Thursday, June 19, 2008

மனதில் நிற்கும் தச(த்தில் சில) அவதாரங்கள்



நம்ம ஊருல படம் போடறாங்க, டிக்கட் வேணுமாடா எனக் கேட்ட நண்பனை ஏற இறங்கப் பார்த்தேன்.

ஒரு டிக்கட் பதினைந்து டாலர், குழந்தைகளுக்கு அஞ்சு டாலர், அஞ்சு வயசுக்கு கீழே இலவசம்.

முப்பத்தி அஞ்சு டாலர் கொடுத்து படம் பார்க்கணுமா என்று தோன்றினாலும், சரி, தியேட்டர்கெல்லாம் போய் நாளாகிடுச்சே, அதனால போகலாம் என்று முடிவு செய்தோம்.

வழக்கம் போல கமலின் உழைப்பும், சிரத்தையும் நன்றாகவே இருந்தது.

'பத்து கேரக்டர்' என்று படித்த உடனேயே, படத்தில் பெரிதாக ஒன்றும் இருக்காது என்ற மனநிலை எப்பவோ வந்திருச்சு. நிறைய செலவு செய்திருக்கிறார்கள், படத்தின் கடைசியில் காட்டும் மேக்கப் காட்சிகளைப் பார்த்தாலே புரியும். இத்தனை செலவு, சிரத்தை எதற்காக ? என்ற கேள்வி எழாமல் இல்லை !!!

இந்தப் படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் கமல் ? கயாஸ் தியரியில் ஆரம்பித்து, எல்லாத்துக்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு என்று சொல்லி, இத்தனை அவதாரங்களையும் காட்டி, கோடிகளை கொட்டி, பெருமாளைக் கட்டி, "சுவாமியே இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும்" என்று சொல்லி முடிப்பது வரை, இதுவும் ஒரு 'ஹே ராம்' டைப் ப‌ட‌ம் தான். ஐ மீன் 'புரியாத' டைப். மைக்கேல் ம‌த‌ன‌ காம‌ராஜ‌னாவ‌து காமெடி தூக்க‌லா இருந்தது எனலாம்.

காமெடி என்ற‌வுட‌ன் தான் ஞாப‌க‌த்துக்கு வ‌ருகிறார், த‌ச‌த்தில் ஒன்றான‌ தெலுங்கு போலீஸ் அதிகாரி பல்ராம். அவ‌ரோடு வ‌ரும் அசிஸ்டென்ட் அப்பாராவும் அருமையாக‌ ந‌டித்திருந்தார்.

"சார் நோஸ் லாட் ஆஃப் லேங்குவேஜ‌ஸு, ஹீ ஸ்பீக்ஸு ஃபைவ் டிஃப‌ர‌ன்ட் தெலுகு" என்று சொல்வ‌து அட்டஹாஹாஹாசம். இது போல் ஆங்காங்கே ஜோக்ஸ் தூவியிருப்பது கலக்கல்.

ஆந்திராவில இருந்து வந்து தமிழ் படிச்சி, நானே இவ்ளோ நல்லா தமிழ் பேசறேன், நீ என்ன மொழியில பேசற என்று விஞ்ஞானி கமலைக் கேட்டு, நீங்களே இப்படி இருந்தா 'தமிழ' யாரு வாழ வைப்பாங்க என்று கேட்டதும்,

அதான் நீங்க இருக்கீங்களே வாழ வைக்க, என்று விஞ்ஞானி (தமிழ்) கமல் சொன்னவுடன், தியேட்டரில் ஏக‌ப்பட்ட கைதட்டல், விசில். ஒன்னும் புரியவில்லை சில நேரத்துக்கு. பின் சிறு இடை வேளையில், பல பக்கமிருந்தும், 'எட்ல உன்னாரு ?', 'பாகுன்னாரா ?'அன்ட்டே மல்லி, அள்ளி ....' என்றெல்லாம் ஒரே சுந்தரத் தெலுகு தான் தியேட்டர் வளாகத்தில் :)

சந்தான பாரதியுடன் போட்டிக்குப் போட்டியாய் மணல் மேட்டில் மல்லுக்கட்டுவதும், வாசுவுடன் தனியறையில் தர்க்கம் புரிவதும், ஒரு மாதிரி குச்சி போல் நெஞ்சு நிமிர்த்தி, பெல்ட்டில் கை வைத்து நடப்பதுமாய், இரு விழி உருட்டி, கரு உதட்டில் பொறிவதும், மிகத் தத்ரூபம். சபாஷ் பூவராகன் !!!

