எனது முதல் புத்தக வெளியீட்டு விழா !
அரும்பாடு பட்டு, காலம் காலமாய் காத்திருத்தலுக்குப் பின் ஏற்பாடான நிகழ்ச்சி தான் இவ்விழா. தேனாம்பேட்டை காமராஜர் நினைவரங்கில் எனது முதல் புத்தக வெளியீட்டு விழா.
மின் பதிப்பு :
null
உங்களுக்கான பிரதிக்கு "sathanga at gmail dot com" க்கு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
தலைமை ஏற்று பேச எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். முதல் பிரதியைப் பெற்றுகொள்ள ஜெயகாந்தன் அவர்கள். மற்றும் வாழ்த்திப் பேச பிரபல எழுத்தாளர்கள், சில சினிமா வி.ஐ.பிக்கள், சாலமன் பாப்பையாவும் கடைசி நேரத்தில் வருவதற்கு ஒப்புக்கொண்டார். ஸோ ஸ்வீட்டா இவர்களோடு நானும் !
அரங்கு நிறைந்த கூட்டம் என்று இல்லை என்றாலும், ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. பிரபலங்களைப் பார்ப்பதற்கான கூட்டம் தான், இருப்பினும் எனக்குள்ளும் சில பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கத் தான் செய்தன.
எழுத்தைப் போலவே பேச்சிலும் எளிமை காத்தார் ராமகிருஷ்ணன். "வருங்காலத்தில் இளைஞர்கள் நிறைய எழுத வேண்டும். ப்லாகில் எழுதுவது என்று நின்றுவிடாமல் பத்திரிகைகளிலும் கால் பதிக்க வேண்டும். முடிந்தால் திரைத்துறைகளிலும் கூட" என்று அன்பொழுக பேசினார். எனது கதைகளில் சிலவற்றிலிருந்து, சில வரிகள் குறிப்பிட்டு பேசியது மெய்சிலிர்க்க வைத்தது என்னை.
எழுத்தைப் போலவே பேச்சிலும் வீச்சைக் காண்பித்தார் ஜெயகாந்தன். "முதலில் ஒருவனுக்கு மொழிப் பற்று இருக்கணும். பதவி, ஆனவம், பரிசுக்காக எல்லாம் எழுதுவதைத் தவிர்க்கணும். அதை விட்டு விட்டு இன்னும் பலரின் பின்னால் ஒளிந்து கொண்டு ஜால்ரா அடித்து எழுதுவதெல்லாம் எழுத்தா ? இளைஞர்களின் சக்தி மாபெரும் சக்தி. அவர்கள் ஓரணியில் திரண்டு தமிழை வாழ வைக்கணும்" என்று சுறுக்கமாக முடித்துக் கொண்டார்.
பலரும் அவர்களது கருத்துக்களைப் பதிய, கரகோஷத்தின் எதிரொலி காதுகளில் சுழன்றது சில பல நிமிடங்கள்.
பதிவர்கள் மீட்டிங்கின் போன்டா ஃபேமஸ் இங்கும் ஏற்பாடு செய்திருந்தோம். காரைக்குடி உணவகத்தில் இருந்து மதியச் சாப்பாடு. பின் மாலையில் சாலமன் பாப்பையாவின் மாறுபட்ட "ப்லாகர் vs எழுத்தாளர்" பட்டி மன்ற நிகழ்ச்சி. வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல, நண்பர்களின் அன்புத் தொல்லை தாங்காமல் பட்டிமன்றமும் சேர்க்கும்படி ஆனது.
எல்லாம் முடிந்து, "முதல் பிரதியை பெற்றுகொள்ள ஜெயகாந்தன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்" என்று ஒலிபெருக்கியில் எனது நண்பர் தெரிவிக்க, ஜெயகாந்தன் அவர்கள் தயாராய் வந்து நிற்கிறார். என்னால் எழுந்து செல்ல முடியவில்லை ! காலை ஆட்டிப் பார்க்கிறேன், கைகளால் காலைத் தூக்கிப் பார்க்கிறேன், ம், ஹிம்...
