழில சிலேபிய பிழிஞ்சா அமுதும் தேனும் எதற்குனு பாடலாம் மாதிரி இருக்கு.//
ஆஹா ஆஹா அருமை. பாராட்டுக்கு நன்றி வல்லிம்மா.
ராமலஷ்மி மேடம்,
// கலக்கலான சுத்தல். நன்றி
ஆரவாரமாய் தங்கத் தாம்பாளத்தில் சிலேபிக்குப் பெரிய மரியாதை தந்து எனக்கும் பெருமை சேர்த்து விட்டீர்கள்!
சிலேடயாகப் பாடி தருமி சிவாசியைக் காட்டிக் கொடுக்கும் இடம் அட்டகாசம்.
//
படித்துச் சுவைத்து பாராட்டியதற்கு மிக்க நன்றிங்க. பின்னே சும்மா மொக்கையா போட முடியுமா, கொஞ்சம் அழுத்தம் இருக்கட்டும்னு தான் இந்த பில்டப். :))
//காணாமல் போன தங்க ஜிலேபியைக் கண்டு பிடிக்க கிருஷ்ணதேவராயர் அல்லது அக்பர் பரிசு அறிவிக்க, தெனாலி ராமன் அல்லது பீர்பால் இது போன்ற ஒரு சிலேடை மூலம் உண்மையை அரசவையில் அவிழ்ப்பது போன்ற கதை ஒன்றைத்தான் முதலில் யோசித்திருந்தேன். நேரமின்மையால் அதைக் கை விட்டேன். //
ஏற்கனவே பதிவு ஒரு மாதிரி எழுதி வச்சிருந்தேன். ஆனா எனக்கு முன்னால பதிந்தஞ்சவங்க பதிவுகள் அது போலவே இருக்க, இப்ப இருக்க மாதிரி மாத்தினேன்.
//தங்கள் பதிவைப் படித்ததும் ஆச்சரியம் தாளவில்லை. இதைத்தான் 'same wavelength' என்பார்களோ? //
ஆமா, ஆமா. இது எனக்கும் வியப்பையும், சந்தோசத்தையும் அளித்த வரிகள்.
தருமி பாட்டைப் போட்ட நீங்க தருமியைக் கூப்பிட்டு இருக்கலாம்!! :)) அடுத்த சுத்து எங்க போகுதுன்னு பார்க்கலாம்.
ஆட்டத்தை ஆரம்பித்து வைத்த மூலவரை அழைப்போமென "தண்டோரா" போட்டு விட்டு வந்தேன்.[காண்க:http://elavasam.blogspot.com/2008/06/blog-post.html]
அவர் தருமியையே அல்லவா அழைக்கச் சொல்கிறார்:().
வாங்க எலவசம்,
//தருமி பாட்டைப் போட்ட நீங்க தருமியைக் கூப்பிட்டு இருக்கலாம்!! :)) அடுத்த சுத்து எங்க போகுதுன்னு பார்க்கலாம்.//
அழைச்சிருக்கலாம், ஆனால் (பதிவுகளில்) நான் அறிந்த பலர், அன்புடன் மறுக்கவே, அறியாத தருமியை அழைக்கத் தோன்றவேயில்லை :)) அடுத்து ஒரு சுற்று வந்தா கவணிச்சிடுவோம் !
ஆஹா ராமலஷ்மி மேடம்,
உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியல. உங்களைப் போன்றவர்கள் உடன்பிறப்பாகவோ, தாயகவோ அடுத்த பிறவியில் கிடைக்க இப்பவே ஆண்டவனுக்கு அப்ளிகேஷன் போட்டுக்கறேன். இது உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை !
உங்களுடைய என்கரேஜிங்க் மனபோவம் தான் மேலே அப்படி எழுதவைத்தது என்று சொல்லவும் வேண்டுமோ :)
//உங்களைப் போன்றவர்கள் உடன்பிறப்பாகவோ, தாயகவோ அடுத்த பிறவியில் கிடைக்க இப்பவே ஆண்டவனுக்கு அப்ளிகேஷன் போட்டுக்கறேன். இது உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை !//
நானும் இதை அதிக பட்ச வார்த்தைகள் என்று எடுத்துக் கொள்ளவில்லை சதங்கா. இப்படிப் பட்ட அன்பு சந்தோஷத்தையே கொடுக்கிறது.
//நானும் இதை அதிக பட்ச வார்த்தைகள் என்று எடுத்துக் கொள்ளவில்லை சதங்கா. இப்படிப் பட்ட அன்பு சந்தோஷத்தையே கொடுக்கிறது.//
புரிதலுக்கு நன்றிங்க மேடம்.
Post a Comment
Please share your thoughts, if you like this post !