"போடா பாவி, நான் தரமாட்டேன். இது என் புள்ள அமெரிக்கால இருந்து எனக்கு அனுப்பினது டா" என்று பார்சலைத் தர மறுப்பதில் இருந்து, பல்ராமுடன் போலீஸ் ஜீப்பில் லூட்டி அடிப்பது வரை அடுத்த தத்ரூபம் கிருஷ்ணவேணி பாட்டி. பல அவதாரங்கள் கமலை உடனேயோ, சிறிது நேரத்திலேயோ அடையாளம் காட்டினாலும், இந்த பாட்டி, கமல் தானா என யோசிக்க வைத்தது பல நேரம். காரணம் குள்ள உருவம். சூப்பர் பாட்டி !

சில அவதாரங்களை குள்ளமாகவும், உயரமாகவும் காட்டிய விதம் கண்டிப்பாக பாராட்டத்தக்கது ! ஆனால் மேக்கப் மெனக்கெட்ட அளவிற்கு பல அவதாரங்களுக்கு ரிசல்ட் இல்லை என்று தான் சொல்லணும். மேக்கப் என்று தெரிந்தவுடன் அந்த கேரக்டரே உயிரற்றுப் போகிறதோ என்னவோ ?!


படம் குறித்து சில குறிப்புகள் :

தத்ரூபமாகப் பண்ணுகிறேன் பேர்வழி என்று உடலை வருத்தும் காட்சிகளை கமல் நிறுத்தினால் நன்றாக இருக்கும். மாற்று வழிகள் யோசித்து அதிலும் தத்ரூபம் காண்பிக்கலாமே ?!

கழுவில் ஏற்றுவது போன்ற காட்சியில், "ஹௌ டிட் ஹீ பியர்ஸ் ஹிஸ் லெக் லைக் தட்"

"அது சும்மா படம் தான் மகனே, டோன்ட் டேக் இட் சீரியஸ், ஆல் மேக்கப்"

என்று பல முறை சொன்னாலும், அந்த பதில் திருப்தி தருவதாய் இல்லை என் மகனுக்கு.

பாடகர் அவதாரின் கழுத்தில் குண்டு பட்டு, பிழைப்பது மாதிரி காட்டியது ஓ.கே. ஆனால் கழுத்தில் பட்ட குண்டு கான்ஸரை அப்படியே எடுத்துக் கொண்டு போய்விட்டது என்று டாக்டர் போட்ட குண்டு கண்டு, நமக்கெல்லாம் மயக்கம் வராத குறை :)

இது தான் காமெடி என்றால், 'உலக நாயகன்'க்கு விளக்கம் வேறு. அதுவும் பாடல் வடிவில் ! கமல் தன்னை சுற்றியிருப்பவர்களை ஒரு சுற்று ஃபில்ட்டர் பண்ண வேண்டும் !!

பாவம் அழகிய அசின். பெருமாள், பெருமாள் என்று அலறவிட்டு, அழுகாச்சி அசின் ஆக்கிவிட்டார்கள் !

12 மறுமொழி(கள்):

Kavinayasaid...

படம் பார்க்க ஆர்வமே இல்லாம இருந்தேன். இந்த மாதிரி விமர்சனம் பாத்து பாத்து அதுல என்னதான் இருக்குன்னு பாக்கணும்னு தோணிப் போச்சு. கமல் முதல்ல வலைப்பதிவர்களுக்குதான் நன்றி சொல்லணும்னு நினைக்கிறேன்!நல்லாவே எழுதியிருக்கீங்க :)

சென்ஷிsaid...

அடப்போங்கய்யான்னு வெறுப்புல ஏதாச்சும் சொல்ல வந்தா பின்னூட்ட பொட்டி மறுக்கா தனியா தொறக்குது.

கடவுளே இது என்ன சோதனை.

மக்கா.. http://senshe-kathalan.blogspot.com/2008/06/blog-post_20.html இத படி மொதல்ல :((

ரொம்ப கஷ்டப்படுறோம். நீங்களும் சேர்ந்து படுத்தாதீங்க :)

ராமலக்ஷ்மிsaid...

கவிநயா said...//இந்த மாதிரி விமர்சனம் பாத்து பாத்து அதுல என்னதான் இருக்குன்னு பாக்கணும்னு தோணிப் போச்சு.//

இந்த மாதிரி விமர்சனம் பாத்து பாத்து பாக்கவே வேண்டாம்னு தோணிப் போச்சு எனக்கு:). கவிநயா, சரி எதுக்கும் நீங்க பாத்து ஒரு பதிவு போடுங்க. பாக்கலாமா வேண்டாமான்னு அப்புறம் தீர்மானிக்கிறேன்.

சதங்கா நல்லாவே படத்தை அலசியிருக்கீங்க. ஆனால் கடைசியில் நூத்துக்கு இத்தனை என (எல்லோருமே) கடைசில ஒரு மார்க்கும் கொடுத்தா நல்லாயிருக்கும்.