"எனக்குத் தெரியும் முன்னாலே இப்படி எல்லாம் நடக்கும் என்று. நீங்க பாட்டுக்கு கால ஆட்டறீங்க, கையத் தூக்கறீங்க, ஏதேதோ புரியாத மொழியில உளர்றீங்க. என்னங்க, 'புத்தக வெளியீட்டு விழாவா ?' கனவில ஐயோ, ராமா !" என்று என் மனைவி, அர்த்த ராத்திரியில் தலையில் அடித்துக் கொள்வதை, கண்கள் கசக்கி எழுந்து (தேமே என) பார்த்துக் கொண்டிருந்தேன் !!!!
22 மறுமொழி(கள்):
எப்பிடி இப்பிடி எல்லாம்
உட்கார்ந்து எண்ணெய் தேச்சுகிட்டு யோசிப்பீங்களோ?
:)
மிகவும் ஆவலுடன் வந்து ஏமாந்து போனேன். வாழ்த்துச் சொல்ல வந்து வார்த்தைகளை எப்படி மாற்றியமைக்கலாம் என யோசித்து வைக்கிறேன். தங்களின் அடிமனதில் உள்ள இந்த ஆசை ஒருநாளேனும் ஒருநாள் நிஜமாக மாறிவிட வேண்டுமென உங்கள் எழுத்துக்கு மென்மேலும் புத்துணர்ச்சியும் இதை நோக்கிய பயணத்தைத் தொடங்குங்கள் என ஏமாற்றமாக இருந்தாலும் நிச்சயமாக பிறிதொருநாளில் சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கையை இங்கே விதைத்துச் செல்கிறேன். இதுதான் நான் சொல்ல நினைத்தது. மிக்க நன்றி.
படிக்கும்போது உங்களைப் பற்றி சந்தோசப்பட்டு, முடிக்கும்போது எரிச்சல் வந்துவிட்டது.
வாழ்த்துகள்!
(கனவுல சொன்னது தான் ...)
Ennai kekkamale vizhavukku koopitathukku nandri :-)
vazhthukkal.
அதே மேடையில் உக்கார்ந்துருந்த என்னைப்பற்றிக் குறிப்பிடாத காரணம் என்னவோ??????
முதல் புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்
இருங்க பதிவை படிச்சிட்டு வரேன் ;-)))
/"எனக்குத் தெரியும் முன்னாலே இப்படி எல்லாம் நடக்கும் என்று. நீங்க பாட்டுக்கு கால ஆட்டறீங்க, கையத் தூக்கறீங்க, ஏதேதோ புரியாத மொழியில உளர்றீங்க. என்னங்க, 'புத்தக வெளியீட்டு விழாவா ?' கனவில ஐயோ, ராமா !" என்று என் மனைவி, அர்த்த ராத்திரியில் தலையில் அடித்துக் கொள்வதை, கண்கள் கசக்கி எழுந்து (தேமே என) பார்த்துக் கொண்டிருந்தேன் !!!!/
கனவா.............
கண்டிப்பாக
நினைவாகும்
நிச்சியம்
மின் பதிப்பு
மின்னுகிறது
வாழ்த்துகள்
ஏதோ சொல்லாம கொள்ளாமே புத்தகம் விட்டுட்டீங்களோன்னு முதல்ல கோவம் வந்தது :-)
உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்.
நேசமித்ரன் said...
//எப்பிடி இப்பிடி எல்லாம்
உட்கார்ந்து எண்ணெய் தேச்சுகிட்டு யோசிப்பீங்களோ?
:)//
எண்ணெய் தேய்த்துக் கொண்டு யோசித்தால் பிடி வழுக்கி விடுமே !! நான் இறுகுவதற்கு என்ன செய்யலாம்னு யோசித்ததின் பலன் தான் கனவு :))
வெ.இராதாகிருஷ்ணன் said...
