துளித் துளியாய்: 4 - சிலந்தியும் வலையும்
Photo: sheltoweetrace.com
முட்டி மோதி
விட்டம் ஏறி
மூலைகள் இணைத்து
வலைகள் பின்னி
அசையாப் பொருளாய்க்
காத்திருந்து
வலையில் விழும் இரை
உண்டு வளர்வாய்.
***
பென்டுலம் போலே
நூலில் ஆடி
வாலாய் நூலை
வளைத்து நெளித்து
குறுக்கும் நெடுக்கும்
குறும்புதிர் போலே
ஏற்ற இறக்கமில்லா(மல்)
இடைவெளி விட்டு
வலையைப் பின்ன
எங்கு கற்றாய் ?!
***
துளித் துளியாய் இழை விட்டு
தூண்டில் நீள் நூலாய்
தூரிகை ஓவியமாய்
துயிலும் தூளியாய்
துள்ளித் துள்ளி
வலை பின்ன ...
கண்ணாடி நூலிழையில்
காண்போர் கண்படும்
கலை ஒத்த கட்டுமானம்
நிலையாகும் உன் வாழ்வு அதில் !!!
***
ஓட்டுக் கூரையிலும்
வீட்டுத் தோட்டத்திலும்
வலை பின்னும்
கலை அறிய
உனைத் தொடர்ந்தேன்
பல முறை
எங்கு ஆரம்பித்து
எப்படி முடித்தாய் என
கண்டதில்லை ஒரு முறையும்
இன்று வரை வியப்பே !!!
***
ஊரு உலகெலாம்
தெரியுது வலை - அதில்,
விஞ்ஞான மருத்துவங்கள்
விவாதக் கட்டுரைகள்,
அற்புதங்கள் பலகொண்ட
ஏராளச் செய்திகள்,
அன்றாட வாழ்வின்
அங்கமாய் ஆனதுவே.
இது தான் இன்றைய நிலை
இப்படி ...
நாங்களும் பின்னூவோம் வலை !
***
14 மறுமொழி(கள்):
அருமையான கவிதைகள். சிலந்தி எப்போதும் அதிய பிறவிகள் தான். சுகுமாரன் தன் கவிதையில் சொந்த வலை ஒரு போதும் சிக்குவதில்லை எட்டுகாலிகள் என்பார். அழகு.
துளித் துளியாய் தாங்கள் தருவதெல்லாம் வித்தியாசமான பார்வைகள்.
//கலை ஒத்த கட்டுமானம்
நிலையாகும் உன் வாழ்வு அதில் !!!//
சிலந்தி வலை பின்னும் நேர்த்தியைக் கலைக் கண்ணோடு ரசித்து கவி பாடியதோடு அதை பதிவர் பின்னும் வலையோடு ஒப்பிட்டு முடித்த விதம் சிறப்பு:))!
சிலந்தியின் வலைப்பற்றி அருமையான பத்திகள்.
உங்கள் வலையின் மூலம் என்னைப்போன்ற வாசகர்களை ஈர்த்து விட்டீர்கள்
அன்பின் சதங்கா
அருமையான கவிதை - சிலந்தியின் உழைப்பினைப் பற்றியது - அது வலை பின்னும் அழக்கினைக் கண்டு ரசிக்க வேண்டுமெனெ முயற்சி செய்தும் இது வரை காண முடியவில்லை. இச்சிறு சிலந்தியிடமும் ஒரு திறமையை இறைவன் வைத்திருக்க்கிறான் எனில் என்ன சொல்வது. அது தன் வாழ்வினிற்கு ஆதாரணமான இரையைப் பிடிப்பதற்கு வலை பின்னும் கலை அறிந்திருக்கிறது. இல்லையா .......
நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள்
மின்னல்said...
// சுகுமாரன் தன் கவிதையில் சொந்த வலை ஒரு போதும் சிக்குவதில்லை எட்டுகாலிகள் என்பார். அழகு.//
எட்டுகாலிகள், புரியலையே ?
ராமலக்ஷ்மி said...
// சிலந்தி வலை பின்னும் நேர்த்தியைக் கலைக் கண்ணோடு //
இதுவும் ஔவையோட இன்ஸ்பிரேஷன் தான். அவரைப் போல வெண்பா வராது, அதான் நமக்குத் தெரிந்த எளிய தமிழில் :)))
//ரசித்து கவி பாடியதோடு அதை பதிவர் பின்னும் வலையோடு ஒப்பிட்டு முடித்த விதம் சிறப்பு:))!//
ரசனைக்கு ஊக்க மருந்தாய் பின்னூட்டியதற்கு மிக்க நன்றி.
அதிரை ஜமால்said...
// உங்கள் வலையின் மூலம் என்னைப்போன்ற வாசகர்களை ஈர்த்து விட்டீர்கள்//
இதுவும் அழகாக இருக்கே !! மிக்க நன்றிங்க.
cheena (சீனா) said...
// அன்பின் சதங்கா
அருமையான கவிதை - சிலந்தியின் உழைப்பினைப் பற்றியது //
மிக்க நன்றி.
//இச்சிறு சிலந்தியிடமும் ஒரு திறமையை இறைவன் வைத்திருக்க்கிறான் எனில் என்ன சொல்வது. //
கொஞ்சம் இறங்கிப் பார்க்கையில் எல்லாமே அதிசயமாகத் தான் இருக்கிறது இறைவன் படைப்பினில் :)))
ஆக....சிலந்தியின் சுறுசுறுப்பை பொறுமையாக பாலோ செய்திருக்கிறீர்கள் என்று புரிகிறது!!!
//துளித் துளியாய் இழை விட்டு
தூண்டில் நீள் நூலாய்
தூரிகை ஓவியமாய்
துயிலும் தூளியாய்//
அழகான வரிகள். படமும் அழகா இருக்கு.
எட்டுக்காலின்னா சிலந்திதான் :)
இது தான் இன்றைய நிலை
இப்படி ...
நாங்களும் பின்னூவோம் வலை
பின்னிடுவேம் வலையை
நானானி said...
// ஆக....சிலந்தியின் சுறுசுறுப்பை பொறுமையாக பாலோ செய்திருக்கிறீர்கள் என்று புரிகிறது!!!//
அடடா, வார்த்தைகளில் என்னமாய் விளையாடுகிறீர்கள். ஒரு செகண்ட் அசந்துட்டேன் போங்க. ராமலஷ்மி மேடம் போல உங்களுக்கும் இது கை வந்த கலையாச்சே.
கவிநயா said...
//அழகான வரிகள். படமும் அழகா இருக்கு.//
மிக்க நன்றிங்க
// எட்டுக்காலின்னா சிலந்திதான் :)//
ஓ... சந்தேகம் தீர்த்தமைக்கும் நன்றிங்க.
கவின் said...
//பின்னிடுவோம் வலையை//
ஆமா. அதே தான். பின்னிடுவோம்.
Post a Comment
Please share your thoughts, if you like this post !