Tuesday, December 16, 2008

வானின் நிறம் நீலம் - 10

நாளைக்கு ஒன்று (அல்லது ஓரிரு நாட்களுக்கு ஒன்று) என்று விரிந்து சென்ற 'வானின் நிறம் நீலம்' தொடர் சில காரணங்களால் தொடர முடியாமல் போனதற்கு முதற்கண் மன்னிக்கணும்.

அதை மறக்காம ஞாபகம் வைத்து அக்கறையுடன், யோசனையும் சொன்ன ராமலஷ்மி அவர்களுக்கு உளமார்ந்த நன்றி. முடிந்த வரையில் அவர்கள் யோசனையை (முழுத்தொடரையும் தட்டச்சிட்டு பாகங்களாகப் பதிவது) இனி வரும் தொடர்களிலும் நடைமுறை படுத்தப் பார்க்கிறேன். நேரம் தான் ஒத்துழைக்கணும் :))

இந்தத் தொடர் முழுதும் தட்டச்சிட்டு ரெடி. பாகங்கள் பிரித்து, இன்னும் மூன்று அல்லது நான்கு பாகங்களில் முடியும்.

recap
-----
நிர்மலா, அண்ணன் வீட்டில் தங்கிக் கொண்டு சிங்கையில் வேலை பார்க்கும் சென்னைப் பெண். நண்பர்களுடன் தங்கி சிங்கையில் வேலை பார்க்கும் செல்வா. சில காரணங்களால், அண்ணி வெறுக்க, மன வேதனையில் உழலும் நிர்மலா. பார்த்த வேலையை விட்டு, வேறு வேலை தேடி, செல்வாவின் அலுவலகத்திலேயே நிர்மலா சேர, செல்வா அவளின் அழகில் மயங்கி, அவளைப் பின் தொடர, ஏற்கனவே மகேஷ்ஷுடன் தொடர்பிருப்பதை பார்த்து அதிர்ந்து ...

பொறுத்த நெஞ்சங்கள் பலவற்றிக்கும் நன்றிகள் பல. மேல படிங்க, கருத்து சொல்லுங்க.

முழு கதையையும் வாசிக்க இங்கு க்ளிக் பண்ணுங்க‌

---

வானின் நிறம் நீலம் - Part 10


Photo: panoramio.com


"சரி ஃபார்ம கொடு"

"ஹ‌ன்ன்ன் ... ரோட்டுலயா ... வேண்டாம். எங்காவ‌து உட்கார்ந்து பேச‌லாம்"

"சொன்ன‌தையே திருப்பி திருப்பி சொல்ற‌, என‌க்குப் பிடிக்கலை"

"என‌க்குப் பிடிச்சிருக்கே. அந்த‌ வீடு பிடிச்சிருக்கு, ம‌ரிய‌த்தை பிடிச்சிருக்கு. நீ கையெழுத்துப் போட்டா தான் எல்லாமே ந‌ட‌க்கும் க‌ண்ணு."

வ‌ரும் ஆத்திர‌த்தில் அப்ப‌டியே ரோட்டில் அவ‌னைப் பிடித்து த‌ள்ளிட‌லாமா என்று கூட‌ யோசித்தாள் நிர்ம‌லா. சே, அந்த‌ பாவ‌ம் ந‌ம‌க்கெத‌ற்கு என்று ம‌ன‌ம் பின்வாங்கிய‌து.

வீர‌மாகாளி அம்ம‌ன் கோவில் அருகில் இருந்தன‌ர்.

எங்கேயாவ‌து உட்கார‌ணும், அவ்ளோ தானே. இங்கே உட்கார‌லாம் என்று அவனை (எதிர்)பாராது, கால‌ணிக‌ளை க‌ழ‌ட்டி, பாத‌ங்க‌ளை சுத்த‌ம் செய்து கொண்டு கோவிலுக்குள் நுழைந்தாள்.

உச்சிகால‌ பூசை முடிந்து, உச்சி வெய்யிலுக்கு உள்ளே சில‌ர் குளிர்காய்ந்து கொண்டிருந்த‌ன‌ர். ஆள் அதிக‌ம‌ற்ற‌ ராம‌ர் ச‌ன்னிதியின் பின், கொட்டகையில் நிர்ம‌லாவும், ம‌கேஷும் அம‌ர்ந்த‌ன‌ர்.

"கொண்டா பேப்பரை" என்றாள்.

பேக் பேக்கிலிருந்து சில‌ தாள்க‌ளை உருவினான் ம‌கேஷ்

'செத்துத் தொல‌ ச‌னிய‌னே' என்று திட்டி "இந்தா பிடி, இனி ஒரு முறை கூட‌ என் எதிரில் வ‌ந்திடாத" என்று இரு கர‌ம் கூப்பி த‌லை குனிந்தாள்.

இவ்வ‌ள‌வு எளிதில் காரிய‌ம் முடியும் என்று ம‌கேஷ் எண்ண‌வில்லை.