//மிகவும் ஆவலுடன் வந்து ஏமாந்து போனேன். //
இச்சிறுவனை மன்னித்துவிடுங்கள்.
//வாழ்த்துச் சொல்ல வந்து வார்த்தைகளை எப்படி மாற்றியமைக்கலாம் என யோசித்து வைக்கிறேன். தங்களின் அடிமனதில் உள்ள இந்த ஆசை ஒருநாளேனும் ஒருநாள் நிஜமாக மாறிவிட வேண்டுமென உங்கள் எழுத்துக்கு மென்மேலும் புத்துணர்ச்சியும் இதை நோக்கிய பயணத்தைத் தொடங்குங்கள் என ஏமாற்றமாக இருந்தாலும் நிச்சயமாக பிறிதொருநாளில் சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கையை இங்கே விதைத்துச் செல்கிறேன். இதுதான் நான்//
ரொம்ப நாள் ஆசை என்பது உண்மை தான். ஆனா, அதற்கு தகுந்த மாதிரி நம்ம எழுத்து இருக்கணுமே. அதான் அச்சில் வருமோ, வராதோனு ஒரு அச்சத்தில் கற்பனைக் கனவு :))
உங்கள் வாழ்த்துக்கள் புத்துணர்ச்சி தந்திருக்கிறது. என்றாவது சாதிக்க முடிந்தால் அந்த வெற்றியில் நிச்சயம் உங்களுக்கும் பங்கு உண்டு.
என். உலகநாதன் said...
//படிக்கும்போது உங்களைப் பற்றி சந்தோசப்பட்டு, முடிக்கும்போது எரிச்சல் வந்துவிட்டது.
//
ஒரு சின்ன ஆசையின் பலனாய் கற்பனையாய் எழுதியதற்கு மன்னிக்கவும் நண்பரே.
நட்புடன் ஜமால் said...
//வாழ்த்துகள்!
(கனவுல சொன்னது தான் ...)//
நன்றிகள் பல நிஜத்தில் :))
Jayakanthan - ஜெயகாந்தன் said...
//Ennai kekkamale vizhavukku koopitathukku nandri :-)
vazhthukkal.
//
அழக்காமலே வரும் நண்பர் நீங்கள் அல்லவோ. அதான் ஜெய் :)))
துளசி கோபால் said...
//அதே மேடையில் உக்கார்ந்துருந்த என்னைப்பற்றிக் குறிப்பிடாத காரணம் என்னவோ??????//
பதிவும் மேடையும் தான் மொக்கை. புத்தகம் உண்மை. புத்தகத்திற்குள் சென்று பாருங்கள். உங்களுக்கும் கிரீடம் சூட்டியிருக்கிறேன் :)))
கானா பிரபாsaid...
//முதல் புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்
இருங்க பதிவை படிச்சிட்டு வரேன் ;-)))//
இன்னும் படிக்கவே இல்லையா.... :)(
இருப்பினும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
திகழ்மிளிர் said...
//
கனவா.............
கண்டிப்பாக
நினைவாகும்
நிச்சியம்//
ஊக்கத்திற்கு நன்றிகள் பல்ல நண்பரே.
//மின் பதிப்பு
மின்னுகிறது
வாழ்த்துகள்//
மிக்க மகிழ்ச்சி.
நாகு (Nagu) said...
//ஏதோ சொல்லாம கொள்ளாமே புத்தகம் விட்டுட்டீங்களோன்னு முதல்ல கோவம் வந்தது :-)//
உங்க கிட்ட சொல்லாம செய்வனா ?
//உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்.//
நன்றிகள் பல.