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//படம் பார்க்க ஆர்வமே இல்லாம இருந்தேன். இந்த மாதிரி விமர்சனம் பாத்து பாத்து அதுல என்னதான் இருக்குன்னு பாக்கணும்னு தோணிப் போச்சு. //

கமல் படம் என்பதால் ஒரு முறை பார்க்கலாம் தான்.

//நல்லாவே எழுதியிருக்கீங்க :)//

ரொம்ப நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

சென்ஷி,

//பின்னூட்ட பொட்டி மறுக்கா தனியா தொறக்குது.//

ஆமா இது கொஞ்சம் இர்ரிட்டேடிங் தான். wordpress மாதிரி bloggerக்கும் பண்ணமுடியுமானு தேடிக்கிட்டு இருக்கேன். கருத்துக்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//இந்த மாதிரி விமர்சனம் பாத்து பாத்து பாக்கவே வேண்டாம்னு தோணிப் போச்சு எனக்கு:).//

அப்ப எனது விமர்சனம் கோளாறுங்கறீங்க ??! இருக்கட்டும் இருக்கட்டும் :))

//சதங்கா நல்லாவே படத்தை அலசியிருக்கீங்க. ஆனால் கடைசியில் நூத்துக்கு இத்தனை என (எல்லோருமே) கடைசில ஒரு மார்க்கும் கொடுத்தா நல்லாயிருக்கும்.//

ஒரு படம் பார்த்துட்டு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட அரட்டை அடிப்போம்ல, அது மாதிரி தான் எழுதணும்னு நினைத்தேன். அதுமில்லாம, நமக்கு மார்க் போடற அளவுக்கு ஞானம் இல்லை என்றும் சொல்லி விடுகிறேன்.

எந்த எதிர்பார்புமில்லாமல் போங்க, படம் பிடிக்கும் உங்களுக்கு.

ராமலக்ஷ்மிsaid...

//அப்ப எனது விமர்சனம் கோளாறுங்கறீங்க ??! //

அப்படி எல்லாம் இல்லை. [சொன்னேனே,"சதங்கா நல்லாவே படத்தை அலசியிருக்கீங்க"ன்னு] பெரும்பாலன விமர்சங்கள் இப்படத்தை அவ்வளவு சிலாக்கியமாக சொல்லவில்லை. தங்களதும் அப்படியே. ஆகவேதான் பார்க்கும் ஆர்வம் வர மாட்டேன்கிறது.
சொன்னாற்போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ட்ரை பண்ணலாம். செய்கிறேன்.

//நமக்கு மார்க் போடற அளவுக்கு ஞானம் இல்லை என்றும் சொல்லி விடுகிறேன்.//

தேவையில்லை.. மார்க் கொடுத்துதான் இருக்கீங்க.

// ஒரு 'ஹே ராம்' டைப் ப‌ட‌ம் தான்.//

இது போதாதா:))?

cheena (சீனா)said...

சதங்கா, அருமையான் நடுநிலையான விமர்சனம். உலக நாயகனின் படம் எனில் இரு முறை பார்த்தால் தான் புரியும். வேகமாகப் போகும் காட்சிகள் - வசனங்கள். கிரகிக்கும் வேகம் நமக்கு கமலுக்கு இணையாக இருக்க வேண்டும்.

எல்லோருமே அந்த பூவராகன, நம்பி, ஆந்திர பல்ராம் நாய்டு ஆகிய அவதாரங்களைத்தான் புகழ்ந்திருக்கின்றனர். படம் எப்படியும் வெற்றி பெற்று விடும்.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//சதங்கா, அருமையான் நடுநிலையான விமர்சனம்//

மிக்க நன்றி.

//படம் எப்படியும் வெற்றி பெற்று விடும்.//

இது எதை வைத்து சொல்வது எனத் தெரியவில்லை. பாக்ஸ் ஆபிஸ் ஹிட் தான் படத்தின் வெற்றி எனக் கொள்ளலாமா ?

ரூபன்said...

நண்பரே படத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டிய இடங்கள் பல உள்ளது.சாமானிய மக்களுக்கும் புரியும் படம் தங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை/புரியவில்லை என்பது தெரியவில்லை.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//தேவையில்லை.. மார்க் கொடுத்துதான் இருக்கீங்க.

// ஒரு 'ஹே ராம்' டைப் ப‌ட‌ம் தான்.//

இது போதாதா:))?//

ஆஹா, அப்ப நான் பாஸா விமர்சனம் எழுதறதுல ?

சதங்கா (Sathanga)said...

ரூபன்,

வருகைக்கு மிக்க நன்றி.

//சாமானிய மக்களுக்கும் புரியும் படம் //

சும்மா காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ். நானே ஒரு சாமனியன். அதுமில்லாமல் இங்க படம் பார்த்த என் நண்பர்கள், என் மனைவி, குழந்தைகள், இவர்கள் அனைவருடனும் அடித்த அரட்டை தான் பதிவே !!!!

Post a Comment

Please share your thoughts, if you like this post !