நீ எப்ப‌வுமே ஸ்மார்ட் நிமி. இந்த‌ ம‌ரிய‌ம் ம‌ட்டும் குறுக்கே வ‌ல்லேன்னா இப்ப‌டி ஆயிருக்காது...

'இந்த‌ மாதிரி எத்த‌னை பேரு கிட்ட‌ சொன்னியோ, சொல்ல‌ப் போறியோ. ந‌ல்ல‌ வேளை என்னை விட்டியே அதுவே நான் செய்த‌ பாக்கிய‌ம்' என்று க‌ண்க‌ள் மூடி யோசித்தாள்.

இனி எதுவும் பேச‌ மாட்டாள் என, வெற்றி க‌ளிப்புடன் அங்கிருந்து ந‌க‌ர்ந்தான் ம‌கேஷ்.

வாய்க்கும், வ‌யிற்றுக்கும் இடையில் என்ன‌வோ செய்த‌து. இன‌ம் புரியாத‌ ஒரு சோக‌ம் அப்பிக் கொண்ட‌து. ச‌ன்ன‌தியில் சாய்ந்து க‌ண்மூடினாள். உல‌க‌மே சூறாவ‌ளியில் சுழ‌ல்வ‌து போல‌ இருந்த‌து. காற்றின் ச‌ட‌ச‌ட‌ப்பில் எல்லாம் பிய்த்துக் கொண்டு ப‌றந்த‌து. வீட்டுக் கூரைக‌ள், மர‌ங்க‌ள், வாக‌ன‌ங்க‌ள், மனிதர்கள் எனப் பாகுபாடு இல்லாம‌ல் எல்லாம் காற்றின் ஆதிக்க‌த்தில் சுழ‌ன்ற‌து. இடி இடித்து வானம், அழ‌த் தொட‌ங்கிய‌து. சொட் சொட் என்று கொட்ட‌கையில் இருந்து வ‌டிந்த‌ நீர், நிர்ம‌லாவின் மேல் விழ‌, ப‌ட்டென்று க‌ண்விழித்தாள். த‌ன‌க்காக‌ வான‌ம் அழுகிறதோ என‌ சிறிது ம‌கிழ்ந்தாள்.

துப்ப‌ட்டாவை த‌லைக்கு போர்த்திக் கொண்டு கோவிலை விட்டு வெளியில் வ‌ந்து டாக்ஸி பிடித்தாள். 'புக்கிட் பாத்தோக்' என்று சொல்ல‌ வ‌ந்த‌வ‌ள், 'ராஃபில்ஸ் ப்ளேஸ்' என்றாள் டாக்சி ஓட்டுன‌ரிட‌ம் ...


தொடரும் .....

8 மறுமொழி(கள்):

ராஜ நடராஜன்said...

அய்!மீ த பர்ஸ்ட்?

ராமலக்ஷ்மிsaid...

நீல வானை மூடி நின்ற மேகம் விலகி வந்து விட்டதா பாகம் பத்து? நன்று.
நிர்மலாவின் வாழ்வினை மூடி நின்ற
கருமேகமும் விலகி அகன்று விட்டது கையெழுத்து வாங்கி, அதுவும் நன்று.
இனி நல்லது நடக்கட்டும்.

ராமலக்ஷ்மிsaid...

தொடர் தொடர்பான என் யோசனையையும் பதிவில் குறிப்பிட்டு விட்டீர்களே:)! சரி இது பலருக்கும் பயன்படக் கூடியதுதான், இல்லையா? நன்றி சதங்கா:)!

நட்புடன் ஜமால்said...

அப்ப நான் 2ண்டா

நட்புடன் ஜமால்said...

ம்ம்ம் ... நல்லாயிருக்கு

“வழக்கம் போல” தான்.

சதங்கா (Sathanga)said...

ராஜ நடராஜன் said...

// அய்!மீ த பர்ஸ்ட்?//

நீங்களே தான். ஆமா, 'இது கதையா இல்லை நிஜமா' என்றெல்லாம் கேட்காமல் விட்டுடீங்களே :))

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

// இனி நல்லது நடக்கட்டும்.//

ஆமா, வழக்கம் போல :))

// தொடர் தொடர்பான என் யோசனையையும் பதிவில் குறிப்பிட்டு விட்டீர்களே:)! சரி இது பலருக்கும் பயன்படக் கூடியதுதான், இல்லையா? நன்றி சதங்கா:)!//

நிச்சயமா. பலருக்கும் பயன்படும்.

சதங்கா (Sathanga)said...

அதிரை ஜமால் said...

// அப்ப நான் 2ண்டா//

ஜஸ்ட் மிஸ். தெர்டு :)))

//ம்ம்ம் ... நல்லாயிருக்கு

“வழக்கம் போல” தான்.//

மிக்க நன்றிங்க. எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் தான்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !