Sunday, July 12, 2009

லெச்சுமி அக்கா ...


Photo: baby-sang-http-www.indianhindunames

'ஆஹா, எவ்வ‌ள‌வு பெரிய‌ த‌ப்புப் ப‌ண்ணிட்டோம். இத்த‌ன‌ பேர‌க் கூப்பிட்டு, அக்காவுக்கு ஒரு போன் கூட‌ போட்டு சொல்ல‌லையே !' என‌ வ‌ழ‌க்க‌ம் போல‌ என் ம‌ற‌தியை நினைத்து வ‌ருந்தினேன்.

மதுரையில் இருந்த வரைக்கும் பக்கத்து வீட்டுக்காரங்க என்ற நினைப்பே இல்லாமல், கூடப் பிறந்த சகோதரியாய் நினைத்தவர் லெச்சுமி அக்கா.

வீட்டில ஏதாவது ப்ரச்சனை, இல்ல எங்களோடு சேர்ந்து விளையாட, இல்ல தீபாவளி, பொங்கல்னு எல்லாத்துக்கும் பொசுக்கு பொசுக்கென்று வந்து எங்க வீட்டில் ஒருத்தரா இருந்து அம்மாவிற்கு உதவியும் செய்வார்.

அப்புறம் படிப்பு முடிந்து அயலகம் பறந்தபோது, பெற்றோரும் ஊருக்கே குடி பெயர, அக்காவின் நினைப்பும் மெல்ல அகல ஆரம்பித்தது என்னில்.

எனது திருமணத்திற்கு வந்தபோது, "டேய் சுபி. கல்யாணத்துக்கு இந்த அக்காவ கூப்பிடக் கூட மறந்திட்ட, பரவால்ல, பரவால்ல. அடுத்த வருஷமே பிள்ளை பிறந்து, காது குத்துக்காவது கூப்பிடுவியா ?" என்று மணமேடையில் இடித்துச் சிரித்தார்.

ஏதோ பக்ஷி சிறகடித்து இந்த செய்தியை இப்போது நினைவுபடுத்த, அப்ப தான் புரிந்தது, அவர் எந்த நிகழ்ச்சிக்கு அழைக்க சொல்லியிருந்தாரோ, கரெக்டாக அதை மறந்தது.

'போச்சு அவ்வளவு தான் ! இனி கூப்பிட்டா நல்லா இருக்குமா ? இப்ப சொன்னா கூட அவர் கிளம்பி வரவும் நேரம் ஆகுமே. வந்து ஒரு பிடி பிடிக்கப் போறாரே. இல்ல, வராம விட்டுட்டா ... கடவுளே அப்படி அவர் சொல்லிடக் கூடாது ....'

'என்ன ஆனாலும் பரவாயில்லை' என்று அவர்கள் எண்ணிற்கு அழுத்தினேன். பதிலே இல்லை பல முறை !! கடவுளே, என்ன சோதனை இது. "ஏம்மா அக்கா நம்பர் சரிதானே ?!" என்று அம்மாவை நோக்குகையில் ...

"லெச்சுமி வாம்மா ..." என அக‌மகிழ்ந்து வரவேற்றார் அம்மா. திடுக்கிட்டுத் திரும்பி, வாசல் பக்கம் பார்த்தேன். 'அதெல்லாம் நாங்க முன்னாடியே சொல்லிட்டோம்' என்பது போல் அம்மாவின் பார்வை இருந்தது.

'அமெரிக்கா ஐரோப்பானு போயி நீங்க தான் மாறீட்டீங்க. நாங்க அப்படியே தான் இருக்கோம் !!' என்பது போல் கள்ளம் கபடமின்றி உள்ளே சென்று, 'வாடா செல்லம்...' என்று என் மகளைத் தூளியில் இருந்து அள்ளிய‌‌ அக்காவை அசைவற்று பார்த்து நின்றேன் !

10 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

அன்பிற்கு என்றும் இல்லை அடைக்கும் தாழ்:)!
இப்படிக்கு
(ராம)லெச்சுமி அக்கா

உயிரோடைsaid...

நல்லா இருக்கு சதங்கா. வாழ்த்துகள்

உயிரோடைsaid...

நல்லா இருக்கு. வாழ்த்துகள் சதங்கா

ராமலக்ஷ்மிsaid...

கதையைப் போல படத்தில் அந்தக் குழந்தையும் அழகு!

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மிsaid...

//அன்பிற்கு என்றும் இல்லை அடைக்கும் தாழ்:)!
இப்படிக்கு
(ராம)லெச்சுமி அக்கா//

மிக்க மகிழ்ச்சி. எங்க அக்காவே வந்து சொன்னமாதிரி எடுத்துக்கறேன் :))

//கதையைப் போல படத்தில் அந்தக் குழந்தையும் அழகு!//

ஆமா, துறுதுறு கண்களோட அமைதியான ஒரு பார்வை. அழகோ அழகு !

