Wednesday, December 17, 2008

வானின் நிறம் நீலம் - 12


Photo: farm4.static.flickr.com

"சில‌ நொடிக‌ளில், ச‌ரிங்க‌ உங்க‌ இஷ்ட‌ம்" என்றான்

'ச‌ரி ரொம்ப‌த் தொல்லை ப‌ண்ண‌ வேண்டாம் இவ‌னை' என்று, "எதுக்குங்க‌ உங்க‌ளுக்கு வீண் சிர‌ம‌ம், நானே அங்க‌ வ‌ர்றேன். 'டோம்ஸ் காஃபியில்' மீட் ப‌ண்ண‌லாம்"

முத‌ன் முறையாய் ஜிவ்வென்று (நீல) வானில் ப‌ற‌ப்ப‌தாய் உண‌ர்ந்தான் செல்வா.

"ம்...வ‌ந்து...ஐ ஹேவ் டு கோ டூ ராபிள்ஸ் திஸ் டைம். திஸ் இஸ் ஃபைன‌ல் ஃபார் ஸ்யூர்" என்று குழைவாய் விண்ண‌ப்பித்தாள்.

க்ரீச்ச்ச்ச் என்ற ப்ரேக்கில், சில‌ அடிக‌ள் இழுத்து நின்ற‌து டாக்ஸி. திரும்பி எல்லாம் பார்க்க‌வில்லை ஓட்டுன‌ர். "நாட் எனி மோ. பே மீ செவ‌ன் டால‌, தேட்டி சென்" க‌டுக‌டுத்த‌ குர‌லில் ஓட்டுன‌ர்.

'இது என்ன‌ இட‌ம். இத்த‌னை வ‌ருட‌ங்க‌ளில் இங்க‌ல்லாம் வ‌ந்த‌தே இல்லியே. சிங்க‌ப்பூர் குட்டியூண்டு தான், இருந்தாலும், முழுதும் பார்க்க‌ இய‌ல‌வில்லையே'. ஆனா ஒன்னு, அதே ஆரஞ்சுக் கலர் பஸ் ஸ்டாப்கள், ஹாக்கர் சென்டர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள். ஒன்றும் புரிய‌வில்லை நிர்ம‌லாவுக்கு. எதிர் திசையில் சென்று ம‌ற்றொரு டாக்ஸி பிடித்தாள்.

டோம்ஸில் அவ்வ‌ள‌வாக‌க் கூட்ட‌மில்லை. இருவ‌ர் அம‌ரும் மேசையை தேர்வு செய்து அம‌ர்ந்து கொண்டாள். ஆர்ட‌ர் கேட்ட‌ இள‌ம்பெண்ணிற்கு, "ஐம் வெய்டிங் ஃபார் எ ஃப்ரெண்ட், ஐ வில் கால் யூ, தாங்க்ஸ்" என்று அனுப்பி வைத்தாள்.

தொலைபேசியில் "செல்வா நான் டோம்ஸ் வ‌ந்திட்டேன், நீங்க‌ வேலை முடிச்சு வாங்க‌, ஒன்னும் அவ‌ச‌ர‌மில்லை, பை"

கைக‌ள் ப‌ர‌ப‌ர‌க்க‌, கால்க‌ள் குறுகுறுக்க‌ அடுத்த‌ ப‌த்தாவ‌து நிமிட‌ம், நிர்ம‌லாவின் எதிரில் செல்வா.

"ஹேய் என்ன‌து. ஆபீஸா இல்ல வீடா ?!! நென‌ச்ச‌ நேர‌ம் போறீங்க‌, வ‌ர்றீங்க‌."

"ரொம்ப‌ முக்கிய‌மா இப்ப‌ அதெல்லாம். ச‌ரி என்ன‌ சொல்ல‌ணும் ?"

"நான் இன்னும் ஒன்னும் சொல்ல‌லை, உங்க‌ளுக்கு தான் வெய்டிங்"

"அதான் வ‌ந்திட்டேன்ல‌ சொல்லுங்க‌"

கைய‌சைத்து வெய்ட்ர‌ஸ்ஸை அழைத்தாள் நிர்ம‌லா.

"இப்ப‌ சொல்றேன்" என்றாள்.

கிர்ர்ர்ர் என்று முறைத்தான் செல்வா

எஸ்ப்ர‌ஸோ, காப்புசீனோ, லாட்டே ...

"ம்...எது...சீக்கிர‌ம் சொல்லுங்க‌, பாவ‌ம் பொண்ணு நிக்குது பாருங்க‌" என்று உசுப்பேத்தினாள்.

"இர‌ண்டு லாட்டே, எக்ஸ்ட்ரா ஹாட் சொன்னார்க‌ள்."