பாராட்டுக்கள்! புத்தகத்தை நேர்த்தியான வடிவமைப்புடன் செதுக்கியிருக்கிறீர்கள். ஒவ்வொரு கதையும் வித்தியாசமான களத்தில் அமைந்த அற்புதப் படைப்புகள். தொடர்ந்து வெற்றி நடை போட என் வாழ்த்துக்கள்!
@ துளசி மேடம்,
ஏற்கனவே முன்னுரையில் சொல்லி விட்டதாலும், நம்ம (வலை)வூட்டு ஆட்களென்கிற உரிமையிலும் விலாவாரியாகச் சொல்லவில்லை போலும். விடுங்கள் மேடம். பாருங்க, விழாவில் அத்தனை பேரையும் பொறுப்பாக வரவேற்று, நன்றியுரை வரை சொல்லி காம்பியர் பண்ணிய என்னைப் பற்றியும்தான் சொல்லவில்லை:)! விழா நாயகனுக்கே உரிய படபடப்பு வேறு:)!
@ சதங்கா,
கனவு நனவாக அத்தனை பேரும் வாழ்த்தியாயிற்று. நனவில் நடக்கையில் கனவில் நான் காம்பியர் செய்ததும் நடக்கும்:)!
ராமலக்ஷ்மிsaid...
//பாராட்டுக்கள்! புத்தகத்தை நேர்த்தியான வடிவமைப்புடன் செதுக்கியிருக்கிறீர்கள். ஒவ்வொரு கதையும் வித்தியாசமான களத்தில் அமைந்த அற்புதப் படைப்புகள். தொடர்ந்து வெற்றி நடை போட என் வாழ்த்துக்கள்!//
வெற்றி நடைக்கு உங்கள் பின்னூட்டங்கள் தான் முதல்படி. உங்க்ளைப் போன்ற அன்பர்கள் துணையிருக்க பயணத்தில் தடை ஏது.
//@ துளசி மேடம்,
ஏற்கனவே முன்னுரையில் சொல்லி விட்டதாலும், நம்ம (வலை)வூட்டு ஆட்களென்கிற உரிமையிலும் விலாவாரியாகச் சொல்லவில்லை போலும். விடுங்கள் மேடம். பாருங்க, விழாவில் அத்தனை பேரையும் பொறுப்பாக வரவேற்று, நன்றியுரை வரை சொல்லி காம்பியர் பண்ணிய என்னைப் பற்றியும்தான் சொல்லவில்லை:)! விழா நாயகனுக்கே உரிய படபடப்பு வேறு:)!//
நண்பர் என்று பொதுவாக சொல்லிவிட்டேன். நீங்க தானெ பெயரை எல்லாம் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டீர்கள் :)))
//@ சதங்கா,
கனவு நனவாக அத்தனை பேரும் வாழ்த்தியாயிற்று. நனவில் நடக்கையில் கனவில் நான் காம்பியர் செய்ததும் நடக்கும்:)!//
படிக்கப் படிக்க இனிக்குதடா ... அழுத்தமான வரிகளில் ஆழ்ந்து போகிறது மனம். கனவை மறந்து விடாமல் விரித்து வைக்கிறேன்.
கனவு நனவாகும் போது நம்மளைல்லாம் கொஞ்சூண்டு ஞாபகம் வச்சுக்கோங்கப்பா! அட்வான்ஸ் வாழ்த்துகள்! :)
கவிநயா said...
//கனவு நனவாகும் போது நம்மளைல்லாம் கொஞ்சூண்டு ஞாபகம் வச்சுக்கோங்கப்பா! அட்வான்ஸ் வாழ்த்துகள்! :)//
கொஞ்சூண்டா ... ரிச்மண்டையும், தமிழையும், தமிழ் நண்பர்களையும் எங்ஙணம் மறப்பேன்.
ஸ்ஸ்ஸ்ஸ் ... உங்களுக்கே கண்ணக் கட்டுதா ? எனக்கும் தான் :)))
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க.
Post a Comment
Please share your thoughts, if you like this post !