மைக்கேல் ஜாக்ஸன் - நடனப் புயலும், ஓய்வும் !
பாடலில் பரவசம்
மேடையில் நவரசம் -- உன்
ஆடலில் உலகே
ஆடியது நிதர்சனம் !
குதூகலிக்கும் குழந்தைத்தனம்
சிறுவயதில் மறந்தாய் -- உன்
சிலிர்க்கும் நடனத்தில்
உலகையே கவர்ந்தாய் !
திகிலூட்டும் த்ரில்லர்
சிலிர்ப்பூட்டும் டேஞ்சரஸென -- உன்
அற்புத பாடல்களில்
கிறங்க(வும்) வைத்தாய் !
ஒவ்வொரு அசைவிற்கும்
ஓராயிரம் பயிற்சி -- உன்
ஒத்திகை நடனங்களிலும்
அத்துணை ஈடுபாடு !
பொங்கும் மாக்கடலில்
திரண்டது நீரலை -- உன்
உலுக்கும் தோள்களில்
உருண்டது கடலலை !
நிலவிருக்கும் வரை
நினைவு இருக்கும் -- உன்
நீந்தும் கால்களின்
நிலவு நடனத்தில் !
ஈடிலா வளர்ச்சி
ஈட்டியது பலகோடி -- உன்
வாழ்க்கையும் உழன்றதே
அனுதினம் அலைமோதி !
சீறிப் பாய்ந்து
சிருங்காரம் செய்து -- உன்
நடனம் (நெஞ்சில்) நிறுத்தி
ஓய்வாய் புயலே !
தூற்றுவார் தூற்ற
போற்றுதல் நிலைநிறுத்தி -- உன்
மனம் அமைதியில்
துயில்வாய் புயலே !
உனைத்துரத்தித் துன்புறுத்த
இனி எவருமில்லை -- உன்
கல்லறையும் இனி(தாக)
காவியம் பாடிடுமே !
-----
மேலே இருக்கும் மைக்கேலின் படம், 93-ல் வரைந்தது. அவரோட படம் வரைந்தோமே என்றது மட்டும் நினைவில் இருந்தது. கால ஓட்டத்தில் எங்கே வைத்தோம் என்பது மறந்தே போனது ! அங்க தேடி, இங்க தேடி, நல்ல வேளைக்கு எங்கும் போய்விடவில்லை. படம் இருந்தது என்னுடனே !
11 மறுமொழி(கள்):
அதிரடி நடனப் புயலுக்கு தென்றலாய் ஒரு அஞ்சலி. அழகு சதங்கா!
புயலின் கதையைப் படித்தால்...ரசிகர்களை ரசிக்க வைக்க எவ்வளவு துன்பங்களை சுயமாகவும் சொந்தங்களாலும் அனுபவித்திருக்கிறார் என்று அறியும் போது அவர் இந்த நிரந்தர ஓய்விலாவது நிம்மதியாக உறங்கட்டும்.
அன்பின் சதங்கா
அருமை அருமை - படமும் கவிதையும் அருமை
நல்வாழ்த்துகள்
தேடி எடுத்துத் த்ந்திருக்கும் தாங்கள் வரைந்த படமும் வெகு அருமை. ’சித்திரம் பேசுதடி’யிலும் இதனைப் பதிந்திடுங்களேன்!
ராமலக்ஷ்மி said...
//அதிரடி நடனப் புயலுக்கு தென்றலாய் ஒரு அஞ்சலி. அழகு சதங்கா!//
அற்புதம். ரசிக்க வைக்கிறது உங்கள் பாராட்டு.
//தேடி எடுத்துத் த்ந்திருக்கும் தாங்கள் வரைந்த படமும் வெகு அருமை. ’சித்திரம் பேசுதடி’யிலும் இதனைப் பதிந்திடுங்களேன்!//
ஆக்சுவலா அங்க படத்தைப் போடலாம் என இருந்தேன். அப்புறம் கவிதையும், படமும் சேர்த்தே பதியலாம் எனத் தோன்றியதால் இங்கே !!!
நானானி said...
//புயலின் கதையைப் படித்தால்...ரசிகர்களை ரசிக்க வைக்க எவ்வளவு துன்பங்களை சுயமாகவும் சொந்தங்களாலும் அனுபவித்திருக்கிறார் என்று அறியும் போது அவர் இந்த நிரந்தர ஓய்விலாவது நிம்மதியாக உறங்கட்டும்.//
ஆமா, கொஞ்ச நஞ்சமல்ல ... உங்கள் எண்ணம் தான் எனதும்.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
//கவிதையும், படமும் சேர்த்தே பதியலாம் எனத் தோன்றியதால் இங்கே !!!//
சரிதான், ஆனாலும் சித்திரங்களுடன் பேச பெரும் விருப்பத்துடன் அங்கு செல்லுபவர்கள் இதைத் தவற விட வாய்ப்பாகி விடுமே! அதற்காகத்தான் சொன்னேன்:)!
cheena (சீனா) said...
//அருமை அருமை - படமும் கவிதையும் அருமை
நல்வாழ்த்துகள்//
பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
ராமலக்ஷ்மி said...
////கவிதையும், படமும் சேர்த்தே பதியலாம் எனத் தோன்றியதால் இங்கே !!!//
சரிதான், ஆனாலும் சித்திரங்களுடன் பேச பெரும் விருப்பத்துடன் அங்கு செல்லுபவர்கள் இதைத் தவற விட வாய்ப்பாகி விடுமே! அதற்காகத்தான் சொன்னேன்:)!
//
செஞ்சிட்டாப் போச்சு :)) இன்னொரு சிம்பிளான போஸ் எடுத்து வச்சிருக்கேன். இந்த வீக்கெண்ட் முடிஞ்சா வரைஞ்சு, இந்தப் படத்தையும் சேர்த்து பதிகிறேன். வழக்கம்போல உங்கள் ஊக்கத்திற்கு ரொம்ப நன்றி.
நல்ல திறமைசாலி தன் வாழ்க்கையையும், கலையையும் வீணடித்துக் கொண்டார். அவர் மாதிரி மூன் வாக்கும் வேகமான நடனமும் ஆட இனிமேல்தான் யாராவது பிறந்து வரவேண்டும். நான் கல்லூரியில் சேர்ந்த ஆண்டு எங்கள் ஹாஸ்டல்களில் எங்காவது த்ரில்லர் பாட்டு நாள் முழுக்க ஒலித்துக் கொண்டே இருக்கும்.
People should be comfortable in their skin!
Post a Comment
Please share your thoughts, if you like this post !