வானின் நிறம் நீலம் - 13
Photo: museums.com.sg
"குழந்தை இப்ப ஒரு காப்பகத்தில் வளருது. யூ வோன் பிலிவ் ஐம் எ மாம் நௌ", என்று நிறுத்தினாள். உங்களை சந்தித்தது "டூ லேட் செல்வா" என்று அதிசயித்தாள் !!
"மேக மூட்டமா, கொஞ்சம் புரிஞ்சும், கொஞ்சம் புரியாமலும் மாதிரி இருக்கு. அப்போ, அன்னிக்கு ரயிலில் உங்ககூட வாக்குவாதம் பண்ணினவர் உங்க கணவர் ! சரியா ?"
"அவர் இவர்னு, ஏன் மரியாதை எல்லாம் கொடுக்கறீங்க. ஆமா, அவனே தான் !!!"
சாட்டையடி போன்ற தொனியில் நிர்மலாவின் குரல், அவளின் வேதனையை பிரதிபலித்தது.
"நிர்மலா, உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே. அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தா என்கிட்ட சொல்லுங்க. என்னால் முடிந்த உதவி செய்றேன்"
'இவன் என்ன உதவி செய்றேன், உதவி செய்றேன் என்று சொல்லிகிட்டே இருக்கான். நம்பலாமா ?'
"என்னை நம்பலாம்ங்கறதுக்கு நான் என்ன உத்திரவாதம் தரணும், சொல்லுங்க" என்றான்.
'மனதைப் படிக்கிறானே ? எல்லா ஆம்பிளைங்களும் இப்படித்தானே நம் மனதைக் கரைத்துவிடுகின்றனர்'
"ஒன்னும் பிரச்சனை இல்லை செல்வா. எல்லாம் முடிஞ்சு போச்சு." என்றாள்.
செல்வா விடுவதாய் இல்லை. "இல்லைங்க, உங்க முகம் சொல்லுது பல கதைகள்" என்றான். "சரி, உங்களுக்கு இஷ்டம் இல்லை எனில் நான் தொல்லை பண்ண விரும்பவில்லை" என்று நிறுத்திக் கொண்டான்.
'பேசணும் என்றும் இருக்கு. ஆனா இவனை எப்படி நம்பறதுனும் இருக்கு. என்ன இது புதுக் குழப்பம்' என்ற யோசனையில், யார் தோளிலாவது சாய்ந்து அழ வேண்டும் போல் இருந்தது.
முழுக்க அலைந்து, மனமும் தளர்ந்து, உடல் சோர்வுற்று, முறையாக உண்ணாமல், நேரம் தவறி அருந்திய காஃபி, வயிற்றை கலக்கியது நிர்மலாவிற்கு. நெற்றியில் நீர் திரள, கண்கள் இருட்டி மயங்கி விழாத குறை. சில நொடிகள் என்ன நடக்கிதென்றே புரியவில்லை அவளுக்கு.
"செல்வா, எனக்கு என்னவோ போல இருக்கு, ப்ளீஸ், ஒரு டாக்ஸி பிடிங்க, என்ன வீட்டில ட்ராப் பண்ணிடுங்க, ஐ வான் டு டேக் சம் ரெஸ்ட்" என்று சரிந்து விழுந்தாள்.
பட்டென்று எழுந்த செல்வா, கைத் தாங்கலாய் நிர்மலாவைப் பிடித்துக் கொண்டான். பேரர் பெண்மணியிடம், தண்ணீர் கொண்டு வரச் சொன்னான். சரிந்தவளை சற்று நிமிர்த்தி விசிறி விட்டான். எல்லோரும் வேடிக்கை பார்த்தனரே அன்றி, யாரும் எதுவும் உதவி வேண்டுமா எனக் கேட்கவில்லை.
"நிர்மலா, கொஞ்சம் எழுந்திரிங்க ... மெதுவா நடந்து வாங்க ... இன்னும் கொஞ்ச தூரம் தான், இதோ டாக்ஸி ஸ்டான்ட் வந்திடும்" கைத்தாங்கலாய் அணைத்துச் சென்று, டாக்ஸியிலும் ஏ(ற்)றினான்.
"கொஞ்சம் பின் கண்ணாடி கதவை திறந்துக்கட்டுமா, ஷீ நீட் சம் ஃப்ரெஷ் ஏர்" என்றான் ஓட்டுனரிடம்.
"லில் பிட் ஹான் ..." என்று எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் ஓட்டுனர் சொன்னார்.
சடசடவென காற்றடிக்க, மெல்லக் கண்கள் திறந்தாள் நிர்மலா.
வெளியே வானம் பளிச்சென்று இருந்தது.
"செல்வா, தேங்க்ஸ் எ லாட் அன்ட் ஸாரி ஃபார் த ட்ரபில்"
"என்னங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு. இனி ஒரு வாட்டி ஸாரி சொன்னீங்கன்னா, அப்புறம், இப்படியே இறங்கிப் போயிடுவேன்" என்று பயம் காட்டுவதாய் பாவலா காட்டினான்.
"உள்ளூர ரசித்தாள். உடனே அழுதாள்"
கட்டிடங்களும், மரங்களும், மனிதர்களும் பின்னோக்கிச் செல்ல, நிர்மலாவின் நினைவுகளும் பின்னோக்கி பயணித்தது.
"ரொம்ப நாளா மனசுக்குள்ளே வச்சு ஆரப்போட்டுகிட்டு இருந்தேன். முடியல. யாருகிட்டயாவது சொல்லி அழலாம் என்றால் அண்ணன் தான். இப்ப அவனும் அண்ணி பின்னால."
"நீங்க தைரியமா என் கிட்ட பகிர்ந்துக்கலாம் நிர்மலா. மேல சொல்லலாம் என்றால் சொல்லுங்க என்றான்"
தொடரும் .....
2 மறுமொழி(கள்):
//சடசடவென காற்றடிக்க, மெல்லக் கண்கள் திறந்தாள் நிர்மலா.
வெளியே வானம் பளிச்சென்று இருந்தது.//
நிர்மலாவின் மனமும்தான், இல்லையா?
//மேல சொல்லலாம் என்றால் சொல்லுங்க //
கண்டிப்பா சொல்லிடுவாங்க, அப்படித்தானே?
ராமலக்ஷ்மி said...
//
//மேல சொல்லலாம் என்றால் சொல்லுங்க //
கண்டிப்பா சொல்லிடுவாங்க, அப்படித்தானே?//
ஆமா. சொல்லிட்டாங்க :)
Post a Comment
Please share your thoughts, if you like this post !