Tuesday, July 14, 2009

நீங்க தான் ஜட்ஜ் !



அடித்துப் பிடித்து வந்து, அந்தக் கடிதத்தைத் தன் கணவன் ராஜுவிடம் காண்பித்தாள் ரேவதி ...

உலகமே வியக்கும் தொலைக்காட்சியில் இருந்து, உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக வருமாறு எழுதியிருந்தார்கள் அக்கடிதத்தில்.

"ஏங்க, எத்தனை நாள் அவரு வர்றாரு, இவரு வர்றாரு, நம்மள ஒரு பய கூப்பிட மாட்டேங்கிறான்னு பொலம்பனீங்க ! அந்த ஆத்தா கண்ணத் தொறந்துட்டா ..." என்று கன்னத்திலும் போட்டுக் கொண்டாள் ரேவதி.

என்னது ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸுக்கே இந்த அலப்பரையானு பாக்காதீங்க, ப்ளீஸ் கோ அஹெட்.... :)

***

"சார், நீங்க ஒரு ரெண்டு மூணு படத்தில, நாலஞ்சு ஷாட்ல வந்திருக்கீங்க. உத்து கவனிச்சா தெரியும், அது நீங்க தான்னு. எல்லோரும் கரெக்டா சொல்லிடுவாங்க !!! அந்த‌ அனுப‌வ‌ம் போதும் இந்த‌ நிக‌ழ்ச்சிக்கு வ‌ர்ற‌துக்கு" என்றார் நிகழ்ச்சியின் த‌யாரிப்பாள‌ர் ச‌பாப‌தி.

"ஆமாமா, உங்க நிகழ்ச்சி கூட தான் தமிழ்நாடே பாக்குது. சோறு தண்ணி இல்லாம (போட்டா தானே !) பாக்குற நிகழ்ச்சினா அது இது ஒன்னு தான். இப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சிக்கு என்னை அழைத்த‌தில் ரொம்ப‌ பெருமையா இருக்கு !" என்றான் ராஜு.

அந்த நேரம் பார்த்து, சபாபதியின் உதவியாளர் மைக்கேல் வந்து, "சார், ஒரு முக்கியமான விஷயம்" என்று சபாபதியின் காதுகளில் கிசுகிசுத்தான்.

"கொஞ்சம் இருங்க ராஜு... இதோ வர்றேன்" என்று எழுந்து சென்றார் சபாபதி.

"அப்ப‌டி என்னைய்யா த‌ல‌ போற‌ அவ‌ச‌ர‌ம்..." என்று இழுத்தார் ச‌பாப‌தி.

"த‌ல போற‌து தான் சார் அவசரமே ! ந‌ம்ம 'மாமா மாமி' நிக‌ழ்ச்சிக்கு ரெண்டு ஜ‌ட்ஜ்ல ஒருத்த‌ர் திடீர்னு வ‌ர‌முடியாதுனு ப்ர‌ச்ச‌னை ப‌ன்றாரு. இன்னும் நாலு எப்பிசோட் பென்டிங் இருக்கு. அது வேணும், இது வேணும்னு ஒரே அடாவ‌டி ப‌ண்றார் சார். உங்க கிட்ட பேசணுமாம்" என்று, உள்ளங்கையில் அழுத்திப் பொத்திய‌ ரீசீவ‌ரை ரிலீஸ் செய்து, சபாபதியிடம் நீட்டினான் மைக்கேல்.

'மொத‌ல்ல‌ ஜ‌ட்ஜ‌ மாத்த‌ற‌னோ இல்லியோ, இவன மாத்தணும் !' என்று நினைத்து, ரிசீவரைத் திரும்பவும் அடைக்குமாறு சைகையில் தெரிவித்தார்.

"ஏய்யா, நான் வீட்டுல இருக்கேனு சொன்னியா ? சரியான .... சரி, சரி, அவசர வேலையா இப்ப தான் கெளம்பினாரு, வர ரெண்டு மணி நேரம் ஆகும். அப்புறம் பேசுங்கனு சொல்லித் தொலை".

"சார், நான் மறக்கறதுக்கு முன்னே சொல்லிடறேன். இதே போல 'போடா போடி' நிகழ்ச்சியிலயும் ஜட்ஜ் ப்ரச்சனை சார்" என்றான் மைக்கேல்.'சரியான நேரங்காலம் தெரியாதவன் !' என்று திட்டி "சரி அப்புறம் பேசறேன்" என்று ராஜுவிடம் வந்தார் சபாபதி.

பணிவாய் அமர்ந்திருந்தான் ராஜு. பார்த்த கணமே யோசனையிலும் ஆழ்ந்தார் சபாபதி.

"ராஜு, நீங்க 'அமெரிக்கன் ஐடல்' ப்ரோக்ராம் பாத்திருக்கீங்களா ?"

"பார்த்திருக்கேன் சார். உலகமே பார்த்த ப்ரோக்ராம் ஆச்சே. நான் பார்க்காமல் இருப்பேனா ?!" என்றான் ராஜு.

"நல்லதா போச்சு. அதுல ஜட்ஜ் சைமன் பத்தி என்ன நினைக்கறீங்க ?"

"அத்த‌னை போட்டியாள‌ர்க‌ளுடைய‌ வெறுப்பையும், பார்வையாள‌ர்க‌ள் வெறுப்பையும் சேர்த்து ச‌ம்பாதித்தவ‌ர் சார்" என்றான்.

"ஆனா, உல‌க‌மே அவ‌ர‌ப் ப‌த்தியும், அந்த‌ நிக‌ழ்ச்சி ப‌த்தியும் பேசுது. இது எவ்வ‌ள‌வு பெரிய‌ ச‌ம்பாத்திய‌ம் ந‌ம்மைப் போன்றோருக்கு !" என்றார் ச‌பாப‌தி.

"சார், நீங்க‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌னு புரிஞ்ச‌ மாதிரியும் இருக்கு, புரியாத‌ மாதிரியும் இருக்கு !"

"அதே தான் ராஜு. 'மாமா மாமி' நிக‌ழ்ச்சிக்கு அடுத்த‌ ஜ‌ட்ஜ் நீங்க‌ தான் ! 'டி.வி.ஜட்ஜ் இன்டென்ஸிவ் ட்ரெய்னிங்' ஒரு ரெண்டு நாள் எடுத்துக்க‌ங்க‌. ட்ரெய்னிங் என்றவுடன் பயந்துறாதீங்க. ரொம்ப சிம்பிள். சைமனோட அனுகுமுறை, சினிமாவில் நீங்க பட்ட அவமானங்கள், உங்கள் நண்பர்களின் வளர்ச்சி, உங்களது இயலாமை, இது போல இன்னும் பல‌ தான் உங்க ட்ரெயினிங். இதை நினைவில் வைத்து போட்டியாளர்களை போட்டுத் தாக்குங்க.... மைக்கேல் இங்க‌ வா, அந்த‌ கான்ட்ராக்ட் பேப்ப‌ர்ஸ் எடுத்து வ‌ந்து சார் கிட்ட‌ கையெழுத்து வாங்கிக்கோ." என்றுவிட்டு அடுத்த‌ நிக‌ழ்ச்சியின் ஜ‌ட்ஜ் வேட்டைக்கு ஆய‌த்த‌மானார் ச‌பாப‌தி !

***

டிஸ்கி: இக்கதை யார் ம‌ன‌தையும் புண்ப‌டுத்தும் நோக்கில் எழுத‌ப்ப‌ட‌வில்லை. முழுக்க‌ ந‌கைச்சுவைக்காவே .....

ஜூலை 20, 2009 யூத்ஃபுல் விகடனில்

16 மறுமொழி(கள்):

நட்புடன் ஜமால்said...

டிஸ்கி போட்டே புரியவச்சிட்ரீங்க

அந்த போட்டோல இருக்குற முதல் ஆளு கூட யார்ன்னு தெரியுதுங்க

(இடமிருந்து வலம் ...)

;) ;) ;)

துளசி கோபால்said...

சதங்கா,

இந்த நிகழ்ச்சிகள் எதுவுமே பார்த்ததில்லை என்பதால்.......
இதைப் பத்தி ஒன்னும் சொல்றதுக்கில்லை.

பார்க்கும் மக்கள் இடப்போகும் பின்னூட்டங்களில் இருந்து எதாவது புரிஞ்சுக்கமுடியுமான்னு பார்க்கிறேன்.

நானானிsaid...

சதங்கா!
ஓஹோ!!ஜட்ஜ் கூட டக்குனு வந்து தன் இஷ்டப்படி பேசக்கூடாதோ?
ஈதுக்குள்ள இவ்ளோ சமாச்சாரம் இருக்குதா?

//சோறு தண்ணி இல்லாம(போட்டாதானே)//
போறபோக்கிலே யாரத் தாக்குறீங்க? என்னைத்தானே? கொஞ்சம் நேரம் பாப்பாங்க...அப்புரம் தானே எடுத்துப் போட்டு சாப்பிடுப்பாங்க. அனேக இடங்களில் இதுதானே நடக்குது?

நானானிsaid...

// ரொம்ப‌ பெறுமையா இருக்கு !" //

துள்சி பாத்திருக்க வேணும் இதை!

இந்த துள்ளும் வயதிலும் யானையாக பாய்ந்திருப்பார்!!!

ராமலக்ஷ்மிsaid...

சூடு!!!

//சினிமாவில் நீங்க பட்ட அவமானங்கள், உங்கள் நண்பர்களின் வளர்ச்சி, உங்களது இயலாமை, இது போல இன்னும் பல‌ தான் உங்க ட்ரெயினிங். இதை நினைவில் வைத்து போட்டியாளர்களை போட்டுத் தாக்குங்க....//

:(!

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

ஆதங்கம் புரிகிறது - உள்குத்து புரிகிறது

என்ன செய்வது - மக்கள் போய் விழுகிறார்களே !

நல்லாச் சொல்லி இருக்கீங்க

நேசமித்ரன்said...

கிழிச்சு தொங்க விடுரதுங்குறது இதுதானா?

சதங்கா (Sathanga)said...

நட்புடன் ஜமால் said...

//டிஸ்கி போட்டே புரியவச்சிட்ரீங்க//

;))

//அந்த போட்டோல இருக்குற முதல் ஆளு கூட யார்ன்னு தெரியுதுங்க

(இடமிருந்து வலம் ...)

;) ;) ;)//

ஐயோ அது அவரே தான். கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்களே ! :)))) ஆனா நான் தேடின படம் வேற நிகழ்ச்சியோடது. கிடைச்சது என்னவோ இந்தப் படம்.

சதங்கா (Sathanga)said...

துளசி கோபால் said...

///இந்த நிகழ்ச்சிகள் எதுவுமே பார்த்ததில்லை என்பதால்.......
இதைப் பத்தி ஒன்னும் சொல்றதுக்கில்லை.
//

நல்ல வேளை நீங்க பார்க்கிறதில்லை, தப்பிச்சீங்க :)))

//பார்க்கும் மக்கள் இடப்போகும் பின்னூட்டங்களில் இருந்து எதாவது புரிஞ்சுக்கமுடியுமான்னு பார்க்கிறேன்.
//

பாருங்க அதுக்குள்ள அவங்க புலம்பலையும் :))

சதங்கா (Sathanga)said...

நானானி said...

