மின்னல் கவிதைகள்: 2 - மாடு மேய்க்கப் போகையிலே
Photo: wikimedia.org
மாடு மேய்க்கப் போகையில
மந்தகாசக் குரலினிலே
பாட்டெடுத்து நீர்பாட
பாரெலாம் கேக்குதையா !
ஓடோடி வரும் என்னை
உயிராய் எதிர் பார்ப்பீரு
உதட்டோரம் சின்னதாய்
புன்முறுவல் உதிர்ப்பீரு.
கட்டிக்கலாம் என்றீரு
மேற்படிப்ப பார்க்க என்றேன்.
தொட்டுக்கலாம் என்றதற்கோ
தேர்வை முடிக்க சொன்னேன்.
படிப்பும் முடிச்சீரு
பயணம் பறந்தீரு
பட்டிக்காட்டுப் பெண் மனதை
கட்டிப்போட்டுச் சென்றீரு.
காடு மேடெல்லாம்
காவல் காத்து நானிருந்தேன்
கட்டிக்க என்றாவது ...
கறுத்த மச்சான் வருவாருன்னு !!
வருஷம் பல ஆகிப் போச்சு ...
காடும் இல்லை, மேடும் இல்லை
கானகத்தில் மரமும் இல்லை
கானக்குரல் ஒலியும் இல்லை.
எங்கே இருக்கீரு ?
இன்று வரை சேதியில்லை - உமக்கு,
புள்ளை குட்டி இருக்கறதா
புளுகுறாக ஊருக்குள்ளே.
பாதகத்தி நான் இங்கே
பரிதவிச்சு நிக்கறனே !
பாடும் என் பாட்டை
பாரே (தான்) கேட்டிடுமா ?!
7 மறுமொழி(கள்):
மங்கையிவள் பரிதவிப்பு
மனசை உருக்கிடுச்சு.
//பாதகத்தி நான் இங்கே
பரிதவிச்சு நிக்கறனே !
பாடும் என் பாட்டை
பாரே (தான்) கேட்டிடுமா ?!//
பார் கேட்டென்ன பாவிமகளே
உன் ‘அவன்’ அல்லவா கேட்கணும்
விடிவு இதோ பொறக்கமுன்னு
வழியொண்ணுஞ் சொல்ல
முடியாது முழிக்கிறோம்
உன்னோடு நாங்களும்லா:(!
வாழ்த்துக்கள் சதங்கா!
கட்டிக்கலாம் என்றீரு
மேற்படிப்ப பார்க்க என்றேன்.
தொட்டுக்கலாம் என்றதற்கோ
தேர்வை முடிக்க சொன்னேன்.//
spicy...............
பாதகத்தி நான் இங்கே
பரிதவிச்சு நிக்கறனே !
பாடும் என் பாட்டை
பாரே (தான்) கேட்டிடுமா ?!//
பிழிஞ்சு எடுக்கறீங்க பாஸ்
அட அட அட.....
//ஓடோடி வரும் என்னை
உயிராய் எதிர் பார்ப்பீரு
உதட்டோரம் சின்னதாய்
புன்முறுவல் உதிர்ப்பீரு.//
இன்னிக்கி கொஞ்சம் 'பீரு' ஜாஸ்தியாயிருச்சோ? பழைய ஞாபகம்லாம் வந்துருச்சு...
//கட்டிக்கலாம் என்றீரு
மேற்படிப்ப பார்க்க என்றேன்.
தொட்டுக்கலாம் என்றதற்கோ
தேர்வை முடிக்க சொன்னேன்.//
த்சோ த்சோ - இப்படியெல்லாமா வாழ்க்கைல உங்களுக்கு சோதனை...
//பாடும் என் பாட்டை
பாரே (தான்) கேட்டிடுமா ?!//
தங்கிலீஷ்ல எழுத வேணாம்னு சொன்னேனே? என்ன பண்றது. உங்கள மாதிரி ஆளாளுக்கு பாட ஆரம்பிச்சிற்றானுவ. அதான் நான் கொஞ்ச நாளா பார் பக்கமே போறதில்லை.
கிண்டல் போகட்டும். சும்மா அசத்தீருக்கீக. படமும், பாட்டின் ஓசையும் அப்படியே (உங்க)ஊருக்கு கொண்டு போயிடிச்சி.
உதிர்ப்பீரு தான் கொஞ்சம் பொருந்தல. சிந்து'பீரு' ன்னு மாத்தலாமோ? :-)
ராமலஷ்மி மேடம், சுரேஷ், நாகு
கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
//பாட்டெடுத்து நீர்பாட
பாரெலாம் கேக்குதையா !//
பார் கேட்க ஆரம்பிச்சு
//பாடும் என் பாட்டை
பாரே (தான்) கேட்டிடுமா ?!//
அதே பாரை நியாயம் கேட்டு முடிச்சிருப்பது நல்லாருக்கு :)
Post a Comment
Please share your thoughts, if you like this post !