வானின் நிறம் நீலம் - 11
Photo: image14.webshots.com
முதன் முறையாய் செல்வாவின் அக்கறை, பிடிப்பதாய் (தேவைப்படுவதாய்) உணர்ந்தாள்.
சில நொடிகளில்,
'ஐயோ, இந்த ஆண்களின் சகவாசம் வேண்டவே வேண்டாம். ஒரு எல்லையில் நிறுத்துவது தான் நல்லது. மகேஷிடம் பட்டதே போதும்'.
"சாரி, 'ராஃபில்ஸ்' வேண்டாம் 'புக்கிட் பாத்தோக்' போங்க". என்றாள் ஓட்டுனரிடம்.
திரும்பி முறைப்பது போல் பார்த்தார் ஓட்டுனர். கொஞ்ச நேரம் கழித்து வேற எங்காவது சொல்லுவாளோ என்று அவர் முகத்தில் கிலி அப்பியது.
"புக்கி பாத்தோக் ஆ, லேட்ட டோன் சேஞ் டூ சம் அத ப்ளேஸ் ஓ.கே ஹான்..." என்று கட்டளை இட்டார் ஓட்டுனர்.
'போயா போயா' என்று மனதுள் சொல்லி "யா ஸ்யூர்" என்றாள் திடமாய்.
கண்ணாடி வழி வெளியே சிறிது நேரம் வேடிக்கை பார்த்து வந்தாள். சில பல சிந்தனைகள், பின் செல்லும் பொருட்களோடு போட்டி போட்டு பிம்பங்களாய்ச் சென்றன. என்னது இவ்ளோ நேரம் ஆகியும் ஒரு ஃபோன் கூடவா வரலை என்று யோசித்து, பையிலிருந்து செல்லை எடுத்துப் பிரித்தாள். சைலன்ட் மோடில் இருந்தது செல்.
"1 மிஸ்ட் கால்" காட்டியது திரை. என்னது புது நம்பரா இருக்கு. திரும்ப கால் பண்ணலாமா, வேண்டாமா என்று யோசித்தாள். வேண்டாம் என்று சிவப்பு பொத்தானை அழுத்த, "1 வாய்ஸ் மெய்ல்" என்றது செல்திரை. அழுத்திக் கேட்டாள். செல்வாவின் குரல் ... "நிர்மலா, உங்க பெர்சனல் விசயத்தில குறுக்கே வர்றேனு நினைக்காதீங்க. ஒரு ஆளுடன் நீங்க வாக்குவதும் பண்ற மாதிரியும் தெரிந்தது. அதே சமயம் அவர் உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்றும் புரிந்தது. சரினு விட்டுட முடியல. காரணம், உங்க முகத்தில் ஒரு வாட்டமும், கோபமும் இருந்தது. அதான், உங்களுக்கு ஏதாவது உதவினா, தயங்காம என்கிட்ட கேளுங்க, இதான் என் நம்பர், டேக் கேர்"
'அடப் பாவிங்களா ... ஏன்டா ஒரு பொண்ணோட மனச இப்படி நோகடிக்கறீங்க' என்று நொந்து கொண்டாள்.
'உண்மையாவே இவன் அக்கறை காட்டுகிறானா என்று ஏன் யோசிக்க மாட்டேன்கற' என்றது மனம்.
'இல்லை வேண்டவே வேண்டாம். எல்லாம் போதும்'
'என்ன போதும். எல்லோருமே மகேஷ் மாதிரி இருப்பாங்கன்றது என்ன நிச்சயம்'
சில நொடிகள் யோசித்தாள். செல்லில் ...
"செல்வா நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும். உங்க கிட்ட சொல்லலாமா, வேண்டாமா என்று தெரியவில்லை. ஆனா மனசு கெடந்து அடிச்சிக்குது"
'நானே உன் கிட்ட ஒன்னு சொல்லணும் என்று யோசிச்சிகிட்டு இருக்கேன். நீ என்னடானா.' "சரி, எப்போ எங்கே பேசலாம் ?"
மணி பார்த்தாள், திருப்பி போட்ட ஏழாய், மணி ரெண்டரை காட்டியது.
"நீங்க செரங்கூன்ல தான இருக்கீங்க. அங்கேயே இருங்க, ஆபீஸ் முடிச்சு அஞ்சு அஞ்சரைக்கா நான் வர்றேன். அங்க எங்காவது மீட் பண்ணலாம். அதுவரைக்கும் முஸ்தாபா, ஹனிஃபானு ஷாப்பிங்க்ல இருங்க". என்றான்
"இல்ல வேண்டாம். எங்காவது லைப்ரரில மீட் பண்ணலாம்".
"சரி எந்த லைப்ரரி சொல்லுங்க ?"
'எல்லாத்துக்கும் சரி என்கிறானே. உண்மையா ? நடிக்கிறானா ??'
"இன்னிக்கு வேணாம். நாள நாளன்னைக்கு பார்க்கலாம்".
எதிரில் மௌனம்
தொடரும் ....
4 மறுமொழி(கள்):
”வழக்கம் போல” நல்லதே நடக்கும் என வாக்குக் கொடுத்து விட்டீர்கள்:)!
ஆனால் அது எப்படி நடக்கப் போகிறது என்பதைத்தான் சஸ்பென்ஸாக கொண்டு செல்கிறீர்கள்.
//எதிரில் மெளனம்// கண்டு
பதிலில் மாற்றம் வருமா?
பாகம் பனிரெண்டே சொல்லும்:)!
ராமலக்ஷ்மி said...
// ”வழக்கம் போல” நல்லதே நடக்கும் என வாக்குக் கொடுத்து விட்டீர்கள்:)!
ஆனால் அது எப்படி நடக்கப் போகிறது என்பதைத்தான் சஸ்பென்ஸாக கொண்டு செல்கிறீர்கள்.//
அப்ப தான படிக்கறவங்களும் ஒரு ஈடுபாட்டோட இருப்பாங்க. அப்படிங்கற எண்ணம் தான் :))
// //எதிரில் மெளனம்// கண்டு
பதிலில் மாற்றம் வருமா?
பாகம் பனிரெண்டே சொல்லும்:)!//
ஆம். இவ்ளோ நாள் கதையைப் படித்துப் பொறுமையா படிச்சு வருவதற்கு நன்றிகள் பல.
இந்தப் பெண்ணுக்கு அப்படி என்னதான் கஷ்டம் நேர்ந்ததுன்னு சஸ்பெண்சாவெ இருக்கே சதங்கா.
ம்ம்.எல்லாத் தொடருக்கும் உண்டான முடிச்சுகள் விழுந்து கொண்டே வருகின்றன.
வல்லிசிம்ஹன் said...
//
இந்தப் பெண்ணுக்கு அப்படி என்னதான் கஷ்டம் நேர்ந்ததுன்னு சஸ்பெண்சாவெ இருக்கே சதங்கா.//
தொடர் நிறைவு பெற்றுவிட்டது வல்லிம்மா. நேரம் கிடைக்கும்போது மற்ற பாகங்களையும் வாசித்து சொல்லுங்கள். தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி.
Post a Comment
Please share your thoughts, if you like this post !