Wednesday, December 10, 2008

மின்னல் கவிதைக‌ள்: 1 - கழுத்துக் கறுப்பேறி


Photo: static.panoramio.com

கழுத்துக் கறுப்பேறி
மங்கின‌ தங்க நகை,

வளைந்து காதிலாடும்
நெளிந்த பொன் தோடு.

பாலில் விழும் வண்டோ ?
படபடக்கும் கருவிழிகள்,

வேல் கொண்டோ ? தேய்த்த
பளிச்சிடும் வெண்பற்கள்.

சேதி ஒன்று சொல்வேன்
சிணுங்காமல் கேட்பாயா ?

வெண்க‌ல‌க் குர‌லெடுத்து
வீண்வ‌ம்பு செய்யாது,

தேளெனக் கொட்டாமல்
தேன்போல் இனித்திடடி.

கன்றுகள் துள்ளியாடும்
காடு களனி நமக்கிருக்க‌,

உன்னையும் காத்திடுவேன்
உன் இதயம் த‌ருவாயா ?

மாராப்பு ரவிக்கைக்குள்ளே
மச்சான‌ வச்சிக்கடி,

ம‌திம‌ய‌ங்கிக் கிறங்கையிலே
மொத்த‌மா வளைச்சுக்க‌டி !!!

14 மறுமொழி(கள்):

ஆயில்யன்said...

//பாலில் விழும் வண்டோ ?
படபடக்கும் கருவிழிகள்,

வேல் கொண்டோ ? தேய்த்த
பளிச்சிடும் வெண்பற்கள்///


காதல் தெரிவிக்கும் வார்த்தைகள், வித விதமாய் ரகம் ரகமாய் மொத்தமும், எளிதில் ஈர்த்துவிடுகிறது காதலியை - காதலனிடம்!

:)))

நாகு (Nagu)said...

kazhani - but kalani is ok if the style is colloquial. But its not colloquial till that point and gets colloquial later...

Nagu

Excellent one tho' - more comments later...

பழமைபேசிsaid...

கலக்கல் படமும், கவிதையும்! படம் பிரமாதம்!!

ராமலக்ஷ்மிsaid...

//கழுத்துக் கறுப்பேறி
மங்கின‌ தங்க நகை,

வளைந்து காதிலாடும்
நெளிந்த பொன் தோடு.//

அப்படியே கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கிறீர்கள்.

//பாலில் விழும் வண்டோ ?
படபடக்கும் கருவிழிகள்,

வேல் கொண்டோ ? தேய்த்த
பளிச்சிடும் வெண்பற்கள்.//

அருமையான வரிகள். [வேல் கொண்டு தேய்த்த பற்களா:)?]

//வெண்க‌ல‌க் குர‌லெடுத்து
வீண்வ‌ம்பு செய்யாது,

தேளெனக் கொட்டாமல்
தேன்போல் இனித்திடடி.//

சாக்கிரதையா மனுப் போடுவதாய் நினைத்து வெள்ளந்தியா வெண்கலக் குரல் தேள்னு..சொல்லி மாட்டிக் கொள்ள்ப் போகிறார்:).

//கன்றுகள் துள்ளியாடும்
காடு களனி நமக்கிருக்க‌,//

வரிகளும் துள்ளுது அவன் மனசுப் போலவே.

//உன்னையும் காத்திடுவேன்
உன் இதயம் த‌ருவாயா ?//

தந்திடுவாள் காதலி. இந்த ஒரு உறுதிமொழி போதாதா?

அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள் சதங்கா!

geevanathysaid...

கிராமிய மணம் கமிழும் அழகான படைப்பு..
பாராட்டுக்கள்......... {படமும்,கவியும்}

cheena (சீனா)said...

சதங்கா

அருமை அருமை

நாட்ட்டுப்புறத்தில் காதலன் காதலியிடம் கடலை போடுவது அருமை.

கருத்த கழுத்து நகை, நெளிந்த தங்கத் தோடு - ஏழ்மையின் எளிமையான நகைகள். கருவண்டு போன்ற கருவிழிகள் - வேலினால் உறுதி அடைந்த வெண்பற்கள் - காதலியை வர்ணிப்பது அபாரம் - புற அழகு

வெண்கலக் குரல் - தேள் போலக் கொட்டுதல் - குண நலன்கள் - அக அழகு

இதயம் கேட்பது - கன்றுகளுடன் கழனி தருவது - அருமை அருமை

மாராப்புக்குள் அணைத்து மொத்தமா வளைச்சுக்க - அருமையான ஐடியா

மொத்தத்திலே நல்ல பாட்டு - நல்ல கருத்து - எளிதில் மனதில் நிற்கும்

நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர்said...

கிராமத்து மின்னல் இனிக்கத்தான் செய்யும். கரடு முரடாய் இருந்தாலும் காடு கழனி கனிவாய்த்தான் இருக்கும்.
காதலென்றால் காலமும் இடமும் கடந்து விடாதா என்ன ?

சதங்கா (Sathanga)said...

ஆயில்யன் said...
//காதல் தெரிவிக்கும் வார்த்தைகள், வித விதமாய் ரகம் ரகமாய் மொத்தமும், எளிதில் ஈர்த்துவிடுகிறது காதலியை - காதலனிடம்!

:)))//

ரசிப்பில் திளைத்து மறுமொழி இட்டதற்கு நன்றிகள்.

சதங்கா (Sathanga)said...

நாகு (Nagu) said...

// kazhani - but kalani is ok if the style is colloquial. But its not colloquial till that point and gets colloquial later...//

ஆமா. அதே தான். (ஸ்ஸ்ஸ் எப்படிலாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு !!!)

// Excellent one tho' - //

ரொம்ப டாங்க்ஸ் தல.

//more comments later...//

எப்போ ? :))

சதங்கா (Sathanga)said...

பழமைபேசி said...

// கலக்கல் படமும், கவிதையும்! படம் பிரமாதம்!!//

மிக்க நன்றிங்க பழமை.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//அப்படியே கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கிறீர்கள்.//
// அருமையான வரிகள். [வேல் கொண்டு தேய்த்த பற்களா:)?]//

ஆமா. டூத் ப்ரஷ் எல்லாம் இன்னும் பயன்படுத்தாத மக்கள் நிறைய.

// சாக்கிரதையா மனுப் போடுவதாய் நினைத்து வெள்ளந்தியா வெண்கலக் குரல் தேள்னு..சொல்லி மாட்டிக் கொள்ள்ப் போகிறார்:).//

ம்...தேனினினும் இனிய சொல்லுக்கு மயங்காதவர் தானுன்டோ இவ்வுலகில் ... எல்லா இடத்திலயும் இது உதவும் என்றும் சொல்லமுடியாது :)))

// தந்திடுவாள் காதலி. இந்த ஒரு உறுதிமொழி போதாதா?

அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள் சதங்கா!//

வரிவாரியாக விவரித்து உங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

தங்கராசா ஜீவராஜ்said...

//கிராமிய மணம் கமழும் அழகான படைப்பு..
பாராட்டுக்கள்......... {படமும்,கவியும்}//

அந்த‌ சூழ‌லில் வ‌ள‌ர்ந்த‌தால் இருக்க‌லாம். பாராட்டுக்கு ந‌ன்றிக‌ள்.

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...
// புற அழகு

அக அழகு

இதயம் கேட்பது

அருமையான ஐடியா

மொத்தத்திலே நல்ல பாட்டு - நல்ல கருத்து - எளிதில் மனதில் நிற்கும்//

என்று அழ‌காகப் ப‌ட்டிய‌லிட்டு, ர‌சித்துப் பாராட்டிய‌த‌ற்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

சதங்கா (Sathanga)said...

செல்விஷங்கர் said...

//கிராமத்து மின்னல் இனிக்கத்தான் செய்யும். கரடு முரடாய் இருந்தாலும் காடு கழனி கனிவாய்த்தான் இருக்கும்.
காதலென்றால் காலமும் இடமும் கடந்து விடாதா என்ன ?//

ஆம் செல்விம்மா. அவ‌ங்க‌ளுக்கும் இந்த‌ உண‌ர்வுக‌ள் இருக்க‌த் தான் செய்கிறது. வெளியில் தெரிவ‌தில்லை. ந‌ம‌க்குத் தெரிந்த‌தெல்லாம், சில‌ அங்குல‌ டி.வி பெட்டிக்குள் காட்டும், நாக‌ரீக‌ம் என்ற‌ பெய‌ரால் ந‌லிவுற்ற‌ காட்சிக‌ள் ம‌ட்டுமே. ஊட‌க‌ம் இவ‌ர்க‌ளின் காத‌லை பொறுட்ப‌டுத்துவ‌தில்லை. சினிமாக்க‌ளில் கூட‌ கிராமிய‌ம் என்றாலே க‌ர‌டு முர‌டாக‌த் தான் காண்பிக்கின்ற‌ன‌ர். இந்த‌ விச‌ய‌த்தில்(மட்டும் :)) பார‌திராஜா ஒரு உய‌ர்ந்த‌ ம‌னித‌ர்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !