Friday, December 19, 2008

வானின் நிறம் நீலம் - 14 - நிறைவுப் பகுதி !


Photo: concierge.com

ஃபுல்ல‌ர்ட‌ன் ஹோட்ட‌லில் கீழ்த‌ள‌த்தில், "ஹேய்ய்ய்ய்ய்...." என்று ஆட்ட‌ம் பாட்ட‌த்துட‌ன் க‌ளை க‌ட்டிய‌து அந்த‌ ஆண்டு, அலுவ‌ல‌க‌ ஆண்டு விழாக் கொண்டாட்ட‌ம்.

ம‌கேஷ், அப்ப‌ தான் அங்கு சேர்ந்த‌ புதிது. என்னோட‌ பி.எம்.க்கு சொந்த‌ம்னு நினைக்கிறேன். அவ‌ங்க‌ ரெண்டு பேருமே வெளியில் அதைக் காட்டிக்கிட்ட‌து இல்லை.

பேரு தான் பி.எம். முழுக்க‌ முழுக்க‌ எங்க‌ க‌ண்ட்ரோல் தான் ப்ராஜ‌க்ட் எல்லாம். அவ‌ரும் ரொம்ப‌ ஃப்ரென்ட்லி. நேர‌த்துக்கு வேலை முடிச்சிட்டோம்னா, மீதி நேரம் ஜாலி தான், அர‌ட்டை தான்.

எங்க‌ டீமே அப்ப‌டி இருக்க‌த‌ பார்த்து ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கு எல்லாம் பொறாமையா இருக்கும். வெளிப்ப‌டையாவே சில‌ர், உங்க‌ளுக்கு என்ன‌ப்பா கொறைச்ச‌ல் என்று ஆத‌ங்க‌ப்ப‌ட‌வும் செய்வார்க‌ள்.

ம‌கேஷ் ந‌ல்லா ஸ்பான்டேனிய‌சா பேசுவான். அவ‌ன் வ‌ந்தாலே க‌ளை க‌ட்டும். ந‌ம்ம‌ கிட்ட பேசிக்கிட்டு இருக்க‌வ‌ங்க‌ கூட‌, அவ‌ன் கூட‌ பேச‌ ஆர‌ம்பிச்சிருவாங்க‌. நாள் போக‌, போக‌ என‌க்கு ஒரு பொஸ‌சிவ்நெஸ் வ‌ந்திருச்சு.

ஆண்டுவிழா அர‌ங்கில், கேம் ஷோவில் ப‌ல‌ பெண்க‌ளும் அவ‌னுட‌ன் சேர்ந்து ந‌ட‌ன‌மாட‌ பிரிய‌ப்ப‌ட‌, என‌க்கு ஒரு வேக‌ம் வ‌ந்து, அவ‌னைப் பிடிச்சு த‌ர‌ த‌ர‌னு இழுத்து வெளியே வ‌ந்து, ச‌த்த‌மின்றி (நீண்ட) முத்த‌மிட்டேன்.

அன்று நிலை குலைந்த‌வ‌ன், எதுவென்றாலும் என்னிட‌ம் கேட்டு தான் செய்வான்.

ம‌கேஷ் ப‌ற்றி அண்ண‌னிட‌ம் சொல்ல‌. அவ‌ருக்கும், அண்ணிக்கும் ரொம்ப‌வே ச‌ந்தோச‌ம். தொலைபேசியில் ஜாடையாக சொல்லிய போது, அப்பா, அம்மாவிற்கு துளியும் விருப்ப‌மில்லை. அத‌னால் கொஞ்ச‌ நாட்க‌ள் போக‌ட்டும் என்றார் அண்ண‌ன்.

நாள் செல்ல‌ச் செல்ல‌ இர‌ண்டு வீட்டாரும், அவர்கள் இஷ்டத்துக்கு அலையன்ஸ் பார்த்து ஃபோர்ஸ் ப‌ண்ண‌, இங்கேயே ரெஜிஸ்ட‌ர் மேரேஜ் ப‌ண்ணிக் கொண்டோம். இதில் அண்ண‌னுக்கும், அண்ணிக்கும் துளியும் விருப்ப‌மில்லை.

அடிக்கடி என்னைப் பார்க்க வருகிறேன் என்று, நான் இல்லாத நேரங்களில் கூட வந்து, அண்ணியை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியிருக்கிறான். ஏதாவது சண்டையில் அண்ணி இதை சொல்லும் போதெல்லாம் அவங்க ஏதோ காரணத்துக்காக இப்படி சொல்றாங்களே என்று, மகேஷ் மேல் துளியும் சந்தேகம் இல்லை.

உறவில் கொஞ்ச‌ம் விரிச‌ல் விழ, நேரம் பார்த்து, "ந‌ம‌க்கென்று ஒரு வீடு இருந்தால் ந‌ல்லா இருக்குமே" என்றான் மகேஷ். 'பாசிர் ரிஸ்'ஸில் ஒரு வீடும் வாங்கினோம்.

அங்கு குடிபோன சில‌ மாத‌ங்க‌ளில், என் வ‌யிற்றில் ரோஷினியும், ம‌கேஷ் ம‌ன‌தில் ம‌ரிய‌மும் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்ந்தேன்.

இவ‌னுக்கு எங்க அலுவலகத்திலேயே இருக்கும், ம‌ரிய‌ம் கூட‌ முன்னரே தொட‌ர்பு இருந்திருக்குனும் தெரிஞ்ச‌து. ஒரு நாள், செமினாருக்கு போறவன், தற்செயலா என்னோட‌ தொலைபேசிய‌ மாத்தி எடுத்திட்டுப் போக‌, இவ‌னோட‌த நான் எடுத்துப் போக‌ வேண்டிய‌தாப் போச்சு.

என் வாய் சொல்ல‌க் கூசுது. அப்ப‌டி அசிங்க‌ அசிங்க‌மா டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப‌றா ம‌ரிய‌ம். நான் கூட‌ முத‌லில் த‌வ‌றுதலா அனுப்பி இருப்பானு பார்த்தால், ம‌கேஷ், ம‌கேஷ்னு ஒரே உருக‌ல்.

கொஞ்ச‌ நேர‌த்தில் ம‌கேஷ் கிட்ட‌ இருந்த என் போனில் இருந்து ஃபோன், "நிமி எங்க‌ இருக்க‌, போன‌ மாத்தி எடுத்து வ‌ந்திட்டேன்.... செக‌ன்ட் ஃப்ளோர்ல‌ இருக்கியா, அங்கேயே இரு, நான் வரேன்".

"ப‌ரவாயில்லை, எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்லை, நான் மேனேஜ் பண்ணிக்கறேன்" என்றேன். "ஹிம்ம்ம் ... இல்ல இல்ல, இப்பவே வ‌ரேன்" என்று பரபரத்தான்.

எல்லாம் தெளிவாகி, என் ம‌ன‌ வானில் மேக‌ங்க‌ள் சூழ்ந்து கொண்ட‌து.

முத‌லில் ம‌றுத்த‌வ‌ன், "இவ‌ளுக்கு தெரிஞ்சு போச்சு, இனி ம‌றுத்து இவ‌ள் என்ன‌ செய்து விட‌ப் போகிறாள்" என்று தைரிய‌மாய் என்னை எதிர்கொண்டான்.

ந‌ட‌க்கும் யாவையும் அண்ண‌னுக்கோ, அண்ணிக்கோ சொல்லாம‌லே இருந்தேன். இது மேலும் விரிச‌லை தான் ஏற்ப‌டுத்திய‌தே த‌விர‌ வேறெத‌ற்கும் உத‌வ‌வில்லை.

ச‌ண்டையும், ச‌ச்ச‌ர‌வுமாய் நாட்க‌ள் க‌ழிய, ரோஷிணியும் பிற‌ந்தாள். ச‌ரி இனியாவ‌து ம‌கேஷ் ச‌ரியாகிவிடுவான் என‌ப் பார்த்தால், வீட்டிற்கே ம‌ரிய‌த்தை கூட்டி வ‌ர‌ ஆர‌ம்பித்தான்.

எல்லை மீறி எல்லாம் செல்கையில், "இனி அவ‌ளா, நானா ? என்று முடிவு ப‌ண்ணிக்க‌. அப்ப‌டி அவ‌ தான்னா, இந்த‌ வீட்ட‌ விட்டு வெளிய‌ போயிடு" என்றேன்.

அங்க‌ ஆர‌ம்பித்த‌து அடுத்த‌ எரிம‌லை. "இந்த‌ வீட வாங்கும்போது நானும் காசு போட்டிருக்கேன். நீ வெளியே போ" என்றான்

அவ‌ன் ப‌ங்கு சொற்ப‌ ஆயிர‌ங்க‌ள். அதைத் த‌ந்துவிடுகிறேன், வெளியே போ என்ற‌த‌ற்கு அவ‌ன் ஒத்துழைக்க‌வில்லை.

உன்னால‌ முடியாது என்றால், என்னால‌யும் முடியாது என்று சொல்லி, ஒரு முடிவுக்கு வ‌ரும் வ‌ரை யாரு இங்க தங்க கூடாது என்று ஆளுக்கு ஒரு பூட்டை போட்டு, நான் என் அண்ண‌ன் வீட்டிலும், என் ம‌க‌ள் காப்ப‌க‌த்திலும் இருக்க‌லானோம்.

ச‌ந்த‌ர்ப‌ம் கிடைக்கும்போதெல்லாம் ம‌கேஷ் தொல்லை த‌ர‌வே, வேலையை ராஜினாமா செய்தேன். அப்ப‌டியும் வெளியில் எங்காவ‌து பார்த்து இம்சித்துவிடுவான்.

இன்னிக்கு தான் அவ‌ன் கேட்ட‌ விவாக‌ரத்துப் பத்திரத்திலும், வீட்டுப் ப‌த்திர‌த்திலும் கையெழுத்துப் போட்டு விட்டு நிம்ம‌தியாய் இருக்கிறேன். இதை முன்னாடியே செய்திருந்தால் கொஞ்ச‌ம் என‌ர்ஜியாவ‌து இருந்திருக்கும்."

எல்லாம் சொல்லிக் களைத்து, தண்ணி தண்ணி என்று மீண்டும் ச‌ரிந்து செல்வாவின் தோளில் சாய்ந்தாள்.

சாயத் தோள் தந்த செல்வா, நீர் த‌ந்து, நிர்ம‌லாவிற்கு நல்ல வாழ்வும் த‌ந்தான்.


!!! முற்றும் !!!

3 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

//என் ம‌ன‌ வானில் மேக‌ங்க‌ள் சூழ்ந்து கொண்ட‌து.//

சூழ்ந்த மேகங்கள் யாவும் விலகி நிர்மலாவின் வாழ்வில் நிர்மலமான தெளிந்த நீல வானம் பளிச்சிட்டு விட்டது.

நிறைவுப் பகுதி.

சுபம்.

மங்களம்.

நல்ல தொடர். வாழ்த்துக்கள் சதங்கா!

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

// //என் ம‌ன‌ வானில் மேக‌ங்க‌ள் சூழ்ந்து கொண்ட‌து.//

சூழ்ந்த மேகங்கள் யாவும் விலகி நிர்மலாவின் வாழ்வில் நிர்மலமான தெளிந்த நீல வானம் பளிச்சிட்டு விட்டது.

நிறைவுப் பகுதி.

சுபம்.

மங்களம்.

நல்ல தொடர். வாழ்த்துக்கள் சதங்கா!//

தொடர்ந்து வந்து, கதை எப்படிப் போகுது, அடுத்து என்ன வரப்போகுது என்றெல்லாம் ஆர்வமாய் பின்னூட்டி ... ஒரு பெரிய உந்து சக்தி என்று தான் சொல்லணும். இத் தொடர் முழுமை பெற்றதே உங்க அக்கறையில் தான். அதுக்கு நன்றிகள் பல கோடி ...

வல்லிசிம்ஹன்said...

பெண்களின் மனசு அறிந்து, சோதனைகளையும் அவர்கள் கண்வழியே புரிந்து அழகாக முடித்துவிட்டீர்கள் சதங்கா. நிறைவாக இருக்கிறது.

Post a Comment

Please share your thoughts, if you like this post !