"ந‌ல்ல‌ வேளை ம‌கேஷ் தொல்லை ஒழிஞ்ச‌து இன்னிக்கோட‌. என்கிட்ட‌ ஒன்னும் இல்ல‌ இல்லியா, இனி வ‌ர‌மாட்டான். ஆனா அண்ணி பழைய மாதிரி பேசுவாங்களா தெரியலையே ?!!" என்று நிறுத்தினாள்.

'அப்பாடா, லைன் க்ளிய‌ர்' என்று ம‌ன‌ம் குட்டிக் க‌ர‌ண‌ம் அடித்த‌து.

"என்ன‌வோ தெரிய‌ல‌ செல்வா, ம‌ன‌சுக்கு ரொம்ப‌ க‌ஷ்ட‌மா இருக்கு. யாருகிட்ட‌யாவ‌து பேசினா ரிலாக்ஸ்டா ஃபீல் ப‌ண்றேன். அண்ணன் கூட நான் சொல்வதை காதில் போட்டுக்க மாட்டார். இப்ப‌ யாருமே இல்லை, அதான் உங்க‌ கிட்ட‌ ... த‌ப்பா எடுத்துக்காதீங்க‌."

"ஓ.மை.காட். இன் ஃபாக்ட் சொல்ல‌ப் போனா, உங்க‌ள‌ முத‌ன்முத‌லில் பார்த்த‌ப் இருந்தே என‌க்கு பிடித்துவிட்ட‌து. அக‌ அழ‌கு ம‌ட்டும‌ல்லாது, உங்க‌ள‌து செய்ல‌க‌ளும் சேர்த்து. " "அத‌னால‌ ..."

"அத‌னால‌ ..."

"ஐ ல‌வ் யூ நிர்ம‌லா" என்று அவ‌ள் க‌ண்க‌ளை நோக்கினான்.

சோக‌த்தை எல்லாம் ம‌ற‌ந்து, வான் நோக்கி, கண்கள் பணித்து, குற்றால‌ அருவியாய் ச‌ட‌ ச‌ட‌வென‌ சிரிக்க‌லானாள் ....

"என‌க்கு ...ஏற்க‌ன‌வே ....க‌ல்யாண‌ம் ...ஆகிடுச்சுங்க ....செல்வா" என்று சிரிப்பினூடே விட்டு விட்டு சொன்னாள்.

சற்று அமைதியாகி, "ஒரு குழ‌ந்தை வேறு இருக்கு".... என்றாள்


தொடரும் ....

7 மறுமொழி(கள்):

நட்புடன் ஜமால்said...

me the 1st

நட்புடன் ஜமால்said...

\\"வானின் நிறம் நீலம் - 12"\\

வானமும் நீளம்

அதன் நிறமும் நீலம்

அட - அருமை

நட்புடன் ஜமால்said...

\\முத‌ன் முறையாய் ஜிவ்வென்று (நீல) வானில் ப‌ற‌ப்ப‌தாய் உண‌ர்ந்தான் செல்வா.\\

நல்லாயிருக்கு

நட்புடன் ஜமால்said...

\\சோக‌த்தை எல்லாம் ம‌ற‌ந்து, வான் நோக்கி, கண்கள் பணித்து, குற்றால‌ அருவியாய் ச‌ட‌ ச‌ட‌வென‌ சிரிக்க‌லானாள் ....\\

சேகத்தை எல்லாம் மறைத்து ...

ராமலக்ஷ்மிsaid...

செல்வா என்ன சொல்வார் என்று தெரிந்தாலும் உங்கள் ஸ்டைலில் எப்படி சொல்லப் போகிறீர்கள் என வெயிட்டிங்:)!

சதங்கா (Sathanga)said...

அதிரை ஜமால் said...

// me the 1st//

உங்க சந்தோசத்தில் நானும் திளைக்கிறேன் :))))

//வானமும் நீளம்

அதன் நிறமும் நீலம்

அட - அருமை//

அடுக்கடுக்காய் பின்னூட்டி வழக்கம் போல அசத்திவிட்டீர்கள்.

மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

// செல்வா என்ன சொல்வார் என்று தெரிந்தாலும் உங்கள் ஸ்டைலில் எப்படி சொல்லப் போகிறீர்கள் என வெயிட்டிங்:)!//

மனம் மகிழ்ச்சியில் குதிக்க, அங்கேருந்து தங்க்ஸ் ... "என்னது இவருக்குனு கூட ஸ்டைல் இருக்கா ?!!!! :)))))" என்று அவர்கள் சந்தோஷிக்கிறார்கள். :)))

Post a Comment

Please share your thoughts, if you like this post !