சதங்கா (Sathanga)said...

உயிரோடை said...

//நல்லா இருக்கு. வாழ்த்துகள் சதங்கா//

ப்லாகரில் தான் ப்ரச்ச்னை என நினைக்கிறேன். உங்க பின்னூட்டங்கள் வந்தாச்சு. மிக்க நன்றி லாவண்யா.

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

உணர்ச்சி பூர்வமான கதை. சில் சமயங்களில் நெருங்கிய உறவினையும் - இனிய நட்பினையும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அழைக்க மறக்கிறோம். காரணம் அவர்களை நாம் நிகழ்ச்சியினை நடத்துபவர்களாகவே கருதி - நம்மில் ஒருவரவாகக் கருதி - அழைக்க விட்டு விடுகிறோம். அவ்வளவு தான்.

கதை அருமை - குழந்தை அழகு - சுத்திப் போடச் சொல்லணும் - ஆமா

(ராம) லெச்சிமி அக்காவின் மறுமொழி நல்லாருக்கு

நல்வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...

//உணர்ச்சி பூர்வமான கதை. சில் சமயங்களில் நெருங்கிய உறவினையும் - இனிய நட்பினையும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அழைக்க மறக்கிறோம். காரணம் அவர்களை நாம் நிகழ்ச்சியினை நடத்துபவர்களாகவே கருதி - நம்மில் ஒருவரவாகக் கருதி - அழைக்க விட்டு விடுகிறோம். அவ்வளவு தான். //

ஆம். சிலர் அதை ஒரு பொருட்டாகக் கருதமாட்டார்கள். சிலருக்கோ தாங்க முடியாது. இருமனநிலையிலும் இருக்கிறார்கள் தானே ?!

//கதை அருமை - குழந்தை அழகு - சுத்திப் போடச் சொல்லணும் - ஆமா//

மிக்க நன்றி. நிச்சயமா....

//(ராம) லெச்சிமி அக்காவின் மறுமொழி நல்லாருக்கு //

முன்னர் சொன்ன இரு மனநிலைகளில் இந்த அக்கா மூத்தவர் :))

//நல்வாழ்த்துகள்//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.

நானானிsaid...

எல்லோருக்கும் இப்படி ஒரு லெச்சுமி அக்கா இருக்கிறார்.

என் குழந்தைகள் இருவரையும்(2வயது, ஒரு வயது) அருமையாகப் பார்த்துக்கொண்ட என் வீட்டில் வேலை பார்த்த, 'நாமி' என்று குழந்தைகள் அழைக்கும் பொன்னம்மாவை என் மகள் கல்யாணத்துக்கு அழைக்காமல் விட்டது இன்னும் என் மனதை உறுத்திக்கொண்டேயிருக்குது. காரணம், மறதியில்லை. அவள் இருக்குமிடம் தெரியாததுதான்.

நல்ல பதிவு..சதங்கா! மறந்துவிடும் நம் அசட்டுத்தனத்தை அழகாக பாவனை செய்யும் குழந்தி கொள்ளை அழகு. என்ன பேர் செல்லத்துக்கு?

சதங்கா (Sathanga)said...

நானானி said...

//எல்லோருக்கும் இப்படி ஒரு லெச்சுமி அக்கா இருக்கிறார். //

ஹை, கதைக்கு கிடைத்த வெற்றியா எடுத்துக்கறேன்.

//என் குழந்தைகள் இருவரையும்(2வயது, ஒரு வயது) அருமையாகப் பார்த்துக்கொண்ட என் வீட்டில் வேலை பார்த்த, 'நாமி' என்று குழந்தைகள் அழைக்கும் பொன்னம்மாவை என் மகள் கல்யாணத்துக்கு அழைக்காமல் விட்டது இன்னும் என் மனதை உறுத்திக்கொண்டேயிருக்குது. காரணம், மறதியில்லை. அவள் இருக்குமிடம் தெரியாததுதான்.//

அவர்கள் நினைவு இருக்கிறது என்றீர்களே, இதை விட வேறு என்ன வேண்டும். நன்று ! நன்று !!

//நல்ல பதிவு..சதங்கா! //

மிக்க நன்றி

//மறந்துவிடும் நம் அசட்டுத்தனத்தை அழகாக பாவனை செய்யும் குழந்தி கொள்ளை அழகு. என்ன பேர் செல்லத்துக்கு?//

அவங்க அப்பா, அம்மா கிட்ட தான்மா கேக்கணும். படம் இணையத்தில இருந்து எடுத்துப் போட்டிருக்கேன் :))

Post a Comment

Please share your thoughts, if you like this post !