Saturday, December 27, 2008

இசை இல்லாத மார்கழியா .....

ஜாதி, மதம், இனம், மொழி ... இப்படி எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்காத ஒன்றை இசை என்று சொல்லலாமா ?

சின்னப் புள்ளையா இருந்த காலத்தில் இருந்து, இந்த தாளங்களை நம்மை அறியாமலேயே கேட்டு வளர்ந்து வந்திருக்கிறோம். ஒரு குழந்தைக்கு பாடும் தாலாட்டில் இருந்து, கோவில் விசேடங்கள், கல்யாண வைபவங்கள், என எல்லாம் கடந்து கடைசி மூச்சுக்கு அப்புறமும் இசையை நாம் அனைவருமே சுவாசிக்கிறோம்.

சின்ன வயதில் யாராவது ச,ரி,க,ம ... என்று சாதகம் பண்ணினாலோ, அல்லது ஊரில் பக்கத்து தெருவில் குடியிருந்த மேளகாரர், டம்மு, டும்முனு அடித்து (தவிலை தான் :))) ப்ராக்டிஸ் செய்வதைப் பார்த்தாலோ ரொம்ப பாவமா இருக்கும். ஏன் இவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று :))) வயதாக ஆக, நமக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லையே என்று நினைத்து உண்டு, இன்று வரை.

அதுக்காக நம்ம புள்ளையவாவது இசை மேதையா ஆக்கலாம்னு பியானோ க்ளாஸ் சேர்த்தோம் .... கத்துக்க முடியலையேனு நாம அழுதால், "எங்களை ஏன் கஷ்டப்படுத்தறீங்க"னு புள்ளைங்க அழுகுதுங்க :((( ஃப்ரீயா விட்டாச்சு அவங்களை.

சென்னை சபாக்கள் நிறம்பி வழிவதால், இங்க ஒரு கச்சேரி பண்ணலாம், யூ டியூபின் துணையுடன் :))

ஒரு கல்யாண வீட்டுக்குள்ள நுழையும் போது, டக்கடக்க ... என்று விரல் உருள எழும் ஒலியில், நம் மனம் கரைவது நிச்சயம். இல்லையா ?!! இங்க ஒரு வெளிநாட்டுக்காரர், நம்ம ஊருக்கு எப்படி தேடி வந்து, தவில் மேல் காதல் கொண்டு (இப்படி தான் சொல்லணும் அவரின் வாசிப்பு லயிப்பைப் பார்த்து), முறைப்படி கற்றுக் கொண்டு ... நீங்களே பார்த்து மகிழுங்கள்.பன்னாட்டுக் கலைஞர்கள் ஒரு ட்ரூப்பா சேர்ந்து, பாடும் பாடலும், இசையும் அருமை.நம்ம ஊரு ஆட்கள் இல்லாமல் கச்சேரியா ? :))) டூயட் படம் பார்த்ததிலிருந்து, கத்ரி கோபால்நாத் அவர்களின் பல்லாயிரக்கான ரசிகர்களுள் நானும் ஒருவனானேன். இதோ அவருடைய இசைக் காட்சி

5 மறுமொழி(கள்):

சகாதேவன்said...

தகிட திமிதோம் என்று தளம் சொல்லி அழகாக வாசிக்கிறாரே.
நன்றாக இருக்கிறது.
நன்றி
சகாதேவன்

ராமலக்ஷ்மிsaid...

//கத்துக்க முடியலையேனு நாம அழுதால், "எங்களை ஏன் கஷ்டப்படுத்தறீங்க"னு புள்ளைங்க அழுகுதுங்க :((( ஃப்ரீயா விட்டாச்சு அவங்களை.//

நல்ல அப்பா நீங்கள்:)))!

சரி உங்களால் கற்றுக் கொண்டு கச்சேரி பண்ண முடியாத ஆதங்கத்தை யூட்யூப் கச்சேரிகளை அனுபவித்துக் கேட்டு எமக்கும் தந்து ஆற்றிக் கொண்டிருக்கிறீர்கள்:)! டூயட் படத்தில் கத்ரி கலக்கியிருந்தார். இங்கும்தான். நன்றி சதங்கா.

சதங்கா (Sathanga)said...

சகாதேவன் said...

// தகிட திமிதோம் என்று தளம் சொல்லி அழகாக வாசிக்கிறாரே.
நன்றாக இருக்கிறது.//

ஆம். அதுவும் வேற்று நாட்டவர், வேற்று மொழிக்காரர் இதுபோல செய்வதில் நமக்கு எஞ்சுவது வியப்பே :))

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

// நல்ல அப்பா நீங்கள்:)))!//

இன்னும் அவங்களுக்கு யோசனை இருக்கு, என்னிக்காவது திரும்பவும் கொண்டு போய் சேர்த்திவாங்களோ என்று :)))

// சரி உங்களால் கற்றுக் கொண்டு கச்சேரி பண்ண முடியாத ஆதங்கத்தை யூட்யூப் கச்சேரிகளை அனுபவித்துக் கேட்டு எமக்கும் தந்து ஆற்றிக் கொண்டிருக்கிறீர்கள்:)! //

ஆம். எல்லாம் இணையத்தின் பரிசு.

//டூயட் படத்தில் கத்ரி கலக்கியிருந்தார். இங்கும்தான்.//

அதே. இன்று நினைத்தாலும், 'அஞ்சலி, அஞ்சலி ...' என்று சாக்ஸ் சாகஸம் புரிகிறது மனதுள்.

cheena (சீனா)said...

நாம கத்துக்க நினைச்சு முடியாதத புள்ளேங்க தலைலே கட்டி - அதுவும் நிறவேறாம .....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
விட்டுத் தள்ளுங்க -

நல்லாருக்கு பதிவு - மார்கழியில் டிசம்பரில் இசைவிழா

Post a Comment

Please share your thoughts, if you like this post !