//ஓஹோ!!ஜட்ஜ் கூட டக்குனு வந்து தன் இஷ்டப்படி பேசக்கூடாதோ?
ஈதுக்குள்ள இவ்ளோ சமாச்சாரம் இருக்குதா?//

பின்னே. நல்லா கவனிச்சீங்கனா, எந்த நிகழ்ச்சியிலாவது ஒரு ஜட்ஜ் இருந்திருக்காரா ? இங்கேயே ஆரம்பிக்குது அவங்க ட்ரெய்னிங் :)))

//சோறு தண்ணி இல்லாம(போட்டாதானே)//
போறபோக்கிலே யாரத் தாக்குறீங்க? என்னைத்தானே? கொஞ்சம் நேரம் பாப்பாங்க...அப்புரம் தானே எடுத்துப் போட்டு சாப்பிடுப்பாங்க. அனேக இடங்களில் இதுதானே நடக்குது?//

அதே ! அதே !! பத்தாயிரம் குலோமீட்டர் தாண்டியும், இதே ! இதே !! :))


//// ரொம்ப‌ பெறுமையா இருக்கு !" //

துள்சி பாத்திருக்க வேணும் இதை!

இந்த துள்ளும் வயதிலும் யானையாக பாய்ந்திருப்பார்!!!//

பயணக் களைப்பில் இருக்கிறார்கள். நல்லவேளை சரி செய்துவிட்டேன் :) இப்ப என்ன செய்வீங்க ? :)))

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//சூடு!!!

//சினிமாவில் நீங்க பட்ட அவமானங்கள், உங்கள் நண்பர்களின் வளர்ச்சி, உங்களது இயலாமை, இது போல இன்னும் பல‌ தான் உங்க ட்ரெயினிங். இதை நினைவில் வைத்து போட்டியாளர்களை போட்டுத் தாக்குங்க....//

:(!
//

இந்த வரிகளை எழுதும் போது ரொம்ப காத்திரமா இருக்குதேனு பல முறை யோசித்தேன். பட், பல ஜட்ஜ்களின் செயல்கள் இதைத் தான் உறுதிப்படுத்துகின்றன :((((

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...

//ஆதங்கம் புரிகிறது - உள்குத்து புரிகிறது

என்ன செய்வது - மக்கள் போய் விழுகிறார்களே !

நல்லாச் சொல்லி இருக்கீங்க//

அவங்களுக்கு அதான் நினைப்பு, இவங்க வந்து விழுகையில் நாம என்ன வேணா செய்யலாம் என்று :(((

சதங்கா (Sathanga)said...

நேசமித்ரன் said...

//கிழிச்சு தொங்க விடுரதுங்குறது இதுதானா?//

சில நேரம் இது கம்மியோனு தோணுது, சில நேரம் அதிகமா எழுதிட்டமோனு தோணுது. ஆனா ஒன்னு நல்ல தோணுது, டி.வி.காரங்க நம்மைப் போன்ற சாதாரண மக்களை சும்மா விட்டுவிடப் போவதில்லை !

நானானிsaid...

எப்படியோ துள்சிகிட்ட போட்டுக் கொடுத்திட்டேனே!!!!

ஆமாம்! டையர்டாகத்தானிருப்பார்.
அதான் பிளிறக் கூட முடியலை.

துளசி கோபால்said...

ஆஹா.......

நம்ம தந்தத்தைப் போட்டு உலுக்கறதைப் பார்த்தேன். அந்தப் 'பெறுமையைப் பொருமையாப் பார்த்தேன்' என்றாலும் ஒரு நாளாச்சும் பிழை பிடிப்பதை விடலாமுன்னு நான் நினைச்சாலும் மக்கள் விடமாட்டாங்க போல இருக்கே!!!

இப்பப் புரியுது...... அரசியல் வியாதிகள் க்ரீடம் வாள் செங்கோலுன்னு ஜமாய்க்கிறது ! ராஜா வேணாமுன்னாலும் மக்கள் விட்டாத்தானே:-)

சதங்கா (Sathanga)said...

:))

Post a Comment

Please share your thoughts, if you like this post !